PDA

View Full Version : இது போதும் எனக்கு!!!lenram80
11-02-2007, 03:51 AM
தெற்கு வாசல் வீடு!
தென்றல் காற்று! - கயிறு கட்டில்!
தலை வைத்து படுக்கத் தாய் மடி!
இது போதும் எனக்கு!

தென்னை மரக் கீற்று!
கதவு தட்டும் தென்றல் காற்று!
எங்கிருந்தோ கேட்கும் அழுகின்ற
குழந்தையை அமைதிப் படுத்தும் தாலாட்டு!
இது போதும் எனக்கு!

வீடே மணமணக்கும் விரால் மீன் குழம்பு!
எனக்கு மட்டும் அதிகமாய் பார்த்துப் பரிமாரும் அம்மா!
கூடவே பங்கு போட அப்பா, அக்கா, அண்ணன்!
இது போதும் எனக்கு!

அம்மா தரும் ஆசை முத்தம்!
அக்கா குழந்தையின் மழலை சத்தம்!
ஆயா தாத்தாவுடன் போடும் சின்ன யுத்தம்!
இது போதும் எனக்கு!

தாகத்தை தீர்க்க நல்ல தண்ணீர்!
என்றுமே வெளி வராத கண்ணீர்!
பிறருக்காக மட்டுமே சிந்த செந்நீர்!
இது போதும் எனக்கு!

எங்கிருந்தோ கேட்கும் கோயில் மணி!
வெளியில் காலையில் மார்கழி பனி!
வாசலில் கோலமிடும் அம்மா! - அதை
பார்த்து நான் உட்கார்ந்திருப்பேன் சும்மா!
இது போதும் எனக்கு!

பொட்டு வைத்த பெண்ணின் முகம்!
இரட்டை ஜடை போட்ட கூந்தல்!
மனதை மயக்கும் மல்லிகைப் பூ வாசம்!
இவை கொண்ட இந்தியப் பெண்!
இது போதும் எனக்கு!

படிக்காமலே புரியும் வரலாறு!
படிக்க படிக்க புரியும் அறிவியல்!
ரசிக்க ரசிக்க இனிக்கும் தமிழ்!
இது போதும் எனக்கு!

விகடன்
11-02-2007, 04:03 AM
கவிதை அருமை.

இருந்தாலும் எனக்கு இடிப்பது கவிதையின் ஆரம்பத்திலேயா சொல்லப்பட்டிருக்கும் வீட்டின் வாசல்தான்.

ஏனெனில் தெற்கு வாசலில் வீடு கட்டுவது கிடையாது. தெற்கு திசை வேறு சில உபயோகத்திற்கு சொல்லப்படுகிறது.

அதுமட்டுமே ஒரே ஒரு குறை.

பரவாயில்லை. நான் இதை எவ்வாறு பார்க்கிறேன் தெரியுமா...

யாரோ ஒரு சிற்பி தேரை மிக அழகாக எந்த குறையுமின்றி அமைத்தானாம். அது பற்க்க ஆரம்பித்துவிட்டதாம். உடனே உளியால் எறிந்து ஒரு காயத்தை ஏற்படுத்திவிட்டதும் அது தரையில் வந்திறங்கியதாம். அதேபோலத்தன் இதையும் எண்ணுகிறேன்.

வாழ்த்துக்கள்.

மன்மதன்
11-02-2007, 05:40 AM
அழகான கவிதை. வரங்கள் வேண்டுவோர் மத்தியில் 'இது போதும்' என நிறைவுறும் மனது அழகு..

மனோஜ்
11-02-2007, 07:18 AM
லெனின் எனக்கும் இது வென்டும் ஆனால் இப்போழது கிடைக்காதே இந்தியா வந்ததும் இது போதும் எனக்கு

lenram80
11-02-2007, 11:32 AM
நன்றி ஜாவா, ம்ன்மதன், மனோஜ்.கவிதை அருமை.

இருந்தாலும் எனக்கு இடிப்பது கவிதையின் ஆரம்பத்திலேயா சொல்லப்பட்டிருக்கும் வீட்டின் வாசல்தான்.

ஏனெனில் தெற்கு வாசலில் வீடு கட்டுவது கிடையாது. தெற்கு திசை வேறு சில உபயோகத்திற்கு சொல்லப்படுகிறது.

என்ன சொல்கிறீர்? எங்கள் ஊர் பக்கம் எல்லாம், வீடுகளுக்கு தெற்கு பக்கம் தான் வாசல் இருக்கும். அல்லது தெற்கு பார்த்த வீடுகள். அப்போதுதான் தென்றல் வீட்டுற்குள் வரும் என்பதற்காக.

ஆதவா
11-02-2007, 01:37 PM
இது போது இது போதும் என்று சொல்லியே எல்லாத்தையும் பெற்றுவிடுவீர்கள் போல இருக்கிறதே!!
தென்றலின் நிம்மதியான ஓசை
குழந்தையின் அழுகைக்குக் கிடைக்கும் தாலாட்டு, உங்கள் கவிதையில் பொங்குகிறது பல....
உங்கள் வீட்டில் உங்களுக்கே உரிய பாசமிகுந்த அம்மாவின் கை குழம்பு //// ஒரு அசாதாரண நிலையில் சொல்லப்படாமல் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்,... இதெற்கென்ன விளக்கம் வேண்டி நான் எழுதுவது..... வார்த்தைகள் சிக்கவில்லைபா!!
நான் முன்பே சொல்லியிருக்கிறேன்.. கவிதை வாழ்கையை நினைவு படுத்துமாயின் அது மாகவிதையாகிப் போகிறது.
சில வருடங்களுக்கு முன் நான் இதே பாணியில் எழுதிவைத்து இருக்கிறேன். உங்களின் கவிதையைக் கண்டு அந்த கவிதையின் வரிகள் எல்லாம் ஓடிவிட்டன...... தேடிப் பிடித்து இடுகிறேன்..
இந்தியப் பெண் வேண்டும் என்று சொல்லும்போது நீங்கள் வெளிநாட்டுப் பெண்ணை நோக்குகிறீர்கள் அல்லது வெளிநாட்டுப்பெண்கள் உங்களை நோக்குகிறார்கள் என்று நினைக்கிறேன்... இன்னும் உங்கள் ஆசை பெருகட்டும்..........

pradeepkt
12-02-2007, 04:31 AM
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்... அப்படின்னு ஒரு பாட்டை இப்பக் கேட்டேன்.

நீங்க சொல்றது எல்லாம் கிடைச்சிட்டாலும் சில மனங்களுக்குப் போதாதுதான்... ஆயினும் உங்க ஆசைகள் கொஞ்சம் பேராசைகளாகத் தோணுது எனக்கு!

maganesh
12-02-2007, 07:55 AM
தெற்கு வாசல் வீடு!
தென்றல் காற்று! - கயிறு கட்டில்!
தலை வைத்து படுக்கத் தாய் மடி!
இது போதும் எனக்கு
இயற்கையுடன் இணைந்து எழுதப்பட்ட வரி கவிதை. இதில் புடித்தது இவ்வரிகள்தான். உங்களுக்கு இயற்கைக் கவிஞன் என்ற பட்டமே தரலாம்.

ஷீ-நிசி
12-02-2007, 08:03 AM
மிகவும் ரசிக்கும்படியான கவிதை லெனின்... இது போதும் என்று கவிதை எழுதும் நேரங்கள் சொல்கிறது... நிஜத்தில் எதுவுமே போதும் என்று எண்னமுடிவதில்லை...

ஓவியா
12-02-2007, 10:10 PM
லேனின்,
உங்களுடைய பப்டைபில் நான் படித்த முதல் கவிதை இதுதான். (பின்னூட்டம்தான் தாமதமாக இடுகின்றேன், மன்னிக்க)

சபாஷ். எனக்கு மிகவும் பிடித்துல்லது.

அழகான உணர்வை வடித்து வைத்த கவிதை.
படிக்க படிக்க இனிக்கின்றது.


தொடரவும்.

வாழ்த்துக்கள்.


...................................................................................................................................................................................................................................

லேனின்,
ஒருமுறை நீங்கள் மன்றத்தில் பதித்த அந்த (நீக்கிய) நீண்ட கடித்தை முழுதும் முதலில் படித்ததும் நாந்தான். ஆதவர் மட்டும் பின்னூட்டம் இட்டிருந்தார். அப்பொழுதே கவணித்தேன் உங்களுக்குள் ஒரு அழகிய திரன் மிக்க எழுத்தாளன் இருகின்றான். வளர்க உங்கள் எழுத்துபணி. பாராட்டுக்கள். :)

lenram80
16-02-2007, 12:08 AM
நன்றி ஓவியா,ஷீ-நிசி, மயூரன்