PDA

View Full Version : குட்டுக்கதைகள்



maganesh
09-02-2007, 03:42 PM
நண்பர்களே,தமிழ் உறவுகளே குட்டுக்கதைகள் என்ற தலைப்பின் கீழ் குட்டுப்போடும் கதைகளை குட்டிக்கதைகளாகப் பதியுங்கள். இதோ எனது முதல் குட்டுக்கதை.

வயோதிபர் ஒருவர் தெருவால் நடந்து போய்க்கொண்டு இருந்தார். அவரது முதுகு அர்ச்சுனன் வில்லைப் போன்று வளைந்து காணப்பட்டது. விழுந்து விட்ட எதைடோ தேடிக்கொண்டு போவதைப் போல குனிந்த நிலையில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் சென்ற தெருவின் ஒரு முச்சந்தியில் சில இளைஞர்கள் அரட்டை அடித்தவாறு அப்பன் பணத்துல வங்கிய மோட்டார் வண்டி சகிதம் பந்தாவாக நின்றார்கள். அவர்களைக் கடந்து சென்ற அம்முதியவரின் தோற்றம் அவர்களின் நகைப்புக்குள்ளானது. "பெரியவரே தொலைத்த இளமை எவ்வளவு தேடினாலும் கிடைக்காது" என்ரு கிண்டலாகச் சொன்னார்கள். அதைக் கேட்ட முதியவர் "தம்பிகளா நான் தொலைத்துவிட்ட இளமையைத் தேட இல்லை. நாம் நிமிர்ந்து நின்று உழைத்து வாங்கிய சுதந்திரம் தொலைந்துவிட்டது அதனைத்தான் தேடி அலைகின்றேன். நாம் இந்த வளைவு உழைத்தால் வந்தது.இன்றைய அராயகங்களை தட்டிக்கேட்காது அடிமைகளாக குனிந்து நிற்பதால் உங்க முதுகு வளைந்துகொண்டிருப்பது உங்களூக்குத் தெரியவில்லையா" என்று சொல்லிவிட்டு குனிந்தவாறு கம்பீரமாகப்போனார்.

அறிஞர்
09-02-2007, 03:50 PM
முதியவர் "தம்பிகளா நான் தொலைத்துவிட்ட இளமையைத் தேட இல்லை. நாம் நிமிர்ந்து நின்று உழைத்து வாங்கிய சுதந்திரம் தொலைந்துவிட்டது அதனைத்தான் தேடி அலைகின்றேன். நாம் இந்த வளைவு உழைத்தால் வந்தது.இன்றைய அராயகங்களை தட்டிக்கேட்காது அடிமைகளாக குனிந்து நிற்பதால் உங்க முதுகு வளைந்துகொண்டிருப்பது உங்களூக்குத் தெரியவில்லையா" என்று சொல்லிவிட்டு குனிந்தவாறு கம்பீரமாகப்போனார்.
சாட்டையடி.. பதில் சிந்திக்க வைக்கிறது மயூரன்... இது போல் சிந்திக்க வைக்கும் குட்டுக்கதைகள் பல வரட்டும்.

maganesh
09-02-2007, 03:53 PM
சாட்டையடி.. பதில் சிந்திக்க வைக்கிறது மயூரன்... இது போல் சிந்திக்க வைக்கும் குட்டுக்கதைகள் பல வரட்டும்.
நன்றி அறிஞரே. யார் படைப்பானாலும் முதலில் வரவேற்றுக் கருத்துக் கூறுவது நீங்கள்தான். இப்படியான கருத்துக்கள்தான் மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகின்றன.

மயூ
09-02-2007, 04:44 PM
சிந்திக்கத் தூண்டும் இன்றய இளைஞர்களுக்கு உறைக்க வேண்டிய கதை!

ஓவியா
09-02-2007, 04:47 PM
அருமையான சிந்தனை.
அனைவரும் யோசிக்க ஒரு கரு.

பாராட்டுகிறேன்

நன்றி

ஆதவா
09-02-2007, 06:07 PM
நண்பர்களே,தமிழ் உறவுகளே குட்டுக்கதைகள் என்ற தலைப்பின் கீழ் குட்டுப்போடும் கதைகளை குட்டிக்கதைகளாகப் பதியுங்கள். இதோ எனது முதல் குட்டுக்கதை.
அடிமைகளாக குனிந்து நிற்பதால் உங்க முதுகு வளைந்துகொண்டிருப்பது உங்களூக்குத் தெரியவில்லையா" என்று சொல்லிவிட்டு குனிந்தவாறு கம்பீரமாகப்போனார்.

இந்த வரிகள் என்னை ரெம்ப பாதிக்கிறது...... மயூரன்.. நிறைய கொடுங்க..

maganesh
10-02-2007, 03:23 PM
இந்த வரிகள் என்னை ரெம்ப பாதிக்கிறது...... மயூரன்.. நிறைய கொடுங்க..
என்னால் முடிந்தவரை எழுதிக்கொண்டே இருப்பேன் உங்கள் ஆதரவு இருக்கும் வரை.

விகடன்
10-02-2007, 03:30 PM
"குனிந்தவாறு கம்பீரமாகப்போனார்"

மிகவும் பிடித்த வரி, பார்த்தீபன் ஒரு கவிதையில் " பளிc என்ற இருளில்" என்று இருளின் தன்மையை வர்ணிப்பதுபோல உங்களுடைய இந்த வரியும் நன்றாகவே இருக்கிறெது.

வளரட்டும் உங்கள் புலமை

maganesh
10-02-2007, 03:37 PM
"குனிந்தவாறு கம்பீரமாகப்போனார்"

மிகவும் பிடித்த வரி, பார்த்தீபன் ஒரு கவிதையில் " பளிc என்ற இருளில்" என்று இருளின் தன்மையை வர்ணிப்பதுபோல உங்களுடைய இந்த வரியும் நன்றாகவே இருக்கிறெது.
வளரட்டும் உங்கள் புலமை
நன்றி ஜாவா. உங்க கருத்துக்கள் உற்சாக டானிக்காக தெம்பைத் தருகின்றன.

மன்மதன்
10-02-2007, 05:52 PM
நல்ல குட்டு.. இன்றைய பொறுப்பற்ற இளைஞர்களுக்கு.. தொடர்ந்து குட்டுங்க மயூ..

pradeepkt
12-02-2007, 04:40 AM
நல்ல குட்டு...
வலிக்க வேண்டியவர்களுக்கு வலித்தால் நலம்

maganesh
12-02-2007, 08:06 AM
வலிக்க வேண்டியவர்களுக்கு வலித்தால் நலம்
ஆம் அவ்வாறு கயப்பட்டு வலிகொண்டவர்களிலிருந்து உதிரும் உதிரத்தில் புதிய சரித்திரம் படைக்கவேண்டும்.

சே-தாசன்
12-02-2007, 08:35 AM
அப்பா! உச்சந்தலையில செம வலி.

maganesh
12-02-2007, 08:36 AM
அப்பா! உச்சந்தலையில செம வலி.
நன்றி கிருசாந். நீங்களும் இப்படி ஒரு பதிப்பைத் தரலாமே.

maganesh
12-02-2007, 09:54 AM
ஒரு கிராமத்துப் படித்த மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர் அவனது தாயும் தந்தையும். அவனுக்குப் பெண் பார்க்குமாறு தரகரிடம் கேட்டுக்கொண்டனர். அவர்களது நிபந்தனையைக்கேட்ட தரகர் சற்று அதிச்சி அடைந்துபோனார். படிக்காத பொண்ணகப் பார்க்க வெண்டும் என்பதே அவர்களது ஒரே ஒரு நிபந்தனையாக இருந்தது. ஆனால் மகனோ முடித்து நகரத்தில் வேலை பார்க்கின்றான். ஒருவாறு அவனுக்கு திருமணம் முடிந்து தாய் தந்தை மற்றும் மனைவியுடன் நகரத்தில் ஃப்ளாட் ஒன்றில் வாழ்க்கை தொடர்ந்தான். ஒரு தடவை அவனது வேலை விடயமாகப் வேறு நாட்டுக்குப் பொக வேண்டி இருந்தததால் பெற்றோருக்கு உதவியாக மனைவியையும் விட்டு விட்டுச் சென்றான். அவன் போன இரவு அவன் அப்பாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. கணவன் மேல் மிகுந்த பாசம் கொண்ட மனைவி துடித்தாள். பதறினாள். ஆனால் அவளது மருமகளோ பதற இல்லை. தொலைபேசியில் அந்த நகர பிரசித்தமான மருத்துவமனையுடன் தொடர்புகொண்டு வடயத்தைக் கூறினாள். ஆம்புலன்சை ஏற்பாடு செய்து மருத்துவமனையில் மாமனாரை அனுமதித்தாள். வைத்தியர்கள் பரப்ரப்பாக அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசி சகலதுமாகி நின்றாள் அவளது மருமகள். ஒருவாறு குணமடைந்த கணவனைப்பர்த்தபின் மருமகளைப் பார்த்துக் கேட்டாள்
"படிக்காத நீ எப்படி ஆங்கிலத்தில் பேசி நிலமையை நன்றாகச் சமாளித்தாய்?"
"மன்னித்து விடுங்கள் அத்தை நான் பட்டப்படிப்பு வரை படித்துள்ளேன்; உங்களை ஏமாற்றியதுக்காக என்னை மன்னித்து விடுங்கள்"
"பரவாயில்லையம்மா. படித்த பொண்ணுங்க கட்டிக்கிட்டவனையும் மாமனார் மாமியாரையும் மதிக்க மாட்டார்களென்று தப்பாக நினைத்திருந்தேன். ஆனால் பொண்ணுங்க படித்திருப்பது ரொம்ப அவசியம் என்று இப்போது புருந்துகொண்டேன். நீதாம்மா என்னை மன்னிக்கவேண்டும்"
இதையெல்லம் தற்செயலாகக் கேட்ட தந்தையின் நிலை அறிந்து ஓடோடி வந்த மகன் இரட்டிப்புச் சந்தோசத்துடன் தகப்பனை நெருங்கினான்.

மனோஜ்
12-02-2007, 01:22 PM
கல்வி எவ்விடத்தும உதவும்
கல்வி எவ்விடத்தம நமது மதிப்பை கூட்டும்
கல்வி எவ்விடத்தும் நம்மை உயர்த்தும் ஆனால்
கல்வி இல்லையேல் வாழ்கை இருளும்
கல்வி இல்லையேல் மனிதவாழ்வு கடினமாகும்
இன்னும் செல்லிகொன்டே போகலாம் இதை உனர்த்தும் கதை அருமை மயூரன்