PDA

View Full Version : மாவீரர்



sham
10-02-2007, 04:27 AM
மாவீரர் யாரோ -என்றால்
மரணத்தை வென்றுள்ளோர்கள்
அவர்களின் புதைகுழிகள் -வெறும்
புல் முளைக்கும் இடமல்ல
புதிய வீரர்களை உருவாக்கும் கருப்பைகள்.........

மயூ
11-02-2007, 01:31 PM
அதைத்தான் சொல்வார்கள்...
இவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளார்கள் என்று!!!
அண்மையில் கிழக்கில் இராணுவம் புலிகளிடம் இருந்து வாகரை எனும் இடத்தை கைப்பற்றியதல்லவா! அப்போது அங்கிருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் புல்டோசர் கொண்டு உழப்பட்டுள்ளன.... காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டம்.

sham
12-02-2007, 02:09 AM
ஆம் அண்ணா. 1995 ல் கூட கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தை உழுதார்கள். அதன் விளைவாக அதேயிடத்தில் பார்ப்பவர் வியப்புறும் வகையில் புதியதோர் துயிலுமில்லம் தற்போது கட்டப்பட்டுள்ளது.

pradeepkt
12-02-2007, 04:34 AM
புதைத்த இடத்தில்
புல்லில்லை, புற்றீசலாய் வீரர்கள்!
மாவீரர் கல்லறை!

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!

maganesh
12-02-2007, 07:55 AM
புதைத்த இடத்தில்
புல்லில்லை, புற்றீசலாய் வீரர்கள்!
மாவீரர் கல்லறை!

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!
உண்மையான வரிகள். அவர்க்ளை விதைத்த இடத்திலிருந்து பலர் புதிதாக முளைத்துள்ளார்கள்.

ஓவியன்
12-02-2007, 08:04 AM
மாவீரர் துயிலுமில்லங்களை இடிப்பவர்களிடமிருந்து நாம் எப்படி எமது உரிமைகளை எதிர் பார்க்க முடியும்?

அவர்களுக்கு திருப்பித் திருப்பிச் சொன்னால் புரிவதில்லை-ஆனால் திருப்பி அடித்தால்தான் புரிந்து கொள்வார்கள் முன்னர் போல.