PDA

View Full Version : வணக்கம் நண்பர்களே

maganesh
06-02-2007, 08:58 AM
வணக்கம் நண்பர்களே. எனது பெயர் மயூரன். நான் இந்த மன்றத்துக்கு புதியவன். இன்று முதல் எனது ஆக்கங்களையும் தரலாம் என நினைக்கின்றேன். முதலில் மன்றத்தின் பதிப்புகளை படித்த பின் எனது ஆக்கங்களைத் தருகின்றேன். நன்றி.
பிரியமுடன்,
மயூரன்

மயூ
06-02-2007, 09:10 AM
வாங்க மயூரன்...
நான் மயூரேசன்..
தாங்கள் உங்கள் ஆக்கங்களை.. ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்!

Mano.G.
06-02-2007, 09:16 AM
வாங்க மயூரன்...
நான் மயூரேசன்..
தாங்கள் உங்கள் ஆக்கங்களை.. ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்!

என்னது ஒரே பெயரில் இருவரா?
குழம்புகிரதே.

மனோ.ஜி

மயூ
06-02-2007, 09:19 AM
என்னது ஒரே பெயரில் இருவரா?
குழம்புகிரதே.

மனோ.ஜி
மயூரன்...
மயூரேசன்...
குளம்புவதற்கு என்ன உள்ளது????:confused: :confused: :confused: :D :D

ஆதவா
06-02-2007, 09:33 AM
வாங்க மயூரன்......... நல்வரவு......

ஆதவா
06-02-2007, 09:33 AM
மயூரா!!! டபுள் ஆக்ட் இல்லியே??

maganesh
06-02-2007, 10:49 AM
வரவேற்ற அன்பு உடன்பிறப்புக்களே! நன்றிகள். வந்தாரை வரவேற்கும் நம் பண்பாட்டை தமிழ் மன்றத்தில் தவழ ஆரம்பிக்கும்போதே அறிந்துகொண்டேன். சந்தேகம் வேண்டாம். நான் புதியவனேதான். தள நன்மைகளுக்காக சந்தேகம் கொள்வது தப்பில்லை. இருவரா? ஒருவரா? என வினவியவர்களைத் தப்பாக நான் நினைக்கவில்லை. இரண்டு கணக்குகள் வைத்து இன்னொரு உறவின் தமிழ் மன்ற இருப்பைக் களவாட எனக்கு விருப்பமில்லை. மீண்டும் தமிழ் மன்றத்து உறவுகளுக்கு முரசுகொட்டி உரக்கச் சொல்கின்றேன் நான் புதியவன். மனம் புண்பட உரைத்திருந்தால் மன்னிக்கவும்.

ஆதவா
06-02-2007, 10:54 AM

அட சும்மா விளையாடினேங்க..... விளையாட்டா எடுத்துக்குங்க...

maganesh
06-02-2007, 11:04 AM
அட சும்மா விளையாடினேங்க..... விளையாட்டா எடுத்துக்குங்க...
தப்பா எடுத்துக்கொள்ளவும் இல்லை. என் மனது காயப்படவுமில்லை. வேறு யாரும் தப்பா எடுத்துக்கொள்ள முன்னான ஒரு விளக்கம். அவ்வளவே.

pradeepkt
06-02-2007, 11:33 AM
வணக்கம் மயூரன்.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்கள் பங்களிப்பை நல்குங்கள். மன்றத்தை மகிழ்வித்து நீங்களும் மகிழுங்கள். உங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் தயங்காது இடுங்கள்.

மனோஜ்
06-02-2007, 02:12 PM
வணக்கம் மயூரன்
உங்கள் வரவு நல் வரவாகுக

பிச்சி
06-02-2007, 02:32 PM
வாங்க வாங்க.

அறிஞர்
06-02-2007, 03:37 PM
வாருங்கள் மயூரன்.. தங்களுக்கு தெரிந்த தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

எல்லா பகுதியும் சென்று படித்து.. கருத்து பதியுங்கள்

மதுரகன்
06-02-2007, 03:46 PM
நானும் வரவேற்பொருடன் இணைகிறேன் மயூரன்..
உங்கள் படைப்புகளை ஆரம்பியுங்கள்..

ஓவியா
09-02-2007, 03:39 PM
வணக்கம் மயூரன்

தமிழ் மன்றத்தில் உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.

அனைத்து பகுதிகளிலும் உலாவி கருத்து பின்னூட்டமிடுங்கள்

தங்களின் தமிழ்தொண்டில் மன்றம் செழிக்கட்டும்.

வாழ்த்துக்கள் :)

மயூ
09-02-2007, 03:41 PM
மயூரா!!! டபுள் ஆக்ட் இல்லியே??
இப்பிடிக் கேட்டா இன்னுமொருவரையும் கூட்டி வந்து டிபிள் அக்ட் ஆக்கிடுவேன்!!!!:D :D :D

maganesh
09-02-2007, 03:44 PM
இப்பிடிக் கேட்டா இன்னுமொருவரையும் கூட்டி வந்து டிபிள் அக்ட் ஆக்கிடுவேன்
அப்பா மயூரேசா புரியலையேப்பா

விகடன்
11-02-2007, 03:08 AM
வணக்கம் மஜூரன்.
நிலமையை பார்த்தீர்களா. 150 பதிப்புக்களை நிவர்த்தி செய்த உங்களை வரவேற்கும்படியாகிவிட்டதே!

இருந்தாலும்,

உங்களின் இந்தளவு கால கட்ட அனுபவத்தின் முதிர்ச்சியால் மென்மேலும் தகுந்த பல ஆக்கங்களை அளித்து சகலரும் பயனடையும் வகையில் வலம் வர வாழ்த்துகிறேன்

maganesh
12-02-2007, 07:29 AM
நிலமையை பார்த்தீர்களா. 150 பதிப்புக்களை நிவர்த்தி செய்த உங்களை வரவேற்கும்படியாகிவிட்டதே!
பரவாயில்லை நண்பனே. வரவேற்றதுக்கு நன்றி.