PDA

View Full Version : காதல் கவிதை



அறிஞர்
09-02-2007, 03:35 PM
நீ
வா...
தா!
சீ,
போ!

விகடனில் படிக்க நேர்ந்த கவிதை....

காதல் இவ்வளவு கேவலமாகிவிட்டதா என யோசிக்கவைக்கிறது.

ஆதவா
09-02-2007, 05:50 PM
நீ
வா...
தா!
சீ,
போ!

விகடனில் படிக்க நேர்ந்த கவிதை....

காதல் இவ்வளவு கேவலமாகிவிட்டதா என யோசிக்கவைக்கிறது.

அறிஞரே எனக்கென்னவோ இதில் கேவலமில்லை என்று தோணுகிறது...
நாம் கொஞ்சம் பாஸிட்டிவாகவே நினைக்கலாம்...

நீ என் காதலி,
வா என்னைக் காதலி,
தா உன் இதயத்தை
தர மறுக்கிறாயோ?
சீ! கள்ளி
போ!!

ஹி ஹிஹி... இப்படியும் இருக்கலாமே!!

விகடன்
11-02-2007, 03:50 AM
முதலில் படித்தபோது...
இந்தளவு கொச்சையாகிவிட்டதா காதல்!
என்றாகிவிட்டது...

ஆனால் ஆதவா!!
தங்களின் இந்த அருமையான இணைப்பு மிகவும் மெருகூட்டிவிட்டது அந்த தனிவார்த்தைச் சொற்களை

வழ்த்துக்கள் ஆதவா.

பிச்சி
11-02-2007, 04:01 AM
நீ
வா...
தா!
சீ,
போ!

விகடனில் படிக்க நேர்ந்த கவிதை....

காதல் இவ்வளவு கேவலமாகிவிட்டதா என யோசிக்கவைக்கிறது.

நீ என் மூச்சு; உயிருள்ளவரை
வா என் உறவாக; முன்னே
தா உன் காதல்; தந்தாயோ?
சீ! காதலனே! உன்னிடம் காதல் மட்டுமே பார்த்தேன்
போ என்னை விட்டு, விழிகளின் பிழைகளைவிட்டு...

நல்லா இருக்கா?

மன்மதன்
11-02-2007, 05:43 AM
ஆதவன், பிச்சியின் கவிதை விளக்கங்களை படித்த பிறகு நிஜ கவிதையே அப்படித்தான் எழுதப்பட்டிருக்குமோ என்ற எண்ணமே தோன்றியது.

சே-தாசன்
11-02-2007, 05:48 AM
நீ என் மூச்சு; உயிருள்ளவரை
வா என் உறவாக; முன்னே
தா உன் காதல்; தந்தாயோ?
சீ! காதலனே! உன்னிடம் காதல் மட்டுமே பார்த்தேன்
போ என்னை விட்டு, விழிகளின் பிழைகளைவிட்டு...

நல்லா இருக்கா?

அருமை அருமை. எப்பிடீங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?

ஓவியன்
15-02-2007, 09:04 AM
உண்மையிலே கவிதையின் சொந்தக்காரர் என்ன நினைத்து எழுதினாரோ தெரியவில்லை.

ஆனால் அதற்கு நம்மவர்கள் தரும் விளக்கம் நன்றாக உள்ளது!.

ஓவியா
17-02-2007, 09:44 PM
பிப்ரவரி மாதமென்றாலே இப்படிதானா?? ஒரே காதல் மயம்