PDA

View Full Version : ஒரு வரிக் கவிதை



சே-தாசன்
07-02-2007, 01:46 AM
நீ நான் மறக்க வேண்டிய ஞாபகம்........

sham
07-02-2007, 02:10 AM
ஏன் கிருஷாந் எப்ப பார்த்தாலும் ஒரு மாதிரியாகவே இருக்கிறீங்க?

ஆதவா
07-02-2007, 02:17 AM
நீ நான் மறக்க வேண்டிய ஞாபகம்........

இதே வரியை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே:confused: :confused:

சே-தாசன்
07-02-2007, 03:55 AM
இதே வரியை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே:confused: :confused:

படித்ததில் பிடித்ததுதான் அன்பரே

pradeepkt
07-02-2007, 05:18 AM
படித்ததில் பிடித்ததுதான் அன்பரே
படித்ததில் பிடித்ததை நாம் இட வேண்டிய தளம் "இலக்கியம்"
கவிதைகள்/பாடல்கள் தளத்தில் நாம் எழுதிய கவிதைகளைத்தான் பதிவோம்.

எனவே மாற்றி விடலாமா?

அத்தோடு, இதை எழுதியது யார் என்றும் சொல்லுங்களேன்.

சே-தாசன்
07-02-2007, 05:29 AM
படித்ததில் பிடித்ததை நாம் இட வேண்டிய தளம் "இலக்கியம்"
கவிதைகள்/பாடல்கள் தளத்தில் நாம் எழுதிய கவிதைகளைத்தான் பதிவோம்.

எனவே மாற்றி விடலாமா?

அத்தோடு, இதை எழுதியது யார் என்றும் சொல்லுங்களேன்.

மாற்றலாமே. பெயர் ஞாபகம் இல்லையே அண்ணா

pradeepkt
07-02-2007, 06:10 AM
மாற்றி விட்டேன் கிருஷாந்த்.
எழுத்தாளர் பெயர் உனக்கு நினைவு வரும்போது சொல்லலாம்...

மனோஜ்
07-02-2007, 06:42 AM
மனதில் குழப்பம் வாழ்வில் தடுமாற்றம் ....

இப்படியாக தொடறலாமா...

சே-தாசன்
07-02-2007, 08:17 AM
மனதில் குழப்பம் வாழ்வில் தடுமாற்றம் ....

இப்படியாக தொடறலாமா...

இது நல்லாயிருக்கே. இப்படியே கவிதையை தொடர்ந்து கொண்டு செல்வோம்.:) :)

அறிஞர்
07-02-2007, 01:22 PM
இது போல் இன்னும் தொடருங்கள்...

சுஜாதா இது போல் எழுதுவார்.

எழுதியவர் பெயர் தெரிந்தால் கொடுங்கள்.. இல்லாவிட்டால்.. யாரோ என விட்டுவிடுங்கள்...

அறிஞர்
07-02-2007, 01:33 PM
நீ நான் மறக்க வேண்டிய ஞாபகம்........ - முன்னாள் காதலி
அம்மா.. என்றென்றும் நினைவில் வைக்கவேண்டிய ஞாபகம்.......

மனோஜ்
07-02-2007, 06:19 PM
மறப்பதை மறந்திடு நினைப்பதை மறக்காதே

thoorigai
08-02-2007, 10:33 AM
ஐயோ கவியார்வம் என்னுள்ளும் ஊறுதே!

தமிழ்மன்றம் - இது விந்தைகளின் சந்தை

பென்ஸ்
08-02-2007, 11:52 AM
மீரா..
இது உன் இடம் மக்கா...
நீ இங்க இருக்கும் ஒரு வரி கவிதைகளுக்கு விமர்சனம் கொடு...
மக்கள் கவிதை என்று நினைத்து கொள்வார்கள்...

அட என்ன இது.. பிச்சி, ஆதவன்.. இவங்களை எல்லாம் கானோம்???

பென்ஸ்
08-02-2007, 11:54 AM
ஐயோ கவியார்வம் என்னுள்ளும் ஊறுதே!

தமிழ்மன்றம் - இது விந்தைகளின் சந்தை
ஊறவில்லை தூரிகை...பொங்கிவழியுது...

உங்க எழுத்துகளை கவணித்து வருகிறேன்....
அதில் கவியார்வம் பொங்கிவழியுது...

thoorigai
08-02-2007, 12:06 PM
ஊறவில்லை தூரிகை...பொங்கிவழியுது...

உங்க எழுத்துகளை கவணித்து வருகிறேன்....
அதில் கவியார்வம் பொங்கிவழியுது...

விட்டில் பூச்சி வினாவிற்கு
விடிவெள்ளி விடையா!!!

வழிசலுடன் ஹி ஹி

நன்றி பென்ஸூ

maganesh
08-02-2007, 04:15 PM
விட்டில் பூச்சி வினாவிற்கு
விடிவெள்ளி விடையா!!!

யாரு விட்டில் பூச்சி? யார் விடிவெள்ளி?

ஆதவா
09-02-2007, 07:09 PM
நண்பரே! ஒருவரிக் கவிதை என்பது மிகவும் எளிது...........

உதாரணமாக;

கற்போம் கற்பிப்போம்
வாழ்க வளமுடன்
புரட்சி ஓங்குக.
அமைதி பெருகட்டும்..
பக்தி பரவசம்......

இவையெல்லாம் மற்றவர்கள் உதாரணம்........ எளிமையான கவிதை பக்கம் ஆதவன் வரமாட்டான்... (எழுதத் தெரியாது என்பதை சிம்பாலிக்காக காட்டுகிறேனப்பா!)

thoorigai
10-02-2007, 04:59 AM
நண்பரே! ஒருவரிக் கவிதை என்பது மிகவும் எளிது...........

உதாரணமாக;

கற்போம் கற்பிப்போம்
வாழ்க வளமுடன்
புரட்சி ஓங்குக.
அமைதி பெருகட்டும்..
பக்தி பரவசம்......

இவையெல்லாம் மற்றவர்கள் உதாரணம்........ எளிமையான கவிதை பக்கம் ஆதவன் வரமாட்டான்... (எழுதத் தெரியாது என்பதை சிம்பாலிக்காக காட்டுகிறேனப்பா!)

ஆதவா!

மீன்குட்டிக்கு நீந்தத் தெரியாதா :D

thoorigai
10-02-2007, 05:05 AM
யாரு விட்டில் பூச்சி? யார் விடிவெள்ளி?

மயூரன் ஐயா!

விட்டில் பூச்சி அடியேன் தான்.

விடை பெற்ற வினாக்களையும் விளங்காது வினவினால்
விட்டில் பூச்சியன்றி விற்பன்னன் ஆவேனா :p

மனோஜ்
10-02-2007, 07:37 AM
மகிழ்ச்சியின் உச்சத்தி்ல் துன்பகடல்

thoorigai
10-02-2007, 07:45 AM
இடைத் தழுவும் இன்ப நேரத்தில் இடைவேளையா?

விகடன்
10-02-2007, 07:47 AM
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

அநுபவத்தின் சீற்றமோ - அல்லது
அறிந்ததின் நாற்றமோ!

thoorigai
10-02-2007, 08:00 AM
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

அநுபவத்தின் சீற்றமோ - அல்லது
அறிந்ததின் நாற்றமோ!

இல்லை ஜாவா...
அனுபவத்தின் ஏற்றம் - இது
அறிவு தரும் மாற்றம்

ஆதவா
10-02-2007, 12:33 PM
ஆதவா!

மீன்குட்டிக்கு நீந்தத் தெரியாதா :D

ஆமா இது கத்துக்குட்டி மீன் :D

ஆதவா
10-02-2007, 12:35 PM
தூரத்து நிலவாய் நீ!

விடியலுக்கு முன் மடியில்...

ஆகாயத் தாமரையோ?

சகட்டுக்கும் தின்னும் தேர்தல் வியாபாரிகள்........

ஏம்பா இதெல்லாம் ஒரு வரிக்கவிதையா? சொல்லுங்க.........

ஓவியா
10-02-2007, 12:43 PM
தூரதில் நீ,
உரசிக்கொண்டே மனதில் நான்

மனோஜ்
10-02-2007, 12:49 PM
மனதில் துக்கம் முகத்தில் மாறா மாற்றம்

thoorigai
11-02-2007, 12:02 AM
ஓராயிரம் எண்ணங்கள் கொட்டி
ஒரு வரிக்கவிதை புனைந்தேன் நான்
ஓடோடி வந்த என்னிடம்
ஒரு தலைக்காதல் என்றாய் நீ

ஓவியன்
15-02-2007, 09:51 AM
யார் எழுதினாலும் ஒரு வரிகளில் அவர் சொல்லவிழைந்தது ஒரு காவியம்.

ஓவியன்
15-02-2007, 09:52 AM
இடைத் தழுவும் இன்ப நேரத்தில் இடைவேளையா?

நீங்க எந்த இடை வேளையைச் சொல்லுறீங்க தலைவா?

மயூ
15-02-2007, 02:59 PM
நீங்க எந்த இடை வேளையைச் சொல்லுறீங்க தலைவா?
பொது அறிவு பொது அறிவு.... :rolleyes: :rolleyes: :rolleyes:

mgandhi
15-02-2007, 05:50 PM
வாணத்தை பார்த்தேன் வற்றிய வயிற்றுடன்

ஆதவா
15-02-2007, 05:56 PM
வாணத்தை பார்த்தேன் வற்றிய வயிற்றுடன்

வாணமா?
வாணலியா?

அறிஞர்
15-02-2007, 06:24 PM
வாணத்தை பார்த்தேன் வற்றிய வயிற்றுடன்
நீங்கள் சொல்வது... வானமா இல்லை.. வாணமா.....

ஓவியா
17-02-2007, 07:01 PM
என் காதலர் தின ஒற்றை வரி கவிதை :D :D

சலசலக்கும் அருவியாய் நான், சலனமில்லாமல் நீந்தும் இலையாய் நீ

மனோஜ்
17-02-2007, 07:16 PM
ஏன் தாமதம் ஓவியா மறந்துட்டிங்களா பதிய
என்ன பெறுமை உங்கள் கவிதை காதலருக்கு:rolleyes:

ஆதவா
17-02-2007, 07:26 PM
என் காதலர் தின ஒற்றை வரி கவிதை :D :D

சலசலக்கும் அருவியாய் நான், சலனமில்லாமல் நீந்தும் இலையாய் நீ

மன்றத்து ஒற்றைவரிக் காதல் கவிதாயினி ஓவி... வாழ்க வாழ்க...:)


ஏன் தாமதம் ஓவியா மறந்துட்டிங்களா பதிய
என்ன பெறுமை உங்கள் கவிதை காதலருக்கு:rolleyes:

அய்யா! நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல....:confused:

ஓவியா
17-02-2007, 07:29 PM
ஏன் தாமதம் ஓவியா மறந்துட்டிங்களா பதிய
என்ன பெறுமை உங்கள் கவிதை காதலருக்கு:rolleyes:

ஆமா ரொம்ப பொறுமைதான். :) ஒருவேலை அது வேண்டாமையாக கூட இருக்கலாம் :)

அதான் சூசகமா சொன்னெனே!!

சலசலக்கும் அருவியாய் நான் சலனமில்லாமல் நீந்தும் இலையாய் நீ

ஓவியா
17-02-2007, 07:32 PM
:) :)

ஆதவா என் விளக்கங்களை படிக்கவும்

ஓவியா
17-02-2007, 07:34 PM
என் காதலர் தின ஒற்றை வரி கவிதை :D :D

சலசலக்கும் அருவியாய் நான், சலனமில்லாமல் நீந்தும் இலையாய் நீ


மன்றத்து ஒற்றைவரிக் காதல் கவிதாயினி ஓவி... வாழ்க வாழ்க...:)


ஆதவா உண்மையாய் சொல்லுங்க இந்த ஒற்றைவரிக் கவிதை நல்லா இருக்கா?????//

ஆதவா
18-02-2007, 01:37 AM
ஆதவா உண்மையாய் சொல்லுங்க இந்த ஒற்றைவரிக் கவிதை நல்லா இருக்கா?????//

உண்மையில் அழகாக உள்ளது. அர்த்தங்கள் பல பொதிந்து உள்ளது.

தண்ணீரில் மிதந்து செல்லும் ஒரு இலையாக ஆணையோ அல்லது பெண்ணையோ பாவித்திருத்தல் நல்ல உவமை. இரு வேறு அர்த்தங்கள் வரலாம் இக்கவிதையில்..

மெல்ல வருடித் தங்கும் துணை..
மெல்ல தீண்டிச் செல்லும் தோழன்.

இப்படி பலவாறு..

மனோஜ்
18-02-2007, 06:33 AM
உண்மையில் அழகாக உள்ளது. அர்த்தங்கள் பல பொதிந்து உள்ளது.

தண்ணீரில் மிதந்து செல்லும் ஒரு இலையாக ஆணையோ அல்லது பெண்ணையோ பாவித்திருத்தல் நல்ல உவமை. இரு வேறு அர்த்தங்கள் வரலாம் இக்கவிதையில்..

மெல்ல வருடித் தங்கும் துணை..
மெல்ல தீண்டிச் செல்லும் தோழன்.

இப்படி பலவாறு..

இத இத தான் நானும் சென்னேன் ஆதவா :)

மனோஜ்
24-02-2007, 01:24 PM
பூ பூத்திடும் மனதில் வாட்டிடும் வருத்தம் என்னவல் அருகில் இல்லையேல்

மனோஜ்
10-03-2007, 06:50 PM
காசு பணம் எதற்கு உறவுகள் இல்லையேல்

pradeepkt
12-03-2007, 12:28 PM
குழந்தை!

வெற்றி
12-03-2007, 12:45 PM
தவறில்லாமல் தவறு செய்தேன் காதல்!

பென்ஸ்
12-03-2007, 01:15 PM
குழந்தை!
அவங்ககிட்ட இருந்து

பாராட்டு வாங்கியதா...
இல்ல
இப்படி பாராட்டியதா...

pradeepkt
13-03-2007, 04:40 AM
அவங்ககிட்ட இருந்து

பாராட்டு வாங்கியதா...
இல்ல
இப்படி பாராட்டியதா...
ஏய்யா ஒரு "ஒரு வரிக் கவிதை" எழுத விட மாட்டீங்களா??? :rolleyes:

சே-தாசன்
17-09-2007, 07:18 AM
என்றும் எங்களுக்கான மாறா குரலாய் நெடுமாறா, நீ வாழ வேண்டும் நெடு நாளா.......

அமரன்
17-09-2007, 07:23 AM
தொட்டறியும் குழந்தை பட்டுமேனி...
------------------------------------
கவிதை சொல்லும் ஒவ்வொரு வரியும் சரமாகட்டுமே கிருஷாந்.
புதிய கவிதை பகுதியில் இருந்து தொடர்கவிதைகள் பகுதிக்கு மாற்றுகின்றேன்.

சே-தாசன்
17-09-2007, 07:29 AM
தங்கள் சித்தம்......

சிவா.ஜி
17-09-2007, 07:29 AM
அடிமேல் அடி வாங்கியும் நகராத அம்மி...சோம்பேறி!

விகடன்
17-09-2007, 07:50 AM
எளிமையான கவிதை பக்கம் ஆதவன் வரமாட்டான்...
தெரியுமே...
எளிமையான கவிதையெல்லாம் எழுதித்தள்ளியது அந்தக்காலம். இப்போதெல்லாம் இலக்கிய நயத்துடன் தரத்துடன் எழுதுவதும் அவற்றை படிப்பதுந்தான் உங்கள் விருப்பம்....

ஓவியன்
17-09-2007, 07:33 PM
என்றும் எங்களுக்கான மாறா குரலாய் நெடுமாறா, நீ வாழ வேண்டும் நெடு நாளா.......

வாங்க, வாங்க கிருஷாந்!
கொஞ்ச நாளாக இந்தப் பக்கமே உங்களைக் காணவேயில்லையே...?
தொடர்ந்து கலக்குங்க நண்பரே!

யாழ்_அகத்தியன்
04-10-2007, 02:09 PM
என் கனவுகள் நிறைவேறியது
உன் மடியில் இமைமூடிய போது

ஓவியன்
04-10-2007, 02:16 PM
என் கனவுகள் நிறைவேறியது
உன் மடியில் இமைமூடிய போது

அன்பரே வரிகள் அழகு, ஆனால் இரு வரிகளாக இருக்கின்றதே....
இங்கே இந்த திரியிலே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9219) இரு வரிக் கவிதைகளைப் பதிக்கலாமே....! :)

கஜினி
12-10-2007, 12:03 PM
வான அழுகையால் பூமியை நனைக்கிறது மழை.

ஓவியன்
12-10-2007, 12:30 PM
வானம் அழுதது பூமி சிரிக்க....

ஆர்.ஈஸ்வரன்
20-12-2007, 09:24 AM
பூவே பறிக்கலாமா பூ

சுகந்தப்ரீதன்
19-02-2008, 09:39 AM
சத்தமில்லா சங்கீதம்-மௌனம்..!!

பூமகள்
19-02-2008, 10:07 AM
இடி மறுக்க பஞ்சுமுகிலுடன் - வானம்

aren
19-02-2008, 10:17 AM
மான் குட்டி போட்டது - சிங்கத்திற்கு கொண்டாட்டம்

aren
19-02-2008, 10:19 AM
ரேஷன் கடையில் சர்க்கரை இன்று - மளிகைகடையார்க்கு சந்தோஷம்

ஆதி
19-02-2008, 10:20 AM
நீர்ம இரவு *_ சாக்கடை

aren
19-02-2008, 10:25 AM
தொங்கும் அசெம்பளி - இடைத்தரகர்கள் சந்தோஷம்

சுடரவன்
02-05-2008, 08:46 AM
நேத்திக்கடன்

கண்ணீர் விடுகிறது மெழுகுதிரி - கவனிக்காது செல்கிறாள் ஏற்றி வைத்தவள்....

நன்றி

அன்புடன்
சுடரவன்

அனுராகவன்
02-05-2008, 08:49 AM
கொட்டும் மேளம்-இடி

ஆர்.ஈஸ்வரன்
06-08-2009, 11:45 AM
நீ மறைந்தது நான்

கலைவேந்தன்
06-08-2009, 12:42 PM
தூக்கத்தில் நீ துக்கத்தில் நான்...!

( தூங்குமூஞ்சி மனைவிக்காக...ஹிஹி!)

கலைவேந்தன்
06-08-2009, 12:44 PM
ஒற்றையில் நீ அங்கே... ஒடிந்துபோய் நானிங்கே...!

( வெளியூரில் இருக்கும் கணவன் )

கலைவேந்தன்
06-08-2009, 12:46 PM
தலையினில் பூச் சூடினாய் நீ தரையினில் விழுந்தது நான்...!

மஞ்சுபாஷிணி
06-08-2009, 07:16 PM
ரத்தம் விற்றேன்... உலை கொதித்தது...

மஞ்சுபாஷிணி
06-08-2009, 07:23 PM
ஜன்னலை சாத்தினாய் மனம் புழுங்கியது...

அமரன்
07-08-2009, 07:40 PM
புத்துயிர் புகுந்தது கொடிக்கு(ள்).

கலைவேந்தன்
07-08-2009, 07:43 PM
உன்னிடம் மட்டும் தான் மறுகன்னத்தையும் காட்டுவேன் - முத்தமிட்டுவிடு...

மஞ்சுபாஷிணி
07-08-2009, 07:46 PM
சாலையில் ஓவியம்... ஒட்டிய வயிற்றுடன் ஓவியன்

கலைவேந்தன்
07-08-2009, 07:48 PM
மலைமுகட்டில் காதலர்கள் - துரத்தும் தோல்விகள்....

மஞ்சுபாஷிணி
07-08-2009, 07:49 PM
காதல் கலைந்தது... நம்பிக்கை தொலைத்ததால்

மஞ்சுபாஷிணி
08-08-2009, 04:46 AM
மௌனம் கலையும்... சம்மதம் என்ற உன் ஒற்றை பதிலால்...

மஞ்சுபாஷிணி
08-08-2009, 04:54 AM
குழந்தை பசியில்... சங்கினில் கள்ளிப்பால்....

மஞ்சுபாஷிணி
08-08-2009, 05:01 AM
வெற்றிக்கனி எட்டியது.... தோல்விப்படிகளை மிதித்து...

மஞ்சுபாஷிணி
08-08-2009, 05:44 AM
சத்தமில்லா யுத்தம்...முத்தச்சத்தம் அரங்கேற்றம்....

குணமதி
10-11-2009, 05:39 PM
விழுவது இயல்பு; விசுக்கென எழுந்துகொள்!

அறிஞர்
10-11-2009, 05:41 PM
விழுவது இயல்பு; விசுக்கென எழுந்துகொள்!
விழுந்தான்... எழுந்தான்....

சரண்யா
11-11-2009, 01:57 AM
எழுந்தான் வெற்றியை கையில் பெற...

குணமதி
12-11-2009, 03:33 PM
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே!


(இந்த அரிய வரியை ஒரு சரக்குந்தின் பின்பக்கத்தில் படித்தேன்.)

சரண்யா
13-11-2009, 12:47 AM
மறக்க நினைத்தாலும் மனம் மாறிவிடுகிறது

குணமதி
21-11-2009, 02:31 PM
மாறாத உறுதியே காதலின் இலக்கணம்.

சரண்யா
23-11-2009, 11:01 AM
மாறாத உறுதி மனம் என்பதை பொறுத்தே...

குணமதி
23-11-2009, 11:09 AM
எதைப் பொருத்தும் காதல் மாறுவதில்லை.

சரண்யா
23-11-2009, 11:13 AM
மாற்றம் மட்டுமே மாறாத ஒன்றாகும்...

குணமதி
13-12-2009, 03:55 AM
மாறாத மாற்றமும் மாறும்!

சரண்யா
23-12-2009, 02:54 AM
மாறுவது மனம் என்ற எண்ணத்தின் கூட்டு

குணமதி
23-12-2009, 03:07 AM
வேட்கை, வெறுப்பின் விளைவே எண்ணம்.

சரண்யா
23-12-2009, 03:18 AM
எண்ணங்கள் ஒன்றாவதில்லை

குணமதி
29-12-2009, 03:58 PM
மனங்கள் ஒன்றினால் எண்ணங்கள் ஒன்றும்!

சரண்யா
02-01-2010, 12:13 PM
மனங்கள் நினைப்பதை............ ஓன்றாவது பரிமாற்றத்தில்.

வானதிதேவி
02-01-2010, 12:30 PM
பண்பட்ட மனங்களின் பரிமாற்றமே காதல்

சரண்யா
05-01-2010, 08:55 AM
பண்ப்பட மனதில் புரிதலால் நிறைய அறியக்கூடும்.

குணமதி
09-02-2010, 04:26 AM
தெளிந்த உள்ளம் தேர்வது பொதுமை.

சிவா.ஜி
09-02-2010, 04:52 AM
இங்கே பெரும்பாலும் ஒருவரிக் கருத்துக்களே இருக்கின்றன....கவிதையைக் காணோமே....

ஆரம்பப்பக்கங்களில் கொஞ்சம் பார்வையைத் திருப்புங்கள்....கவிதைகளைக் காணலாம்....

குணமதி
09-02-2010, 06:45 AM
பிரிவுத் துன்பம் கொடுத்தது இன்பம்

சிவா.ஜி
09-02-2010, 06:54 AM
இமை உதடு திறந்து,விழிவார்த்தை வெளிவரும்....காதலில்...!!!