PDA

View Full Version : நிஜங்கள்



maganesh
10-02-2007, 04:45 PM
என்றும் உயர்வான உண்மை
உயிரிலும் மேலான ஒழுக்கம்
தேனிலும் சுவையான செந்தமிழ்
களிப்பூட்டும் அன்னையின் தாலாட்டு
துணிவைத்தரும் வீரர்தம் வீரமுழக்கம்
கவலையை அகற்றும் இன்னிசை
ஆனந்தத்தை தரும் அரவணைப்பு
சேர்ந்திருக்கும் தமிழும் சுவையும்
இவைதாம் மாறும் உலகில்
மாறா நிஜங்கள் இவை
தடுமாறா நிஜங்கள்.

ஆதவா
10-02-2007, 06:56 PM
அருமையான ஆரம்பம் நண்பரே!!1 வாழ்த்துக்கள். கடைசிவரிகளில் மட்டும் எனக்கு நெருடல்..... தடுமாறும் நிஜங்கள் என்று வைத்திருக்கலாமே!!

pradeepkt
12-02-2007, 04:28 AM
மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லி வரும் வேளையில் மாறாத, குறிப்பாகத் தடுமாறாத நிஜங்களின் பட்டியல்...
நன்று!

maganesh
12-02-2007, 08:00 AM
அருமையான ஆரம்பம் நண்பரே!!1 வாழ்த்துக்கள். கடைசிவரிகளில் மட்டும் எனக்கு நெருடல்..... தடுமாறும் நிஜங்கள் என்று வைத்திருக்கலாமே!!
விமர்சனத்துக்கு நன்றி ஆதவா. இவை தடுமாறுவது போலத் தெரிந்தாலும் நிலைத்து நிற்கும் நிஜங்கள்தானே.

maganesh
12-02-2007, 08:01 AM
மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லி வரும் வேளையில் மாறாத, குறிப்பாகத் தடுமாறாத நிஜங்களின் பட்டியல்...
நன்று
நன்றி பிரதீப். உங்க கருத்துக்கு நன்றி.