PDA

View Full Version : ஜெயிக்கப் போவது யார்?



maganesh
06-02-2007, 03:19 PM
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ம் முத்தரப்புத் தொடரில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து அணி பதினான்கு ஓட்டத்தினால் வெற்றிபெற்றிருக்கின்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து காலிங்வூட்டின் சதத்தின் உதவியுடன் 270 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்து ஆடிய நியூசிலாந்து இரண்டு விக்கட்டுக்கள் இருக்கும்போது 256 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அணித்தலைவரின் சதம் கூட அவர்களுக்கு உதவவில்லை. இந்த வெற்றியுடன் இங்கிலாந்து இறுதி ஆட்டத்துக்கு தெரிவான நிலையில் அது இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்துமா?

மதுரகன்
06-02-2007, 04:38 PM
நான் நினைக்கவில்லை சிலவேளை ஏதும் அதிசயம் நிகழந்தால் உண்டு..
அவுஸ்திரேலியா சொந்தமண்ணில் புலியாக உள்ளதே அதுவும் அடிபட்டுமுள்ளது...

ஷீ-நிசி
06-02-2007, 04:51 PM
இங்கிலாந்து அடிபட்ட புலியாக ஆடினால் ஆஸ்திரேலியா தோற்றாலும் தோற்கலாம்..

அறிஞர்
06-02-2007, 06:23 PM
இறுதி போட்டி என்றால்... மற்ற அணிகளுக்கு டென்சன் அதிகரிக்கும்..

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு அது தெம்பளிக்கும்..

ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது சற்று கடினமே..

poo
07-02-2007, 04:31 AM
நியூசிலாந்து இறுதிக்கு முன்னேறியிருந்தாலாவது கொஞ்சம் விறுவிறுப்பு இருந்திருக்கும்...

இங்கிலாந்து... இரண்டு இறுதிப்போட்டிகள் மட்டுமே நடக்கும்!!

பரஞ்சோதி
07-02-2007, 05:13 AM
ஆஸ்திரேலியாவே வெல்லும்.

நியூஸிலாந்து கேப்டனின் மந்தமான ஆட்டத்தால் தான் தோற்றார்கள். அவர் மட்டும் பாலுக்கு பால் ரன் எடுத்திருந்தால், கடைசி கட்டத்தில் வருபவர்கள் எளிதாக அடித்து ஆடியிருக்கலாம்.

இங்கிலாந்தில் ஒருவர் மட்டுமே விஸ்வருபம் எடுத்து வெல்ல காரணமாகி இருக்கார், பந்து வீச்சு இன்னும் எடுபடவில்லை, ஆக மொத்த அணியும் சேர்ந்து ஆஸியை வெல்வது கடினம்.

maganesh
09-02-2007, 11:20 AM
ஆம் நண்பர்களே. இன்று நடைபெற்ற இருதி ஆட்டத்தின் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி நான்கு இலக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணித் தலைவர் பாண்டிங் முதலில் துடுப்பெடுத்தாட தம் அணியைக் களமிறக்கினார். ஆடம் கில்க்ரிஸ்ட் போன வேகத்தில் திரும்பி வர ஹெய்டனுடன் இணிந்த பாண்டிங் அபாரமாக ஆடினார். ஹெய்டன் பாண்டிங் இருவரது அபாரத் துடுப்பாட்டத்தாலும் மற்றைய வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தாலும் 48.3 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குக்களையும் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றது ஆஸ்திரேலியா. பிளின்டாப் அதிகபட்சமாக மூன்று இலக்குகளை கைப்பற்றினார். அடுத்துக்களம் கண்ட இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட வீரர்கள் இருவரையும் தன் புயல் வேகப்பந்துவீச்சினை போல வேகமாகவே வெளியே அனுப்பினார் லீ. அடுத்து வந்த பெல், ஸ்டறஸ் இருவரிலும் ஸ்டறஸ் சுவற்றில் பட்டுத் திரும்பும் பந்து போல பிராக்கனின் வேகத்திக்கு இலக்காகித் திரும்பினார். தொடர்ந்து களம் இறங்கிய காலிங்வூட் இறுதி வரை ஆட்டம் இழக்காது 120 ஓட்டங்களைப்பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இவருக்கு பக்கபலமாக அணித் தலைவர் பிளின்டாப் 36 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இதனால் அடுத்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நண்பர்களே உங்க கருத்து என்ன? அடுத்த ஆட்டத்தில் ஜெயிக்கப் போவது யார்?

அறிஞர்
15-02-2007, 02:13 PM
ஆஸ்திரேலியா தோற்றால் அது செய்தியாக வரவில்லை..

இங்கிலாந்து.. 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது..

மதுரகன்
19-02-2007, 04:16 PM
அந்த நேரத்தில் நான் மன்றத்தில் இருக்கவில்லை அறிஞரே இருந்திருந்தால் விழா எடுத்திருப்போமே..

அறிஞர்
19-02-2007, 04:18 PM
அந்த நேரத்தில் நான் மன்றத்தில் இருக்கவில்லை அறிஞரே இருந்திருந்தால் விழா எடுத்திருப்போமே..
அடுத்த ரவுண்டிலிம்... நியூசிலாந்து.. ஆப்பு வைத்திருக்கிறார்கள்.