PDA

View Full Version : தேவையா "தினங்கள்"?!!poo
02-05-2003, 12:16 PM
ஏன் ராசா
இன்னைக்குமா வேலை...
ஆமாம் புள்ள...
ஆரு தருவா சோறு..
இன்னைக்கு போனா ரெட்டை கூலியாம்..

அட்டை போடும்(ஒப்பந்த அடிப்படை)தொழிலாளி
ஆதரவென்ன?!!!

உழைப்பாளர் தினம்
உண்ணாவிரத நாளா..
அன்றாடங்காய்ச்சிகளுக்குமா
கொண்டாட்டங்கள்..
காலண்டரில் மட்டும் இருக்கட்டும்..
சுரண்டல் முதலாளிகள் இருக்கும்வரை..
அரசே உனக்கொரு வேண்டுகோள்..
உன் ஊழியனுக்கு மட்டும்
ஊதியத்தோடு விடுமுறை..
மகிழ்ச்சி..
உழைக்கும் வர்க்கத்திற்கு
உண்ண ஒருவேளை உணவு?!!..

தேவையா "தினங்கள்"?!! -தினக்கூலி.

mathi
02-05-2003, 12:44 PM
அருமையா இருக்கிறது பூ அவர்களே...

rambal
02-05-2003, 03:56 PM
நான் நீட்டி முழக்கியதை சுருக்... + நச்...
பாராட்டுக்கள் பூ..

பாரதி
02-05-2003, 05:10 PM
பூ...பூத்த கவிதை... அருமை.

அரசாங்க காதுகள் மட்டும் எப்போதும் செவிடாக இருப்பது ஏன்?

Narathar
03-05-2003, 04:25 AM
அட!
பூவுக்குள் ஒரு புயல் இருப்பதை நானறியேனே?

karikaalan
03-05-2003, 05:59 AM
பூ ஜி!

தினங்கள் மட்டும்தானா காரணம்? அரசு மட்டுமா காரணம்?

பத்து நாட்கள் லாரி நிறுத்தப் போராட்டம் நடந்ததே.... தினக்கூலித் தொழிலாளர்கள்தான் அடிபட்டனர் -- வயிற்றில்.

தொழிற்சங்கங்கள், ஒரு நாள் வேலை நிறுத்தம், பேரணி என்று போராடுவதாகச் சொல்லிக்கொள்கிறார்களே --- யாருக்கு வயிற்றில் அடி?
இங்கும் தினக்கூலியே.

ஆக Organised தொழிலாளர்கள் ஒன்றுகூடி, Unorganised தொழிலாளர்களை வயிற்றில் அடிக்கிறார்கள். அரசாங்கம், ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறது.

===கரிகாலன்

poo
03-05-2003, 09:23 AM
கரிகாலன் அண்ணன் மிக அருமையாய் சொன்னீர்கள்...

பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!

இளசு
09-05-2003, 05:08 PM
முறைசாரா உடல் உழைப்பாளிகளின்
குறை சொன்ன உண்மைக் கவிதை....

பாராட்டு தம்பிக்கு....
அன்றன்றுள்ள அப்பம் என வேதம் சொன்னது
அன்றாடம் இடுப்பில் , தலையில் சுமை சுமந்தால்தான்
அடுப்பில் கஞ்சி வேகும் என்று இவர்கள் வாழ்வு ஆனது....

Nanban
10-05-2003, 07:43 AM
எந்த ஒரு போராட்டமும் கடைசியில் தினக்கூலிகளின் வயிற்றில் தான் அடிக்கிறது..... போராட்ட முறைகளை மாற்றி அமைத்தால் மட்டுமே இவர்களின் பாட்டிற்கு வழி பிறக்கும்.....

aren
10-05-2003, 08:06 AM
பூ அவர்களே உங்களின் அதங்கம் உங்கள் வரிகளில் தெரிகிறது. மக்களுக்குத் தெரிந்திருக்கும் ஒரு அடிப்படை விஷயம் ஏன் அரசாங்கத்திற்குத் தெரியவில்லை. எல்லோரும் பணம் பண்ணவேண்டும் என்ற ஒரு குறிக்கோளிலேயே ஆட்சிக்கு வருகிறார்கள். அப்படி அவர்கள் இருக்கும்வரை தினத்தொழிலாளிகளின் கதி அதோகதிதான்.

பூமகள்
26-07-2008, 02:36 PM
விடுமுறை கொண்டாட்டங்கள்... வலியோர்க்கு..!
விடுகதை திண்டாட்டங்கள்... வறியோர்க்கு...!

முறைசாரா உழைப்பாளிகள் குறை என்று தீருமோ??!!

இன்று தான் செய்தியில் பார்த்தேன்..

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமைதூக்கிகள் ஊதிய உயர்வு செய்யலாம் என்று இருந்தது..

இப்போது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு 10% ஆக உயர்த்தக் கோரி நம் தற்போதைய தமிழக முதல்வர் கூறியுள்ளார்..

ஆயினும் இவை முறைப்படுத்தப்பட்ட உழைப்பாளிகளுக்கு மட்டுமா என்ற ஐயம் என்னில் எழுகிறது..

இந்த நடைமுறை முறையாக முறைசாரா தொழிலாளிகளுக்கும் எட்ட வேண்டுமென்பதே என் அவா..

பாராட்டுகள் பூ அண்ணா. :)

இளசு
26-07-2008, 02:42 PM
பொறுமையாய் ஒருங்குறிக்கு மாற்றும் பாமகளின்
அருமையான பணிக்கு அண்ணனின் அன்பும் ஆசிகளும்!

செய்யும் பணி ஏதாயினும் , அதில் காட்டும் சிரத்தை
செப்பும் செய்பவர் சிறப்பை!

சிறப்பான பாமகளுக்கு எல்லாமே அமையும் சிறப்பாய்!

பூமகள்
26-07-2008, 02:50 PM
மிகுந்த சந்தோசம் பெரியண்ணா..!!:)
"செய்வன திருந்தச் செய்..!!" என்றொரு வாக்குக்கு இணங்க இருக்க வேண்டுமென்று என் அவா..!

அதன் படி பொறுமையாக.. ஒரே சீரான வேகத்தில் செய்கிறேன்..

உங்களின் இந்த உற்சாகத் 'தட்டு'கள் அடிக்கடி வாங்க வேண்டுமென்றே... குதிரை வேகத்தில் உழைக்க தயாராகிறது மனம்..!!

உற்சாக பெருவெள்ளத்தில் நீந்தியபடியே நன்றிகள் பெரியண்ணா. :)

இளசு
26-07-2008, 02:56 PM
குதிரை வேகத்தில் உழைக்க தயாராகிறது மனம்..!!
பதறாத காரியம் சிதறாது!
தானத்தில் சிறந்தது நிதானம்...!


நேரடி வாழ்வு, குடும்பம், உடல்நலம் - இவைத் தாண்டிதான்
இணையம், மன்றம், மெய்நிகர் (வர்ச்சுவல்) சொந்தம் எல்லாம்..

பொறுமையாய் , மற்றவற்றுக்கு இடையூறின்றி செய்து வந்தால் போதும்டா..!

அண்ணனின் அன்பு என்றும் உனக்கு உண்டு!