PDA

View Full Version : நடை பயில உதவுங்கள்.

maganesh
06-02-2007, 11:00 AM
தமிழ் மன்றத்தில் புதிதாகப் பிறந்து தவழ ஆரம்பித்திருக்கும் தமிழ்க் குழந்தை நான். மன்றத்தில் நான் எங்கெல்லாம் உலவலாம் என்பதை எப்படி அறிந்து கொள்வது. மேலும் எனது பட்டங்கள் அதிகரிப்புச் சம்பந்தமாக நான் என்ன மாதிரியான நடைமுறைகளை கையாள வேண்டும். பட்டங்களைப் பெற என்ன செய்ய வேண்டும்? எங்கே விண்ணப்பிக்க வேண்டும்? எப்போ விண்ணப்பிக்க வேண்டும்? அதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்பதை எப்படி அறிந்துகொள்வது? பல சந்தேகங்கள். முழுமையான, உங்களால் முடிந்த விளக்க உதவிகளைத் தந்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

pradeepkt
06-02-2007, 11:31 AM
மயூரன்,
உங்களுக்கு எம் மனமார்ந்த வரவேற்புகள்.
பதியுங்கள், பங்களியுங்கள் -- பட்டங்கள் உங்களைத் தேடித் தானாகவே வரும்.

தமிழ் மன்றம் ஒரு குடும்பம். அதில் ஒரு சிறந்த அங்கத்தினராக வாழ்த்துகள்.

ஆதவா
06-02-2007, 12:36 PM
தமிழ் மன்றத்தில் புதிதாகப் பிறந்து தவழ ஆரம்பித்திருக்கும் தமிழ்க் குழந்தை நான். மன்றத்தில் நான் எங்கெல்லாம் உலவலாம் என்பதை எப்படி அறிந்து கொள்வது. மேலும் எனது பட்டங்கள் அதிகரிப்புச் சம்பந்தமாக நான் என்ன மாதிரியான நடைமுறைகளை கையாள வேண்டும். பட்டங்களைப் பெற என்ன செய்ய வேண்டும்? எங்கே விண்ணப்பிக்க வேண்டும்? எப்போ விண்ணப்பிக்க வேண்டும்? அதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்பதை எப்படி அறிந்துகொள்வது? பல சந்தேகங்கள். முழுமையான, உங்களால் முடிந்த விளக்க உதவிகளைத் தந்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

வணக்கம் மயூரன்.... அருமையான கேள்விகள்.. தாங்கள் தொடக்க நிலையில் இருக்கிறீர்கள் என்பதும், அதையே கேள்விகள் கேட்டு தொடக்கவுள்ளீர்கள் என்பதும் மகிழ்ச்சியான விஷயம். தமிழ்மன்றம் ஒரு ஆலமரம்போல.... எந்த விழுதுகளிலும் தொங்கிக்கொண்டு தூரி ஆடலாம்..... கவனமும் தேவை.. சொந்த கைகளில் ஆடினால் பிரச்சனையில்லை...(தமிழில் மட்டுமே எழுதவேண்டும். தேவைப்பட்டால் ஆங்கிலம் கலக்கலாம்.. இதைப்பற்றி அறிஞர் என்று ஒரு சான்றோர் இருப்பார். அவரிடம் அல்லது பிரதீப், பெஞ்சமின், மனோ.ஜி ஆகியோரிடம் கூட கேட்கலாம். இன்னுபிற நிர்வாகிகள் பெயரில் வர்ணம் வைத்திருப்பார்கள்...) இது தமிழ் வளர்க்கும் கடல்.. முத்துக்கள் நிறைய உண்டு... முத்துக்குளிக்கலாம் நிறையவே!

அடுத்து, தகுதி என்பது எந்த மனிதனுக்கும் சாதாரணமாக அமைந்துவிடாது./.. சில செயல்களிலேயே அதை வரைமுறைப் படுத்த முடியும்.. நம் மனதுக்கு எது நல்லதாகப் படுகிறதோ அதையே செய்யலாம்.. தகுதியும் பட்டமும் தானாய் வரும்// இங்கே பெயருக்குப் பின்னால் பட்டமிடுகிறார்கள்.. அது மன்றத்தில் நம் பங்களிப்பைப் பொருத்தது.. உதாரணத்திற்கு நீங்கள் 1000 பதிவுகளைத் தொட்டீர்களென்றால் உங்களுக்கு அனைவரின் நண்பர் என்ற பட்டம் தானாகவே கொடுப்பார்கள்... அதுபற்றி கவலை வேண்டாம்................

இங்கே சில விதிமுறைகளுக்காக பண்பட்டவர் பகுதி கொடுக்கப்படுகிறது... தொடர்ந்து பல பதிவுகளைப் பதித்துவந்தாலே போதும்... அந்த தகுதியும் தானாகவே கிடைக்கும்..................... தமிழ்மன்றம் ஒரு வானம்.. பறக்க எந்த தடையுமில்லை.... பறப்பதற்குமுன் உங்கள் இறகுகளை மட்டும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.....

இன்னுமொரு விடயம் என்னவென்றால்,, இது ஒரு குடும்பம் போல.... இங்கே உங்களின் பங்களிப்பில் நெகிழ்ந்து பல உறவுகளைப் பெறலாம்............

மயூரன்............ தமிழ்மன்ற விதிமுறைகள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... அதன்படி நடப்பீர்கள் என்றும் நினைக்கிறேன்................
தொடர்ந்து பதிவுகளை இட்டு வாருங்கள். எங்களின் ஊக்கம் என்றும் உங்களுக்கு உண்டு...............

வாழ்த்துக்கள்..

maganesh
06-02-2007, 12:57 PM
ஆதவா மற்றும் பிரதீப் இருவருக்கும் நன்றி. உங்கள் இருவரதும் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. மன்றம் வந்த இந்த தமிழ் உறவுக்குழந்தைக்கு நீங்கள் இருவரும் முதன்முதலாக கைகொடுத்து நம்பிக்கை எனும் ஒளியூட்டி நடைபயில உதவியுள்ளீர்கள். விதிமுறைகள் அனைத்தையும் படித்து விட்டேன். அதன்படி நடந்து ஒரு நல்ல தமிழ் மகனாக தமிழ் மன்றம் என்ற இந்த ஆல மரத்தில் நானும் ஒரு பறவையாக இருப்பேன் என்று நினைக்கிறேன்.

அறிஞர்
06-02-2007, 01:16 PM
வாருங்கள் மயூரன்...

தங்கள் வருகை மன்றத்தை சிறப்பிக்கட்டும்...

தொடர்ந்து பதியுங்கள். பண்பட்டவர் அனுமதி கிடைக்கும்... மற்ற பட்டங்கள் பதிப்புக்கு தகுந்தது போல் மாறும். பெரிதாக வேறுபாடு இல்லை.

மன்றத்தில் எல்லா பகுதிகளுக்கு சென்று படியுங்கள். கருத்துக்களை கொடுங்கள்...

தங்களின் ஆக்கங்களையும் கொடுங்கள்.. அனைவரும் படித்து இன்புறுவோம்.

மதுரகன்
06-02-2007, 03:58 PM
வாருங்கள் மயூரன் உங்களுக்கு திறமை எந்த துறையில் உள்ளதோ அந்த துறைசார் மன்றங்களில் உங்கள் பதிவுகளை இடுங்கள்..
ஆயினும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பதிவுகளை பார்வையிடத்தயங்காதீர்கள்..
மற்றும் உங்களால் முடிந்தால் நீங்கள் வாசித்த பதிவுகளில் பிடித்தவற்றுக்கு
பின்னூட்டல் இட்டு எழுதியவரை உற்சாகப்படுத்த முயலுங்கள்..
இவை உங்களுக்கு தமிழ்மன்றில் சொந்தங்களை பெற்றுத்தரும்..

ஓவியா
09-02-2007, 07:49 PM
தமிழ் மன்றத்தில் புதிதாகப் பிறந்து தவழ ஆரம்பித்திருக்கும் தமிழ்க் குழந்தை நான். மன்றத்தில் நான் எங்கெல்லாம் உலவலாம் என்பதை எப்படி அறிந்து கொள்வது. மேலும் எனது பட்டங்கள் அதிகரிப்புச் சம்பந்தமாக நான் என்ன மாதிரியான நடைமுறைகளை கையாள வேண்டும். பட்டங்களைப் பெற என்ன செய்ய வேண்டும்? எங்கே விண்ணப்பிக்க வேண்டும்? எப்போ விண்ணப்பிக்க வேண்டும்? அதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்பதை எப்படி அறிந்துகொள்வது? பல சந்தேகங்கள். முழுமையான, உங்களால் முடிந்த விளக்க உதவிகளைத் தந்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

வணக்கம் மயூரன்.... அருமையான கேள்விகள்.. தாங்கள் தொடக்க நிலையில் இருக்கிறீர்கள் என்பதும், அதையே கேள்விகள் கேட்டு தொடக்கவுள்ளீர்கள் என்பதும் மகிழ்ச்சியான விஷயம். தமிழ்மன்றம் ஒரு ஆலமரம்போல.... எந்த விழுதுகளிலும் தொங்கிக்கொண்டு தூரி ஆடலாம்..... கவனமும் தேவை.. சொந்த கைகளில் ஆடினால் பிரச்சனையில்லை...(தமிழில் மட்டுமே எழுதவேண்டும். தேவைப்பட்டால் ஆங்கிலம் கலக்கலாம்.. இதைப்பற்றி அறிஞர் என்று ஒரு சான்றோர் இருப்பார். அவரிடம் அல்லது பிரதீப், பெஞ்சமின், மனோ.ஜி ஆகியோரிடம் கூட கேட்கலாம். இன்னுபிற நிர்வாகிகள் பெயரில் வர்ணம் வைத்திருப்பார்கள்...) இது தமிழ் வளர்க்கும் கடல்.. முத்துக்கள் நிறைய உண்டு... முத்துக்குளிக்கலாம் நிறையவே!

அடுத்து, தகுதி என்பது எந்த மனிதனுக்கும் சாதாரணமாக அமைந்துவிடாது./.. சில செயல்களிலேயே அதை வரைமுறைப் படுத்த முடியும்.. நம் மனதுக்கு எது நல்லதாகப் படுகிறதோ அதையே செய்யலாம்.. தகுதியும் பட்டமும் தானாய் வரும்// இங்கே பெயருக்குப் பின்னால் பட்டமிடுகிறார்கள்.. அது மன்றத்தில் நம் பங்களிப்பைப் பொருத்தது.. உதாரணத்திற்கு நீங்கள் 1000 பதிவுகளைத் தொட்டீர்களென்றால் உங்களுக்கு அனைவரின் நண்பர் என்ற பட்டம் தானாகவே கொடுப்பார்கள்... அதுபற்றி கவலை வேண்டாம்................

இங்கே சில விதிமுறைகளுக்காக பண்பட்டவர் பகுதி கொடுக்கப்படுகிறது... தொடர்ந்து பல பதிவுகளைப் பதித்துவந்தாலே போதும்... அந்த தகுதியும் தானாகவே கிடைக்கும்..................... தமிழ்மன்றம் ஒரு வானம்.. பறக்க எந்த தடையுமில்லை.... பறப்பதற்குமுன் உங்கள் இறகுகளை மட்டும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.....

இன்னுமொரு விடயம் என்னவென்றால்,, இது ஒரு குடும்பம் போல.... இங்கே உங்களின் பங்களிப்பில் நெகிழ்ந்து பல உறவுகளைப் பெறலாம்............

மயூரன்............ தமிழ்மன்ற விதிமுறைகள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... அதன்படி நடப்பீர்கள் என்றும் நினைக்கிறேன்................
தொடர்ந்து பதிவுகளை இட்டு வாருங்கள். எங்களின் ஊக்கம் என்றும் உங்களுக்கு உண்டு...............

வாழ்த்துக்கள்..

அருமையான விளக்கம்.

பாராட்டுகிறேன் ஆதவா

பிரசாத்
26-03-2007, 07:23 AM
என்னை போன்ற புதியவர்களுக்கு இது போன்ற விளக்கங்கள் மிகவும் உபயோகமாக இருக்கிறது. இக்கேள்வியை எழுப்பி என் சந்தேகத்தை தீர்த்தற்க்கு நன்றிகள் பல.

பிரசாத்