PDA

View Full Version : முதல் மரியாதைmaganesh
07-02-2007, 02:58 PM
அழைப்பிதழைத் திறந்து பார்த்தான் ரவி. 19.02.2007 அன்று புதிதாக ஆரம்பிக்க இருக்கும் பரதனின் ஓட்டல் திறப்பு விழாவுக்கான அழைப்பித்ழ் அது. அந்த அழைப்பிதழில் ஓட்டலை நாடா வெட்டித் திறந்து வைப்பவரின் பெயர் அச்சிடப்பட்டிருக்க இல்லை.பரதன் ரவியின் நீண்ட நளைய நண்பன். அத்துடன் இவன் பரதனுக்கு பல சந்தர்ப்பங்களில் நிதி உதவி செய்திருக்கின்றான். இவனது நிதி உதவியால் தொழில் ஆரம்பித்த பரதன் இன்று சிட்டியின் லீடிங் பிசினஸ் புள்ளி. நீ உதவி செய்ததால்தான் நான் இந்த நிலைமைக்கு வர முடிந்தது என்று பரதன் அடிக்கடி சொல்லுவான். கண்டிப்பாகப் போக வேண்டும் என நினைத்துக் கொண்டான். அந்த நாளும் வந்தது. ரவி சரியாக காலை 10.00 மணிக்கு பரதனின் ஓட்டலை அடைந்தான். அவன் போன போது வி ஐ பி யாருமே இருக்கவில்லை. சின நேரங்களில் நான் தான் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க வேண்டுமோ என்று எண்ணியவாறு பரதனை அணைத்து வாழ்த்துக் கூறினான். அடுத்த சில நிமிடங்களில் கமிஷ்னர், கலக்டர் என ஒரு விஐபிக்கள் குழு வந்தது. அவர்களில் யாராவது ஒருவர் ரிப்பன் வெட்டித் திறந்து வைப்பார்களோ? இல்லை இல்லை பரதன் நன்றி மறக்காதவன் என்னயே அழைத்து ரிப்பனை வெட்டச் சொல்லுவான் என பலவாறு எண்ணியவாறு இருந்தபோது லேடீஸ் அன்ட் ஜென்டில்மன் என்ற பரதனின் குரல் அவனை நிஜத்துக்கு கொண்டுவந்தது. எல்லோரையும் வரவேற்று வரவுக்கு நன்றியும் சொல்லிக்கொண்ட பரதன் இப்போது ரிப்பன் வெட்டி ஓட்டலைத் திறந்து வைக்க எனது இந்த உயர்வுக்கு காரணமான ஒருவரை அழைக்கப் போவதாக அறிவித்தான். ரவி தன்னை அழைக்கப் போகின்றான் என்று எதிர்பார்த்திருக்க ஓரமாக ஒதுங்கி நின்ற ஒரு பெரியவரை அழைத்து ரிப்பனை வெட்டுமாறு கேட்டுக்கொண்டான். ரவி அதிர்ச்சியடைந்தாலும் அதனைக்காட்டிக் கொள்ளாது பங்சனை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அப்பெரியவரை ரிப்பன் வெட்ட அழைத்ததன் காரணத்தைக் கேட்க நினைத்தாலும் மரியாதை நிமித்தம் கேட்காது இருந்து விட்டான்.ஒரு சில நாட்கள் கடந்த பின்னர் தன் வீட்டுக்கு வந்த பரதனைக் கேட்டான். அவர் எனது கிராமத்தில் எனக்கு ஆரம்பக் கல்வியை கற்பித்த ஆசிரியர். எனக்கு பலர் மேற்கல்வியை கற்பித்தாலும் எனக்கு அடிப்படை அறிவைத் தந்தவர் அவர்தான். அடிப்படை நல்லா இருந்தால்தான் எதுவுமே சிறப்பாக இருக்கும் அதனால்தான் அவரை அழைத்தேன் என்று சொல்லி ரவியின் முகத்தைப் பார்த்தான் பரதன். தன் நண்பனின் நல்ல குணத்தை அறிந்து கொன்ட ரவி பெருமையுடன் அவனைப் பாராட்டினான்.

ஷீ-நிசி
07-02-2007, 05:10 PM
இப்படி பழைய நினைவுகளை நினைத்துபார்த்து தக்க சமயத்தில் அவர்களுக்கு கெளரவம் அளித்திட விரும்புகிறவர்கள் மிகச்சிலரே!

maganesh
08-02-2007, 03:52 PM
பழைய கால நினைவுகள்தான் ஒரு காலத்தில் நமக்குத் துணையாக இருக்கும்

மனோஜ்
08-02-2007, 06:50 PM
old is gold என்பார்களெ அது உன்மையில் இதுதான்
நன்றி மயூரன் தொடருங்கள்...

அறிஞர்
08-02-2007, 06:55 PM
அரிச்சுவடி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் சிறந்தவர்கள்...... அவர்கள் மரியாதைக்கு உரியவர்கள்....

நன்றி மறவா நல்ல பழக்கம்... ஒவ்வொருவரையும் உயர்த்தும்.

maganesh
09-02-2007, 08:27 AM
old is gold என்பார்களெ அது உன்மையில் இதுதான்
நன்றி மயூரன் தொடருங்கள்
பழையது தங்கம் போன்றது மட்டுமல்ல. தித்திக்கும் தீஞ்சுவையும் மிக்கது. நன்றிகள் பல உங்கள் கருத்துக்கு.


அரிச்சுவடி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் சிறந்தவர்கள்
கட்டடத்துக்கு முக்கியம் அத்திவாரம்
கல்விக்கு முக்கியம் அரிச்சுவடி
வாழ்க்கைக்கு முக்கியம் நன்றி
சரிதானுங்களே.

மயூ
09-02-2007, 09:10 AM
ம்... அருமையான சிந்தனை!!!
இங்கே தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் போடுவார்கள். அதில் ஒரு வயதானவர் தன் இள வயது மகளுடன் வீதி ஓரத்தால் நடந்து போகின்றார். அப்போது ஒரு இளைஞன் காரில் வந்து அந்தப் பெண்ணையே பார்ப்பது போல் அவர்களுக்குப் பக்கத்தால் போகின்றான். இவ்வாறு நடக்கையில் மகளை மறுபக்கம் அனுப்பிவிட்டு காரில் இருப்பவனைப் பார்கின்றார்.
அதற்குள் கீழே இறங்கும் இளைஞன் அந்த வயோதிபரின் காலில் விழுந்து வணங்கி
"சேர் நான் உங்கட மாணவன்" என்று வழங்குகின்றான்... பார்க்க அருமையாக இருக்கும்.....

maganesh
09-02-2007, 03:14 PM
நல்ல கருத்துள்ள விளம்பரம். அந்த விளம்பரத்தின் நோக்கம் என்ன நண்பரே. தமிழில் உள்ளதா இல்லை சகோதர மொழியா

மயூ
09-02-2007, 03:21 PM
நல்ல கருத்துள்ள விளம்பரம். அந்த விளம்பரத்தின் நோக்கம் என்ன நண்பரே. தமிழில் உள்ளதா இல்லை சகோதர மொழியா
அது சிங்கள மொழி, தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டது!!!

இதே போல இன்னுமொன்று...!!!
ஒரு இளைஞர் பஸ் வண்ணியில் பயனித்துக்கொண்டு இருக்கின்றார். அதே வேளை அவருக்குப் பக்கத்தில் ஒரு பெண் நின்றவாறே பயனித்துக்கொண்டு இருக்கின்றார்.
இந்த இளைஞன் அந்ததப் பெண்ணையே பார்த்தவாறு வருகின்றான்.. ஒரு கட்டத்தில் எல்லை கடந்து அவளின் கையைத் தட்டுகின்றான்.
அந்தப் பெண் திரும்பிப்பார்த்ததும் "இந்த சீட்டில இருங்கள்" என்று இடம் வழங்குகின்றான். அடுத்த காட்சியில் தான் தெரிகின்றது அவர் ஒரு கர்பிணிப்பெண் என்று!!

maganesh
09-02-2007, 03:25 PM
நாம் னாட்டில் இருந்த போது யானை ஒன்று காரையின் மேல் நடனமாடுவதும் அனைத்து விளம்பரங்களும் பாட்டுடன் இணைந்த நாட்டியமாக இருக்கும். இப்போது சற்று முன்னேறியது போல் தெரிகின்றது.

மயூ
09-02-2007, 03:38 PM
நாம் னாட்டில் இருந்த போது யானை ஒன்று காரையின் மேல் நடனமாடுவதும் அனைத்து விளம்பரங்களும் பாட்டுடன் இணைந்த நாட்டியமாக இருக்கும். இப்போது சற்று முன்னேறியது போல் தெரிகின்றது.
ஆமாம் முன்னெறி உள்ளது... சிறிய அளவில்!!!