PDA

View Full Version : தொலைந்து விட்ட இன்பங்கள்...



அறிஞர்
10-02-2007, 04:54 AM
தொலைந்து விட்ட இன்பங்கள்...

நான் வெகு நாட்களாக "அக்கரைக்கு இக்கரை பச்சை.." என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். குறிப்பாக இந்தியாவில், அமெரிக்காவில் சிறு வயது குழந்தைகளின் பொழுது போக்கை வேறுபடுத்தி எழுதலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு அமையவில்லை.

இங்கு அது போன்ற பதிவே.. இப்பொழுது வேறு வடிவத்தில்...
----------------

தினமும் 4 வயது பையனை பள்ளிக்கு அழைத்து சென்று வருவது வழக்கம். இக்கால குழந்தைகளா... வில்லங்கமா கேள்வி கேட்பாங்க.. (நம்ம அனிரூத்தும் (செல்வனின் பையன்) இதில் அடக்கம்). அவனோடு உரையாடுவதில் சிந்திக்க வைத்த சில சம்பவங்களை.. இங்கு தருகிறேன்.

சென்ற வாரத்தில்..

பையன் "அப்பா, போன வாரம் பெரியப்பாவுக்கு வீடு வாங்க போனிங்களே என்னாச்சு.... பார்த்து முடிச்சிட்டிங்களா"

நான் "இல்லைப்பா, எங்களுக்கு பிடித்த மாதிரி எந்த வீடும் அமையலை... அடுத்த வாரத்தில் பார்க்கனும்".

"அப்பா! நீங்கள் நெட்டுல வீடு தேடிட்டு, நல்ல வீடா செலக்ட் பண்ணிட்டு போங்க.. என்ன சரியா..".

"சரிப்பா..."

"அப்பா, நமக்கு வீடு வாங்கும் போது 5 பெட் ரூம், 3 பாத் ரூம், பெரிய ஹால், கிச்சன், விளையாட இடம் எல்லாம் பார்த்து வாங்கனும் சரியா....."

"சரிடா.... எதுக்கு அவ்வளவு பெரிய வீடு"

"எனக்கு தனி ரூம், தம்பிக்கு ஒரு ரூம், அப்பா, அம்மாவுக்கு ஒரு ரூம், ஊர்ல இருந்து தாத்தா, பாட்டி வரும்போது அவுங்க தங்க ஒரு ரூம், விளையாட ஒரு ரூம்...."

"சரிடா செல்லம்"

"அப்பா, எனக்கு ஒரு டவுட்"

"என்னப்பா"

"வீடு வாங்கிட்டு.. எப்படி தூக்கிட்டு வருவீங்க.... ரொம்ப பெரிசால்ல இருக்கும்"

"என்னடா சொல்ற... எங்க வாங்கி எங்க தூக்கிட்டு வரது..."

"கடையில் வாங்கி தானே தூக்கிட்டு வருவீங்க"

ஆஹா வில்லங்கம் ஆரம்பிக்குதுன்னு.. நினைச்சேன்...... என் சிறு வயது பருவங்களை.....

என் அம்மா "டேய் என்னடா.. வீதியில வேடிக்கை பார்க்கிற"

நான் "இல்லைம்மா! பக்கத்துல்ல இருக்க இடத்தை யாரோ பார்க்க வராங்க..."

அம்மா.."ஓ... அதுவா.. வீடு கட்ட போறாங்களாம்...."..

நான் "அப்படியா..."

சிறிது நாளில் பூஜை போடுவார்கள்... பிறகு அஸ்திபாரம் போட... குழி வெட்டுவார்கள்... நன்றாக, ஆழமாக குழி வெட்டுவார்கள்.... வெட்டும்போது சில இடங்களில் தண்ணீர் வரும், மண்புழுக்கள், பூச்சிக்கள் பலியாகும்.... இன்னும் எத்தனை...

அஸ்திபார குழி வெட்டியவுடன்... வீதியில் இருக்கும் பிள்ளைகளுக்கு ஒளிஞ்சு-பிடிச்சு விளையாட... நல்ல இடம் அதுதான்....

பிறகு மணல், செங்கல் வந்து இறங்கும்..... மணல் குவித்து கோவில் கட்டி... விளையாட்டு..... அதை அடுத்தவன் இடிக்க.. சண்டை. பிறகு மணலில் குழி தோண்டி.. உள்ளே முள்ளு போட்டு.. மேலே பேப்பரால் மூடி... சண்டை போட்டவனை நடக்க வைத்து பழிக்கு பழி வாங்குதல்....

குழி தோண்டி முழங்கால் வரை, தொடை வரை மண் குவித்து மெதுவா, மெதுவா ஆட்டி.. ஆட்டி காலை எடுப்பது.....

பிறகு மணலுக்கு சொந்தக்காரர் வந்து திட்டுவார்... அவரை வில்லனாக பார்க்கும் பருவம்....

பிறகு வீடு அஸ்திபாரம் போட்டு.. தண்ணீர் ஊத்தி.... இரும்பு கம்பி கட்டி... போட்டு... சிறிது சிறிதாக கட்டிடம் வளரும்... தவறாமல் தண்ணீர் ஊற்றும் வேலை... வேலைக்கு வரும் கொத்தனார், சித்தாள்கள் என எத்தனை பேர்......

மேலே ரூப் போடும்போது.... ஒரே நாளில் போடனும்.. அதிகாலை முதல் மாலை வரை விடாமல் வேலை நடக்கும்... வேலை பார்ப்பவர்களுக்கு சிறப்பு சாப்பாடு...

பிறகு... மரவேலை செய்ய.... தச்சர் வருவார்.. அளப்பார்.... அவருக்கும் கொத்தனாருக்கும் வாக்குவாதம் வரும்..... பிறகு வெள்ளையடித்தல்...

கிரஹபிரவேசம்... உழைத்தவர்களுக்கு மரியாதை.....

பிறகு.. கலர் கலர் பெயிண்டிங்க் வேலை...

எல்லாவற்றையும் சமாளித்து.. ஒரு மாளிகை வீதியில் உருவாகிவிடும்...

இது மாதிரி வீதியில் எத்தனை வெறுமையான நிலங்கள்.. வீடுகளா மாறியிருக்கு...

இப்படி விளையாட்டோடு விளையாட்டாக கலந்து.. ஒவ்வொரு வீடு உருவாவதை பார்த்தேன்...

ஆனால் என் பையன்......

யோசிக்கிறேன்.......

ஆதவா
10-02-2007, 05:59 AM
அறிஞர் அவர்களுக்கு....

இன்றைய யதார்த்தத்தை கொடுத்திருக்கிறீர்கள்... உங்களின் இந்த இருவேறு பருவத்தை விளக்கிய விதமும் ஒரு கதையைப் படித்த உணர்வு.......... வாழ்வியல் யதார்த்தம். அன்றைக்கு நாமெப்படி இருக்கிறோமோ அதாவது நமது வாழ்க்கைச் சூழல் எப்படி இருக்கிறதோ அதை மையமாகக்கொண்டே நாம் வாழும் பருவமும் வளரும்.. நாம் தொலைத்துவிட்டவைகள் இன்னும் ஏராளம்.

உங்களின் அந்த நான்குவயது பையன் நீங்கள் சிறுவயதாயிருக்கும்போது குறிப்பிட்ட அந்த மணலைக் கண்டிருப்பானா என்பது சந்தேகம்.. நிச்சயமிருக்காது...அதேசமயம் உங்கள் தாய் விட்டுப்போனதுபோல நீங்களும் விளையாட விடுவீர்களா என்றால் அதற்கு விடை உங்கள் கைகளில்தான்,,,,

என்னைப் பொருத்தவரை... தன் இஷ்டத்தில் வாழும் மனிதர்களே நல்ல சிந்தனை வளம் கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த இஷ்டமானது மட்டும் பெற்றவர்களின் குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்........

உங்கள் கருத்து எதிர்நோக்கி

ஆதவன்

மனோஜ்
10-02-2007, 07:29 AM
சரியாக சென்னீர்கள் ஆதவா பிள்ளைகளை பொத்தி பொத்திவளப்பது என்பது பிற்காலத்தில் பிள்ளைகளின் வளர்ச்சியை பாதிக்கும்
சிறிது விட்டுபிடிப்பது நல்லது அது அவர்களுக்கு ஒரு அனுபவமாகயிருக்கும்
அறிஞரே உங்களின் அந்த நான்குவயது பையன் பார்த்த அளவுகுட வருஙக்காளத்தில் இருக்காது என்பது அசாத்திய உன்மை

அறிஞர்
10-02-2007, 01:16 PM
கண்டிப்பாக என் பையனை விளையாட அனுப்புவேன்...

அங்கு வீதியில் உள்ள அனைவரும் அடித்துக்கொண்டாலும் குடும்பமாய் இருப்பர்.... (பிள்ளைகளை பார்த்துக்கொள்வர்). இங்கு பக்கத்து வீட்டில் யார் இருப்பார் என்றே தெரியாது..... அங்கு விளையாட சென்றால் அனைவரும் கவனித்துக்கொள்வர்.. இங்கு யாருடைய பிள்ளை என கண்டறியவே நேரமாகும்

இங்கு பார்க்கில் சறுக்கு, சீசா. விளையாடுவான்... மணல் ஒரு இடத்தில் இருக்கும்.... சற்று நேரம் விளையாடுவான்....

ஆனால் நாம் அனுபவித்த.. திரில்...வித்தியாசமான அனுபவம் இங்கு இல்லை....

பையனுக்கு கிடைக்கும் வசதி.. வாய்ப்புக்கள் அன்று அங்கு எனக்கு இல்லை..... அக்கரைக்கு இக்கரை பச்சை கதை....

ஓவியா
10-02-2007, 03:47 PM
சுவையான சம்பவங்கள். சுவரஸ்யமாக செல்கின்றது

திரி தொடங்கிய அறிஞருக்கு நன்றிகள் பல