PDA

View Full Version : கும்பிட்டுகிறெனுங்க.....blogthirudan
07-02-2007, 05:00 PM
அய்யா ஊர் பெரியவங்களே முத வேலயா கும்பிட்டுகிறெனுங்க.....
இந்த வரவு நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா அப்படின்னு கேட்டா வேலு நாயக்கர் மாதிரி தெரியலயே சார்/மேடம்...... அப்படித்தான் பதில் வரும்.
கதை போடுற அளவு எல்லாம், இங்க சரக்கு ஒண்ணும் இல்ல.

ஆனாலும் வருவேன்...நல்லதை தருவேன்.

ப்ளாக்திருடன்
இவன் ஒரு அப்பாவி தமிழன்.

ஷீ-நிசி
07-02-2007, 05:03 PM
வாங்க வாங்க, பிளாக்....
நண்பர்களே, இவரை அறிவேன்.. இவர் இன்னொரு ஆதவனைப்போல...

maganesh
07-02-2007, 05:09 PM
வாங்கப்பு. நீங்களும் நம்ம குடும்பத்துல இணைஞ்சுப்புட்டீங்க. விஜயகாந் மாதிரி பன்ச் டயலாக்குடன் வந்திருக்கீங்க. கலக்குங்க.

blogthirudan
07-02-2007, 05:10 PM
ஆதவனா..? அது யாரு...
என்னை போல இன்னொருவர் இந்த பூவுலகிலா..இருக்கவே முடியாது.
கிராதகம்..இருந்தால் அவரை சிறையில் அடையுங்கள்.

ப்ளாக்திருடன்
இவன் ஒரு அப்பாவி தமிழன்.

maganesh
07-02-2007, 05:28 PM
ஆமாங்க அவர் பூவுலகிலில்லை. பூவுலகுக்கே ஒளியூட்டிக்கொண்டிருக்கும் ஒரு அற்பப் பதர். அவர் பாதிநேரம் சிறையில்தான் இருப்பார்.

pradeepkt
08-02-2007, 06:13 AM
ம்ம்... பேரே வித்தியாசமாக இருக்கிறதே.
வரவேற்புகள்.
எங்கள் உள்ளங்களைத் திருட வாழ்த்துகள்.

மதி
08-02-2007, 06:56 AM
வாங்க பிளாக்..

leomohan
08-02-2007, 08:49 AM
வாருங்கள் நண்பரே. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

thoorigai
08-02-2007, 09:57 AM
அ(ட)ப்பாவி தமிழா!
அறிமுகமே அமோகமா இருக்கே!!
ப்ளாக்திருட்டா? புதுமையா இருக்குங்க...
வாங்க வாங்க. கலக்குங்க

அறிஞர்
08-02-2007, 12:28 PM
புதுமை விரும்பிகளை மன்றத்தில் காண்பதில் மகிழ்ச்சி....

பிரதீப் சொல்வது போல்.. பல உள்ளங்களை கொள்ளை கொள்ளுங்கள்.

மனோஜ்
08-02-2007, 01:43 PM
வாருங்கள் ப்ளாக்திருடன் வாருங்கள் உங்கள் வறவு நல்வறவாகுக..

மதுரகன்
08-02-2007, 04:12 PM
நானும் கும்புட்டுக்கிறேனுங்க..
ஏனுங்க ஐயா..? நம்ம சாதி சனம் நன்மைக்காக நம்ம மன்றத்தில்
ஏதும் சிறப்பா பண்ணலாமுங்களே...
அப்ப நான் உத்தரவு வாங்கிக்கலாமா...?

ஆதவா
08-02-2007, 04:18 PM
உங்கள் வரவு நல்வரவு........... சரக்கு இல்லாமல்தான் பிறக்கிறோம்.... நாம் வளர்த்துக்கொள்வதில்தானே இருக்கிறது... நல்லதைத் தருவதாகச் சொல்லியிருக்கும் ஷீயின் நண்பரான உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்...

அதேசமயம்..... நான் தான் நீங்கள் கூறிய ஆதவன்........ சிறையிலேயே அடைந்துகிடக்கிறேன்...... உங்கள் மனச்சிறையில்.... என்னைப் போல என்றால்.....????... :) எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக்த்தான் இருக்கவேண்டும் :)

விகடன்
08-02-2007, 04:23 PM
வணக்கம் நண்பரே.
உங்கள் வரவும் நல் வரவாகட்டும்...

உங்களின் அறிமுகத்தின் முறையினை இன்னும் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்

மயூ
09-02-2007, 04:34 PM
வாங்க வலைப்பதிவுதிருடா!! ஏற்கனவே ஆதவன் கலக்கிக்கொண்டு இருக்கிறார் நீங்களும் கலக்குங்க.

ஓவியா
09-02-2007, 05:17 PM
உலகத்திலே இவ்வளவு மக்கள் வாங்க வாங்க வாங்க'னு வரவேற்க்கும் ஒரே திருடன் நீங்கதான் :D :D . திருடனையும் வரவேற்க்கும் தமிழ் மன்றத்து மக்களை பாராட்டுகிறேன் :eek: . உங்கள் வரவு நன்மையாக இருகட்டும். :) :D


நல்வரவுகள் நண்பரே.

தங்களின் கருத்து பின்னூட்டங்களை காண ஆவலாய் உள்ளோம்.

பிரதீப் சொல்வது போல் இங்குள்ள அனைத்து மன்றத்து சொந்தங்களின் அன்பையும் திருட வாழ்த்துக்கள்.

மயூ
09-02-2007, 05:19 PM
உலகத்திலே இவ்வளவு மக்கள் வாங்க வாங்க வாங்க'னு வரவேற்க்கும் ஒரே திருடன் நீங்கதான் :D :D .
:D :D

ஓவியா
09-02-2007, 05:25 PM
:D :D

மயூ, இதுக்கே இப்படீனா, அடுத்த வரிய பாரு...உன்னையும் செர்த்துதான் :D :D

மயூ
09-02-2007, 05:30 PM
மயூ, இதுக்கே இப்படீனா, அடுத்த வரிய பாரு...உன்னையும் செர்த்துதான் :D :D
விளங்கவில்லை...
இப்ப யோசிக்கிற மனநிலையும் இல்லை இலங்கையில நேரம் 12 மணி பேய் உலாவுற நேரம்... போய் படுக்கப் போறன் நாளைக்கு வந்து பாக்கெக்க பதிலைப் போட்டு வைச்சிருப்பீங்க என்று நம்புகின்றேன்.

ஓவியா
09-02-2007, 05:35 PM
விளங்கவில்லை...
இப்ப யோசிக்கிற மனநிலையும் இல்லை இலங்கையில நேரம் 12 மணி பேய் உலாவுற நேரம்... போய் படுக்கப் போறன் நாளைக்கு வந்து பாக்கெக்க பதிலைப் போட்டு வைச்சிருப்பீங்க என்று நம்புகின்றேன்.

திருடனையும் வரவேற்க்கும் தமிழ் மன்றத்து மக்களை பாராட்டுகிறேன். :D

கண்ணா,
நமது நற்குணங்களின் எடுத்துக்காட்டு :)

மயூ
09-02-2007, 05:40 PM
திருடனையும் வரவேற்க்கும் தமிழ் மன்றத்து மக்களை பாராட்டுகிறேன். :D

கண்ணா,
நமது நற்குணங்களின் எடுத்துக்காட்டு :)
இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!!! :cool: :rolleyes: :cool: :cool:

ஓவியா
09-02-2007, 05:42 PM
இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!!! :cool: :rolleyes: :cool: :cool:

:D :D :D