PDA

View Full Version : சேவை வரிச்சுமை



v.pitchumani
10-02-2007, 09:44 PM
சிதம்பரம் கண்டுபிடித்த பெரிய வரிப்பூதம் சேவை வரியாகும். அரசு நிர்ணயித்த ரூ.36500 கோடி இலக்கை தாண்டி அதிகமாக ரூ 5600 கோடி வரி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் சேவை வரி வசூலிப்பதன் மூலம் ரூ.40000 கோடி கிடைக்கும். இந்திய மொத்த வரிவருவாயில், சேவை வரியின் பங்கு 54 விழுக்காடாக உள்ளது. இன்னும் பல துறைகளை சேவை வரியின் பிடியில் சிதம்பரம் கொண்டு வர உத்தேசித்துள்ளார். 12% சேவை வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இது ரொம்ப அதிகமானது. சேவை வரியின் சுமை மத்தியதர மக்களின் தலையில் தான் இறங்கிறது என சிதம்பரத்துக்கு தெரியும். யார் எப்படி போனால் என்ன, என் கணக்கில் பணம் சரியாக இருக்க வேண்டும் என சிதம்பரம் நினைக்க கூடியவர்.
அதெல்லாம் சரி, தொலைபேசி துறையின் சேவை திருப்திகரமாக இல்லை,ஆனால் அரசு, தொலைபேசி சந்தாதாரர்கள் மீது சேவை வரி விதிக்கிறது. இது அரசாங்கத்துக்கே நியாமாக தெரிகிறதா?
-வே.பிச்சுமணி

pradeepkt
12-02-2007, 05:30 AM
இது பற்றி ஏதாவது விரிவான பதிவுகள் தரலாமே பிச்சுமணி. இது சிதம்பரம் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. ஐரோப்பிய யூனியன் பல காலமாக வெற்றிகரமாகவே இதை உபயோகித்து வருவதாக அறிகிறேன். எனினும் எங்களைப் போன்றவர்களுக்கு இன்னும் பல விஷயங்கள் புரியவில்லை.

சேவை திருப்திகரமாக இல்லாவிடினும் சேவை வரி விதிப்பதில் இருந்து விலக்கில்லை. ஓட்டலில் சாப்பாடு ருசியாக இல்லாவிடினும் சாப்பிட்டுவிட்டுக் காசு கொடுக்காமல் வந்துவிட முடியுமா?

karikaalan
12-02-2007, 06:56 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7936
நண்பர்களே

மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சேவை வரியைப் பற்றி அடியேன் அறிந்தவரை எழுதிருக்கிறேன். தங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

===கரிகாலன்

lolluvathiyar
02-03-2007, 03:35 PM
சேவை வரி சிதம்பரம் கொண்டுவரவில்லை
எதில்தான் வரி இல்லை.
வரி தவறில்லை, ஆனால் அதிகம் என்பது என் கருத்து
விற்பனை வரி, சேவை வரி அனைத்தும் 1 சதவீதம் இருந்தாலே
போது வருவாய் கிடைக்கும். விரி ஏய்ப்பு இருக்காது
கருப்பு பணம் ஒழியும்

தங்க கம்பி
02-03-2007, 04:46 PM
சேவை வரி தவறில்லை.அதிகபடியாக 5% இருக்கலாம். நம்மால் தாங்கிக்கொள்ளமுடியும்.