PDA

View Full Version : அப்பா-மகன் நகைச்சுவை



maganesh
07-02-2007, 03:25 PM
அப்பா பத்திரிக்கை படித்துக்கொண்டிருந்தார். அவரது பதினெட்டு வயது மகன் சவரம் செய்து கொண்டிருந்தான். அவன் முகம் பார்த்துக் கொண்டிருந்த கண்ணாடி விழுந்துவிடும் போல இருந்தது. அதைக் கவனித்த தந்தை கண்ணாடி விழப்பொகுது என்றார். அவரை ஒருமாதிரியாகப் பார்த்த மகன் மீண்டும் தன் வேலையில் மூழ்கினான்.
கண்ணாடி விழுந்தால் உடையும் தெரியுமில்ல--இது அப்பா
அதுதெரியாமலா காலேஜில சீட் குடுத்தாங்க--மகன்
உடைஞ்சுதுன்னா வெட்டும் தெரியுமில்ல----அப்பா
உனக்கே இவ்வளவு இருக்கும்போது எனக்கு இருக்காதா----மகன்
அப்பா ஒன்றுமே பேசாது இருந்தார். சில வினாடிகளில் கண்ணாடி விழுந்து உடைந்து விட்டது.
அப்பா மகனைப் பார்த்தார்.
என்ன பாக்குறே. விழுந்திருச்சு. உடைஞ்சிருச்சு----மகன் சொல்லி விட்டு திரும்பும்போது கண்ணாடி அவன் காலில் வெட்டிருச்சு. அப்பா சொன்னார் "இப்படியே போனின்னா இப்போ ஆஸ்பிட்டலிலே சீட் குடுப்பாங்க"

அறிஞர்
07-02-2007, 04:14 PM
பட்டால் தான் புத்திவரும் என்ற ரகம் போல்....

மருத்துவமனையில் சீட் கிடைத்தது... (படிக்க அல்ல)...

maganesh
07-02-2007, 05:14 PM
மருத்துவமனையில் சீட் கிடைத்தது... (படிக்க அல்ல)...
புரிஞ்சு கொண்டீங்க.

aren
08-02-2007, 02:04 PM
காலேஜ் படிக்கும் மாணவருக்கு அப்பா எப்பொழுதுமே எதிரிதான். அது சொந்த அப்பாவாக இருந்தாலும், எதிர்வீட்டு பெண்ணின் அப்பாவாக இருந்தாலும்.

maganesh
08-02-2007, 03:06 PM
காலேஜ் படிக்கும் மாணவருக்கு அப்பா எப்பொழுதுமே எதிரிதான். அது சொந்த அப்பாவாக இருந்தாலும், எதிர்வீட்டு பெண்ணின் அப்பாவாக இருந்தாலும்.
தந்தையே நண்பனாக உள்ளோரும் உள்ளனர் அல்லவா?

மன்மதன்
08-02-2007, 06:47 PM
சீரியஸான காமெடி.. நன்றாக இருந்தது.

மனோஜ்
08-02-2007, 06:54 PM
காமெடியில் உன்மைசம்பவம் பாராட்டுக்கள் மயூரன்

maganesh
09-02-2007, 07:53 AM
காமெடியில் உன்மைசம்பவம் பாராட்டுக்கள் மயூரன்

சீரியஸான காமெடி.. நன்றாக இருந்தது.

நன்றி நண்பர்களே. உங்களது ஊக்கங்கள் என் ஆக்கங்களை அதிகப்படுத்தும் என நம்புகின்றேன். உண்மைச் சம்பவங்களை வைத்து பண்ணும் நகைச்சுவை ரொம்பச் சுவைக்கும் என்பது என் நம்பிக்கை.

மயூ
09-02-2007, 08:08 AM
5 வயதில் அப்பா ஹீரோ
10 வயதில் அப்பா அவ்வளவு பெரிய ஆள் இல்லை
15 வயதில் அப்பா கொஞ்சம் முட்டாள்தான்
20 வயதில் அப்பா அடிமட்ட முட்டாள்

maganesh
09-02-2007, 08:12 AM
5 வயதில் அப்பா ஹீரோ
10 வயதில் அப்பா அவ்வளவு பெரிய ஆள் இல்லை
15 வயதில் அப்பா கொஞ்சம் முட்டாள்தான்
20 வயதில் அப்பா அடிமட்ட முட்டாள்

அதற்குப் பின் வேலைகிடைக்கும் வரை அப்பா தெய்வம்.
வேலை கிடைத்தபின் அப்பா போப்பா

சே-தாசன்
09-02-2007, 08:13 AM
5 வயதில் அப்பா ஹீரோ
10 வயதில் அப்பா அவ்வளவு பெரிய ஆள் இல்லை
15 வயதில் அப்பா கொஞ்சம் முட்டாள்தான்
20 வயதில் அப்பா அடிமட்ட முட்டாள்

ரொம்ப அனுபவம் போலிருக்கு:D :D :D

விகடன்
16-08-2007, 04:06 AM
குறிப்பிட்ட வயதெல்லைக்குள் அப்பா ஏது சொன்னாலும் உடனே செய்தால் அது கௌரவக் குறைவாக எண்ணியா காலமுண்டு.

நிஜத்தில் நடக்கும்னிகழ்ச்சி . நிறைய நபர்களின் அனுபவக் கதை சிரிப்பாக.
பாராட்டுகள்