PDA

View Full Version : பக்.. பக் நேர்முகத் தேர்வு

மயூ
08-02-2007, 04:29 AM
அன்று மாலை 6 மணி இருக்கும் என் செல்லிடத் தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்திட்டதற்கு அடையாளமாய்ச் சிணுங்கியது. ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்தேன். என் நண்பன் எழுதி இருந்தான்.

"டேய்.. நாளைக்கு உனக்கும் இன்டர்வியூடா. ரெடியா? உலக வர்த்தக மையம் 23 ம் மாடியில் இன்டர்வியூ நடைபெறும்".

செய்தியைப் பார்த்ததும் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்போனது. கடவுளே என்ன சோதனையடா இது??? நான் நேர்முகத் தேர்விற்கு கொஞ்சம் கூடத் தயாரில்லையே?

எமது பல்கலைக்கழகத்தில் 3 மாதம் ஏதாவது ஒரு இடத்தில் மென்பொருள் எழுதுனராகப் பணி புரியவேண்டியது கட்டாயம். அதாவது இரண்டாம் ஆண்டு முடிவில் 3 மாதம் இந்தப் பயிற்சி நடைபெறும். இதற்காக எமது பல்கலைக்கழகம் தம்முடன் ஒப்பந்தம் செய்துள்ள கொம்பனிகளில் ஒன்றை எமக்குப் பரிந்துரைப்பதுடன். எமது சுயவிபரக்கோவையை அந்த நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கும்.

ஆனால் எனக்கு இன்னமும் இந்தக் கொம்பனி என்றுசொல்லவில்லை. அப்பிடி இருக்க என் நண்பன் அனுப்பிய செய்தி ஏன் என்று புரியவில்லையே, தலையைப் பிய்த்துக்கொண்டு அடுத்தநாள் பல்கலைக்கழகத்திற்கு ஓடினேன்.

பல்கலைக்கழகத்தில் Industrial Training க்குப் பொறுப்பான விரிவுரையாளரிடம் சென்றேன்.
"மிஸ்.. அ... எனக்கு இண்டைக்கு இன்டர்வியூவா?"

"ஓம்... உமக்குத் தெரியாதா? நான் அண்டைக்கே சொன்னனான்தானே?" மிஸ் எரிந்து விழுந்தார்.

"இல்லை.. மிஸ் நீங்க எனக்குச் சொல்லேல" நான் மறுத்தேன்.

"தம்பி... நான் சொன்னனான் சரியா?... சரி இப்ப என்ன வெளிக்கிட்டுக்கொண்டுடு இனடர்வியூவிற்குப் போம். 1 மணிக்குத் தானே இனடர்வியூ இப்ப வெளிக்கிட்டீர் என்டா நேரம் சரியா இருக்கும்" அவர் அலட்சியமாகச் சொல்லிவிட்டு போய்விட்டார்.

விரிவுரையாளரின் அறையை விட்டு வெளியே வந்த எனக்கு தலைகால் புரியாமல் கோவம் கொவமாக வந்தது. ஏதாவது சாமான் கையில கிடைச்சால் அந்த மிஸ்சை ஒரு அடி அடிச்சு விடலாமோ என்று தோன்றியது.

சரி.. இனி நடப்பதைப் பார்ப்போம் என்று தீர்மானித்தவாறே வீடு திரும்பினேன். அவசரம் அவசரமாக என் உடுப்புகளை இஸ்திரி போட்டுக்கொண்டேன். வழைமைபோல என்னுடைய விருப்பமான நிறமான நீல நிறத்தில் காற்சட்டை, சேட், டை என்பவற்றை அணிந்து கொண்டு பஸ் நிலையத்திற்குச் சென்றேன்.

மீண்டும் என் செல்லிடத் தொல்லைபேசி சிணுக்கத் தொடங்கியது. எவண்டா இவன் இந்த நேரத்தில கழுத்தறுக்கிறான்.. சினந்தவாறே சி.எல்.ஐ பார்த்தேன். முன்பு குறுஞ்செய்தி அனுப்பி என்னை உசார்ப்படுத்திய அதே நண்பன்.

"டேய் நண்பா.. மிஸ் கவுத்துட்டாள்டா.. என்னையும் இன்டர்வியூக்குப் போகச் சொல்லிட்டாள்டா" சோகமாக நண்பனிடம் கூறினேன்.

"யோசிக்காத மச்சான். எல்லாம சேப்பா முடியும், நாங்க மொத்தம் 6 பேர் அந்த கம்பனிக்குப் போகப்போறம். நாங்க எல்லாரும் கொழும்பு கோட்டை இரயில் நிலையம் முன்னால சந்திக்கிறதா இருக்கிறம். நீயும் அங்க வாறிய இல்ல நேர WTC க்குப் போறியா?"

"நான் உங்களோட வாறன் மச்சான். இன்னும் 10 நிமிசத்தில நான் இரயில் நிலையத்திற்கு வாறன்" நான் சொன்னேன்.

கடைசியாக 168 பஸ் எடுத்துச் சென்று மல்வத்த வீதியில் இறங்கி இரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அதற்கிடையில் அவன் எப்பிடியும் சுமார் 6-7 மிஸ் கோல் போட்டுவிட்டான்.

கடைசியாக நான் இரயில் நிலையத்தை அடைந்த போது மொத்தம் ஐந்து பேர் நின்றிருந்தார்கள். எல்லாரும் நல்லாத் தயாராக இருக்கின்றார்கள் என்பது அவர்களைப் பார்த்ததுமே புரிந்தது.

நாங்கள் ஆறு பேர் இன்டர்வியூவிற்குப் போறதாக இருந்தம் அதில் நான் மட்டுமே தமிழ் மற்றவர்கள் அனைவரும் சிங்கள நண்பர்கள். உலக வர்த்தக மையம் அதிக பாதுகாப்பான பிரதேசம். அங்கே இப்படியாக சிங்கள நண்பர்களுடன் செல்வதென்றால் பிரைச்சனை இல்லை.

அன்றுதான் முதல் தடவையாக உலக வர்த்தக மையத்தினுள் சென்றேன். சும்மா சொல்லக் கூடாது மிகவும் அழகாகத்தான்இருந்தது. வெளிநாடு ஒன்றில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. நண்பர்களுடன் ஒருமாதிரி லிப்ட் இருக்கும் இடத்தை அறிந்து அதில் ஏறி 23 ம் மாடியை அடைந்து விட்டோம்.

லிப்ட் திறந்ததும் பெரிதாகத் தெரிந்தது Hydramani என்ற கம்பனியின் பெயரும் முன்னுக்கு இருந்த அழகான வரேப்பாளர் பெண்மணியும்தான்.

இப்போ இவனுகளுக்குள் ஒரே அடிபிடி யார் போய் ரிசப்சனிஸ்டிடம் கதைப்பது என்று. கடைசியாக எனக்கு அந்தப் பாக்கியத்தைத் தந்தார்கள்.

"We are from University of kelaniya.. We'd like to meet Mr. Mangala regarding our Industrial Training.." நான் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவர் சொன்னார் நாங்கள் வருவோம் என்பது முன்பே தெரியும் என்றும் அந்த விருந்தினர் இருக்கையில் இருங்கள் என்றும் கூறினார்.

நெஞ்சு பட பட என்று அடிக்கத்தொடங்கியது. நேர்முகத் தேர்வில் என்ன கேள்வி கேட்பானுகளோ தெரியாதெ??? நண்பர்கள் வலு கூலாக இருந்தார்கள். நான் என்பாட்டுக்கு எனக்குள் புலம்பிக்கொண்டு இருந்தேன்.

இதே வேளையில் நான் என் சுயவிபரக்கோவை, மற்றும் சர்ட்டிபிகேட்டுகளை ஒரு பையினுள் இட்டு கொண்டு வந்திருந்தேன். அந்தப் பையிற்கு ஒரு இரகசியத் திறவுச் சொல்லும் இருந்தது. நாம் கடைசியாகப் பூட்டும் போது என்ன இலக்கம் இருக்குதோ அதுதான் அடுத்ததரம் திறக்கும் போது திறவுச் சொல்லாகப் பயன்படும்.

எனக்குப் பக்கத்தில் எங்களுடன் நேர்முகத் தேர்விற்கு வந்த எங்களுடைய பல்கலைக்கழக சக மாணவி இருந்தாள். அவளுடன் கதைத்தவாறே எனது பையின் லொக்கைத் திறந்து மூடி திறந்து மூடிக்கொண்டு இருந்தேன். திடீர் என்று லொக் திறக்க மறுத்தது.

இன்னும் 15 நிமிடத்தில் நேர்முகத் தேர்வு ஆரம்பிக்கப் போகின்றது. இந்த நேரத்தில் இந்தப் பை இப்படி சிக்கிக்கொண்டது. பையைத் திறக்காவிட்டால் என் CV, Certificates எதையும் எடுக்க முடியாது.

நெஞ்சு முன்பு எப்போதும் இல்லாத வாறு பட ... பட என்று அடித்துக்கொண்டது. கடுமையான ஏ.சிக்குள்ளும் வியர்க்கத் தொடங்கியது.

நான் பதட்டப் படுவதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சிங்களப் பெட்டை." மயூரேசன்.. ஒவ்வொரு நம்பரா ரை பண்ணுங்க.. இன்னும் நேரம் இருக்குதுதானே?" என்று சொன்னாள்.

நானும் ஒவ்வொறு எனக்குத் தெரிந்த இலக்கங்களை ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்துக்கொண்டு இருந்தேன். வேலையில்லை பை திறக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது.

(தொடரும்.. அடுத்த பாகத்துடன் முடியும்.)

ஷீ-நிசி
08-02-2007, 04:59 AM
இது உங்களின் உண்மை சம்பவமே.. எனக்கே படக் படக் என்று இதயம் அடிக்கிறது..

அடுத்த பாகம்??

மயூ
08-02-2007, 05:04 AM
இது உங்களின் உண்மை சம்பவமே.. எனக்கே படக் படக் என்று இதயம் அடிக்கிறது..

அடுத்த பாகம்??
100 வீதம் உண்மை சம்பவம் அன்பரே!
அடுத்த வாரம் பதிக்கின்றேன்....
ஹி.... ஹி..... :rolleyes:

pradeepkt
08-02-2007, 07:10 AM
மயூரேசா,
எப்படி ராஜா திடீருன்னு இப்படி சஸ்பென்ஸூ எல்லாம் வைக்கக் கத்துக்கிட்டே. அப்புறம் அந்த வேலை என்ன ஆச்சு...???? சீக்கிரம் எங்களை வாழ்த்துகள் சொல்ல அனுமதி!

mukilan
08-02-2007, 02:32 PM
சிங்களப் பெட்டையுடன் கதைத்ததால் பூட்டும் போது இருந்த இலக்கம் மறந்து போயிற்றோ? சுயவிபரக்கோவை அருமையான தமிழாக்கம். எனக்குப் புதிது. தனியே ஒரு வாழ்த்து திரி தொடங்க சீக்கிரம் வந்து சேர் மயூரேசா!

அறிஞர்
08-02-2007, 03:06 PM
திக் திக் படக் படக்.. என.. இதயம் துடிக்கிறது...

இந்த பெண்களே இப்படி தான்... பக்கத்துல இருந்து காரியத்தை கவுத்திடுவார்கள்......

அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர் நோக்கி

maganesh
08-02-2007, 04:13 PM
எப்படிப்பா இப்படியெல்லம் எழுதிறீங்க. மயூரேசா. நீங்க கொழும்பில் இருப்பதால் உங்க வட்டாரத்தை மையமாக வைத்து எழுதியுள்ளீர்கள். ஆனால் உங்க வட்டாரம் பற்றித்தெரியாதோர் எப்படி முழுமையான சுவையை சவைக்க முடியும். பொதுவான ஒரு வட்டாரத்தில் எழுதலாமே.

மயூ
09-02-2007, 04:24 AM
மயூரேசா,
எப்படி ராஜா திடீருன்னு இப்படி சஸ்பென்ஸூ எல்லாம் வைக்கக் கத்துக்கிட்டே. அப்புறம் அந்த வேலை என்ன ஆச்சு...???? சீக்கிரம் எங்களை வாழ்த்துகள் சொல்ல அனுமதி!
எல்லாம் உங்கமாதிரி ஆக்களிடம் இருந்துதான்!!!! :D :D
அடுத்த பாகத்தில் முடிவை வாசியுங்கள்...B)

மயூ
09-02-2007, 04:28 AM
சிங்களப் பெட்டையுடன் கதைத்ததால் பூட்டும் போது இருந்த இலக்கம் மறந்து போயிற்றோ? சுயவிபரக்கோவை அருமையான தமிழாக்கம். எனக்குப் புதிது. தனியே ஒரு வாழ்த்து திரி தொடங்க சீக்கிரம் வந்து சேர் மயூரேசா!
நன்றி முகிலன் அண்ணா! சுயவிபரக் கோவை நாம் பாவிக்கின்றோம் யாரிடம் இருந்து பெற்றேன் என்று ஞாபகம் இல்லை. அடுத்த பதிவை வாசிச்சா தெரிஞ்சிடப் போகுது முடிவு!!!!!

திக் திக் படக் படக்.. என.. இதயம் துடிக்கிறது...

இந்த பெண்களே இப்படி தான்... பக்கத்துல இருந்து காரியத்தை கவுத்திடுவார்கள்......

அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர் நோக்கி
ஆமாம் அறிஞர் அவர்களே!!
இனிமேல் பெண்களுக்குப் பக்கத்தில் இருப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்!!!!

எப்படிப்பா இப்படியெல்லம் எழுதிறீங்க. மயூரேசா. நீங்க கொழும்பில் இருப்பதால் உங்க வட்டாரத்தை மையமாக வைத்து எழுதியுள்ளீர்கள். ஆனால் உங்க வட்டாரம் பற்றித்தெரியாதோர் எப்படி முழுமையான சுவையை சவைக்க முடியும். பொதுவான ஒரு வட்டாரத்தில் எழுதலாமே.
கதையைச் சுவைக்க முடியாமலா இத்தனை பேர் பின்னூட்டம் இட்டுள்ளனர்!!!!!
நண்பா தற்போது இலங்கைத் தமிழுக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியச் சகோதரர்கள் எங்கள் தமிழை எங்களை விட அழகாகப் புரிந்துகொள்கின்றார்கள்... ஆகவே குளப்பம் வேண்டாம்!!

kavitha
09-02-2007, 06:40 AM
சுவாரசிய நிகழ்வு.. சிங்களத்தமிழ் படிக்கவும் இனிமையாக இருக்கிறது. அடுத்தபாகத்தையும் இடுங்கள்.

மயூ
09-02-2007, 06:47 AM
சுவாரசிய நிகழ்வு.. சிங்களத்தமிழ் படிக்கவும் இனிமையாக இருக்கிறது. அடுத்தபாகத்தையும் இடுங்கள்.
சிங்களத் தமிழ் என்று சொல்ல வேண்டாம்!!!!!
அப்படியானால் நீங்க பேசுவது ஹிந்தித் தமிழா!!!
ஈழத்தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்புத்தமிழ் எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள் சிங்களத் தமிழ் என்று மட்டும் சொல்லாதீர்கள்

maganesh
09-02-2007, 07:34 AM
நண்பா தற்போது இலங்கைத் தமிழுக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியச் சகோதரர்கள் எங்கள் தமிழை எங்களை விட அழகாகப் புரிந்துகொள்கின்றார்கள்
நான் தமிழ் பற்றிக்கூறவில்லை. சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் கூறும் இடங்கள் புதிதாக இருப்பதனால் புரிவது கடினமாக இருந்தது. புரிந்ததும் இனிமையாக இருந்தது. அதனைத்தான் சொன்னேன். தவறாயின் உன் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் நண்பனே.

maganesh
09-02-2007, 07:37 AM
சிங்களத்தமிழ் படிக்கவும் இனிமையாக இருக்கிறது. அடுத்தபாகத்தையும் இடுங்கள்
சிங்களத் தமிழா? அப்படி என்றால்? பாரதியார்தான் சிங்களத்தீவு என்று குறிப்பிட்டு எமது மனங்களில் ஒரு சிறு வருத்ததை ஏற்படுத்திவிட்டார் என்றால் நீங்களுமா? வேண்டாம். தாங்காது. அழுதுடுவோம்.

sham
09-02-2007, 07:53 AM
மயூரேசன் அண்ணா! நீங்கள் சொல்வதைப்பார்த்தால்,நமக்கும் அடுத்த வருடம் இந்த சங்கதி நிகழ வாய்ப்பிருக்கென்று நினைக்கிறேன்.
நல்லது தொடருங்கள்..... தொடருங்கள்

மயூ
09-02-2007, 08:14 AM
நான் தமிழ் பற்றிக்கூறவில்லை. சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் கூறும் இடங்கள் புதிதாக இருப்பதனால் புரிவது கடினமாக இருந்தது. புரிந்ததும் இனிமையாக இருந்தது. அதனைத்தான் சொன்னேன். தவறாயின் உன் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் நண்பனே.
இதற்கெதற்கு மன்னிப்பு!!!
என் மனது என்ன செய்தாலும் புண்படாது!! சந்தேகம் இருந்தால் பிரதீப் அண்ணாட்ட கேட்டுப் பார்க்கவும்.....:D
புதிய இடங்கள் கதைகளில் வரும் போது அதை வாசிப்பவர்கள் அறிய வேண்டும்.....
நீங்கள் சொல்வதின் படி பார்த்தால் பொன்னியின் செல்வன்வாசிக்க சோழர் காலத்தில் இருந்திருக்க வேண்டுமல்லவா!

மயூ
09-02-2007, 08:15 AM
மயூரேசன் அண்ணா! நீங்கள் சொல்வதைப்பார்த்தால்,நமக்கும் அடுத்த வருடம் இந்த சங்கதி நிகழ வாய்ப்பிருக்கென்று நினைக்கிறேன்.
நல்லது தொடருங்கள்..... தொடருங்கள்
வாய்ப்பு இல்லை!!
கட்டாயமான இருக்கின்றது!!! மாட்டுப்பட்டு அல்லல்பட வாழ்த்துக்கள்.:D :D

மயூ
09-02-2007, 08:16 AM
சிங்களத் தமிழா? அப்படி என்றால்? பாரதியார்தான் சிங்களத்தீவு என்று குறிப்பிட்டு எமது மனங்களில் ஒரு சிறு வருத்ததை ஏற்படுத்திவிட்டார் என்றால் நீங்களுமா? வேண்டாம். தாங்காது. அழுதுடுவோம்.
அதே அதே புரிந்து கொள்ளுங்கள் மன்றத்து உறவுகளே!!!

ஆதவா
09-02-2007, 08:27 AM
மயூரேசான்.!! கடைசியாக தொடரும் என்று இருந்ததால் முன்னமே படிக்கவில்லை......... முழுவதுமாய் படித்துக்கொள்ளலாமென்று நினைத்திருந்தேன்.... அன்றியும் படித்துவிட்டேன்...... என்னாச்சு கடடசியில்? கிடைத்ததா வேலை??:) :)

அதென்ன்ப்பா சிங்களத்தமிழ்??? தமிழ் எங்கேயும் ஒரே தமிழ்தான்.. செந்தமிழ்தான்........... இங்கேயும் கோவைத்தமிழ், மதுரைத் தமிழ் என்று பல உள்ளன..... கிராதகர்கள்.. தமிழைக் கொலைசெய்துவிட்டு அதை ஊர்பேர் கொண்டு பூசிவிட்டார்கள்..........:mad:

மயூ
09-02-2007, 08:31 AM

அடுத்த பதிவு வரும் வரை வேலை கிடைத்தா இல்லையா என்பது சஸ்பென்சே!!!v:D

சிங்களத் தமிழை மறுத்தமைக்கு நன்றி ஆதவா!

maganesh
09-02-2007, 08:31 AM
அதென்ன்ப்பா சிங்களத்தமிழ்??? தமிழ் எங்கேயும் ஒரே தமிழ்தான்.. செந்தமிழ்தான்........... இங்கேயும் கோவைத்தமிழ், மதுரைத் தமிழ் என்று பல உள்ளன..... கிராதகர்கள்.. தமிழைக் கொலைசெய்துவிட்டு அதை ஊர்பேர் கொண்டு பூசிவிட்டார்கள்..........
ஆதவா எங்குமே சிங்களத் தமிழ் என்று ஒன்றில்லை. இலங்கையில் கூட மட்டக்களப்புத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், மலையகத்தமிழ் என்பனதான் உண்டு. யாழ்ப்பணத்தமிழ் மலையாளிகள் தமிழ் பேசுவதப்போல இருக்கும். மலையகத் தமிழ் இந்தியத் தமிழ் போன்றது. மட்டக்களப்புத் தமிழ் இரண்டும் கலந்தது.

ஆதவா
09-02-2007, 08:33 AM
அடுத்த பதிவு வரும் வரை வேலை கிடைத்தா இல்லையா என்பது சஸ்பென்சே!!!v:D

சிங்களத் தமிழை மறுத்தமைக்கு நன்றி ஆதவா!

அட சிங்களமே மறுப்புதாங்க.............. இதில மொழியமட்டும் விட்டு வைக்கலாமா? அது எப்பவும் தமிழனுக்கே சொந்தம்.... :D

maganesh
09-02-2007, 08:36 AM
அடுத்த பதிவு வரும் வரை வேலை கிடைத்தா இல்லையா என்பது சஸ்பென்சே!!!
மயூரேசாஆஆ. அடுத்த பாகம் எப்போ?

மயூ
09-02-2007, 08:47 AM
மயூரேசாஆஆ. அடுத்த பாகம் எப்போ?
வர்ற திங்கட் கிழமை :rolleyes:

மன்மதன்
09-02-2007, 09:41 AM
திக் திக் என்றுதான் செல்கிறது. சினிமாவில் கூட 10 நிமிடம்தான் இடைவேளை.. நீங்க என்னான்னா 1 வாரம் விடுறீங்களே..

ஓவியன்
15-07-2008, 02:16 PM
என்ன கொடுமை இது மயூரேசா...!!

உலக வர்த்தக மையக் கட்டடத்தில்...
ஒரு சிங்களப் பெட்டையுடன் பேசிக் கொண்டு
இப்படி சிக்கலில் மாட்டிட்டீரே.......???? :D:D:D