PDA

View Full Version : மைரசாப்ட் அபீஸ் பதிவிறக்கம்



maganesh
06-02-2007, 03:37 PM
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். எனக்கு மைரசாப்ட் அபீஸ் மென்பொருள் இலவசமாகப்பதிவிறக்கம் செய்யக்கூடிய சட்ட ரீதியான தளம் எதுவாயினும் இருந்தால் கூறுங்கள்.. சில தளங்களில் பதிவிறக்கம் செய்வது சட்டா ரீதியானதல்ல என்று எனது நண்பன் கூறுகின்றார். இங்கு லண்டனில் அப்படிப்பதிவிறக்கம் செய்வது சட்ட ரீதியானதா? என்பதையும் லண்டனிலுள்ள நண்பர்கள் சொன்னால் பயனாக இருக்கும்.

பாரதி
06-02-2007, 04:56 PM
மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் மென்பொருள் இலவசமானதல்ல.(சில நேரங்களில் பீட்டா வகை தவிர்த்து). ஆகவே எங்கிருந்தும் இலவசமாக பதிவிறக்க இயலாது. வேறு சில தளங்களில் இருந்து பதிவிறக்கி உபயோகிப்பது சட்டரீதியில் சரியல்ல என்பதுதான் உண்மை.

Mano.G.
07-02-2007, 12:35 AM
மைக்ரோ சாப்ட் ஆபிஸ் மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய இயலாது ஏன் என்றால் அதற்கான காப்பி ரைட் உரிமம்
பணம் கொடுத்தே வாங்க வேண்டும். இங்கு மலேசியாவில் மைக்ரோசாப்ட் லைசன்ஸுக்கு ரிங்கிட் ஆயிரத்து இருநூறு கொடுக்க
வேண்டும்.

இங்கு நமக்கு மைக்ரோசாப்ட் மென்பொருள் போல மாற்று மென்பொருள் உள்ளது அது இலவசம்.

அது MS Office போல உபயோக படுத்தலாம்.

http://www.openoffice.org/

உங்களுக்கு மிக தேவைப்படும்

மனோ.ஜி

மயூ
08-02-2007, 03:02 AM
பிரதீப்பு அண்ணோய்!!!
ஆபீஸ் கொப்பி பண்ணப்பாக்குறாறு இங்க ஒருவரு....
ஹி.... ஹி.... :) :)

pradeepkt
08-02-2007, 06:53 AM
பிரதீப்பு அண்ணோய்!!!
ஆபீஸ் கொப்பி பண்ணப்பாக்குறாறு இங்க ஒருவரு....
ஹி.... ஹி.... :) :)
கேக்குது கேக்குது...
என்ன பண்ணச் சொல்றே... :D

மயூ
08-02-2007, 06:59 AM
கேக்குது கேக்குது...
என்ன பண்ணச் சொல்றே... :D
:D :D

maganesh
08-02-2007, 07:31 AM
நன்றி மனோ.ஜி அவர்க்ளே. பதிவிறக்கம் செய்தபின்னர் உங்களுக்கு உங்களை மறுபடியும் சந்திக்கின்றேன்.

maganesh
08-02-2007, 11:59 AM
நன்றி மனோ.ஜி
நீங்கள் குறிப்பிட்ட தளத்துக்குச் சென்று தேவையானதைப் பெற்றுக்கொண்டேன்.

ஓவியா
09-02-2007, 11:02 PM
நன்றி மனோ.ஜி
நீங்கள் குறிப்பிட்ட தளத்துக்குச் சென்று தேவையானதைப் பெற்றுக்கொண்டேன்.

நண்பரே

எப்படி பெற்றுக்கொண்டீர்கள் என்று (சிரமம் பாராது) சற்று விளக்க முடியுமா?

நன்றி