PDA

View Full Version : விஞ்ஞானம் கலந்த புதிர்



maganesh
06-02-2007, 01:25 PM
நான்கு பக்கமும் மூடப்பட்ட ஒரு அறை. உள்ளே இருந்து எந்தவிதமான வெளிச்சங்களும் வெளியே தெரியாது. உள்ளே ஒளிர்கின்ற மின்விளக்கொளி கூடத் தெரியாது. அதற்கு ஒரே ஒரு கதவு. அது பூட்டப்பட்டுள்ளது. அந்தக் கதவு ஒருமுறை திறந்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் தானாகவே பூட்டப்பட்டு விடும் தன்மை உடையது. அறையின் நடுவில் ஒரு மின்விளக்கு. நீங்க வெளியே நிற்கின்றீர்கள். கதவு உள்ள சுவருக்கு எதிர்ப்பக்கமாக உள்ள சுவரின் வெளிப்புறமாகமாக மூன்று ஆழிகள் அதாவது சுவிட்சுகள் உள்ளன. இப்போது நீங்க எப்படி அறையின் உள்ளே இருக்கும் மின்விளக்கின் ஆழியைக் கண்டுபிடிப்பீர்கள்.

அறிஞர்
06-02-2007, 01:27 PM
இது மாதிரி முன்பு யாரோ புதிர் போட்டங்களே...

பதில் சொல்ல மக்க வாங்க..

maganesh
06-02-2007, 01:30 PM
இது மாதிரி முன்பு யாரோ புதிர் போட்டங்களே

இதே புதிரா? இதைப்போன்ற வேறு புதிரா?

மனோஜ்
06-02-2007, 02:57 PM
அறிஞரே மயூரன்
இதே புதிர் வேறு வடிவத்தில் புதிரே புதிர் என்ற பகுதியில்

maganesh
06-02-2007, 03:46 PM
மயூரன்
இதே புதிர் வேறு வடிவத்தில் புதிரே புதிர் என்ற பகுதியில்
நண்பா தகவலுக்கு ந்ன்றி. அதற்கான சுட்டியை இணைக்க முடியுமா? அது பற்றி அறிய ஆவலாக இருக்கின்றது. முடிந்தால் பதில் சொல்லலாமல்லவா?

pgk53
08-02-2007, 01:38 PM
அன்பு நண்பரே....இதே புதிர் ஏற்கனவே புதிரோ புதிர் பகுதியில் கொடுத்துள்ளேன்.
புதிரோ புதிரில் இதுவரை 243 புதிர்கள் வந்துவிட்டமையால் அந்தப் புதிர் எத்தனையாவது என்று சரியாகக் கூற இயலாது.
நீங்கள் புதிரோ புதிர் சுட்டியை திறந்து கொஞ்சம் பின்னோக்கிப் போங்கள்.
வேண்டுமானால் இதற்கு சரியான விடையை பிறகு நானே கூறுகிறேன். சரிதானே?????

maganesh
08-02-2007, 03:09 PM
மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பரே; ஆமா அங்கு பதில் கூறிவிட்டனரா?

விகடன்
05-04-2007, 10:36 AM
ஆளி இருக்குமிடத்தைத்தானே சொல்லிவிட்டீர்கள். இனியேன் தாமதம். கதவைத்திறந்து உள் சென்று உங்கள் குறிப்புக்களின் படி தடவி பிடிக்க வேண்டியதுதானே!