PDA

View Full Version : தனி நபர் கடன் கால்குலேஷன்



ஷீ-நிசி
07-02-2007, 04:27 PM
நண்பர்களே சின்ன கால்குலேஷன் வட்டி விகிதம் கண்டுபிடித்திட...

லோன் தொகை - 100000
காலங்கள் - 3 வருடம் (36 மாதங்கள்)
வட்டி விகிதம் - 18%

அசல் = 100000-க்கு
100000/36 = 2777

வட்டி = 100000-க்கு
(100000 x 3 x 18)/100 = 54000/36 = 1500

அசல் + வட்டி = 2777+1500 = 4278 இது ஒரு மாதத்திற்கான் EMI



இப்போதைக்கு ICICI-ன் தனி நபர் கடன் தாராளமாய் வாங்கலாம். இவர்களின் வட்டி விகிதம் 8.77% தனி நபர் கடன்கள் மீதான வட்டி விகிதம் உயரப்போகிறது வரும் நாட்களில்...

Kodak மற்றும் Indus-Ind bank-களில் வட்டி விகிதம் குறைவு

pradeepkt
08-02-2007, 06:09 AM
ஏற்கனவே உயர்ந்து விட்டது.
கடந்த 6 மாதங்களில் 3-4 முறை இதை உயர்த்தி விட்டனர். ஏதேதோ காரணங்கள்... ஹூம்...

mukilan
08-02-2007, 02:28 PM
18 சத விகிதம் வட்டியா? கிரெடிட் கார்டில் தான் இவ்வளவு அதிகம் வட்டி, தனி நபர் கடனிலுமா! கடனுக்கான வட்டி விகிதம் உங்களின் கடன் வாங்கிச் செலுத்திய, பழைய கணக்குகளின் அடிப்படையில்தானே இல்லை அனைவருக்குமே ஒரே வட்டி விகிதமா?

அறிஞர்
08-02-2007, 02:58 PM
இந்த சதவீதம் கொஞ்சம் அதிகமாக இருக்கே...

லோன் வாங்கலாம் என நினைத்தேன்.. இப்ப யோசிக்க வைக்கிறாங்க.

ஷீ-நிசி
08-02-2007, 03:11 PM
ஆமாம் 18 சதவீதம் என்பது அதிகம்தான்... அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்ப, வட்டிவிகிதம் ஏற்படும். அல்லது அவர் அந்த பேங்கில் ஏற்கெனவே ஒழுங்காக EMI கட்டியிருந்தால் புதியதாய் லோன் எடுக்கும்போது அவருக்கு வட்டிவிகிதம் குறைத்து தருவார்கள். icici-ல் நம்பி எடுக்கலாம். 8 ~ 9% தான்

pradeepkt
09-02-2007, 03:46 AM
நண்பரே ஐசிஐசிஐ-யில் தனிநபர் கடன் இப்போது 12%
8-9% யார் கொடுத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விடவும் :D

ஓவியா
09-02-2007, 11:41 PM
நண்பரே ஐசிஐசிஐ-யில் தனிநபர் கடன் இப்போது 12%
8-9% யார் கொடுத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விடவும் :D

:D

எங்க ஊரில் வட்டி அதிகம் தான்

எல்லமே 10% மேல்தான்.

கல்விக்கு மட்டும் 8-10%

ஆதவா
10-02-2007, 02:55 AM
இங்க 25% ங்க,,,,,,, (பின்ன வட்டிக்கடையில.....)

pradeepkt
12-02-2007, 05:14 AM
இங்க 25% ங்க,,,,,,, (பின்ன வட்டிக்கடையில.....)
உங்க வட்டிக்கடையில் வட்டி குட்டி போட்டு அந்தக் குட்டி வட்டி போட்டால் ஏன் 25% வராதுங்கறேன்???
ஆமா, இந்தக் கந்து வட்டியை ஒழிச்சாச்சுன்னு எங்கயோ கேள்விப் பட்டேனே?