PDA

View Full Version : OXYMORON - ஆக்ஸீமோரான்



ஷீ-நிசி
08-02-2007, 05:26 AM
OXYMORON - ஆக்ஸீமோரான்...

மன்ற உறவுகளே.. ஆக்ஸிமோரான் கேள்விபட்டிருப்பீர்கள்.. அதாவது நம் அன்றாட வாழ்க்கையில் நாம் உபயோகபடுத்தும் இருவேறு நிலையில் உள்ள வார்த்தைகள்..

உதாரணம்...

இயற்கையாக நடிக்கனும்

பிளாஸ்டிக் கிளாஸ்

முக்கால்வாசி முடிச்சிட்டேன்

இது கொஞ்சம் அதிகம்தான்

சந்தேப்படும் விசுவாசிகள்

இதைப் போல நிறைய உள்ளன..

நீங்களும் இப்படி பதிக்கலாமே..

ஆதவா
08-02-2007, 05:31 AM
கொஞ்சம் புரியலையேப்பா!!

ஆதவா
08-02-2007, 05:32 AM
அதாவது

நடு செண்டர்,

துரோ வீசு.... இப்படியா?

மயூ
08-02-2007, 05:36 AM
அதாவது

நடு செண்டர்,

துரோ வீசு.... இப்படியா?
நீங்க சொல்வது இரண்டும் ஒரே மாதிரிப் பொருள் உடையது...
அவர் சொல்வது இரண்டு சொல்லும் எதிரும் புதிருமாக இருக்குது..!

உ+ம். திருடனின் காவலன்... சரியா ஷி???

மயூ
08-02-2007, 05:37 AM
திருட்டுக் காவலன்~ இது சரியா?

ஷீ-நிசி
08-02-2007, 05:38 AM
மயூரேசன் மிகச் சரி...

ஆதவா முயற்சி பன்னுப்பா...

உதா...

சமாதானப் படை

மயூ
08-02-2007, 05:42 AM
அன்பினால் வெறுப்பு
காதலின் காழ்ப்பு

ஷீ-நிசி
08-02-2007, 05:47 AM
Shut down பன்ன Start கிளிக் பன்னு

ஷீ-நிசி
08-02-2007, 05:57 AM
அந்த பேருந்து மெதுவான வேகத்தில் சென்று கொண்டிருந்தது

thoorigai
08-02-2007, 11:33 AM
அமைதிப் போர்

பென்ஸ்
08-02-2007, 11:46 AM
அட யோசிக்க வச்சு போட்டிங்களே ஷீ....
என்னோட முயற்ச்சி: ... (அட இது வார்த்தையில்லை...!!!)

உண்மை கவிதை...

thoorigai
08-02-2007, 11:49 AM
சத்தியமா இது பொய் (நீங்க சொன்ன வார்த்தையை சொல்லலீங்க பென்ஸூ :) )

pradeepkt
08-02-2007, 11:50 AM
நியாயமான அரசியல் :D

thoorigai
08-02-2007, 12:10 PM
நடைப் பிணம்

அறிஞர்
08-02-2007, 12:32 PM
இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு ஷீ.... தொடருங்கள்...

மெதுவான இரைச்சல்
பகல் இருட்டு வேளை....

thoorigai
08-02-2007, 01:00 PM
மௌன ராகம்

mukilan
08-02-2007, 02:35 PM
மிக அருமையான விளையாட்டு இது. ஆங்கிலத்தில் ஏராளமான வார்த்தைகள் உள்ளன. உ.தா, Business Ethics, (வியாபார நேர்மை) jumbo shrimp (யானை அளவு இறால்).தமிழில் யோசித்து விட்டு வருகிறேன்.

அறிஞர்
08-02-2007, 02:56 PM
மிக அருமையான விளையாட்டு இது. ஆங்கிலத்தில் ஏராளமான வார்த்தைகள் உள்ளன. உ.தா, Business Ethics, (வியாபார நேர்மை) jumbo shrimp (யானை அளவு இறால்).தமிழில் யோசித்து விட்டு வருகிறேன்.
இப்படியே மொழி மாற்றி கொடுக்கவேண்டியதுதான்

ஷீ-நிசி
08-02-2007, 03:14 PM
குறுகிய இடைவெளி

ஷீ-நிசி
08-02-2007, 03:14 PM
அவ வெள்ளை வெளேர்னு செகப்பா இருப்பா....

ஷீ-நிசி
08-02-2007, 03:15 PM
அந்தக் குழந்தை இறந்தே பிறந்தது

maganesh
08-02-2007, 04:22 PM
ஆனந்தக் கண்ணீர்

maganesh
08-02-2007, 04:24 PM
தங்க மணல்

மதுரகன்
08-02-2007, 05:55 PM
இதமான வெயில்

மன்மதன்
08-02-2007, 06:07 PM
விளையாட்டு நல்லா இருக்கே... வார்த்தையை புடிச்சிட்டு வர்ரேன்..

leomohan
08-02-2007, 07:52 PM
புஷ் புத்திசாலி

ஓஸாமா அஹிம்சாவாதி

கருணாநிதி நேர்மையானவர்

ஜெயலலிதா அடக்கமானவர்

மன்மோகன்சிங்க பிரதான மந்திரி

மயூ
09-02-2007, 04:19 AM
மங்கலான வெளிச்சம்!
மெதுவான சத்தம்

mukilan
09-02-2007, 04:56 AM
தர்ம யுத்தம் அமைதிப் போர்

இறுதிப்பயணம்

அழகான ராட்சசி

காதல் பிசாசு (இது Oxymoron இல்லை)

மயூ
09-02-2007, 05:11 AM
இலங்கை அரசின் போர் முலம் சமாதானம்

மயூ
09-02-2007, 05:12 AM
ரோஜாவின் முள்
குளிருக்கு சூடான காபி

maganesh
09-02-2007, 08:19 AM
சீரியசான காமெடி
அன்புள்ள எதிரி
இரக்கமுள்ள அரக்கன்

மயூ
09-02-2007, 08:27 AM
அழகிய அசுரா

maganesh
09-02-2007, 03:57 PM
சென்று வா

ஓவியா
09-02-2007, 06:51 PM
மௌனம் பேசும்

சே-தாசன்
10-02-2007, 06:25 AM
நான் உங்களை முன்ன பின்ன பார்த்ததில்லையே?

thoorigai
10-02-2007, 07:08 AM
வயதான வாலிபம்

சே-தாசன்
10-02-2007, 07:10 AM
ஆனந்தக் கண்ணீர். பிழையாயின் மன்னிக்கவும்

thoorigai
10-02-2007, 07:15 AM
குருட்டுப் பார்வை

மனோஜ்
10-02-2007, 07:19 AM
ஆழ் மனது
உள் நினைவு

thoorigai
10-02-2007, 07:27 AM
நியாய விலைக் கடை (நகைச்சுவையுடன்)

சே-தாசன்
10-02-2007, 07:35 AM
எனது வாழ்க்கை வெறுமையால் நிறைந்தது.

thoorigai
10-02-2007, 07:40 AM
எனது வாழ்க்கை வெறுமையால் நிறைந்தது.

ஏங்க க்ருஷாந்த் அப்படி?

இனிய விபத்து

சே-தாசன்
10-02-2007, 07:43 AM
[QUOTE=thoorigai;173813]ஏங்க க்ருஷாந்த் அப்படி?

சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேனுங்க.;) ;)

சே-தாசன்
10-02-2007, 07:48 AM
சமாதானத்திற்கான போர்.இது எங்கள் நாட்டில் அடிக்கடி அரசாங்கத்தால் கூறப்படும் வார்த்தை.

thoorigai
10-02-2007, 07:51 AM
பேசாதளவாய் (பெண் பேசாமலா!!)

சே-தாசன்
10-02-2007, 08:22 AM
மெளன பாஷை

thoorigai
10-02-2007, 08:29 AM
உண்மையில் வதந்தி

மயூ
10-02-2007, 12:57 PM
எனது வாழ்க்கை வெறுமையால் நிறைந்தது.
அதுக்குப் பின்னால ஒரு ஸ்டோரியே இருக்கு.... எழுத ஒரு திரியே வேணும் ... :eek: :eek: :D

ஓவியா
10-02-2007, 01:00 PM
அழகான ராட்சஷி

மயூ
10-02-2007, 01:03 PM
அழகான ராட்சஷி
இது ஏற்கனவே பதிஞ்சாச்சு

எழுதாத எழுத்துக்கள்
படிக்காத பாடல்கள்
பார்க்காத திரைப்படங்கள் (சிம்புவினுடயது)
அன்பான வெறுப்பு

ஓவியா
10-02-2007, 01:54 PM
அப்படியா மன்னிக்கவும்

சரியா தவறா

அனுபவம் புதுமை

ஓவியா
10-02-2007, 02:16 PM
சந்தோஷமா வீட்ல சண்டை (நன்றி:மோகன்)

மன்மதன்
10-02-2007, 06:30 PM
அமைதியான தேர்தல்..??:D

thoorigai
10-02-2007, 11:50 PM
இது ஏற்கனவே பதிஞ்சாச்சு

அன்பான வெறுப்பு

விளக்க முடியுமா?

thoorigai
10-02-2007, 11:54 PM
அன்பான மாமியார் :)

சே-தாசன்
11-02-2007, 05:13 AM
அன்பான மாமியார் :)

விட்டா அழகான மனைவி என்றெல்லாம் சொல்லுவேங்க போலிருக்கே:D :D

leomohan
11-02-2007, 05:15 AM
கருணாநிதி பகுத்தறிவாதி
ஜெயலலிதா பக்திமான்

மன்மதன்
11-02-2007, 05:46 AM
கருணாநிதி பகுத்தறிவாதி
ஜெயலலிதா பக்திமான்

உல்டாவா சொன்னமாதிரி தெரியுது.:rolleyes:

leomohan
11-02-2007, 06:37 AM
உல்டாவா சொன்னமாதிரி தெரியுது.:rolleyes:

ஹா ஹா. யாராவது கேட்பாங்களான்னு பார்த்தேன்.

கருணாநிதி பகுத்தறிவாதி என்று சொல்லிக் கொண்டு மஞ்சள் துண்டு போட்டு அலையும் மூடநம்பிக்கைவாதி.

ஜெயலலிதா பக்திமான் என்று சொல்லிக் கொண்டு அட்டூழியங்கள் செய்பவர்.

ஆக அவர்கள் இவ்வாறு சொல்லிக் கொண்டாலும் அவர்கள் நிஜத்தின் படி இது ஆக்ஸிமோரான் தான்.

மன்மதன்
11-02-2007, 05:24 PM
ஹாஹ்ஹ்ஹா.. அப்ப சரி...

ராஜா
12-02-2007, 06:46 AM
சுய உதவிக் குழு.

நல்ல வழக்கறிஞர்.

உழைக்கும் தலைவர்.

நல்ல சாவு.

ஊமைப் பெண். [ஓவியா மன்னிச்சுடும்மா]

வாழ்க்கைத் தரம்.

சரியான நேர அட்டவணை.

வான் ஊர்தி.

ஊழலற்ற அரசு.

உலக அமைதி.

கருணைக் கொலை.

அழகிய ஆபத்து.

விறுவிறுப்பான தொடர்.

இளம் அரசியல்வாதி.

பொது உடமை.

நியாயமான தீர்ப்பு.

மரப்பு உணர்ச்சி.

இலவசப் பரிசு.

மக்கள் சேவை.

உபயோகிப்பவருக்கு வசதியானது.

உண்மையான நடிப்பு.

கிட்டத்தட்ட சரி.

நேயர் விருப்பம்.

பயங்கர சாது.

பச்சை ரத்தம்.

ஆக்கபூர்வ ஆலோசனை.

தற்காப்பு தாக்குதல்.

தப்பிய சிறைக் கைதி

சுமாரான அழகு.

வெளிநாடு வாழ் இந்தியர்.

சோம்பேறித்தனமான வேலை.

எண்ணிலடங்கா எண்ணிக்கை.

சிறுபான்மையினர் ஓட்டு அதிகம்.

பழைய செய்தி..[old news]

உண்மை நகல்.

பாதி முடிஞ்சிடுச்சு.

அடக்கவிலை விற்பனை.

அமைதியற்ற உறக்கம்.

அதிர்ச்சி வைத்தியம்

சரித்திர நாவல்.

கொஞ்ச தூரம்.

மேல் தளம்.

உண்மைக் 'கதை'

போட்டியின்றித் தேர்வு.

அடையாளம் தெரியாத நபர்.

ஊரறிந்த ரகசியம்.

மனமொத்த தம்பதி.

மரணத்துக்கு பின் கிட்டும் நன்மைகள்..

ராஜா
12-02-2007, 06:56 AM
அமெரிக்க கலாச்சாரம்.

சிறு கூட்டம்.

தொலைபேசி சேவை.

உத்தேச மதிப்பு.

புனிதப் போர்.

மௌன கீதம்.

மத நல்லிணக்கம

நல்ல பாம்பு.

உடல்நலம் சீர்கேடு.

திவால் ஆன கோடீசுவரர் .

தொழில் "தர்மம்"

குழப்பமானது என்பதில் சந்தேகமே கிடையாது..

கோர்ட் உடனடி உத்தரவு.

பேச்சு வார்த்தை முன்னேற்றம்.

பரஸ்பர புரிந்துணார்வு.

தேடுதல் வேட்டை.

போலீஸ் பாதுகாப்பு...

பொறுப்பு அதிகாரி...

கம்யூனிஸ்டுகள் திருப்தி...

விலை உயர்வு தற்காலிகம்தான்...

உண்மையான வதந்தி...

எல்லோரும் இந்நாட்டு மன்னர்..

என்ன அறிஞரே..? சரியா... இல்லே கொஞ்சம் ஓவரா..?

maganesh
12-02-2007, 08:41 AM
யப்பா ராஜா. என்னப்பா இதெல்லாம். இவ்வளவு வைச்சுக்கிட்டு என்னப்பா பண்ணிட்டிருந்தாய். நம்ம மண்டையை காயவைச்சுப்புட்டியே.

ஆதவா
12-02-2007, 08:46 AM
பின்னீட்டீங்க ராஜா சார்...

சே-தாசன்
12-02-2007, 08:59 AM
யெப்பா ராஜாசார் எப்பிடீப்பா இப்பிடி முடியுது.

ஷீ-நிசி
12-02-2007, 09:10 AM
ஆமா, இல்ல!!

maganesh
12-02-2007, 09:12 AM
நிஜக் கனவுதான்

maganesh
12-02-2007, 09:12 AM
போலீஸ் ரவுடி

leomohan
12-02-2007, 09:14 AM
கலக்கிட்டீங்க ராஜா.

சே-தாசன்
12-02-2007, 09:15 AM
இலங்கையில் அமைதி

ஷீ-நிசி
12-02-2007, 09:15 AM
ராஜா அவர்களே.... ஒரே ஷாட்ல 70 அடிச்சி கலக்கிட்டீங்க...

maganesh
12-02-2007, 09:15 AM
போய் வாரேன்

maganesh
12-02-2007, 09:18 AM
வாசமில்லா மலர்கள்

ஓவியா
12-02-2007, 08:22 PM
ஊமைப் பெண். [ஓவியா மன்னிச்சுடும்மா]



இன்னாது,

இருங்க இருங்க கண்ணமாஸ் கிட்சனில் வத்தி வைக்குறேன்.
இனி சாம்பார் வெரும் சாம்பார் அல்ல மிளகாய் சாம்பார், :eek:
தயிர் சாதம்கூட வில் பி ரேட் இன் கலர் :D


..................................................................................................................

ஆக்ஸீமோரான் கிங் ராஜா அண்ணா,

பதிவையே சும்ம தூள் பன்னிட்டீங்க

நன்றிகள்

உங்களை கண்டு வியக்கிறேன்.

pradeepkt
13-02-2007, 03:50 AM
ராஜா,
வாயடைச்சுப் போயிட்டேங்க...
ஆக்ஸிமோரான்கள் எத்தனை ஆக்ஸிமோரான்களடா!!!!
பாராட்டுகள்.

ராஜா
13-02-2007, 05:21 AM
இன்னாது,

இருங்க இருங்க கண்ணமாஸ் கிட்சனில் வத்தி வைக்குறேன்.
இனி சாம்பார் வெரும் சாம்பார் அல்ல மிளகாய் சாம்பார், :eek:
தயிர் சாதம்கூட வில் பி ரேட் இன் கலர் :D


.......................................................................................................................................

ஆக்ஸீமோரான் கிங் ராஜா அண்ணா,

பதிவையே சும்ம தூள் பன்னிட்டீங்க

நன்றிகள்

உங்களை கண்டு வியக்கிறேன்.

ஆஹா... நாத்தனாரும் அண்ணியாரும் ஒண்ணு கூடிட்டாய்ங்கப்பா...

மன்னிச்சுடுன்னு சொல்லியும் கதை ஆகலியே..!

மன்மதன்
13-02-2007, 12:00 PM
ராஜா எங்கும் ராஜாதான் போல. ஒரே பதிவில் இத்தனையா.. கலக்கல்ஸ்..

maganesh
13-02-2007, 12:14 PM
ராஜா எங்கும் ராஜாதான் போல. ஒரே பதிவில் இத்தனையா.. கலக்கல்ஸ்..
அப்போ அவர் கலக்கல் ராஜா