PDA

View Full Version : JavaScript - Java வேறுபாடு என்ன?



மயூ
09-02-2007, 09:02 AM
சில காலங்களுக்கு முன்பு நெட்ஸ்கேப் நவிகேட்டர் நிறுவனத்தில் தனியே எச்.டி.எம்.எல் மாத்திரம் பயன்படுத்தி வினைத்திறனான, பயனருடன் தொடர்பாடக்கூடிய இணையப் பக்கங்களை உருவாக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டனர். இதை நீக்க 1995 ல் லைவ் ஸ்கிரிப்ட் (Live Script) என்ற மொழியை உருவாக்கினர். இதன் மூலம் இணையத்தள வடிவமைப்பாளர்கள் இணையப் பக்கத்தில் தமது ஆதி்க்கத்தை நிலைநிறுத்தத் தொடங்கினர்.

இதேவேளையில், சண் மைக்ரோ சிஸ்டம் (Sun Micro systems) ஜாவா (Java) என்ற மொழியை அறிமுகப்படுத்தியது. ஜாவா விரைவில் பிரபலமாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக நெட்ஸ்கேப் நிறுவனமும் தமது நெட்கேப் 2.0 பதிப்பில் ஜாவாவிற்கான ஆதரவை ஏற்படுத்தியது. அத்துடன் தமது லைவ் ஸ்கிரிப்ட் என்ற மொழியை ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script) என்று மாற்றிக்கொண்டனர். இதன் மூலமாக ஜாவா ஸ்கிரிப்ட் மொழி பலரது கவனத்தில் பட்டது என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இதைத்தவிர ஜாவாவிற்கும் ஜாவா ஸ்கிரிப்ட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டிற்கும் தற்போதய நவீன உலாவிகளில் ஆதரவு வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றைப் பார்த்த மைக்ராசாப்ட் அண்ணா சும்மா இருப்பாரா அவர் பங்கிற்கு ஜெஸ்கிரிப்ட் (JScript) என்ற மொழியை உருவாக்கினார். இந்த ஜெஸ்கிரிப்ட் ஜாவா ஸ்கிரிப்ட்டின் மறு வடிவமாகவே இருந்தது பின்னர், இதன் 2.0 பதிப்பும் வெளிவந்தது, இது பொதுவாக சேர்வர் சைட் சார்ந்து இயங்குவதாகவே உள்ளது (turning JScript into a server-side scripting language that, when embedded inside ASP pages, could access server-side databases and create HTML pages with dynamic content). இதே வேளை ஜெஸ்கிரிப்ட் போலவே வி.பி.ஸ்கிரிப்ட் என்ற மொழியையும் மைக்ரோஃசாப்ட் வெளியிட்டம இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே விபி ஸ்கிரிப்ட் வேலை செய்யும் என்பதால் ஜெ ஸ்கிரிப்ட், ஜாவா ஸ்கிரிப்ட் அளவு பிரபல்யம் அடையவில்லை.

ஜெஸ்கிரிப்டின் பதிப்புகள் பல தற்போது வெளிவந்துவிட்டன. விசுவல் ஸ்டூடியோவில் (Visual Studio) ஒரு பகுதியாக தற்போது ஜெஸ்கிரிப்ட் வெளியிடப்பட்டு பிரபலம் பெற்றுள்ளது.

இந்த இரு ஸ்கிரிப்ட் மொழிகளால் மைக்ரோசாப்டும் நெட்ஸ்கேப் நவிகேட்டரும் தமக்கிடையில் போட்டி போட்டு தரநிர்ணயத்தில் கோட்டை விட்டனர். ஆயினும் தற்போது European Computer Manufacturing Association (ECMA) சில நடவடிக்கை மூலம் தரநிர்ணயத்தை ஏற்படுத்தியுள்ளனர். இப்படியே போனால் ஜாவா ஸ்கிரிப்டும் ஜே-ஸ்கிரிப்டும் என்று ஒரு கட்டுரை எழுதலாம் போல உள்ளது.

விடயம் அறிந்த மென்பொருள் வல்லுனர்களே, இணைய வடிவமைப்பாளர்களே ஏனைய விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இத்தனையும் ஆர்வக்கோளாரில் நான் வாசித்து அறிந்துகொண்டவையே!

Download a Free E-book (http://rapidshare.de/files/33553075/0672328798.zip)

மன்மதன்
09-02-2007, 09:33 AM
தகவல் அறிய தந்தமைக்கு நன்றி நண்பரே..

maganesh
09-02-2007, 09:35 AM
தகவல் பயனுள்ளதாக இருக்கு. தொடருங்கள் நண்பரே. வாசிப்பு மனிதனை முழுமையாக்குது. தேடல் அவனை அறிஞன் ஆக்குது.

kavitha
09-02-2007, 09:54 AM
இதைத்தவிர ஜாவாவிற்கும் ஜாவா ஸ்கிரிப்ட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
உண்மை தான்.
ஜாவா முழுமையான மொழி. மென்பொருள் வல்லுனர்கள் அதை தேவையானபடி தங்கள் வசதிக்கேற்ப எழுதிக்கொள்ளமுடியும்.
ஜாவா ஸ்கிரிப்ட் என்பது அப்படியல்ல. இருப்பதை ஒரு குறிப்பிட்ட பயனுக்காக அப்படியே எடுத்தாள்வது.


ஜாவாஸ்கிரிப்ட் பாட்டி சுட்ட பணியாரக்கல்.
ஜாவா நீங்கள் செய்யப்போகும் மைசூர் பாகு... (வேண்டிய வடிவத்தில் வார்த்தெடுக்கமுடியும்).

உங்கள் ஆர்வம் மேலும் வளர வாழ்த்துகள்.

maganesh
09-02-2007, 09:57 AM
ஜாவாஸ்கிரிப்ட் பாட்டி சுட்ட பணியாரக்கல்.
ஜாவா நீங்கள் செய்யப்போகும் மைசூர் பாகு
இன்னும் சொல்லப்போனால் ஜாவா ஸ்கிற்ப்ட் விதி. ஜாவா விளக்கம்.

மயூ
09-02-2007, 09:59 AM
மயூரன், மன்மதனுக்கு நன்றிகள்
விஷேட தகவல்களை வழங்கிய கவிதாவிற்கு விஷேட நன்றிகள்.!

ஆதவா
09-02-2007, 10:48 AM
ஜாவாஸ்கிரிப்ட் பாட்டி சுட்ட பணியாரக்கல்.
ஜாவா நீங்கள் செய்யப்போகும் மைசூர் பாகு

அடடா என்ன தத்துவம்.....??? பாராட்டுங்கப்பா!

ஓவியா
09-02-2007, 09:48 PM
மயூ, தகவலுக்கு நன்றி

முதல் சீட்டில் அமர்ந்தும் ஜாவா விளங்காத ஒரே மாணவி நாந்தான்.

நீங்க ஜமாய்க்கவும்.

மயூ
10-02-2007, 01:06 PM
நான் மட்டும் என்ன பின் சீட்டிலயா இருந்தன்?? எல்லாம் விதி...
Hello World புரோகிராம் தவிர வேற எந்நத புரோகிறாமும் எனக்கு ரண் பண்ண வில்லை என்றால் பாருங்களேன்!

reader
08-04-2008, 01:45 PM
இதுவரைக்கும் ஜாவா மூலமே ஜாவா ஸ்கிரிப்ட் ரன் ஆகிறது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்..

அனுராகவன்
20-04-2008, 05:54 AM
நன்றி நண்பரே!!
நல்ல பகிவுகள் தொடந்து தாருங்கள்....

Maruthu
14-10-2008, 12:59 PM
உண்மை தான்.
ஜாவா முழுமையான மொழி. மென்பொருள் வல்லுனர்கள் அதை தேவையானபடி தங்கள் வசதிக்கேற்ப எழுதிக்கொள்ளமுடியும்.
ஜாவா ஸ்கிரிப்ட் என்பது அப்படியல்ல. இருப்பதை ஒரு குறிப்பிட்ட பயனுக்காக அப்படியே எடுத்தாள்வது.


ஜாவாஸ்கிரிப்ட் பாட்டி சுட்ட பணியாரக்கல்.
ஜாவா நீங்கள் செய்யப்போகும் மைசூர் பாகு... (வேண்டிய வடிவத்தில் வார்த்தெடுக்கமுடியும்).

உங்கள் ஆர்வம் மேலும் வளர வாழ்த்துகள்.


ஜாவா வையும் ஜாவாஸ்கிரிப்ட்டையும் வேறுபடுத்தி விளக்கம் கூறியமைக்கு நன்றி.


அன்புடன்...
மருது.

நூர்
11-11-2008, 09:13 AM
பகிர்வுக்கு நன்றி.