PDA

View Full Version : இது போதும் எனக்குஆதவா
11-02-2007, 01:46 PM
எனக்கென்று
ஒரு வயிறு
அதை
முழுவதுமாய் நிரப்ப
மூன்று வேளையும்
முழு சாப்பாடு

இரவு இரவியின்
வெளிச்சத்தில்
அன்னமூட்ட
அன்னை
அவளுக்குப் பின்

தலையணை மந்திரங்கள்
தலையில் மையிட
தலைவி ஒருத்தி

பூமிக்குத் துரோகஞ் செய்யும்
கால்களும், உடம்பும்
தங்க
தங்கமான இல்லம்

கொலுசுகளின் ஓசையில்
தூங்கும் இதயத்தை
தூண்டிவிடும் கற்பனை
என

இது போதும் எனக்கு
இத்தனை தேவைகள்
இருக்க
எதற்குத் தேவை
பணம்?

நான் படிக்கும் காலத்தில் எழுதியது........ எங்கோ ஒரு டைரியின் மூலையில் கிடந்தது.. சீக்கிரமே கண்டுபிடித்து எடுத்துவிட்டேன்... லெனின் அவர்களின் கவிதையைவிட இது சுவை குறைந்தது என்றாலும் இட்டாச்சு..... இனி உங்கள் கருத்துதான்...

lenram80
11-02-2007, 02:08 PM
எனக்கென்று

கொலுசுகளின் ஓசையில்
தூங்கும் இதயத்தை
தூண்டிவிடும் கற்பனை
என

இது போதும் எனக்கு
இத்தனை தேவைகள்
இருக்க
எதற்குத் தேவை
பணம்?


வாவ்...அருமை. அனுபவித்து வாழ வாழ்த்துக்கள் ஆதவா!!!!

மனோஜ்
11-02-2007, 02:21 PM
எனக்கென்று
ஒரு வயிறு
அதை
முழுவதுமாய் நிரப்ப
மூன்று வேளையும்
முழு சாப்பாடு

...

கவிதை அருமை
அதவா அளவா சாப்பிடுவது நல்லது இல்லாட்டா குன்டாயிடுவிங்க:D :D

ஆதவா
11-02-2007, 04:01 PM
வாவ்...அருமை. அனுபவித்து வாழ வாழ்த்துக்கள் ஆதவா!!!!

நன்றிங்க லெனின்.. உங்களவுக்கு இல்லாட்டியும் ஏதோ... இருக்கே!


கவிதை அருமை
அதவா அளவா சாப்பிடுவது நல்லது இல்லாட்டா குன்டாயிடுவிங்க:D :D

:D :D :D

sham
12-02-2007, 02:17 AM
ஆதவா! நீங்க என்ன வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கிறீர்களா???????/
கவிதை நன்றாகவுள்ளது நண்பா.

ஆதவா
12-02-2007, 02:23 AM
ஆதவா! நீங்க என்ன வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கிறீர்களா???????/
கவிதை நன்றாகவுள்ளது நண்பா.

இல்லையே ஏன் பா?

sham
12-02-2007, 02:26 AM
சும்மா ஜோக்குக்கு சொன்னேன் பா....................
ஆமா, தாங்கள் மணம் முடித்துவிட்டீர்களோ??????????????

ஆதவா
12-02-2007, 02:32 AM
சும்மா ஜோக்குக்கு சொன்னேன் பா....................
ஆமா, தாங்கள் மணம் முடித்துவிட்டீர்களோ??????????????

இன்னுமில்லை நண்பரே!! என்னை அதுக்குள்ளே பாதாளத்தில் தள்ளப்பார்க்கிறீரே!!!???? (இன்னும் 21 ஐ தாண்டவில்லை.:D )

pradeepkt
12-02-2007, 04:35 AM
நீங்க கேட்ட பல விஷயங்களுக்குமே பணம் முக்கியம்னு பேசிக்கிறாங்க... நீங்க என்னாங்கறீங்க?

ஷீ-நிசி
12-02-2007, 05:35 AM
போதுமான தேவைகள்தான்..

மனைவி வந்தபின்னும் மாதாவின் கையால் உணவு உண்ணும் நாட்கள் மனிதனுக்கு குறைவுதான்.

பூமிக்கு துரோகம் செய்யும் கால்கள்...

சிந்திக்க வேண்டிய வரிகள்தான்...

தங்கமான இல்லமா (அ) தங்கத்தினால் செய்த இல்லமா?

இதெல்லாம் இருந்தாலும் பணமில்லையென்றால் ஒன்றும் நிறைவாய் இருந்திடாது நண்பா!

maganesh
12-02-2007, 07:53 AM
அருமையான வரிகள். அற்புதமான படைப்பு.

ஆதவா
12-02-2007, 03:50 PM
இந்த கவிதை எழுதும் போது நான் படித்துக்கொண்டிருந்தேன்... அதனால் பணத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை

ஆதவா
12-02-2007, 03:51 PM
இந்த சாதாரணக் கவிதையும் அழகு என்று சொன்ன உங்கள் எல்லாருக்கும் எனது நன்றி

பென்ஸ்
12-02-2007, 04:04 PM
இது போதும்...

போதும் என்ற மனமே பொன் செய்யும்...

ஆனால்... நாம் போதும் என்று ஒருபோதும் நினைப்பதில்லை, நினைக்கவும் வேண்டாம்...
ஆசையே அழிவுக்கு காரணம், ஆனால் மனிதன் ஆசை படாமல் இருந்திருந்தால் இந்த அளவு வளர்ந்து இருக்க முடியாது...
ஆசைபடாவிட்டால் முன்னேற்றம் இல்லை...

எல்லாம் கிடைத்துவிட்டால் கடைசியாக நாமே "முழுநிலை" அடைந்துவிடுவோம்....

அப்பாவின் கண்டிப்பு..
அம்மாவின் மடி...
அக்காவின் ஆறுதல்...
அண்ணாவின் பாதுகாப்பு..
தம்பியின் குறும்பு
தங்கையின் கெஞ்சல்..
காதலி கொஞ்சல்...

இவையெல்லாம் முற்றத்து முல்லைமணம் போல்...
வீட்டில் இருக்கும் போது தெரியாது...
அயலிடம் செல்லும் போது வாட்டும்...

அறிஞர்
12-02-2007, 04:53 PM
படிக்கும் பருவத்தில்.... எழுதிய கவிதை அருமை...

குடும்ப அரவணைப்பில் மகிழ்ந்த பருவம்...
உலகம் முழுமையாய தெரியாத வயது...
பணத்தின் மதிப்பு தெரியாத பருவம்.

இன்று இது போல் இன்னொரு கவிதை எழுதுங்கள்..

drjperumal
12-02-2007, 04:59 PM
இவையெல்லாம் முற்றத்து முல்லைமணம் போல்...
வீட்டில் இருக்கும் போது தெரியாது...
அயலிடம் செல்லும் போது வாட்டும்...

உன்மை தான் எனக்கும் அந்த அனுபவம் நிறய உண்டு

pradeepkt
13-02-2007, 03:37 AM
இவையெல்லாம் முற்றத்து முல்லைமணம் போல்...
வீட்டில் இருக்கும் போது தெரியாது...
அயலிடம் செல்லும் போது வாட்டும்...

உன்மை தான் எனக்கும் அந்த அனுபவம் நிறய உண்டு
சரியாச் சொன்னீங்க டாக்டர்.