PDA

View Full Version : தானாக எக்ஸ்செலில் ரைப் செய்யும் கணினி.

ஓவியன்
06-02-2007, 10:31 AM
எனது அலுவலகத்திலுள்ள ஒரு கணினி எக்ஸல் (Exel) பைல்(File) ஒன்றை ஒபின்(Open) பண்ணி விட்டு மவுசை தொடாமல் இருந்தால் கணினி தானாக ரைப்(Type) பண்ண வெளிக்கிடுகிறது. இந்த ரைப்பிங்க் அளவு கணக்கில்லாமல் தொடருகின்றது. ஆனால் இந்த கணினியில் எந்த வைரசும் இல்லையென உறுதிப் படுத்தப் பட்டுள்ளது, பின்னர் இது எவ்வாறு ஏற்படுகின்றது?

இதனை தடுக்க என்ன வழி?

Gurudev
06-02-2007, 10:43 AM
மவுசை தொட்டால் யாது நடக்கிறது? Remote Assistance and Remote Desktop இரண்டையும் Disable பண்ணிவிட்டு பாருங்கள். அல்லது இணைய இணைப்பை துண்டித்துவிட்டு பாருங்கள். என்ன நடக்கிறது என அறியதாருங்கள்.

பாரதி
06-02-2007, 11:17 AM
நண்பரே,

ஒருவேளை உங்கள் கணினியில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸில் இருக்கும் speech recognition இதை செய்கிறது என்று எண்ணுகிறேன். தற்காலிகமாக அதை செயலிழக்க வைத்துப் பாருங்கள். அல்லது Mic-ஐ "ஆஃப்" செய்து விட்டுப்பாருங்கள்.

ஓவியன்
07-02-2007, 12:19 PM
மவுசை தொட்டால் யாது நடக்கிறது? Remote Assistance and Remote Desktop இரண்டையும் Disable பண்ணிவிட்டு பாருங்கள். அல்லது இணைய இணைப்பை துண்டித்துவிட்டு பாருங்கள். என்ன நடக்கிறது என அறியதாருங்கள்.

அப்படியும் இந்த விளையாட்டு தொடர்கிறது நண்பரே!

ஒருவேளை operating system ஐ மீண்டும் install பண்ணினால் சரிவருமோ என்னவோ?

பாரதி
07-02-2007, 04:22 PM
நண்பரே,

உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் மென்பொருள் எந்த வகை என்பதை கூற முடியுமா..? நான் கூறியதை முயற்சி செய்தீர்களா..?

ஷீ-நிசி
07-02-2007, 04:29 PM
எனது அலுவலகத்திலுள்ள ஒரு கணினி எக்ஸல் (Exel) பைல்(File) ஒன்றை ஒபின்(Open) பண்ணி விட்டு மவுசை தொடாமல் இருந்தால் கணினி தானாக ரைப்(Type) பண்ண வெளிக்கிடுகிறது. இந்த ரைப்பிங்க் அளவு கணக்கில்லாமல் தொடருகின்றது. ஆனால் இந்த கணினியில் எந்த வைரசும் இல்லையென உறுதிப் படுத்தப் பட்டுள்ளது, பின்னர் இது எவ்வாறு ஏற்படுகின்றது?

இதனை தடுக்க என்ன வழி?

இது எக்ஸெல்லில் மட்டும்தான் நடக்கிறதா, அல்லது மற்ற office தொடுப்புகளிலும் நடக்கிறதா?

மதுரகன்
08-02-2007, 04:45 PM
ஒருவேளை உங்கள் கணினியில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸில் இருக்கும் speech recognition இதை செய்கிறது என்று எண்ணுகிறேன். தற்காலிகமாக அதை செயலிழக்க வைத்துப் பாருங்கள். அல்லது Mic-ஐ "ஆஃப்" செய்து விட்டுப்பாருங்கள்.

நானும் அதைத்தான் எண்ணுகின்றேன்...
உங்கள் கணினியில் மைக் உள்ளதா...?

விகடன்
11-02-2007, 02:43 AM
நான் அறிந்தவரையில் பின்வரும் காரணிகள் அதற்கு ஏதுவாக அமையலாம்,

1. பாரதி சொன்ன காரணி...
2. மவுஸ் அல்லது கி-போர்ட்டில் குறுஞ் சுற்று (சோட் சேக்கிட்) காணப்படலாம்.
இவற்றை எல்லாக் ஒவ்வொன்றாக பாருங்கள். கரிவந்தால் சந்தோசம்.

மேலதீக இணைப்பு: நீங்கள் சொல்வதை கேற்கக்கூடாது என்று கங்கனம் கட்டிக்கொண்டி இய்ங்குகிறதோ? அல்லது அடுத்த ஜெனரேசனிற்கு தாவிவிட்டதோ??
அப்படி ஏதாச்சும் என்றால் "அதிசயம் ஆனால் உண்மை" என்ற பகுதிக்குள் இந்தத்தகவலைப் போடலாம்!

praveen
22-02-2007, 12:13 PM
கீ போர்டில் ஏதாவது கீ அழுந்த பதிந்திருந்தாலும் இப்படி ஆகுமே.

சரி, கடைசியாக எப்படி சரி செய்தீர்கள் என்று கூற வில்லையே.

அறிஞர்
23-02-2007, 01:42 PM
ஓவியன் என்னாச்சு.. இப்ப எப்படி இருக்கு.. நம்மூராக இருந்தால் மந்திரித்து விடுவார்கள்...

ஓவியன்
25-02-2007, 09:47 AM
ஓவியன் என்னாச்சு.. இப்ப எப்படி இருக்கு.. நம்மூராக இருந்தால் மந்திரித்து விடுவார்கள்...

இப்ப அந்த கணினியை Format செய்து மீண்டும் Install செய்து விட்டோம்-இப்போது பையன் (அது தாங்க அந்த கணினி) குளறுபடி செய்வதில்லை.

praveen
01-03-2007, 04:29 AM
அப்ப கடைசி வரை நீங்கள் பிரச்சினைக்கு காரணம் என்ன என்று கண்டுபிடிக்கவில்லை, தீர்வும் கடைசியா எல்லோரும் இறுதியா செய்வதை தான் செய்திருக்கிறீர்கள். சரியான காரணம் தெரிந்தா நாங்களும் பார்மேட் செய்வதில் இருந்து தப்பிக்கலாம் இல்லையா.

ஒருவேளை திரும்ப அது இனிமேல் வந்தா ஆராய்சி செய்வீர்கள்.

ஓவியன்
19-03-2007, 09:40 AM

என்ன செய்ய எங்களுக்கும் வேறு வழி இருக்கவில்லை :D