PDA

View Full Version : நிலாப் பெண்



ஷீ-நிசி
07-02-2007, 06:23 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/i8cono1.jpg

அலையில்லா கரையில்
இலையெல்லாம் தரையில்

மலரின் வாசத்தை
முகர்ந்து -நீ
வெளியிட்ட சுவாசத்தில்
நகர்ந்து சென்றதா
அந்த இலைகள்?

இது நிலவா, சூரியனா
இல்லை நிலாச் சூரியனா?

அவன் உன்னிடம்
வர விரும்பி
உண்டான பாதையா?! -இல்லை

நீ, அவனிடமிருந்து
இறங்கிவந்து
உட்கார்ந்த தேவதையா?!

நீ அமர்ந்துக்கொண்டதால்
மரத்தின் நிழலில் கூட
இலைகள் பூத்திருக்கிறதே?!

வளைந்துகொண்டிருப்பது மரமா?!
இல்லை நீ சாய்ந்துகொண்டிருப்பது
மரம் பெற்ற வரமா?!

போ பெண்ணே போ!
பொழுது புலரப்போகிறது
என்னை எழுப்பிவிட
சூரியன் புறப்படுகிறான்!

maganesh
07-02-2007, 06:40 PM
இரவுச் சூரிய நிலவொளியில்
மங்கையிவள் காத்திருகிறாள்
விடியலை தேடி

அவளுள்ளச் சிதறல்களை
பிரதிபலிக்கும் தளவாடியாக
அவள்கண்ணீர்த் தடாகம்

பூக்களை ஸ்பரிசிக்கும் பூவிழியாள்
வாசம் சுவாசிக்க அலைமோதும்
கண்ணீர்ப் பூக்கள்

உதிர்ந்த இலைகள் இவளின்
உதிர்வைக் காட்டி
நிற்கின்றனவோ

ஷீ-நிசி
08-02-2007, 01:48 PM
நண்பர்களே! மேலே உள்ளது புகைப்படக் கவிதை.. படம் விடுபட்டிருந்தது.. இப்பொழுது சரி செய்துள்ளேன்....

பிச்சி
08-02-2007, 01:55 PM
ரொம்ப அருமையா இருக்குங்க..

வளைந்துகொண்டிருப்பது மரமா?!
இல்லை நீ சாய்ந்துகொண்டிருப்பது
மரம் பெற்ற வரமா?!

இந்த வரிகள் எனக்கு ரொம்ப புடிச்சுபோச்சு

பிச்சி
08-02-2007, 01:56 PM
இரவுச் சூரிய நிலவொளியில்
மங்கையிவள் காத்திருகிறாள்
விடியலை தேடி

அவளுள்ளச் சிதறல்களை
பிரதிபலிக்கும் தளவாடியாக
அவள்கண்ணீர்த் தடாகம்

பூக்களை ஸ்பரிசிக்கும் பூவிழியாள்
வாசம் சுவாசிக்க அலைமோதும்
கண்ணீர்ப் பூக்கள்

உதிர்ந்த இலைகள் இவளின்
உதிர்வைக் காட்டி
நிற்கின்றனவோ

உங்கள் கவிதையும் நல்ல்லா இருக்கு. ஆனா முடியாத மாதிரி இருக்கு

பென்ஸ்
08-02-2007, 02:09 PM
ஷீ...
என்ன நண்பா இது...

மன்றத்தில் முன்னால் கவிதாவின் கவிதைகளை திரும்ப திரும்ப வாசித்து புரிந்து கொள்வேன்....
சில கவிதைகள் உள்வாங்கி , ஏற்று அர்த்த படுத்தி கொள்வதில் இருக்கும் சுகம் ... அது தனிதான்...

ஷீ.. உங்க கவிதைகளை வாசித்து கிடைக்கு ஆத்ம திருப்தி... இன்னும் வேண்டும்...

அருகில் இழுத்து வைத்து கொள்ளுங்கள்
விடிவது இன்னும் நொடிகளில் ஆகியிருந்தாலும்
அந்த இதமான குளிர் பார்வை தீன்டலில் வாழலாம்

ஷீ-நிசி
08-02-2007, 03:05 PM
ரொம்ப அருமையா இருக்குங்க..

வளைந்துகொண்டிருப்பது மரமா?!
இல்லை நீ சாய்ந்துகொண்டிருப்பது
மரம் பெற்ற வரமா?!

இந்த வரிகள் எனக்கு ரொம்ப புடிச்சுபோச்சு


நன்றி பிச்சி.... எனக்கும் பிடித்த வரிகளிவை...

ஷீ-நிசி
08-02-2007, 03:07 PM
ஷீ...
என்ன நண்பா இது...

மன்றத்தில் முன்னால் கவிதாவின் கவிதைகளை திரும்ப திரும்ப வாசித்து புரிந்து கொள்வேன்....
சில கவிதைகள் உள்வாங்கி , ஏற்று அர்த்த படுத்தி கொள்வதில் இருக்கும் சுகம் ... அது தனிதான்...

ஷீ.. உங்க கவிதைகளை வாசித்து கிடைக்கு ஆத்ம திருப்தி... இன்னும் வேண்டும்...

அருகில் இழுத்து வைத்து கொள்ளுங்கள்
விடிவது இன்னும் நொடிகளில் ஆகியிருந்தாலும்
அந்த இதமான குளிர் பார்வை தீன்டலில் வாழலாம்


நன்றி பெஞ்சமின் அவர்களே.. நீங்கள் இந்த அளவிற்கு பாராட்டியுள்ளது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்குகிறது..

ஆதவா
08-02-2007, 04:40 PM
இந்த அழகிய படத்தை எங்கோ பார்த்த ஞாபகம்... எனக்கு மெயிலில் வந்திருக்கக் கூடும்.. அப்போதெல்லாம் எனக்கு கவிதை எழுதத் தோணவில்லை........ காரணம் அது சேரவேண்டிய இடத்திற்குத்தானே சேரவேண்டும்? அற்புதமாய் வந்து சேர்ந்திருக்கிறது......


அலையில்லா கரையில்
இலையெல்லாம் தரையில்

ஒரு படத்தைப் பார்த்து அதில் உள்ள நிகழ்வுகளைக் கண்டு எதுகைகளோடு கவிதை அமைவது.... அமைப்பது சிரமம்... ஷீ நீங்கள் அதை இலகுவாக கையாண்டிருப்பது தெரிகிறது... நன்றாக கவனியுங்கள்..கவிதையின் முதலிரண்டு வரிகள்.... முன்னும் பின்னும் எதுகைகள்..... (அலை-இலை; கரை-தரை) வியக்கிறேன்...........

மலரின் வாசத்தை
முகர்ந்து -நீ
வெளியிட்ட சுவாசத்தில்
நகர்ந்து சென்றதா
அந்த இலைகள்?

தத்தளிக்கும் இலைகளைக் கூட மங்கையின் சுவாசத்தால் என்று அருமையாக அமைத்து இருக்கிறீர்கள்..... இங்கேயும் பிரமாதமாக ஒத்துப்போகிறது... வாசம்-சுவாசம்.....

இது நிலவா, சூரியனா
இல்லை நிலாச் சூரியனா?
அவன் உன்னிடம்
வர விரும்பி
உண்டான பாதையா?! -இல்லை
நீ, அவனிடமிருந்து
இறங்கிவந்து
உட்கார்ந்த தேவதையா?!

இது வரைந்த ஓவியனின் கைத்திறமை..... நிலவா அல்லது சூரியனா என்று புரியாத விண்மீன்,,, இதை மிஞ்சும் வரிகளும்.........பிரம்மாண்டம்.. ஷீ!! அற்புதமாய் எதுகைகளை வைத்து விளையாடுகிறீர்கள்.... எனக்கு வியப்பென்னவென்றால்ல்.... அவைகள் படத்தோடு ஒத்துப்போகிறது..................ம்ம்ம்ம்...... மன்ற உறவுகளே!! ஷீ ஒரு அற்புதமான கவிதை ராஜன்.... எள்ளளவும் குறைவில்லை....

நீ அமர்ந்துக்கொண்டதால்
மரத்தின் நிழலில் கூட
இலைகள் பூத்திருக்கிறதே?!

சில விஷயங்கள் நாம் மேலோட்டமாகப் பார்ப்பதால் அவ்வளவாகத் தெரியாது... சிறந்த கவிஞன், விஷய்ங்களை நோண்டவேண்டும்.. அந்த திறமை உங்களிடம் நிறையவே இருக்கிறது.... அசாதாரண திறமை.. மர நிழலில் உங்களுக்கு பூத்திருக்கும் இலைகள் தெரிகிறது.. எங்களுக்கோ வெறும் நிழலாக......... கவிஞனுக்கு அதுதானே வித்தியாசம்..?

வளைந்துகொண்டிருப்பது மரமா?!
இல்லை நீ சாய்ந்துகொண்டிருப்பது
மரம் பெற்ற வரமா?!

காதலோடு எழுதிய வரிகள்... நிரம்ப ரசிக்கிறேன்... அங்கங்கே பிய்த்தெறிந்த வைரங்கள் உங்கள் வரிகள்..... கவிதை முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது..

போ பெண்ணே போ!
பொழுது புலரப்போகிறது
என்னை எழுப்பிவிட
சூரியன் புறப்படுகிறான்!

ஆக,, அதிகாலைப் பொழுதோ?.....

நண்பரே! நான் எத்தனையோ கவிதைகள் படித்திருக்கிறேன்......... மிகப் பிரபலம் என்றூ சொல்லிக்கொண்டு புரியாமல் கவிதை தரும் புலவர்களையும் பார்த்திருக்கிறேன்... நேரடியான கருத்து... அழகான சொற்சுவை. எளிமையான வார்த்தை விளையாட்டு, நேர்த்தியான திறமை.. எல்லாம் ஒருங்கே அமைந்த ஒரு கவிதையே பாமரனும் படிக்க முடிந்த கவிதை.... அழகான கவிதை................... அந்த வகையில் இதுவும் ஒன்று................. சில படிப்பதற்கே போரடிக்கும்,. சில படிப்பதற்கே பிடிக்காது, சில ஒருமுறை படிக்கலாம்.......... வெகுசிலவே மீண்டும் படிக்கத்தூண்டும்...... அந்த வகை இந்த கவிதை.............

மதுரகன்
08-02-2007, 04:44 PM
வளைந்துகொண்டிருப்பது மரமா?!
இல்லை நீ சாய்ந்துகொண்டிருப்பது
மரம் பெற்ற வரமா?!

போ பெண்ணே போ!
பொழுது புலரப்போகிறது
என்னை எழுப்பிவிட
சூரியன் புறப்படுகிறான்!

அற்புதம் ஷீ உங்கள் சிந்தனை சூரியர்களால் கலைக்கப்படாது
நிழலூட்ட தமிழ்மன்றம் துணையிருக்கும்...
வாழ்த்துக்கள்...

ஷீ-நிசி
08-02-2007, 04:46 PM
ஆதவா உன் விமர்சனம் என்னை இன்னும் இன்னும் எழுதிட தூண்டுகிறது. நன்றி நண்பனே....

ஆதவா
08-02-2007, 04:47 PM
இரவுச் சூரிய நிலவொளியில்
மங்கையிவள் காத்திருகிறாள்
விடியலை தேடி

உதிர்ந்த இலைகள் இவளின்
உதிர்வைக் காட்டி
நிற்கின்றனவோ

அருமையான முயற்சி மயூரன்.... நீங்களும் சிறப்பாக அமைக்கிறீர்கள் என்றாலும், இப்படத்தைப்பார்த்து உள்ளது உள்ளபடியே சொல்கிறீர்கள்... இன்னும் நன்றாக நோண்டுங்கள்..... அருமையான விஷயங்கள் வெளியே வரலாம்..... உங்கள் கவிதையில் எளிமை அழ்காய் இருக்கிறது... இன்னும் முயன்று வெற்றி அடையுங்கள்.............

(எல்லார்த்தையும் சொல்வேன்... நான் மட்டும் செய்யமாட்டேன்......:D )

ஷீ-நிசி
08-02-2007, 04:51 PM
அற்புதம் ஷீ உங்கள் சிந்தனை சூரியர்களால் கலைக்கப்படாது
நிழலூட்ட தமிழ்மன்றம் துணையிருக்கும்...
வாழ்த்துக்கள்...

நன்றி மதுரகன்

sham
09-02-2007, 02:54 AM
அவளுள்ளச் சிதறல்களை
பிரதிபலிக்கும் தளவாடியாக
அவள்கண்ணீர்த் தடாகம்

உதிர்ந்த இலைகள் இவளின்
உதிர்வைக் காட்டி
நிற்கின்றனவோ


நன்றாக உள்ளது நண்பரே. எப்படியெல்லாம் இவ்வாறு எழுதுகிறீர்களோ தெரியவில்லை

maganesh
09-02-2007, 08:02 AM
அருமையான முயற்சி மயூரன்.... நீங்களும் சிறப்பாக அமைக்கிறீர்கள் என்றாலும், இப்படத்தைப்பார்த்து உள்ளது உள்ளபடியே சொல்கிறீர்கள்... இன்னும் நன்றாக நோண்டுங்கள்..... அருமையான விஷயங்கள் வெளியே
வரலாம்..... உங்கள் கவிதையில் எளிமை அழ்காய் இருக்கிறது... இன்னும் முயன்று வெற்றி அடையுங்கள்.............
ஆதவா படைப்புகளில் தவறோ சிரியோ சுட்டிக்கட்டினால்தான் திருந்தி திருத்தி சிறப்பாகத் தரலாம். அந்த வகையில் புதியவர்களை ஊக்கப்படுத்தும் உங்கள் மனப்பாங்குக்கு வாழ்த்துக்கள்.

maganesh
09-02-2007, 08:04 AM
நன்றாக உள்ளது நண்பரே. எப்படியெல்லாம் இவ்வாறு எழுதுகிறீர்களோ தெரியவில்லை
நன்றி நண்பரே. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

maganesh
10-02-2007, 09:23 AM
ஊருறங்கும் வேளையிலே
யாருமற்ற நேரத்திலே
தீர்த்த்க் கரை ஓரத்திலே
கிளைக் கூரையின் கீழ்
இலைப்படுக்கை விரித்து
பூவாசமுன் சுவாசமாக்கி
மரச் சாயணையில் சாய்ந்து
கொண்டவன் வரவுக்காக
வழிமேல் விழிவைத்துக்
காத்திருக்கும் காரிகையே

உறங்கப்போன உலகதீபம்
உன்னவன் உளறல்கண்டு
இரவில் சூரியனாக
வந்துள்ளேன்
காதல் தூதுவனாக
தனித்திரு பெண்ணே
நீ விழித்திரு
சாகர சங்கீதத்தில்
லயித்திரு
கணப்பொழுதில்
உன்னருகே அவனிருப்பான்.

thoorigai
10-02-2007, 11:04 AM
அலையில்லா கரையில்
இலையெல்லாம் தரையில்

மலரின் வாசத்தை
முகர்ந்து -நீ
வெளியிட்ட சுவாசத்தில்
நகர்ந்து சென்றதா
அந்த இலைகள்?

இது நிலவா, சூரியனா
இல்லை நிலாச் சூரியனா?

அவன் உன்னிடம்
வர விரும்பி
உண்டான பாதையா?! -இல்லை

நீ, அவனிடமிருந்து
இறங்கிவந்து
உட்கார்ந்த தேவதையா?!

நீ அமர்ந்துக்கொண்டதால்
மரத்தின் நிழலில் கூட
இலைகள் பூத்திருக்கிறதே?!

வளைந்துகொண்டிருப்பது மரமா?!
இல்லை நீ சாய்ந்துகொண்டிருப்பது
மரம் பெற்ற வரமா?!

போ பெண்ணே போ!
பொழுது புலரப்போகிறது
என்னை எழுப்பிவிட
சூரியன் புறப்படுகிறான்!

மிக அருமையான வரிகள். ரசித்தேன் மிகவும்..

பென்ஸ்
10-02-2007, 11:37 AM
அலையும் களைத்து போய் விட்டது
இலையும் பழுத்து போய்விட்டது

நீ கொடுத்த பூ மட்டும்
உன் நினைவுகளை போல் புதிதாய்..

நீ தென்றலிடமாவது தூது விடு
ஒரு அலையாய் என் பாதம் தொட..
ஒரு இலையாய் என் மடி மீது விழ....

இல்லையேல்..
வருத்தமொன்றும் இல்லை..
உனக்கான இந்த மரத்தின்
பூக்களுக்கு உரமாகியிருப்பேன்..

maganesh
10-02-2007, 03:15 PM
நல்லதொரு கவிதை பெஞ்சமின். ரசனையான வரிகள்.

மன்மதன்
10-02-2007, 06:15 PM
அதோ
பார் பெண்ணே
அந்த நிலவின்
பெருமூச்சு
மேகமாய்
செல்கிறது

நிலவுக்கு மட்டும்
கொஞ்சும்
சக்தி இருந்தால்
இன்னும்
கொஞ்சம் இறங்கி வந்து
உன்னை தழுவிக்கொள்ளும்

நீ
சாய்ந்து இருக்கும்
மரத்தின் வேர்கள்
கூட உன்னை
தழுவி செல்கின்றன

ஏரியின்
கரையின்
கற்கள் கூட
உன்னை
சுற்றியே இருக்கின்றன..

கையில்
மலரை வைத்து
விளையாடும் நீ
மறந்துவிடாதே...

அந்த மலர்
ஏதாவது
ஒரு ஆடவனின்
இதயமாக கூட இருக்கலாம்....


(உங்கள் கவிதை நன்றாக இருந்தது ஷீ.. படம் அருமையோ அருமை.. கை துறுதுறுத்தது. அதற்குண்டான என் கிறுக்கல்தான் இது..)

பென்ஸ்
10-02-2007, 06:24 PM
மன்மதா...
உங்களுடய "ஆற்றங்கரையில்..." (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5543)கவிதையில் ரசிகனானவன்....
இத்துனை எழிமையாய் ஒரு கவிதை...
அருமை...

ஆதவா
10-02-2007, 06:33 PM
அய்யோ
அய்யோ
அய்யோ
அய்யோ

இப்படி வெளுத்து வாங்கறாங்க.. நமக்குத்தான் ஒன்னுமே தோணல.... சொக்கா!! நீ வரமாட்ட வரவேமாட்ட....

ஷீ-நிசி
12-02-2007, 04:22 AM
ஆஹா, எல்லோருமே அட்டகாசமா எழுதுறீங்களே... அருமை நண்பர்களே!

maganesh
12-02-2007, 08:04 AM
இப்படி வெளுத்து வாங்கறாங்க.. நமக்குத்தான் ஒன்னுமே தோணல.... சொக்கா!! நீ வரமாட்ட வரவேமாட்ட....
வரும் வரும் கவிதை வரும் குணா கமல் ஸ்ரைலில் சொல்லிப் பாருங்க.

மன்மதன்
13-02-2007, 12:21 PM
மன்மதா...
உங்களுடய "ஆற்றங்கரையில்..." (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5543)கவிதையில் ரசிகனானவன்....
இத்துனை எழிமையாய் ஒரு கவிதை...
அருமை...

மிக்க நன்றி பென்ஸ்..

அறிஞர்
13-02-2007, 01:58 PM
ஷீ-நிசியின் கவிதையோடு.. மற்றவர்கள் கவிதையும்...... சிறப்பாக உள்ளது...

இந்த கவிதைகள் போல்.. கவிதை போட்டியிலும் கவிதைகள் குவியட்டும்....

மன்மதனின் அசத்தல் கிறுக்கல் அருமை...