PDA

View Full Version : காதல் பக்கங்கள்...அறிஞர்
09-02-2007, 07:51 PM
இது காதலர் தின வாரம் என்பதால், எங்கும் காதல் செய்திகள் வருகின்றன. பத்திரிக்கையில் படித்து, தங்களை கவர்ந்த செய்திகளை இங்கு கொடுங்கள்... எந்த பத்திரிக்கையில் படித்தீர்களோ அவர்களுக்கு நன்றி கூறுங்கள்.

சமீபத்தில் படித்த செய்தி.. நன்றாக இருந்தது.. இங்கு மன்றத்திற்கு...


யுத்த களத்தில்.. காதல்
(நன்றி-விகடன்)

கவிஞர் காசி ஆனந்தன் - சரோஜினி

என் திருமணம் நடந்தபோது நான் இலங்கை அரசால் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்தேன். பகலில் காடுகளில் அலைவேன். யுத்தத்துக்கான வெடிபொருளாக கவிதைகள் தயாரித்தேன். கூடவே, காதலித்தேன். அதுவும் 15 ஆண்டுக் காதல்.
இயக்கத்துக்கு ஆதரவு தேடி உலகமெல்லாம் பறந்த காலம் அது. தகிக்கிற அரசியல் வெப்பத்துக்கு நடுவே காதல் நிழலாக, ஆறாத காயங்களும் தீராத வேதனைகளிலும் திரிந்த எனக்கு ஆறுதலாக இருந்தவள் சரோஜினி. எத்தனையோ முறை எதிரிகளிடம் இருந்து என் னைக் காத்தவள். ஒரு மருத்துவத் தாதியாக அவள் எனக்கு அறிமுகம்!
யாழ்ப்பாணத்தில் இருக்கிற செல்வ சன்னதி என்ற முருகன் கோயிலில் நடந்தது ரகசியத் திருமணம். இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை என்றாலும், காசியண்ணாவுக்குத் திருமணம் என்று ஈழத் தமிழ் மக்கள் கூடிக் கொண்டாடிய ஒரு விழா அது. இரவில் நடந்த திருமணத்துக்கு வந்து வாழ்த்தினார் பிரபாகரன்.

என் நண்பன் இன்பன்தான் திருமண வேலைகளை முன்னின்று செய்தான். மறுநாள் காலையில், யாழ்ப்பாணம் மண்டைத் தீவில் குண்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தான் இன்பன். நள்ளிரவில் சிங்கள போலீஸாரிடம் சிக்கியிருக்கிறான். காதல் தம்பதியான நானும் என் மனைவியும் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இன்பனின் இறுதி ஊர்வலம்தான்.

எங்களின் காதல் வாழ்வுக்குச் சாட்சியாக, என் மனைவி வேலை பார்த்த அதே மட்டக்களப்பு மருத்துவமனையில்தான் என் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தார்கள். நாங்கள் காதலித்தது மாதிரியே எங்கள் மகள் அமுதநிலாவின் காதலையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைத் தந்தது ஈழப் போராட்டம்தான்! என்கிற கவிஞர் காசி ஆனந்தன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காதல் வாழ்க்கையைச் சொல்கிறார் நெகிழ்ச்சியாக!

பிரபாகரன் - மதிவதனி

அப்போது சென்னையில் இருந்தபடி, ஈழ விடுதலைப் போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப் பில் இருந்தார் தலைவர் பிரபாகரன். அப்போது ஈழத்திலிருந்து போராட்ட அரசி யல் பயிலரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த யாழ் பல்கலைக் கழக மாணவி மதி வதனியுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டது. அமைப்பின் அத்தனை தலைவர்களின் ஒப்புதலுடன், 84&ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி, தமிழகத்தின் திருப்போரூர் கோயிலில் ஆன்டன் பாலசிங்கமும் அடேலும் தலைவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.
காதல் வயப்பட்டனர், கல்யாணம் செய்துகொண்டனர் என்று ஒற்றை வரியில் முடிகிற கதை அல்ல, பிரபாகரன் & மதிவதனி தம்பதியின் கதை. சொல், செயல், வாழ்க்கை என எல்லாம் ஒரே திசையில் பயணித் தால் காதல் எத்தனை மகத்தான சக்தி என்பதற்கான உதாரணக் கதை!

அவர்களுக்கு முதலில் பிறந்தது ஆண் குழந்தை. சார்லஸ் ஆன்டனி சீலன் என்று பெயரிட் டனர். சார்லஸ் ஆன்டனி & பிரபாகரனின் பால்ய காலத் தோழன். சிங்கள ராணு வத்துடன் நேரடி மோதலில் கொல்லப்பட்டு, ஈழ விடுதலைக்காக விழுந்த முதல் விதைகளில் ஒருவன். அடுத்தது பெண் குழந்தை. துவாரகா என்று பெயரிட்டனர். யாழ்ப்பாணத்தில் எதிரி களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியான பெண் போராளியின் பெயர் துவாரகா. அடுத்த ஆண் குழந் தைக்குப் பெயர் பாலச்சந்திரன். இந்திய ராணுவத்துடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட பாலச்சந்திரன் என்கிற போராளி, மதிவதனியின் தம்பி. தம்பியே மகனாகப் பிறந்த அதிசயம் போராட்டக் களத்தில் காதலில் மட்டுமே நிகழும்.

தன் காதல் கணவன் ஒரு புலி வீரன். ஒரு இனத்தின் விடுதலைக்காக வனவாசம் இருப்பவன் என்று தெரிந் தும், இன்றைக்கும் இன்னல்களுக்கு நடுவே ஒரு காதலியாக, மனைவி யாக, தாயாக, போராளியாக இருக்கும் மதிவதனிக்கு, தமிழ் ஈழத்தில் வசிக்கிற மனோவலிமையைத் தந்ததும் காதலே!

ஆன்டன் பாலசிங்கம்-அடேல்

ஈழ விடுதலையின் தத்துவப் பேராசான் ஆன்டன் & அடேல் தம்பதியும் காதல் தம்பதியே!

அடேலின் வார்த்தைகளி லேயே சொல்வதென் றால், பாலசிங்கத்தைத் திருமணம் செய்வதென் பது ஒன்று. ஒரு புரட்சிப் போராட்டத்தில் ஈடுபடு வது என்பது இன்னொன்று. திருமணத்துக்குப் பின் எனது உள்நோக்கம் வேறொன்றாக இருந்திருந்தால், பாலாவைத் திசை திருப்பி, அவரை வேறொரு பக்கம் நான் கவர்ந்து சென்றிருக்கலாம். ஆனால், நான் அப்படிச் செய்ய வில்லை. அரசியல் பாதையையும் தமிழ் மக்களின் போராட்ட ஈடுபாட் டையும் நானே தேர்ந்தெடுத்தேன்!
தன் முதல் மனைவியின் மரணத்துக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு மருத்துவத் தாதியை காதல் மனைவியாக்கி, அவரையும் ஈழ விடுதலையின்பால் ஈடுபாடு கொள்ளச் செய்கிற சக்தி, தத்துவச் செறிவுள்ள காதலுக்கு மட்டுமே வாய்க்கும். இப்போது பாலா இறந்து விட்டாலும், அடேல் இன்னும் ஈழப் போராட்டத்தில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்.

அறிஞர்
09-02-2007, 08:40 PM
காதல் பிட்ஸ்
(நன்றி விகடன்)


வாழ்க்கையின் உச்ச நிலை சந்தோஷம்
நாம் காதலிக்கபடுவதுதான் - விக்டர் ஹியூகோ


காதலைச் சந்திக்காமல் இருப்பதைவிட காதல்
தோல்வியையாவது சந்திக்கலாம் - செயின்ட் அகஸ்டியன்


காதல்.... நேசிக்க மறந்தவர்களை ஒரு போதும்
நேசிப்பதில்லை - வில்லியம் ஷேக்ஸ்பியர்


நீ காதலிக்கப்பட வேண்டும் என்றால், காதலி
காதலிக்கும்படியாக இரு - பெஞ்சமின் ஃபிராங்களின்


காதலையும் வலியையும் முதல் அனுபவம் கிடைக்கும் வரை
யாரும் நம்புவதில்லை - மேரி இ. இஷென்பெக்


காதல் உங்களின் பலவீனமாக இருந்தால் உலகின்
பலசாலி நீங்கள் தான் - கார்மென் வோல்டு


உண்மையான காதல் பிசாசைப் போன்றது.
எல்லாரும் அதுகுறித்துப் பேசி இருப்பார்கள்.
ஆனால், பார்த்தவர்கள் சிலர் மட்டும்தான் - லா ரொச்சி ஃபௌகால்ட்


காதலுக்கு எந்த மருந்தும் கிடையாது. இன்னும் அதிகமாகக்
காதலிப்பதை தவிர! - தோரோவ்


காதல் தோல்வி, காதலுக்கு அடுத்து இனிமையானது - வில்லியம் தாக்ரி


எதிபார்க்கும் அளவு கிடைக்காதது
எதிர்பாக்கிற அளவு கொடுக்கப்படாததும்
காதல் மட்டுமே - ஹென்றி மில்லர்


காதலிப்பது வலிமையைக் கொடுக்கிறது.
காதலிக்கப்படுவது தைரியம் தருகிறது! - லாவ்ட் ஜா


காதல் முட்டாள்தனமானது. ஆனால் சில நேரங்களில்
நானும் அதை முயற்சித்துப் பார்ப்பேன்! - ஃப்ளாய்ட்


நாம் நேசிப்பதை என்றாவது ஒரு நாள் இழப்போம்
என்பதை உணர்வதுதான் காதல் - ஜி.கே. செஸ்ட்ர்டன்


காதல் உன்னுடைய வார்த்தைகளில் அல்ல...
நடத்தைகளில் தெரியும்! - ஜெரோம் கியூமிங்க்ஸ்


காதல் இனிமையான சந்தோஷம்!
வன்மையா துயரம் - பேர்ல் பெய்லி


உலகில் சுலபத்திலும் சுலபமானது,
கடினத்தில் கடினமானதும் காதல் - மைக்கேல் லியூனிக்


நீ ஒருவரை நேசிக்க ஆரம்பிக்கும்போது தான் உன்னில்
தேங்கிக்கிடக்கும் ஆசைகள் வெளிவரத் துவங்கும்! - எலிசபேத் பொவன்

காதல் பிரியும் வரை அதன் ஆழத்தை அறிவதில்லை - கலீல் கிப்ரான்

காதல்... இயற்கை நமக்காக சேமித்து வைத்திருக்கும்
இன்பங்களின் ஆரம்பம் --- யாரோ

முதல் காதலின் சிறப்பே அது எப்போது
வேண்டுமானாலும் முடிவுக்கு வந்துவிடும் என்பதை
நான் உணராதுதான் -- பெஞ்சமின் டிஸ்ரேலி

நீ யாரையாவது நேசித்தால் அதை அவர்களிடம் சொல் -- ராட் மேக்யூயன்

நான் உன்னை விசேஷமாக உணர வக்கவில்லை,
நீ எனக்கு எப்போது விசேஷம் தான் என்பதை
நினைவுபடுத்துகிறேன் -- டேவிட் எஃப்.சிம்ஸ்

முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமானால்
அதை பகிர்ந்து கொள்ள ஒருவர் வேண்டும்1 -- மார்க் ட்வைன்

ஓவியன்
25-02-2007, 06:36 AM
அருமையான பதிவுகள்!!!

ஏன் நிறுத்தி விட்டீர்கள்???