PDA

View Full Version : தமிழ் மன்றமே



maganesh
10-02-2007, 04:33 PM
தமிழ் மன்றமே!
தாய் மண்ணில் கற்றிட்டோம் கல்விதனை
தாராளமாய்ச் செய்திட்டோம் சேவைகளை
தாயகத்துச் சூழ்நிலையால் புலம் பெயர்ந்தோம்
உறவுகள் பலவற்றை நாம் பிரிந்தோம்
ஆனாலும் பெற்றிட்டோம் தமிழ்மன்ற இணையத்தில்
தமிழர் நாமெல்லாம் ஒன்றிணைந்து
ஆர்வத்துடன் பயனுள்ள சேவைதனை
ஆற்றிட வேண்டியது உன் கடமை
தமிழ்மன்றம் நீ எம் உடமை
சின்னஞ்சிறார்களின் பிஞ்சு நெஞ்சங்களில்.
சிறிதுசிறிதாய் தமிழைப் பதியவைப்பதும்
தமிழுணர்வை பத்தித்து வைத்தலும்
உன் கடமை நீ எம் உடமை
தமிழ்மணம் அறியாத் தலைமுறைக்கு
தமிழின் பெருமையை உணரவைத்து
நற்றமிழ்ச் சந்ததி ஆக்குவது
உன்கடமை நீ எம் உடமை

ஆதவா
12-02-2007, 03:47 PM
அருமையா இருக்குபா!!! வாழ்த்துக்கள்

ஓவியா
12-02-2007, 07:01 PM
அழகான வாழ்த்துப்பா

பாராட்டுகிறேன்

கவிதை வளம் பெருக வாழ்த்துக்கள்

மனோஜ்
12-02-2007, 07:12 PM
தாயகத்துச் சூழ்நிலையால் புலம் பெயர்ந்தோம்
உறவுகள் பலவற்றை நாம் பிரிந்தோம்
ஆனாலும் பெற்றிட்டோம் தமிழ்மன்ற இணையத்தில்

உள்ளம் உன்மையில் உறக்க கூறுகிது நன்பா
உள்உனர்வுடன் உமக்கு நன்றிகள்

pradeepkt
13-02-2007, 03:40 AM
மன்ற வாழ்த்துப்பா!
நன்றி மயூரன்!!!

மயூ
13-02-2007, 03:42 AM
வாழ்த்துப்பா வாழ்க...
அருமை மயூரா!

maganesh
13-02-2007, 12:10 PM
சொந்தங்களை விட்டுப் பிரிந்த தமிழ் உறவுகள் கூடிக் குலாவும் இடமல்லவா அதான் முடிந்தவரை முயற்சித்தேன்.

அறிஞர்
13-02-2007, 03:22 PM
தெர்ந்த, தெரியாத சொந்தங்களை ஒன்று சேர்க்கும் மன்றம்.

தொடரட்டும் உங்கள் கவிதை மயூரன்.