PDA

View Full Version : google webacceleator ஓரு மாயையா?



nonin
08-02-2007, 05:10 AM
நமது மன்றத்தில் இது நாள்வரை ஓழுங்காக username password கொடுத்து உள்நுழைந்து வந்தேன். சமீபத்தில்
google packageல் web accelelator என்று ஒன்று தரவிறக்கம் செய்தேன். வந்தது வினை. அதன் பிறகு மன்றத்தில்
உள் நுழைய இரண்டு மூன்று முறை முயற்ச்சி செய்தபின்னரே இயலுகிறது. அப்படி ஆனபின்னும் ஏதாவது ஓரு
திரிக்கு பின்னூட்டம் பதித்து சமர்ப்பிக்கும் நேரத்திற்க்குள் log out ஆகிவிடுகிறது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து
வெறுத்துப்போய் கணினி துவக்கும்போதெ web accelelatorஐ off செய்துவிட்டால் மேற்சொன்ன பிரச்சனை ஏதுமில்லை
இது அந்த தரவிறக்கத்தினாலா? அல்லது காக்கை அமர பனம்பழம் விழுந்த கதையாய் தற்செயலா? web accelelatorஆல்
பயன் எதும் உள்ளதா?அது உண்மையிலேயே இணைய இணைப்பை வேகப்படுத்துகிறதா? இல்லையெனில் அதை
un install செய்து விடுவது சிறந்ததா? விளங்கியவர்கள் விளக்குவீர்களா நண்பர்களே.

சுபன்
11-02-2007, 01:20 AM
நண்பரே அதை uninstall பண்ணிவிடுங்கள்!! எனக்கு அதை பாவித்ததால் இருக்கும் வேகம் குறைந்ததே தவிர கூடவில்லை!! மேலும் எனக்கு இதென்னவோ கூகிள் நம் நடவடிக்கைகளை கண்காணிக்க பயன்படுத்துகிறதோ எனும் சந்தேகம் வேறு???!!!!

விகடன்
11-02-2007, 03:20 AM
பொதுவாக "இலவசமாக கிடைக்கின்றதே " என்று விட்டு பல மென்பொருட்களை கணிணியில் நிறுவுவதால் தேவையற்ற இட முடக்கமும், எந்த மென்பொருளால் ஒரு தவறு நேர்ந்தது என்ற குழப்பமும்ந்தான் மிஞ்சுகிறது. ஆதலால் பலருடன் கலந்தாலோசித்துவிட்டு எதையும் செய்யுங்கள். இது அறிவுரை இல்லை. அனுபவத்திலிருந்தே சொல்கிறேன்.

மேலும்,

நீங்கள் கூறிய(தைப்போன்ற) மென்பொருளை நான் பாவிப்பதில்லை.ஆதலால் தங்களின் வினாவிற்கு தகுந்த விளக்கமளிக்க முடியவில்லை என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

nonin
11-02-2007, 05:16 AM
நன்றி சுபன், ஜாவா தாங்கள் சொல்வது போல் பல மென்பொருட்கள் தேவையில்லாது நிறுவுவதால் தொந்திரவுதான்.

அறிஞர்
13-02-2007, 03:31 PM
இது மாதிரி இலவச மென்பொருள்களை... ஆரம்ப காலங்களில் உபயோகித்து.... அவதியுற்று இருக்கிறேன்...

போதும் என்ற மனமே.. பொன் செய்ய.......... என்ற பழமொழி தான் நியாபகத்துக்கு வருது.

praveen
22-02-2007, 12:10 PM
உண்மைதான், இவர்கள் கொடுக்கும் இலவச சாப்ட்வேர்கள் கம்ப்யூட்டர் தொடங்கும் போதே நினைவகத்தில் ஏறி, இயங்கி நம் கம்ப்யூட்டர் வேகத்தை குறைக்கின்றது. ஆனால் இவைகளின் பலன்கள் எதிர்பார்த்தபடி இருக்காது.

இந்த வெப் ஆக்சிலரேட்டர் சாப்ட்வேரேல்லாம் டயல் அப் யூசர்களை குறிவைத்து ஏமாற்றும் சமாச்சாரம் ஆகும். நம் கணிப்பானிலே அதிக அளவு கேச் வைத்து நாம் வழக்கமாக செல்லும் தளங்களை அதில் ஒருமுறை சேமித்து பின் அதையே ரீ யூஸ் செய்து வேகமாகத் தருவது போல பொய்யாக நடிக்கும். அதே போல நமக்கு தேவையில்லாத பக்கங்களையும் நாம் அடுத்து ஒருவேளை ப்ரவ்ஸ் செய்வோம் என்று அதனையும் கேச்-ல் பதிந்து MB based இனைய கணக்குகளை ஒரு வழி செய்து விடும்.

march
21-03-2007, 07:25 PM
முயன்றால் முடியாது இல்லை சற்று தெளிவாக கூறுங்கள்

வித் லவ்
மார்ச்