PDA

View Full Version : பிறமொழி வார்த்தைகள் கற்போம்

மனோஜ்
10-02-2007, 12:45 PM
ஆனைத்து நன்பர்களுக்கும் வணக்கம்
நண்பர் ஆதவரின் டைரிகுறிப்பை படித்த பொழது எழுந்த முயற்சி
மன்றத்து நன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

உங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த பிற மொழி வார்த்தைகள் குறைந்தது 5 வார்த்தைகள் விளக்கத்துடன் பதியவும் :)

எனது தாய்மொழி மலையாளம் எனவே முதல் 5 வார்த்தையை எனது தாய் மொழியிலேயே கொடுக்கிறேன்

மலையாளம்

வெள்ளம் - தண்ணீர்
உள்ளி - வெங்காயம்
எனிக்கு - எனக்கு
கழிக்கு - சாப்பிடு
பிரேமம் - காதல்

அறிஞர்
10-02-2007, 01:10 PM
தொடர்ந்து தெரிந்த வார்த்தைகளை கொடுங்கள்... கற்றுக்கொள்வோம்....

(சிறு சிறு பிழைகளை.... சரிபார்த்துக்கொள்ளுங்கள்)

மயூ
10-02-2007, 01:16 PM
ஆனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
நண்பர் ஆதவரின் டைரிகுறிப்பை படித்த பொழது எழுந்த முயற்சி
மன்றத்து நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

உங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த பிற மொழி வார்த்தைகள் குறைந்தது 5 வார்த்தைகள் விளக்கத்துடன் பதியவும் :)

எனது தாய்மொழி மலையாளம் எனவே முதல் 5 வார்த்தையை எனது தாய் மொழியிலேயே கொடுக்கிறேன்

மலையாளம்

வெள்ளம் - தண்ணீர்
உள்ளி - வெங்காயம்
எனிக்கு - எனக்கு
கழிக்கு - சாப்பிடு
பிரேமம் - காதல்
உள்ளி என்றால் இலங்கைத் தமிழில் வெள்ளை வெங்காயம்!

மயூ
10-02-2007, 01:18 PM
மம ஒயாட்ட ஆதரய் - நான் உன்னைக் காதலிக்கின்றேன்
பள்ளா - நாய்
தெமல - தமிழ்
நந்தா - அத்தை
ஹமுதா - இராணுவம்

ஓவியா
10-02-2007, 01:20 PM
அருமையான பதிவு. தொடக்கமும் பலே.

நன்றி மனோஜ்

மலேசியர்களின் தேசியமொழி 'மலாய்'

மலாய் மொழியில் எண்ணிக்கை

சத்து = ஒன்று
டுவா = இரண்டு
தீகா = மூன்று
அம்பாட் = நான்கு
லீமா = ஐந்து

மனோஜ்
10-02-2007, 01:22 PM
மயூரேசன் ஓவியாவிற்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்
உன்மையில் இது பிறமொழி அகறாதியாக மாறும் என்று நம்புகிறோன்

ஆதவா
10-02-2007, 02:07 PM
மம ஒயாட்ட ஆதரய் - நான் உன்னைக் காதலிக்கின்றேன்
பள்ளா - நாய்
தெமல - தமிழ்
நந்தா - அத்தை
ஹமுதா - இராணுவம்

அட்றா அட்றா!!! முதல் வார்த்தையே காதலா..... (மயூரேசா! அந்த சிங்களப்பெட்டையோட செல் நம்பர் வாங்கியாச்சா? யார்னு தெரியலியா?மரியா ப்பா!! முதல்ல நான் ஈழம் வந்தவுடனே அவளப்பார்த்து மம ஓயாட்ட ஆதரய் னு சொல்லப்போறேன்.... என்ன இருந்தாலும் உன்னைக் காதலிக்கிறேன்னு தமிழ்ல சொல்றமாதிரி வருமா??)

ஆதவா
10-02-2007, 02:09 PM
ஆனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
நண்பர் ஆதவரின் டைரிகுறிப்பை படித்த பொழது எழுந்த முயற்சி
மன்றத்து நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

உங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த பிற மொழி வார்த்தைகள் குறைந்தது 5 வார்த்தைகள் விளக்கத்துடன் பதியவும் :)
கழிக்கு - சாப்பிடு
பிரேமம் - காதல்

ரொம்ப பெருமைதான் எனக்கு........ பாராட்டுக்கள் மனோஜ் சாரே!! உங்களுடைய சில பதிவுகள் கவனித்தேன்.... பெயர் எழுத்துக்களிலேயே கவிதை பிடிக்கிறீர்கள்.... அற்புதம்.. தொடரட்டும்.........

மனோஜ்
10-02-2007, 02:11 PM
என்ன ஆதவா கதைய மறந்து குதைக்கு:D போறிங்க :D :D கொஞ்ச நாசென்ன கருத்த கவனிச்சு உங்க தெலுங்குவார்த்தை 5 குடுடுங்க பா

ஆதவா
10-02-2007, 02:12 PM
சரி நீங்க மத்த மொழிகல கவனியுங்க... நான் நம்ம தமிழ்ல ரெம்ப சிரமமான வார்த்தைகளை ஏதாவது புஸ்தகத்தில புடிச்சு போடறேன்.....
சரியா?

(செரி, மீரு அந்தா லாங்குவேஜ்லுத சூடண்டி. நேனு மனி தமிழ்த சூஸ்தானு... கஸ்டமாய்னி உண்டே வர்ட்ஸ்லுத பெட்டேஸ்தானு....)

ஆதவா
10-02-2007, 02:16 PM
என்ன ஆதவா கதைய மறந்து குதைக்கு:D போறிங்க :D :D கொஞ்ச நாசென்ன கருத்த கவனிச்சு உங்க தெலுங்குவார்த்தை 5 குடுடுங்க பா

முன்னமே சொன்ன மாதிரி தமிழைத் தான் கொடுக்கப்போறேன்...

இருந்தாலும் தெலுகு வார்த்தலு..

ஏமி? - என்ன?
நிந்த - உன்னை
ப்ரேமிஸ்தானு - காதலிக்கிறேன்
எக்கட - எங்கே
ரா - வா
சூடு - பாரு
ராஇ - எழுது
கவித - கவிதை
நேனு - நானு

பாருங்க... தாய்மொழிதான் இருந்தாலும் எழுத வரமாட்டேங்குது........ இருந்தாலும் தொடரட்டும்

மயூ
10-02-2007, 02:33 PM
ஆதவா நீங்கள் என்ன மொழியில் படித்தீர்கள்? பாடசாலைக்கல்வி?

மயூ
10-02-2007, 02:37 PM
அட்றா அட்றா!!! முதல் வார்த்தையே காதலா..... (மயூரேசா! அந்த சிங்களப்பெட்டையோட செல் நம்பர் வாங்கியாச்சா? யார்னு தெரியலியா?மரியா ப்பா!! முதல்ல நான் ஈழம் வந்தவுடனே அவளப்பார்த்து மம ஓயாட்ட ஆதரய் னு சொல்லப்போறேன்.... என்ன இருந்தாலும் உன்னைக் காதலிக்கிறேன்னு தமிழ்ல சொல்றமாதிரி வருமா??)
நேன நிக்கு பிரேமிஸ்தான!!!!
ஐயா!! எங்காவது தெலுங்குப் பொண்ணுங்களைத் தெரிந்தா சொல்லுங்க பிராக்டிஸ் பண்ணிப் பாக்கணும்...
அப்புறம் உங்களுக்காக நம்பர் தேடித்திரியிறன் ஆதவா!!!! :D

பென்ஸ்
10-02-2007, 02:42 PM
லீமா = ஐந்து

லீமா.. நான் ஐந்தாவது படிக்கும் போது எனக்கு பக்கதில் இருக்கும் மலையாள குட்டி பெயர்:D :D

மனோஜ்
10-02-2007, 02:51 PM
பிற மொழினேன எல்லாத்துக்கும் என்னன்னமே ஞபாகத்திற்கு வருதுபோல உ உ எப்படியே நா சென்ன கருத்து ரோம்பொருக்கு பயன்படுது

அப்படியே 5 வார்த்தைய கொடுத்தா நல்லயிக்கும்

ஆதவா
10-02-2007, 06:03 PM
ஆதவா நீங்கள் என்ன மொழியில் படித்தீர்கள்? பாடசாலைக்கல்வி?

இதென்ன இப்படியொரு கேள்வி...(சிங்களப்பெட்டை கேட்டு வுட்டதா?:D )

படித்தது தமிழ்தான்.... பேசுவதற்குமட்டும் 5 அல்லது 7 வயதுவரை சிரமமாக இருந்தது... நான் பள்ளிக்குச் செல்லும்போதுதான் தமிழ் என்ற மொழியே தெரியும்.. அதற்கு முன்பே தமிழ் எழுத்துக்களையும் தெரிந்து வைத்திருந்தது ஆச்சரியம்தானே!!!

ஆதவா
10-02-2007, 06:04 PM
லீமா.. நான் ஐந்தாவது படிக்கும் போது எனக்கு பக்கதில் இருக்கும் மலையாள குட்டி பெயர்:D :D

அடடே!!! இப்போவும் பக்கத்தில்தான் இருக்காங்களா?

ஓவியா
10-02-2007, 06:11 PM
லீமா.. நான் ஐந்தாவது படிக்கும் போது எனக்கு பக்கதில் இருக்கும் மலையாள குட்டி பெயர்:D :D

அப்பவே இப்படிதானா :D

மன்மதன்
10-02-2007, 06:27 PM
அப்பவே இப்படிதானா :D

;) ஐந்தில் வளையாதது..:rolleyes: :D

மனோஜ்
12-02-2007, 07:28 PM
மன்மதன் நீங்க நம்ம சென்னை தமிழில் 5 வார்த்தைகள் கொடுங்களோன்

pradeepkt
13-02-2007, 03:44 AM
உள்ளி என்றால் இலங்கைத் தமிழில் வெள்ளை வெங்காயம்!
தமிழில் உள்ளி என்றால் பூண்டு!
ஈருள்ளி என்றால் சின்ன வெங்காயம்.
ஒற்றுமை!!

கன்னடம்:
ஈருள்ளி - வெங்காயம்
வெள்ளுள்ளி - பூண்டு

மயூ
13-02-2007, 03:50 AM
இந்தியாவில் இப்படி பலமொழி பேசுகின்றீர்களே...
பொறாமையாக உள்ளது... நமக்கு விரும்பியோ விரும்பாமலோ படிக்கக் கூடிய சிங்களம் மட்டும்தான்...

pradeepkt
13-02-2007, 04:24 AM
இந்தியாவில் இப்படி பலமொழி பேசுகின்றீர்களே...
பொறாமையாக உள்ளது... நமக்கு விரும்பியோ விரும்பாமலோ படிக்கக் கூடிய சிங்களம் மட்டும்தான்...
ஒரு பக்கம் பொறாமை என்றாலும் இன்னொரு பக்கம் ஒவ்வொரு மாநிலம் செல்லும் போதும் அம்மாநில மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஹிந்தி பல மாநிலங்களில் செல்லுபடியானாலும் குறைந்தபட்சம் தென்மாநிலங்களில் சாமானியர்களுடன் பேசும்போது அம்மாநில மொழி அவசியமாகிறது.

மயூ
13-02-2007, 05:53 AM

கர்நாடகா காரரங்களுக்கு நல்லா ஹிந்தி தெரியும் என்று கேள்விப்பட்டேன்??? :confused:

மனோஜ்
13-02-2007, 07:25 AM
கர்நாடகா காரரங்களுக்கு நல்லா ஹிந்தி தெரியும் என்று கேள்விப்பட்டேன்??? :confused:

அங்கு வடஇந்தியர்கள் அதிகம் இருப்பதால்தான் மயூரேசன்

pradeepkt
13-02-2007, 07:27 AM
லீமா.. நான் ஐந்தாவது படிக்கும் போது எனக்கு பக்கதில் இருக்கும் மலையாள குட்டி பெயர்:D :D
நாய்க்குட்டியா??? :D :D

pradeepkt
13-02-2007, 07:30 AM
கர்நாடகா காரரங்களுக்கு நல்லா ஹிந்தி தெரியும் என்று கேள்விப்பட்டேன்??? :confused:
அப்படி ஒரு வதந்தியை எல்லாருமே கிளப்புகிறார்கள். என்னமோ தமிழ்நாட்டை விட்டு ஒரு அடி வெளியே நகர்ந்தாலும் ஹிந்தியை அனைவரும் பேசுவதாக ஜல்லியடிக்கின்றனர். தமிழகத்தை விட பிற மாநிலங்களில் ஹிந்தி அறிந்தவர்கள் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் கொஞ்சம் உட்புறமாகச் சென்றால் அம்மாநில மொழி பேசுபவர்கள்தான் அதிகம்.

பெங்களூரில் இருந்தால் தமிழே போதுமானது. கலவரம் வரும்போது மட்டும்தான் கன்னடம் உதவும். அப்போதும் ஹிந்தி வேலைக்காகாது. இது நானே பட்டு அறிந்தது! :angry:

மயூ
14-02-2007, 02:15 AM

எனது சீனியர் அக்கா ஒருதடவை பெங்களூரில் வந்து 6 மாதம் வெலைபார்த்தா..அப்போ யாரோ அவவோட பர்சை அடிச்சிட்டாங்கள்.. பின்பு அவரின் ஹிந்தி தெரிந்த நண்பருடன் சென்று பொலீசில் முறைப்பாடு செய்தார்களாம்... அவர் இப்படித்தான் சொன்னார்.
"நான் பொலீஸ் நிலையத்தில் பேசிய போது அவர்களுக்கு ஆங்கிலம் விளங்கவில்லை அவர்கள் பேசவது கன்னடா என்றொரு மொழி.. அப்படி ஒரு மொழி உள்ளது என்பது பெங்களுர் போன பின்புதான் எனக்குத் தெரிந்தது. ஆயினும் அவர்கள் எல்லாரும் ஹிந்தி பேசுவார்கள் ஆகவே என் நண்பன் ஹிந்தியில் முறைப்பாடு செய்தான்"

மனோஜ்
15-02-2007, 07:36 AM
பிற மொழி கற்பது நல்லது தான் மயூரேசன் சில சமயம் ஆபத்திற்கு உதவும் நன்பா

மயூ
15-02-2007, 08:33 AM
பிற மொழி கற்பது நல்லது தான் மயூரேசன் சில சமயம் ஆபத்திற்கு உதவும் நன்பா
ஆம் நிச்சயமாகப் பலதடவை எனக்கு சிங்களம் உதவி இருக்கின்றது. ஆமிக்காரங்களிடம் அடையாள அட்டையில்லாமல் போய் தப்ப இந்த மொழி அறிவு அவசியமாகின்றது.

மயூ
15-02-2007, 10:14 AM
முன்னமே சொன்ன மாதிரி தமிழைத் தான் கொடுக்கப்போறேன்...

இருந்தாலும் தெலுகு வார்த்தலு..

ஏமி? - என்ன?
நிந்த - உன்னை
ப்ரேமிஸ்தானு - காதலிக்கிறேன்
எக்கட - எங்கே
ரா - வா
சூடு - பாரு
ராஇ - எழுது
கவித - கவிதை
நேனு - நானு

பாருங்க... தாய்மொழிதான் இருந்தாலும் எழுத வரமாட்டேங்குது........ இருந்தாலும் தொடரட்டும்

ஒரு கூட்டத்திற்காக எனது சில நண்பர்கள் ஐதராபாத் போகின்றார்கள் அவர்களிடம் இந்த வார்த்தைகளை சொல்லிக் கொடுத்தேன்... முக்கியமா
நின்னு நேனு பிரேமிஸ்தானு என்பதையும் சொல்லிக்கொடுத்தேன்...:D

அறிஞர்
15-02-2007, 04:30 PM
ஒவ்வொரு மொழியையும் தனித்தனியாக பதியாலாமே....... தனிகலரில் இருந்தால்.. கருத்துக்களை தவிர்த்து... கற்றுக்கொள்பவருக்கு உதவுமே..

மனோஜ்
16-02-2007, 04:08 PM
இது வறை...

மலையாளம் - மனோஜ்

வெள்ளம் - தண்ணீர்
உள்ளி - வெங்காயம்
எனிக்கு - எனக்கு
கழிக்கு - சாப்பிடு
பிரேமம் - காதல்

சிங்களம் - மயூரேசன்

மம ஓயாட்ட ஆதரய் - நான் உன்னைக் காதலிக்கின்றேன்
பள்ளா - நாய்
தெமல - தமிழ்
நந்தா - அத்தை
ஹமுதா - இராணுவம்

மலாய் மொழி - ஓவியா

சந்து - ஒன்று
டுவா - இரண்டு
தீதா - மூன்று
அம்பாட் - நான்கு
லீமா - ஐந்து

தெலுங்கு - ஆதவன்

ஏமி? - என்ன?
நிந்த - உன்னை
ப்ரேமிஸ்தானு - காதலிக்கிறேன்
எக்கட - எங்கே
ரா - வா
சூடு - பாரு
ராஇ - எழுது
கவித - கவிதை
நேனு - நானு

கன்னடம் - பிரதிப்
ஈருள்ளி - வெங்காயம்
வெள்ளுள்ளி - பூண்டு

இது வறை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி
தொடர்ந்து பிற மொழிகளை நமது மன்ற நன்பர்களுக்கு வழங்கவும்

மனோஜ்
16-02-2007, 04:15 PM
அரபிய மொழி

மாபீ - இல்லை
மாபீ மாலும் - எனக்கு தெரியாது
ஷலாஸ் - முடிந்தது
இஜு - வாங்க
ரோ - போஙக

மயூ
17-02-2007, 03:19 AM
நன்றி மனோ! நம்ம லியோ மோகன் வந்தாருன்னா பல மொழிகளில் சக்கைப் போடு போடுவாரே!!!

leomohan
17-02-2007, 06:15 AM
நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது இலங்கையிலிருந்து ரூபவாஹினி கிடைக்கும் நாகப்பட்டினத்தில். அதில் தினமும் 1 மணி நேரம் சிங்களம் சொல்லித்தருவார்கள். சிரத்தையுடன் கற்றேன். பிறகு மறந்து போனேன். நண்பர்களை கிண்டல் செய்ய ஒரு வார்த்தை மட்டும் நினைவில் கொண்டேன்.

பல்லா - நாய்

பல்லா திபே - நாய் இருக்கிறது.

சரியா மயூரேசன்?

மனோஜ்
17-02-2007, 06:44 AM

வருக லியோ மோகன் நீங்கள் பல்வேறு மொழியை கற்றவர் இந்த பகுதியில் நமது மன்ற நன்பர்களுக்காக உதவுங்கள்

மயூ
17-02-2007, 08:49 AM
நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது இலங்கையிலிருந்து ரூபவாஹினி கிடைக்கும் நாகப்பட்டினத்தில். அதில் தினமும் 1 மணி நேரம் சிங்களம் சொல்லித்தருவார்கள். சிரத்தையுடன் கற்றேன். பிறகு மறந்து போனேன். நண்பர்களை கிண்டல் செய்ய ஒரு வார்த்தை மட்டும் நினைவில் கொண்டேன்.

பல்லா - நாய்

பல்லா திபே - நாய் இருக்கிறது.

சரியா மயூரேசன்?
சரியே லியோ மோகன்... திபே என்பது எழுத்துச் சிங்களம்... பல்லா இன்னவா... என்பதே பேச்சுச் சிங்களம்.
பாராட்டுக்கள்.

அமரன்
17-02-2007, 09:03 AM
மம ஓயாட்ட ஆதரய்
இது நான் உன்னை நேசிக்கின்றேன் என்றுதான் வரவேண்டும். இப்போது காதல் என்பதின் அர்த்தம் வேறு அல்லவா?

ஓவியா
17-02-2007, 05:16 PM
இது வறை...

மலாய் மொழி - ஓவியா

சந்து - ஒன்று
டுவா - இரண்டு
தீதா - மூன்று
அம்பாட் - நான்கு
லீமா - ஐந்து

இது வறை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி
தொடர்ந்து பிற மொழிகளை நமது மன்ற நன்பர்களுக்கு வழங்கவும்

அருமையான பதிவு. தொடக்கமும் பலே.

நன்றி மனோஜ்

மலேசியர்களின் தேசியமொழி 'மலாய்'

மலாய் மொழியில் எண்ணிக்கை

சத்து = ஒன்று
டுவா = இரண்டு
தீகா = மூன்று
அம்பாட் = நான்கு
லீமா = ஐந்து

மனோஜ் அண்ணா,

சில வார்த்தைகளை தப்பாக பதித்துல்லீர்கள்,

சரியான உச்சரிப்பினை கொடுத்துல்லேன். கவனிக்க, நன்றி

தொடருட்டும் தங்கள் தொண்டு

ஓவியா
17-02-2007, 05:22 PM
நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது இலங்கையிலிருந்து ரூபவாஹினி கிடைக்கும் நாகப்பட்டினத்தில். அதில் தினமும் 1 மணி நேரம் சிங்களம் சொல்லித்தருவார்கள். சிரத்தையுடன் கற்றேன். பிறகு மறந்து போனேன். நண்பர்களை கிண்டல் செய்ய ஒரு வார்த்தை மட்டும் நினைவில் கொண்டேன்.

பல்லா - நாய்

பல்லா திபே - நாய் இருக்கிறது.

சரியா மயூரேசன்?

அடடே சிங்களமும் தெரியுமா?

அப்ப எந்த மொழியிலே திட்டுவதான்...எல்ல வார்த்தையும் கண்டு பிடித்துவிடுவீர்கலே :D :D

சும்மா ஒரு குசும்புக்கு, கோவம் வேண்டாம். :cool:

ஓவியா
17-02-2007, 05:23 PM
கன்னடத்தில் மற்றும் சம்ஸ்கிருதத்தில் நான் உன்னை காதலிக்கிறேன், என்னை கல்யாணம் கட்டிகொள்வாயானு எப்படி சொல்வது.??

ஆதவா
17-02-2007, 06:27 PM
கன்னடத்தில் மற்றும் சம்ஸ்கிருதத்தில் நான் உன்னை காதலிக்கிறேன், என்னை கல்யாணம் கட்டிகொள்வாயானு எப்படி சொல்வது.??

கன்னடமா? ஓ!! அங்கதான் தேவ குமாரன் இருக்கிறானோ?:D

நண்பர்களே!! இந்த திரியில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது..

முதலாவதாக உச்சரிப்பு... தமிழிலும் உச்சரிப்பு உபசாரங்கள் உண்டு. ல, ள, ழ ஆகியவற்றுக்கும். ற ர, ண, ன.. ஆகியவற்றுக்கும் வேறுபாடு உண்டு...
இது தமிழில் மிகவும் எளிது....... நாக்கை மடக்கி 'ழ சொல்லத் தெரியும் எல்லாருக்கும்.... 'ல வின் உச்சரிப்பு நாக்கை அழுத்தாமல் சொல்லவேண்டும்.இலகு வாக சொல்லவேண்டும்.. 'ள கொஞ்சம் அழுத்தியே சொல்லவேண்டும்.... எழுத்துக்களைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம்.. 'ல வை விட 'ள அழுத்தமாகவே அல்லது எளிதல்லாததாகவே எழுதப்படும்...
ண ன கூட அப்படித்தான்... அழுத்தமாக சொல்லப்படுவது பெரிய ண' இலகுவாக 'ன.....
இது தமிழில் இன்னும் ஹிந்தி எடுத்துக்கொண்டால் க வகையே நான்கு உள்ளது.... (ஹிந்தி எழுதவும் படிக்கவும் தெரியும் எனக்கு...பேசத் தெரியாது..) அதில் உச்சரிப்பு மாறிவிட்டால் பொருளே மாறிவிடும்....
இதற்கு என்ன யோசனை உள்ளது? யாராவது சொல்வது கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும்..
அடுத்து முறையின்றி இங்கே கற்பிக்கப்படுகிறது..... அதாவது தாங்கள் விருப்பப்பட்ட வார்த்தைகளே முதலிடம் பெறுகிறது. நான் கூட அப்படியே எழுதியிருந்தேன்... அதில்லாமல் ஆரம்பத்திலிருந்து வருதல் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்...இனி உங்கள் கருத்து...??

ஓவியா
17-02-2007, 09:52 PM
கன்னடமா? ஓ!! அங்கதான் தேவ குமாரன் இருக்கிறானோ?:D

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை :eek: :eek:

ஆசையாய் ஒரு நாளு வார்த்தை கன்னடத்திலே கற்றுகொள்ளாமே என்றுதான்

leomohan
18-02-2007, 04:10 AM
அடடே சிங்களமும் தெரியுமா?

அப்ப எந்த மொழியிலே திட்டுவதான்...எல்ல வார்த்தையும் கண்டு பிடித்துவிடுவீர்கலே :D :D

சும்மா ஒரு குசும்புக்கு, கோவம் வேண்டாம். :cool:

குசும்பு எந்த மொழி :D ?

மனோஜ்
18-02-2007, 03:02 PM
நண்பர்களே!! இந்த திரியில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது..

முதலாவதாக உச்சரிப்பு... தமிழிலும் உச்சரிப்பு உபசாரங்கள் உண்டு. ல, ள, ழ ஆகியவற்றுக்கும். ற ர, ண, ன.. ஆகியவற்றுக்கும் வேறுபாடு உண்டு...
இது தமிழில் மிகவும் எளிது....... நாக்கை மடக்கி 'ழ சொல்லத் தெரியும் எல்லாருக்கும்.... 'ல வின் உச்சரிப்பு நாக்கை அழுத்தாமல் சொல்லவேண்டும்.இலகு வாக சொல்லவேண்டும்.. 'ள கொஞ்சம் அழுத்தியே சொல்லவேண்டும்.... எழுத்துக்களைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம்.. 'ல வை விட 'ள அழுத்தமாகவே அல்லது எளிதல்லாததாகவே எழுதப்படும்...
ண ன கூட அப்படித்தான்... அழுத்தமாக சொல்லப்படுவது பெரிய ண' இலகுவாக 'ன.....
இது தமிழில் இன்னும் ஹிந்தி எடுத்துக்கொண்டால் க வகையே நான்கு உள்ளது.... (ஹிந்தி எழுதவும் படிக்கவும் தெரியும் எனக்கு...பேசத் தெரியாது..) அதில் உச்சரிப்பு மாறிவிட்டால் பொருளே மாறிவிடும்....
இதற்கு என்ன யோசனை உள்ளது? யாராவது சொல்வது கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும்..
அடுத்து முறையின்றி இங்கே கற்பிக்கப்படுகிறது..... அதாவது தாங்கள் விருப்பப்பட்ட வார்த்தைகளே முதலிடம் பெறுகிறது. நான் கூட அப்படியே எழுதியிருந்தேன்... அதில்லாமல் ஆரம்பத்திலிருந்து வருதல் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்...இனி உங்கள் கருத்து...??

ஆதவா இங்கு நாம் கற்று தேறுவது என்பது கடினம் சில வார்த்தைகள் அறிந்து கொள்வது என்பது எளிது
அதை தான் இங்கு நான் எதிர்பார்க்கிறோன்

virumaandi
18-02-2007, 03:58 PM
சத்து
டுவா
தீகா
அம்பாட்
லீமா

ஒரு நாலு வார்த்தை மற்ற மொழிகளை கத்து கொள்ளலாம் என்றால்... இப்போ ஐந்து வார்த்தை கற்றுகொண்டேன்
வணக்கம்

மனோஜ்
18-02-2007, 04:19 PM
ஒரு நாலு வார்த்தை மற்ற மொழிகளை கத்து கொள்ளலாம் என்றால்... இப்போ ஐந்து வார்த்தை கற்றுகொண்டேன்

இத இததான் எதிர்பார்த்தேன் :D :D :D

மனோஜ்
03-03-2007, 03:53 PM
மலையாளம்

நிங்கட பேரு எந்துவா ? - உங்கள் பெயர் என்ன?
இ ஸ்தலதினு எங்கன போனம்? - இந்த இடத்திற்கு எப்படி போவது?
சுகமாயிறிக்கிந்நே ? - நல்லா இருக்கிங்களா ?
எவுடுந்நு நிங்ஙள் வருந்நு? - எங்கிரந்து நீங்கள் வருகிறீர்கள்?
நிங்கட நாடு எதா? - உங்கள் ஊர் அல்லது நாடு எது?

sriram
03-03-2007, 04:34 PM
டச்சு - இந்தி ஆரம்பிக்கலாமா?

டச்சு இந்தி
I I MAI
JIJ YOU Thu
U YOU thum
HIJ HE vah
ZIJ(1) SHE vah
______________________________________
WIJ WE hum
JULLIE YOU (plural) aap
ZIJ(2) THEY ve

ஆதவா
03-03-2007, 04:44 PM
டச்சு - இந்தி ஆரம்பிக்கலாமா?

டச்சு இந்தி
I I MAI
JIJ YOU Thu
U YOU thum
HIJ HE vah
ZIJ(1) SHE vah
______________________________________
WIJ WE hum
JULLIE YOU (plural) aap
ZIJ(2) THEY ve

யப்பா தமிழ்ல கொடுப்பா!!! அதுவும் தமிழ் கற்கும்படி கொடுப்பா!! ஹிந்தி வேணாம்

sriram
03-03-2007, 05:02 PM
மொழியை இப்படி கற்கலாமே.
முதலில் தன்மை, முன்னிலை, படர்க்கை (ஒருமை-பன்மையோடு).
நான் -நாங்கள்
நீ- நீஙல்.
அவன்.- அவள்,அது-அவர்கள்
பிறகு வேற்றுமை உருபு சேர்த்து.
என்னை -எங்களை (2ம்-வேற்றுமை உருபு)
என்னால்- எங்களால் (3ம் ,,)
எனக்கு - எங்களுக்கு- (4ம் வேற்றுமை உருபு)
என்னுடைய -எங்களுடைய....(6ம் வேற்றுமை உருபு)
( இந்த கட்டமைப்பில் அனைத்து மொழியையும் அட்டவணைப்படுத்துங்கள். பிறகு காலம், செய்வினை, செயபாட்டுவினை என்று தொடரலாம்.
மொழி பயில ஒரு கட்டமைப்பு வழி சென்றால் எளிதாக இருக்கும் என நம்புகிறேன்.)
டமிழ் மலையாளம் டுச்சு .. .. ....
நான்
நாஙள்
நீ
நீஙள்
அவன்
அவள்
அது
அவர்கள்
எனக்கு
எங்களுக்கு
உனக்கு
உங்களுக்கு
அவனுக்கு
அவளுக்கு
அதௌக்கு
அவர்களுக்கு
என்னை
எங்களை
உன்னை
உங்களை
அவனை
அவளை
அதை
அவர்களை
என்னுடைய
எங்கலுடைய
உன்னுடைய
உங்களுடைய
அவனுடய
அவளுடைய
அதனுடய
அவர்களுடைய
என்னல்
எங்களால்
உன்னல்
உஙளால்
அவனால்
அவலால்
அதனால்
அவர்களால்
( இதை முதலில் செயுங்கள். அடுத்த கட்டமைப்பை விளக்குகிறேன். நாம் சேர்ந்து இது முழுமையானல், ஒரே நெரதில் 10, 15 மொழிக்கு விரிவான பயிர்ச்சி ஏடு செய்து விட முடியும்.)

மனோஜ்
04-03-2007, 08:03 AM
இவ்வளவுக்குமா கஸ்டம்தான் முயற்சிக்கிறோன் sriram

பென்ஸ்
04-03-2007, 10:00 AM
மலையாளம் - மனோஜ்

வெள்ளம் - தண்ணீர்
உள்ளி - வெங்காயம்
எனிக்கு - எனக்கு
கழிக்கு - சாப்பிடு
பிரேமம் - காதல்

மலையாளம் பேசும் போது கவனிக்க வேண்டியவை... எழுத்துகளைன் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் இல்லையேன்றால் பொருள் மாறி விடும்....

கழிக்கு - சாப்பிடு
களிக்கு - விளையாடு

வழி - பாதை
வளி - காற்று

என்ன தமிழ் போல இருக்குதா...
மலையாளத்தின் அப்பா -தமிழ்
அம்மா- சமஸ்கிருதம்

மனோஜ்
05-03-2007, 07:36 PM
கலக்குங்க பெஞ்ஜமின் மேல இருக்கறதுக்கு மலையாளத்தை குடுங்க

மனோஜ்
08-03-2007, 08:01 AM
நீ ஹாவ் மா? என்றால்
சௌக்கியமா என கேட்பது

ஹென் ஹாவ் என்றால்
சௌக்கியம்.

செக் ஃபான் மெ என்றால்
சோறு சாப்பிட்டாச்சா ?

ஃன் காவ் என்றால்
தூங்கு

ஃஉ ச்சு தாவ்

எனக்கு தெரியாது

போ - இல்லை

ச்சியாம்
கையெழுத்து

பைத்தூய்
வரிசை

எனக்கு தெரிந்த மாண்டரின்

மேலும் தெரிந்துகொள்ள இந்த சுட்டியை தட்டுங்கள்
http://ezinearticles.com/?Learn-to-Speak-Basic-Chinese-(Mandarin)-Words-and-Phrases&id=60907#

மனோ.ஜி

நன்றி

raj6272
08-03-2007, 11:40 AM
நான்
நாஙள்
நீ
நீஙள்
அவன்
அவள்
அது
அவர்கள்
எனக்கு
எங்களுக்கு
உனக்கு
உங்களுக்கு
அவனுக்கு
அவளுக்கு
அதௌக்கு
அவர்களுக்கு
என்னை
எங்களை
உன்னை
உங்களை
அவனை
அவளை
அதை
அவர்களை
என்னுடைய
எங்கலுடைய
உன்னுடைய
உங்களுடைய
அவனுடய
அவளுடைய
அதனுடய
அவர்களுடைய
என்னல்
எங்களால்
உன்னல்
உஙளால்
அவனால்
அவலால்
அதனால்
அவர்களால்

sriram குறிப்பிட்ட மாதிரி, மேற்கண்ட வார்த்தைகளுக்கு நான் இந்தியில் அர்த்தமும் அதற்கு சரியான உச்சரிப்பை ஆங்கிலத்திலும் தருகிறேன்.
நான்--மைந்--mein
நாங்கள்--ஹம்--Hum
நீ---தும்---thum
நீங்கள்---ஆப்---Aap
அவன்---வஹ்---vah
அவள்---வஹ்---vah
அது-----வஹ்---vah
அவர்கள்---வே---Veh
எனக்கு---முஜே--மேரேகோ---mujhe--mereko
எங்களுக்கு---ஹமே---ஹம்கோ---Humeh---Humko
உனக்கு---தும்ஹே---தும்கோ--Tumhe---Tumko
உங்களுக்கு---ஆப்கோ---Aapko
அவனுக்கு---உசே--உஸ்கோ---Use--usko
அவளுக்கு---உசே--உஸ்கோ---Use--usko
அதுக்கு---உசே--உஸ்கோ---Use--usko
அவர்களுக்கு--உன்கோ---unko
என்னை---முஜே---mujhe
எங்களை---ஹமே---humeh
உன்னை---துமே---thumeh
உங்களை---ஆப்கோ---Aapko
அவனை---உசே--உஸ்கோ---Use--usko
அவளை---உசே--உஸ்கோ---Use--usko
அதை---உசே--உஸ்கோ---Use--usko
அவர்களை---உன்ஹே---unhe
என்னுடைய---மேரா---mera
எங்கலுடைய---ஹமாரா---hamaaraa
உன்னுடைய---தும்ஹாரா---thumhaaraa
உங்களுடைய---ஆப்கா---Aapkaa
அவனுடய---உஸ்கா---uskaa
அவளுடைய---உஸ்கா---uskaa
அதனுடய---உஸ்கா---uskaa
அவர்களுடைய---உன்கா---unkaa
என்னால்---முஜ்சே---மேரேசே---Mujse---Merese
எங்களால்---ஹம்சே---humse
உன்னால்---தும்சே---Thumse
உங்களால்---ஆப்சே---Aapse
அவனால்---உஸ்சே---usse
அவளால்---உஸ்சே---usseஅதனால்
அவர்களால்---உன்சே---unse

மனோஜ்
08-03-2007, 02:16 PM
மனமாற வாழ்த்துக்கள் ராஜ்
தொடருங்கள் மன்ற நண்பர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையூம்

மனோஜ்
24-03-2007, 10:53 AM
மலையாலம்

எந்தினா கறையூந்நே - ஏன் அழுகிறாய்?
எனிக்கு இது வேனம் - எனக்கு இது வேன்டும்
எல்லா ஸ்தலத்தும் போய் - எல்லா இடத்திற்கும் சென்றோன்
எவிடுந்நு வந்நு நீ - எங்கிருந்து வந்தாய் நீ?
எல்லாறும் சுகமானே? - அனைவரும் நலமா?

ஆதவா
24-03-2007, 11:03 AM
மலையாலம்

எந்தினா கறையூந்நே - ஏன் அழுகிறாய்?
எனிக்கு இது வேனம் - எனக்கு இது வேன்டும்
எல்லா ஸ்தலத்தும் பேய் - எல்லா இடத்திற்கும் சென்றோன்
எவிடுந்நு வந்நு நீ - எங்கிருந்து வந்தாய் நீ?
எல்லாறும் சுகமானே? - அனைவரும் நலமா?

நண்பரே!! எல்லா இடத்திலும் பேயா?

இப்படி சொல்லி கொடுத்தீங்கன்னா நாங்க பயந்துடமாட்டோமா? எல்லாரும் நம்ம பிரதிப் அண்ணன் ஆகிடமுடியுமா? இல்லை நாங்க பயந்து ஓட மயூரேசன் கண்ட இண்டர்வியூ நண்பர்களா? இல்லியே!!! :icon_tongue:

மனோஜ்
24-03-2007, 11:20 AM
நன்றி நண்பா சுட்டிகாட்டியதற்கு மாற்றிவிட்டேன்

பயந்துடமாட்டோமா?
பயப்பற ஆளா நீங்கல்லா...

pradeepkt
24-03-2007, 12:55 PM
நண்பரே!! எல்லா இடத்திலும் பேயா?

இப்படி சொல்லி கொடுத்தீங்கன்னா நாங்க பயந்துடமாட்டோமா? எல்லாரும் நம்ம பிரதிப் அண்ணன் ஆகிடமுடியுமா? இல்லை நாங்க பயந்து ஓட மயூரேசன் கண்ட இண்டர்வியூ நண்பர்களா? இல்லியே!!! :icon_tongue:
ஓய்...
எங்கே தைரியம் வேண்டுமென்றாலும் என் பெயர் சொல்லு...
எல்லாஞ் சரியாப் போயிரும்..

ஆதவா
24-03-2007, 01:00 PM
ஓய்...
எங்கே தைரியம் வேண்டுமென்றாலும் என் பெயர் சொல்லு...
எல்லாஞ் சரியாப் போயிரும்..

அதுவும் சரிதான். பேயே பயப்படுதுன்னா பார்த்துக்கோங்க... :love-smiley-043:

பிரதிப் அண்ணா புகழ் பாடும்
ஆதவன் :cool-smiley-008:

மனோஜ்
24-03-2007, 07:29 PM
ஆதவா தெலுங்கில் இன்னும் கொஞ்சம் வார்த்தைகள் தாங்களேன்

pathman
16-05-2007, 10:51 AM
யாராச்சும் பிரேஞ்ச் மொழியில 5 இல்ல 10 வார்த்தை சொல்லி தாங்கோ

சிவா.ஜி
04-06-2007, 02:30 PM
இந்த திரியை அம்போன்னு விட்டுட்டீங்களே மக்களே..?
இதோ சில ரஷ்யன் வார்த்தைகள்
த்ராஸ்த்வீத்யா-drasthveethyaa-வணக்கம்
ஸ்பஸிபா-spaseebaa-நன்றி
கக்திலா-kakdhilaa-நலமா
கராஷோ-karaasho-நலம்
யா லுப்லு திப்யா-yaa lublu thibyaa -நான் உன்னை காதலிக்கிறேன்.

மயூ
04-06-2007, 02:36 PM
கக்திலா-kakdhilaa-நலமா
.
இது ஷெக்டிலா என்று வரவேண்டும் சரியா????
எனக்கு இங்கே ஒரு ரஷ்ய நண்பி உள்ளார்!!!

இதயம்
04-06-2007, 02:43 PM
அரபி

கேஃப் - எப்படி?
அல்-லைலா - இரவு
சியாரா - வாகனம்
ஷுகுல் - பணி
ராதிஃப் - சம்பளம்

சிவா.ஜி
04-06-2007, 02:46 PM
இல்லை நன்பரே கக்திலா தான் சரி.நான் இரண்டு வருடம் ரஷ்யாவிலிருந்து பிரிந்த கசகஸ்தானில் இருந்திருக்கிறேன். ரஷ்யமொழி சொல்லித்தரும் புத்தகங்களிலும் இப்படித்தான் உள்ளது. உங்கள் தோழி உச்சரிப்பது அப்படி இருக்கலாம்.

சக்தி
04-06-2007, 03:11 PM
காதலர்களே உங்களுக்காக

அம் துமாகி பாலு பாஷா- நான் உன்னை காதலிக்கிறேன் (பெங்காலி)

மே தும்ஷே பியார் கர்த்தாகும்- நான் உன்னை காதலிக்கிறேன் ( ஹிந்தி)

நேனு நின்னை பிரெமிக்குன்னு- நான் உன்னை காதலிக்கிறேன் (அநேகமாக கன்னடம்-சரியாக் தெரியவில்லை.)

மயூ
04-06-2007, 03:15 PM
இல்லை நன்பரே கக்திலா தான் சரி.நான் இரண்டு வருடம் ரஷ்யாவிலிருந்து பிரிந்த கசகஸ்தானில் இருந்திருக்கிறேன். ரஷ்யமொழி சொல்லித்தரும் புத்தகங்களிலும் இப்படித்தான் உள்ளது. உங்கள் தோழி உச்சரிப்பது அப்படி இருக்கலாம்.
வித்தியாசமான டைலாக்டாக இருக்கலாம்!!!
எதுக்கும் ஆதவரைக் கொஞ்சம் கேட்டால் தெரியும்!!! :angel-smiley-004: :spudnikbackflip: :spudnikbackflip:

இதயம்
05-06-2007, 06:53 AM
அரபிய மொழி

மாபீ - இல்லை
மாபீ மாலும் - எனக்கு தெரியாது
ஷலாஸ் - முடிந்தது
இஜு - வாங்க
ரோ - போஙக

சில திருத்தங்கள்:
மாஃபி = இல்லை
மாஃபி மாலும் = தெரியாது
அனா மாஃபி மாலும் = எனக்கு தெரியாது
ஹலாஸ் - முடிந்தது
தால் = வா
ரோ = போ
ஈஜி = வந்தது

சிவா.ஜி
05-06-2007, 08:27 AM
சில ஷ்பானிஷ் வார்த்தைகள்
கமுஸ்தாஷ்-நலமா?
பியான்(biyaan)-நலம்
கேபாஸா(kepaasaa)-என்ன விஷயம்
நாதா(naadha)-ஒன்றுமில்லை
மூச்சோ(moocho0-நிறைய

மனோஜ்
05-06-2007, 07:48 PM
திரியை புதுபித்த சிவாஜிக்கும இதயத்துக்கும் நன்றி
தொடர்ந்து கொடுங்கள்

VINAYASX
02-09-2007, 04:24 AM
எனக்கு ஆங்கிலம் கட்க உங்கலல் உதவ முடியூம

ஓவியா
02-09-2007, 10:45 AM
சயா சின்தா பட மூ என்றால் நான் உன்னை காதலிகிறேன் அல்லது நேசிக்கிறேன் என்று மலேசிய மொழியில் சொல்வார்கள்.

நன்றி.

சிவா.ஜி
02-09-2007, 11:59 AM
இந்த டயலாக்க எங்க சூப்பர் ஸ்டாரோட* ப்ரியா படத்தில் யேசுதாஸ் பாட்டுல பாடுவார்...இதுதான் அதுக்கு அர்த்தமா....ரொம்ப நன்றி சகோதரி.

lolluvathiyar
02-09-2007, 12:00 PM
அட இந்த திரி இத்தனை நாள் என் கன்னில் படாமல் போய் விட்டதே. நிரைய மொழிகள் பேசபடுகிறது. எனக்கு வேற மொழிகள் தெரியாது. ஆனா தமிழில் நிரைய வார்த்தைகள் ஊருக்கு ஊர் மாறுபடும்.
இதோ சில தமிழ் வார்த்தைகள் என்னால் முடிந்த*து

மன்னென்னைய் சிமன்னைய் (கோவை) கிரஸ்னாயில் (சென்னை)
லுங்கி(கோவை) கைலி(தென்தமிழகம்)
சீமாரு (கோவை) விள*க்குமாறு (ம*துரை ஏரியா) துட*ப்ப*க*ட்டை(திண்டுக*ல்)

சில* கிராம*த்து பாசைக*ளை த*ருகிறேன்.
மாடு கன்னு ஈன்றூ விட்டால் அதை கிராமத்து பாசையில் ஈத்து என்று சொல்லுவார்கள்.
மாடுகளில்
பெண் கண்று − கடாரி
ஆண் கண்று − கோனா கன்னு
நாய்களில்
ஆண் நாய்குட்டி − கடுவன் குட்டி
பெண் நாய்குட்டி −பொட்ட குட்டி
மாடுக*ளில் கோவை ப*குதியில் ஜெர்சி மாடு என்று சொல்வ*தை ம*துரை ப*குதிக*ளில் சிந்து மாடு என்று சொல்வார்க*ள்

இதே போல* ரிக்ஸா வ*ண்டி என்று மீண்பாடி வ*ண்டி என்று ஒரு வாக*ன*ம் சென்னையில் இருகிற*து. அத*ற்க்கு கோவையில் வார்த்தை இல்லை. கார*ன*ம் கோவை கார*ர்க*ள் அந்த* வ*ண்டியை சினிமாவில் ம*ட்டுமே பார்த்திருகிறார்க*ள், நேரில் பார்த்த*தில்லை