PDA

View Full Version : ஐ.பீ அட்டஸை.



விகடன்
07-02-2007, 03:56 PM
வாழ்க வளமுடன்.

வணக்கம் நண்பர்களே,



ஒருவர் தன்னுடைய யாகூ மெயில் அக்கவுண்டிலிருந்து (yahoo mail account) இன்னொருவருடைய யாகூ அக்கவுண்டிற்கு ஒரு விடயத்தை அனுப்பும் பட்ஷத்தில் அனுப்பியவர் எந்த ஐ.பீ அற்றஸிலிருந்து (IP Address) அனுப்பியிருக்கிறார் என்பதினை "புல் கெடர்" (Full Header) எனப்தனை அழுத்துவதன் மூலம் அறிந்துகொள்ள முடியும். அதேபோல ஜீ மெயிலிலிருந்து (gmail) இன்னொரு ஜீமெயிலிற்கு அனுப்பப்படும் போது அனுப்பப்பட்ட கொம்பியூட்டரின் ஐ.பீ அட்டஸை அறிந்துகொள்ள ஏதாவது வழிமுறைகள் உள்ளனவா?



தெரிந்தவர்கள் தயவு செய்து தகுந்த விளக்கத்தை தரமுடியுமா?





மு.கு:மீண்டும் ஒரு தகவலைத்தெரிந்து கொள்வதற்காக இந்தத் திரியை ஆரம்பித்துவைக்கிறேன். இதற்கு முதலும் ஓரிரு திரிகள் ஆரம்பித்து வைத்தும் அதற்கு தகுந்த பதில் கிடைக்கவில்லை என்பதை விட ஒரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை. ஏமாற்றமடைந்ததாக ஒரு வடு எனது மனதில் ஏற்படுத்திவிட்டது. காரணம் நான் எழுதிய தமிழா? அல்லது வழங்கப்பட்ட கலைச்சொற்களின் புரியாமையா?? .. தெரியவில்லை! அதனால்த்தான் இதில் இயன்றளவில் ஆங்கில சொற்களையும் உட்புகுத்தி எழுதுகிறேன். இந்தத்திரிக்கு வருகை தருவோர் ஏதாவது ஒரு கருத்தையேனும் உதிர்த்துவிடுங்கள். என்னில் இருக்கும் பிழையாக இருப்பின் அது என்னை சீரமைத்துக்கொள்ள உதவும்.

அறிஞர்
07-02-2007, 04:08 PM
என்ன அன்பரே.. யாரும் தொந்தரவு கொடுக்கிறாங்களா..

பாரதி, மோகன், சுபன் போன்றோர் பதிலளிப்பார்கள் என எண்ணுகிறேன்.

ஷீ-நிசி
07-02-2007, 04:09 PM
நண்பரே முயற்சித்து பார்த்து சொல்கிறேன்... பின்னூட்டம் இடாததற்கு காரணம் பலவும் இருக்கலாம்.. எந்தவிதமான வடுக்களையும் உங்கள் மனதிலே சுமக்கவேண்டாம், நாம் அனைவருமே தினமும் இங்கே ஒருவர் மூலம் மற்றவர்கள் எதையாகிலும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். உங்கள் கேள்விக்கும் விரைவில் பதில் கிடைத்திடும்.

கணிப்புலிகளே, உடனடியாக இங்கே உங்கள் விளக்கத்தை பதியுங்கள்...

பாரதி
07-02-2007, 04:48 PM
அன்பு நண்பரே,

முதலில் பின்னூட்டம் இடாததற்கு வருந்துவது சரியல்ல. நமக்கு தேவையான விடயங்களை நாம் வினாவுகிறோம். பதில் தெரிந்தவர்கள் அல்லது உதவ விரும்புபவர்கள் விடயங்களைத் தந்தால் ஆறுதல் கொள்வோம். படிக்கும் அனைவரும் பின்னூட்டம் இடுவார்கள் என்று எண்ணத் தேவையில்லை. நானே பல திரிகளையும் படிக்கிறேன். ஆனால் வெகுசிலவற்றிற்கு மட்டுமே எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன் - காரணங்கள் பல. அவை இங்கே தேவையில்லாதவை.

இப்போது உங்கள் வினாவிற்கு வருகிறேன்.
ஜிமெயிலில் உங்களுக்கு தேவையான மடலைத் திறந்து கொள்ளுங்கள்.
மடலின் வலது மேல்புறத்தில் Reply என்பதற்கு அடுத்து உள்ள சிறிய கீழ் நோக்கும் முக்கோண சின்னத்தை அழுத்தினால், புதிதாக வரும் தகவல் பலகையில் Show original என்ற வரியை தேந்தெடுங்கள். இப்போது உங்களுக்குத் தேவையான விபரங்கள் ஒரு புதிய பக்கத்தில் கிடைக்கும்.

அன்புரசிகன்
07-02-2007, 04:50 PM
:confused:

எனக்கும் சந்தேககம். வின்டோஸ் லைவ்மெயில் பேட்டா வில் எப்படி ஐபி விலாசம் கண்டுபிடிப்பது.

இந்த ஐயத்தையும் கணணி சிறுத்தைகளின் வேட்டைக்கு விட்டுவிடுகிறேன்.

விகடன்
07-02-2007, 04:58 PM
இப்போது உங்கள் வினாவிற்கு வருகிறேன்.
ஜிமெயிலில் உங்களுக்கு தேவையான மடலைத் திறந்து கொள்ளுங்கள்.
மடலின் வலது மேல்புறத்தில் Reply என்பதற்கு அடுத்து உள்ள சிறிய கீழ் நோக்கும் முக்கோண சின்னத்தை அழுத்தினால், புதிதாக வரும் தகவல் பலகையில் Show original என்ற வரியை தேந்தெடுங்கள். இப்போது உங்களுக்குத் தேவையான விபரங்கள் ஒரு புதிய பக்கத்தில் கிடைக்கும்.

உங்களுடைய உடனடிப்பதிலிற்கு மிக்க நன்றி நண்பரே.

ஆனால் அது ஜீமெயிலின் சேவரின் ஐ.பீ நம்பரைத்தான் தரும். அதாவது, யார் என்கிருந்து அனுப்பினாலும் ஒரே நம்பரைத்தான் தரும். ஆனால் ஜாகூவில் அனுப்புபவருடைய தகவலைத் தரும்.

இந்துதான் நான் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினையும்.

பாரதி
07-02-2007, 05:11 PM
உங்களுடைய உடனடிப்பதிலிற்கு மிக்க நன்றி நண்பரே.

ஆனால் அது ஜீமெயிலின் சேவரின் ஐ.பீ நம்பரைத்தான் தரும். அதாவது, யார் என்கிருந்து அனுப்பினாலும் ஒரே நம்பரைத்தான் தரும். ஆனால் ஜாகூவில் அனுப்புபவருடைய தகவலைத் தரும்.

இந்துதான் நான் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினையும்.

அன்பு நண்பரே,

நீங்கள் சரியாக கவனித்தீர்களா என்று தெரியவில்லை. இன்று எனக்கு வந்த ஒரு ஜிமெயிலை சோதித்துப்பார்த்தேன். மிகச்சரியான ஐ.பி முகவரிதான் வந்தது. அதையும் சோதித்துப்பார்த்து விட்டேன்.

வந்த மடலின் ஒரு பகுதி:

Wed, 07 Feb 2007 01:35:02 -0800 (PST)
Return-Path: <>
Received: from ecm.jasubhai.com ([202.46.196.126])
by mx.google.com with ESMTP id f77si1160298pyh.2007.02.07.01.34.59;
Wed, 07 Feb 2007 01:35:02 -0800 (PST)
Received-SPF: neutral (google.com: 202.46.196.126 is neither permitted nor denied by best guess record for domain of ecm.jasubhai.com)
Received: from belapur.jasubhai.com (unknown [128.128.130.2])
by ecm.jasubhai.com (Postfix) with ESMTP id 5EAE82E809E
for <xxxxxxxxxxx@gmail.com (bh@gmail.com)>; Wed, 7 Feb 2007 14:34:56 +0530 (IST)
Received: by belapur.jasubhai.com (Postfix, from userid 76)
id 12435848013; Wed, 7 Feb 2007 15:01:25 +0530 (IST)

சோதித்துப்பார்த்த படமும் இணைத்துள்ளேன்.

அறிஞர்
07-02-2007, 09:32 PM
பாரதி.. என் நண்பர்களிடம் இருந்து வந்த மெயில்களை கண்டேன். சரியான ஐ.பி கிடைக்கவில்லை.

ஒன்று யாகூவிலிருந்து ஜிமெயிலுக்கு வந்தது. அதில் வேறு மாநிலத்திலுள்ள ஐபியை தருகிறது.

ஜிமெயிலிருந்து ஜிமெயிலுக்கு வந்ததில் எந்த ஐபியும் இல்லை.

Delivered-To: ccccccc@gmail.com
Received: by 10.78.176.18 with SMTP id y18cs32852heue;
Wed, 7 Feb 2007 13:10:12 -0800 (PST)
Received: by 10.78.204.20 with SMTP id b20mr603320ghug.11708826111817;
Wed, 07 Feb 2007 13:10:11 -0800 (PST)
Received: by 10.70.105.2 with HTTP; Wed, 7 Feb 2007 13:10:11 -0800 (PST)
Message-ID: <63c642fc0702071310nbe88109sc1ae9476b033ed79b@mail.gmail.com>
Date: Wed, 7 Feb 2007 16:10:11 -0500
From: 99999xxxxxx@gmail.com

Gurudev
07-02-2007, 10:23 PM
பாரதி அவர்களே! நீங்கள் சோதித்து பார்த்த IP Address ஈமெயிலை அனுப்பிய கணனியினது அல்ல, அக்கணனி சார்ந்த ISP முகவரின் Server இனுடையது என நினைக்கின்றேன்.

Yahoo, Gmail, Hotmail எதுவாக இருந்தாலும் ஒன்றுதான். ஒவ்வொரு சர்வராக பின்னோக்கி போய் கடைசி சர்வரையும் அதன் நாட்டையும் கண்டு பிடிக்கலாமே தவிர அனுப்பிய கணனியின் IP Address ஐ நெட்வேர்க்கில் கண்டு பிடிக்கமுடியாது என்றுதான் கற்ற ஞாபகம்.

இந்த விடயத்தை நானும் சில தடவை ஆராய்ந்து பார்ததபோது தலையை சுற்றிற்று அதனால் நிறுத்தியிருந்தேன். Network specialist மார்களுக்கு இது அத்துப்படி. யாரும் இருந்தால் விடை கூறுவார்கள் என நம்புகின்றேன்

மதுரகன்
08-02-2007, 04:41 PM
ஏமாற்றமடைந்ததாக ஒரு வடு எனது மனதில் ஏற்படுத்திவிட்டது. காரணம் நான் எழுதிய தமிழா? அல்லது வழங்கப்பட்ட கலைச்சொற்களின் புரியாமையா?? ..
அன்பரே வருந்த வேண்டாம்...
நீங்கள் கேட்ட வினாக்கள் படிக்கப்பட்டால் டிதரிந்தவர்கள் நிச்சயம் பதில் போடுவார்கள்...
படித்தும் பதில் இடாவிட்டால் புரிந்து கொள்ளவேண்டியது அவருக்கு பதில் தெரியாது என்பதே...
பதில் தெரியாது என்பதையெல்லாம் பின்னூட்டலிட்டு கூறவேண்டுமா..?
ஆகவே எந்த வடுக்களையும் சுமக்கவேண்டாம்...

Gurudev
08-02-2007, 05:48 PM
Java அவர்கட்கு! நீங்கள் ஒரு லிங்கை அனுப்பி அதிலே உள்ள ஓடியோவை பிரித்து தனி கோப்பாக்கி தரமுடியுமா? என்று கேட்டு, உங்கள் இமெயிலை அனுப்ப மறந்து பின் பிறி தனி செய்தியில் இமெயில் விலாசத்தை நீங்கள் அனுப்பி, பின்பு நீங்க கேட்ட பாடலை தனி கோப்பாக்கி எனது யாஹூ மெயிலில் மூன்று நாட்களின் முன் அனுப்பி வைத்தேன். கிடைத்ததா, Play பண்ணி பார்த்தீர்களா?. உங்கள் பதிலை எதிர் பார்த்துள்ளேன்.

அன்புரசிகன்
09-02-2007, 09:57 AM
கீழே உள்ளதைப்படிக்கவும்.:
Google's Gmail service omits the sender IP address information from all headers. Instead, only the IP address of Gmail's mailserver is shown in Received: from. This means it is impossible to find a sender's true IP address in a received Gmail.


Microsoft's Hotmail service provides an extended header line called "X-Originating-IP" that contains the sender's actual IP address.


Emails from Yahoo (if untampered) contain the sender's IP address in the last Received: entry.

(Ref: http://compnetworking.about.com/od/workingwithipaddresses/qt/ipaddressemail.htm)

யாராவது தெரிந்தால் hotmail & live window mail beta - Hotmail beta version இல் எப்படிப்பார்ப்பது என்று சொல்லவும்

பாரதி
10-02-2007, 04:51 PM
அன்பு அறிஞரே,

உங்கள் பதிவைப் பார்த்த பின் வேறு சில மடல்களையும் சோதித்துப்பார்த்தேன். சில மடல்களில் ஐ.பி. முகவரிகளை காண முடிகிறது. சிலவற்றில் காணமுடிவதில்லை. மேலும் தேடிப்பார்த்ததில், குழப்பம்தான் மிஞ்சியது!

அன்புரசிகன்
10-02-2007, 06:33 PM
அன்பு அறிஞரே,

உங்கள் பதிவைப் பார்த்த பின் வேறு சில மடல்களையும் சோதித்துப்பார்த்தேன். சில மடல்களில் ஐ.பி. முகவரிகளை காண முடிகிறது. சிலவற்றில் காணமுடிவதில்லை. மேலும் தேடிப்பார்த்ததில், குழப்பம்தான் மிஞ்சியது!

எனக்கு குழப்பமில்லை காரணம் இவற்றைப்பற்றி பெரிதாக தெரியாது. இணையத்திலிருக்கும் அத்தனையும் உண்மை என்ற முடிவிலிறங்கமுடியாது. நான் இணையத்திலிருந்ததை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான். ஹொட்மெயிலில் எப்படி பார்ப்பதென்று அறிந்தீர்களா? ஹெடர்களை தேடி தேடி பார்க்கிறேன். இது எங்கிருக்கிறது என்று அறியமுடியவில்லை

சுபன்
11-02-2007, 01:17 AM
எனக்கு குழப்பமில்லை காரணம் இவற்றைப்பற்றி பெரிதாக தெரியாது. இணையத்திலிருக்கும் அத்தனையும் உண்மை என்ற முடிவிலிறங்கமுடியாது. நான் இணையத்திலிருந்ததை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான். ஹொட்மெயிலில் எப்படி பார்ப்பதென்று அறிந்தீர்களா? ஹெடர்களை தேடி தேடி பார்க்கிறேன். இது எங்கிருக்கிறது என்று அறியமுடியவில்லை

விண்டோஸ் லைவில் நானறிந்தவரை காணவில்லை நண்பரே!! பழைய எம்.எஸ்.என் இல் இருக்கிறது!!!

விகடன்
11-02-2007, 02:32 AM
இதுவரை எனது ஐயத்திற்கு தகுந்த பதிலை பெற்றதாக எனக்கு திருப்த்தி இல்லையே நண்பர்களே.

இந்த திரியின் உதவியாலும், நான் இதுவரை அறிந்தவரையில் யாகூ மெயிலிற்கு மட்டும் தெளிவாக அனுப்பியவரின் தகவலை அறியமுடியும். மற்றவைகளில்த்தான் குழப்பமே..

இவற்றில் கரை கண்டோர் கட்டாயம் உங்களில் இருப்பீர்கள். ஏனோ தெரியவில்லை அவர்களில் பலர் அமைதியாகவே இருக்கிறீர்கள்!

சுபன்
18-08-2007, 04:26 AM
Windows Live Mail (New Hotmail) -இல் Full Version இலே வைத்து கொண்டு தேவையான மடலின் மேலே Right Click பண்ணி Source ஐ தெரிவு செய்யுங்கள் பார்க்கலாம் Headers-ஐ

விகடன்
18-08-2007, 06:18 PM
Java அவர்கட்கு! நீங்கள் ஒரு லிங்கை அனுப்பி அதிலே உள்ள ஓடியோவை பிரித்து தனி கோப்பாக்கி தரமுடியுமா? என்று கேட்டு, உங்கள் இமெயிலை அனுப்ப மறந்து பின் பிறி தனி செய்தியில் இமெயில் விலாசத்தை நீங்கள் அனுப்பி, பின்பு நீங்க கேட்ட பாடலை தனி கோப்பாக்கி எனது யாஹூ மெயிலில் மூன்று நாட்களின் முன் அனுப்பி வைத்தேன். கிடைத்ததா, Play பண்ணி பார்த்தீர்களா?. உங்கள் பதிலை எதிர் பார்த்துள்ளேன்.

இரண்டு தினங்களிற்கு பின்னரே நான் பதிவிறக்கினேன். அது நன்றாகவே இருந்தது. அதற்கு பதில் மடலும் இட்டேனே உங்கள் மெயிலிற்கு...

namsec
19-08-2007, 12:40 PM
இந்த தளத்திற்க்கு சென்று பாருங்கள் உங்களுடைய கேள்விகளுக்கு விடைகிடைக்கலாம் http://whatismyipaddress.com

leomohan
19-08-2007, 03:14 PM
விராடன் அவர்களே ஒரு மின்னஞ்சலின் மூலத்தை திரிபிடித்து தொடர்ந்து சென்று இவ்வாறு கண்டுபிடிக்க சில தளங்கள் உள்ளன, சில மென்பொருட்களும் உள்ளன.

இதோ இந்த தளங்களை சென்று பாருங்கள்

http://ask-leo.com/how_can_i_trace_where_email_came_from.html
http://www.abika.com/Reports/traceemails.htm
http://www.visualware.com/resources/tutorials/email.html
http://www.johnru.com/active-whois/trace-email.html

அறிஞர்
23-08-2007, 07:20 PM
மோகனின் தகவலுக்கு நன்றி.... பயனுள்ளது.