PDA

View Full Version : இலகுவான புதிர்.

sham
06-02-2007, 06:14 AM
ஒரு பாதையில் இருவர் சென்றுகொண்டிருக்கின்றனர். ஒருவர் கூறினார் தனக்குப் பின்னே இன்னொருவர் வருகிறார் என்று, மற்றவரும் கூறினார் தனக்குப்பின்னேயும் இன்னொருவர் வருகிறார் என்று. ஆனால் மொத்தமாக அவ்வீதியில் இருவர் மாத்திரமே சென்றுகொண்டிருக்கின்றனர்.எனின் அவர்கள் எந்த ஒழுங்குமுறையில் சென்றுகொண்டிருக்கின்றனர்?

ஏற்கனவே இப்புதிரை நீங்கள் அறிந்திருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.

அன்புடன் சாம்.

மயூ
06-02-2007, 09:24 AM
அதாவது வட்டமான பாதையில் சென்று கொண்டு இருருக்கினம்...
என்ன இது சின்னப்புள்ளத் தனமா!!! :)

pradeepkt
06-02-2007, 11:28 AM
மயூரேசா,
எல்லாரும் உன்னை மாதிரியே புத்திசாலியா இருந்திருவாங்களா??? எனக்கு இதற்கு விடை தெரியவில்லையே...

maganesh
06-02-2007, 01:02 PM
அதாவது வட்டமான பாதையில் சென்று கொண்டு இருருக்கினம்...
என்ன இது சின்னப்புள்ளத் தனமா!!!
இந்த விடை சரியா தவறா என்பது தெரியவில்லை. நான் முயற்சி செய்து பார்க்கின்றேன். என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. உங்களது பதிலின் பிரகாரம் வட்டமான பாதையில் சென்று கொண்டிருந்தால் வீதி வட்ட வடிவானதாக இருக்க வேண்டும். அப்படி வட்டவடிவான வீதி என்பது நடைமுறைக்குச் சாத்தியமா தெரியவில்லை. காத்திருந்து பார்ப்போம்.

அறிஞர்
06-02-2007, 01:26 PM
1. வட்டமான பாதையில் செல்லுவது.

அல்லது.

2. ஒருவர் முதுகு, மற்றொருவர் முதுகுடன் இருக்குமாறு (இருவரும் எதிர்புறம் பார்த்து)... செல்வது.

aren
06-02-2007, 05:41 PM
ஒருவர் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார், இன்னொருவர் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம்.

அப்படியில்லையெனில் இருவரும் ஒரு வட்டத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அப்படியும் இல்லையெனில் ஒருவர் "பொய் சொல்கிறார்" என்று நினைக்கிறேன்.

sham
07-02-2007, 02:05 AM
ஒருவர் முதுகு, மற்றொருவர் முதுகுடன் இருக்குமாறு (இருவரும் எதிர்புறம் பார்த்து)... செல்வது. அறிஞர் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். ஏன் மயூரேசன் அண்ணா! வீதிகள் எங்காவது வட்ட வடிவில் இருந்திருக்கா?

ஆதவா
07-02-2007, 02:22 AM
ஒரு பாதையில் இருவர் சென்றுகொண்டிருக்கின்றனர். ஒருவர் கூறினார் தனக்குப் பின்னே இன்னொருவர் வருகிறார் என்று, மற்றவரும் கூறினார் தனக்குப்பின்னேயும் இன்னொருவர் வருகிறார் என்று. ஆனால் மொத்தமாக அவ்வீதியில் இருவர் மாத்திரமே சென்றுகொண்டிருக்கின்றனர்.எனின் அவர்கள் எந்த ஒழுங்குமுறையில் சென்றுகொண்டிருக்கின்றனர்?

ஏற்கனவே இப்புதிரை நீங்கள் அறிந்திருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.

அன்புடன் சாம்.

ஒருவர் முதுகு, மற்றொருவர் முதுகுடன் இருக்குமாறு (இருவரும் எதிர்புறம் பார்த்து)... செல்வது. அறிஞர் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். ஏன் மயூரேசன் அண்ணா! வீதிகள் எங்காவது வட்ட வடிவில் இருந்திருக்கா?

புதிர் பொருந்தவில்லை............. நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் ஒருவர் தனக்கு பின்னே இன்னொருவர் வருகிறார் என்றுதானே சொல்கிறார்,,,,, பின் எப்படி முதுகுக்கு பின் செல்பவரை, அதாவது எதிர் திசையில் செல்பவரை வருவதாகச் சொல்லமுடியும்?

தனக்கு பின் ஒருவர் செல்கிறார் என்று சொன்னால்தானே புதிர் முழுமையாக இருக்கமுடியும்?

sham
07-02-2007, 03:16 AM
ஆம் அண்ணா. தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும்

சே-தாசன்
07-02-2007, 03:59 AM
அதாவது வட்டமான பாதையில் சென்று கொண்டு இருருக்கினம்...
என்ன இது சின்னப்புள்ளத் தனமா!!! :)

இருவர் சேர்ந்து வட்டப் பாதையில் செல்ல முடியாது. அது எப்போதும் நேர் கோடுதான்

ஆதவா
07-02-2007, 04:03 AM
ஆம் அண்ணா. தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும்

அட மன்னிப்பெதற்குங்க???

சே-தாசன்
07-02-2007, 04:07 AM
அட மன்னிப்பெதற்குங்க???

மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிப்பவன் பெரிய மனுஷனுங்கோவ் :D :D

ஆதவா
07-02-2007, 04:24 AM
மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிப்பவன் பெரிய மனுஷனுங்கோவ் :D :D

அட நம்ம டயலாக்...........

ஷீ-நிசி
07-02-2007, 05:08 AM
புதிர் பொருந்தவில்லை............. நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் ஒருவர் தனக்கு பின்னே இன்னொருவர் வருகிறார் என்றுதானே சொல்கிறார்,,,,, பின் எப்படி முதுகுக்கு பின் செல்பவரை, அதாவது எதிர் திசையில் செல்பவரை வருவதாகச் சொல்லமுடியும்?

தனக்கு பின் ஒருவர் செல்கிறார் என்று சொன்னால்தானே புதிர் முழுமையாக இருக்கமுடியும்?

இதேக் குழப்பத்தினால்தான் நான் விடையை இங்கே பதிக்கவில்லை.. கேள்வி தவறாக இருந்திடாது என்று எண்ணியதால் யோசித்துக்கொண்டேயிருந்தேன்...

மனோஜ்
07-02-2007, 06:25 AM
ஷீ நிசி காற்றுள்ளபொழதே துற்றி கொள்ள வென்டும் புரிகிறதா..:D :D

maganesh
07-02-2007, 11:36 AM
ஒருவர் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார், இன்னொருவர் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம்.
ஆணித்தரமாகக் கூறுகின்றேன். இந்த விடை சரியானது.

அறிஞர்
07-02-2007, 01:12 PM
புதிர் பொருந்தவில்லை............. நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் ஒருவர் தனக்கு பின்னே இன்னொருவர் வருகிறார் என்றுதானே சொல்கிறார்,,,,, பின் எப்படி முதுகுக்கு பின் செல்பவரை, அதாவது எதிர் திசையில் செல்பவரை வருவதாகச் சொல்லமுடியும்?

தனக்கு பின் ஒருவர் செல்கிறார் என்று சொன்னால்தானே புதிர் முழுமையாக இருக்கமுடியும்? நடக்கிறார் என்று கூட சொல்லலாம்.
அடுத்த புதிர் கொடுங்கள்..

மயூ
07-02-2007, 02:35 PM
அதாவது வீதியில் உள்ள ரவுண்டபொட்டில் இருவர் சுத்திக்கொண்டிருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்..
இப்போவுமா என் விடை பிழை என்கின்றீர்கள்... ???

ஆதவா
07-02-2007, 02:42 PM
ஆணித்தரமாகக் கூறுகின்றேன். இந்த விடை சரியானது.

ஒரு பாதையில் இருவர் சென்றுகொண்டிருக்கின்றனர். ஒருவர் கூறினார் தனக்குப் பின்னே இன்னொருவர் வருகிறார் என்று, மற்றவரும் கூறினார் தனக்குப்பின்னேயும் இன்னொருவர் வருகிறார் என்று. ஆனால் மொத்தமாக அவ்வீதியில் இருவர் மாத்திரமே சென்றுகொண்டிருக்கின்றனர்.எனின் அவர்கள் எந்த ஒழுங்குமுறையில் சென்றுகொண்டிருக்கின்றனர்?

ஏற்கனவே இப்புதிரை நீங்கள் அறிந்திருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.

அன்புடன் சாம்.

மயூரன்... உங்கள் பதில் சரியாக இருக்கும் பஷத்தில் கேள்வி தவறானது.....:)

maganesh
07-02-2007, 03:05 PM
மயூரன்... உங்கள் பதில் சரியாக இருக்கும் பஷத்தில் கேள்வி தவறானது.....
நண்பா வினா தவறாக இருக்காது வினாவின் தமிழ் தவறாக இருக்கலாம் அல்லவா? நாம் தமிழர்களானாலும் தமிழில் கற்றது கை மண் அளவல்லாவா?

ஷீ-நிசி
07-02-2007, 04:36 PM
நண்பா வினா தவறாக இருக்காது வினாவின் தமிழ் தவறாக இருக்கலாம் அல்லவா? நாம் தமிழர்களானாலும் தமிழில் கற்றது கை மண் அளவல்லாவா?

சரி மயூரன்... அடுத்த புதிரை போடுங்கள்.. ஆவலாக உள்ளோம்....

maganesh
07-02-2007, 05:12 PM
சரி மயூரன்... அடுத்த புதிரை போடுங்கள்.. ஆவலாக உள்ளோம்....
யப்பா. புதிர் என்னது இல்லைப்பா. என்னால் முடிந்த வேறு புதிரை இன்னொரு சந்தர்ப்பத்தில் தருகின்றேன்.