PDA

View Full Version : அன்பர்களே கீழூள்ள கவிதை ஒரளவாவது நன்றாக ħ



sham
06-02-2007, 05:17 AM
மொட்டவிழ்ந்த அழகிய பூவாய் பூத்துக்குலுங்கிய நீ
கல்லிதயம் என்னதனை கட்டவிழ்த்து உட்புகுந்தாய்
சற்றெதிரும் பாராத என்மனதில்
அன்று தொட்டு இன்பச்சிறகடிப்பு.

திறந்த வேதியல் கொப்பியுடன் தம்ரொவில்
அமர்ந்த எனக்கு பென்சீன் வளையங்களுகு பதில்
உன் திருமுகங்கள்-இதனலோ என்னவோ
வந்தது "C for Chemistry".

என்மனதின் பிரதியீடு உன்மனது என்பதாலோ
இலகுவாக விளங்கியது பிரதியீட்டுத்தொகையீடு
இருந்தாலும் முடியவில்லை பரீட்சையை செய்வதற்கு-ஏனெனில்
உன்மனது அறியாதே பிரதியீட்டுதொகையீடு.

எதிரணியுதைத்த பந்தை என் மார்பால் தடுக்க நினைத்தேன்_முடியவில்லை
என்னுளிருக்கும் உன்னிதயம் நொந்துவிடும் என்பதாலோ-விளைவு!
பெற்றது எதிரணி உதையொன்று_தோற்று
நடைகட்டியது எமதணி.


ஆங்கில வார்த்தை பாவித்தமைக்கு மன்னிக்கவும்.

அன்புடன் சாம்.

ஷீ-நிசி
06-02-2007, 05:23 AM
கவிதை நன்றாக இருக்கிறது நண்பரே, எழுத்து பிழைகளை கொஞ்சம் சரிசெய்திடுங்கள்

நான் ரசித்த வரிகள்

எதிரணியுதைத்த பந்தை என் மார்பால் தடுக்க நினைத்தேன்_முடியவில்லை
என்னுளிருக்கும் உன்னிதயம் நொந்துவிடும் என்பதாலோ

sham
06-02-2007, 05:38 AM
நன்றி நண்பரே. உணர்ச்சி வசப்பட்டு எழுதியதால் எழுத்துப்பிழைகளை கவனிக்கமுடியவில்லை.மன்னிக்கவும்.

பென்ஸ்
06-02-2007, 05:46 AM
ஆகா... தொடங்கிடாரையா.....

வேதியல் புத்தகம் மட்டும் ஏன்...
அந்த பூவை,
வேதியல் மாற்றம் கொடுத்த பாவையா - இல்லை
வேதியல் படித்து கொடுத்த மேதையா???

இன்னும் சொல்லுங்க..
அப்பதானே உன்மையெல்லாம் வெளியே வரும் :-)

sham
06-02-2007, 06:28 AM
அய்யா! அது பாவையுமில்லை மேதையுமில்லை ,அது என்னோட கழுதை.
கழு-கழுமலம்(தாமரை)
தை-தையல்(அழகிய பெண்).
தாமரை போன்ற அழகிய என் ....................[/B[B]](பிரச்சினையை ஏற்படுத்திவிடாதீர்கள் நண்பரே)

மனோஜ்
06-02-2007, 06:31 AM
கவிதை அருமை
விளையாடும் பொழது வியாட்டில் கவனம் இருந்திருந்த இந்த உதை வேன்டி வந்திருக்காதுதல்லவா அன்பரே :D :D :D

ஆதவா
06-02-2007, 06:53 AM
மொட்டவிழ்ந்த அழகிய பூவாய் பூத்துக்குலுங்கிய நீ
கல்லிதயம் என்னதனை கட்டவிழ்த்து உட்புகுந்தாய்
சற்றெதிரும் பாராத என்மனதில்
அன்று தொட்டு இன்பச்சிறகடிப்பு.

திறந்த வேதியல் கொப்பியுடன் தம்ரொவில்
அமர்ந்த எனக்கு பென்சீன் வளையங்களுகு பதில்
உன் திருமுகங்கள்-இதனலோ என்னவோ
வந்தது "C for Chemistry".

என்மனதின் பிரதியீடு உன்மனது என்பதாலோ
இலகுவாக விளங்கியது பிரதியீட்டுத்தொகையீடு
இருந்தாலும் முடியவில்லை பரீட்சையை செய்வதற்கு-ஏனெனில்
உன்மனது அறியாதே பிரதியீட்டுதொகையீடு.

எதிரணியுதைத்த பந்தை என் மார்பால் தடுக்க நினைத்தேன்_முடியவில்லை
என்னுளிருக்கும் உன்னிதயம் நொந்துவிடும் என்பதாலோ-விளைவு!
பெற்றது எதிரணி உதையொன்று_தோற்று
நடைகட்டியது எமதணி.


ஆங்கில வார்த்தை பாவித்தமைக்கு மன்னிக்கவும்.

வாங்க சாம்.... உங்களைப் பற்றி சிறு அறிமுகமாவது கொடுக்கலாமே அறிமுகப் பகுதியில்....

முதல் கவிதை முத்தாரமாய்..........
கவிதையைப் பொருத்தவரை ஈழத்துவாசனை அடிக்கிறது... பழந்தமிழ் சோறு சாப்பிட்ட உணர்வு... கொஞ்சம் ஊறுகாயும் கூட.. சாதத்தில் கல் இருக்கிறதே!! (எழுத்துப் பிழை) கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள்.. முதல் பாராவின் இரண்டாவது வரியில் அமைந்த பிழையால் ரெண்டுமூன்றுமுறை படிக்கவேண்டிய சூழ்நிலையாய் போட்டுது,.. சிவப்பிட்ட பகுதியில் கவனம் தேவை.. மற்றபடி கவிதை மிக மிக அருமை..... தொடர்ந்து எழுதுங்கள்... நிறைய எதிர்காலம் உங்களுக்கு உண்டு.. தமிழ்மன்றம் ஒரு கல்லூரி போல.... கற்றுக்கொள்ளலாம்.. கற்றுக்கொண்டதை அவிழ்த்துவிடலாம்.... தொடருங்கள்.....

தேவை ஏற்படின் ஆங்கில வார்த்தைக் கலப்பு அவசியம் போட்டுக்கொள்ளலாம்..... தவறில்லை./.....

pradeepkt
06-02-2007, 07:15 AM
சாம்
ரொம்ப உணர்ச்சி வசப் பட்டுட்டீங்க போல :D

கொஞ்ச நாளைக்கு முன் வாலிபக்கவி "தீனா" படத்தில் எழுதிய பாடல் வரி இது
"ஹாட் பாக்ஸில் வைத்த ஃபுட் உண்பதில்லை இனி நானும் எந்த நாளும்
என் உள்ளம் எங்கும் நீ நிறைந்திருக்க உனை உஷ்ணம் தாக்கக் கூடும்"

என்னமோ போங்கய்யா... எல்லாம் காதல் படுத்தும் பாடு.
இன்னும் நிறைய எழுதுங்கள்.

மயூ
06-02-2007, 07:46 AM
ஷாம் கவிதை நன்றாக உள்ளது!
அளவிற்கு மிஞ்சி ஃபீல் பண்ணாதீங்க! :)

sham
06-02-2007, 08:10 AM
நன்றி களனிவாழ் நண்பரே.

மயூ
06-02-2007, 08:19 AM
நன்றி களனிவாழ் நண்பரே.
அடேங்கப்பா மூன்றாவது களனிப் பல்கலைக்கழகம்...
போற போக்கைப் பாத்தா தமிழ் மன்றம் களனி மன்றம் ஆகிடுமே!

புதிய அணி ஆரம்பம்.. மயூரேசன், கிருஷாந்த், ஷாம் (அவர் விரும்பினால் நிஜப் பெயர் சொல்லலாம்.) களனி அணி! :eek: :D :D

மயூ
06-02-2007, 08:23 AM
அது சரி!
விரைவில் கல்கத்தா சென்று கால்பந்தாடப் போகின்றீர் அல்லவா?
அப்போதும் இதயத்துக்காக இலங்கை அணியை தோற்க விட்டு விடுவீரா???

pradeepkt
06-02-2007, 11:27 AM
ஹே ஹே...
என்ன நடக்குது இங்கே...
இதுக்காவது ஒரு தடவை கொழும்புக்கு வந்து நீங்க என்ன செய்றீங்கன்னு பாக்கணுமே...

மதுரகன்
08-02-2007, 05:41 PM
போற போக்கைப் பாத்தா தமிழ் மன்றம் களனி மன்றம் ஆகிடுமே!
களனி பல்கலை மருத்துவபீடத்தில் இடம்கிடைக்காதா நானும் உங்கள் அணியில் சேர்ந்து விடலாம்... :)

மதுரகன்
08-02-2007, 05:43 PM
அடுத்து கவிதை அருமை நண்பரே
கதை வாக்கில் பாராட்ட மறந்துவிட்டேன்...

மன்மதன்
08-02-2007, 06:30 PM
ஈழப்பேச்சுத்தமிழ் கலந்து கவிதை நன்றாக இருக்கிறது ஷாம். தலைப்பை மட்டும் எடிட் பண்ணி கவிதைக்கான சரியான தலைப்பாக மாற்றிவிடுங்களேன்..

மயூ
09-02-2007, 02:16 AM
களனி பல்கலை மருத்துவபீடத்தில் இடம்கிடைக்காதா நானும் உங்கள் அணியில் சேர்ந்து விடலாம்... :)
அழகான பொடியன்களுக்கு மட்டுமே இங்கே அனுமதி! :cool: :cool:
சரி மதுரகன் உங்க பெர்சனாலிட்டி எப்படி???? :confused:

சே-தாசன்
09-02-2007, 02:19 AM
[QUOTE=mayooresan;173302]அழகான பொடியன்களுக்கு மட்டுமே இங்கே அனுமதி! :cool: :cool:

அப்பிடி போடுங்க அரிவாளை:) :)

maganesh
09-02-2007, 08:10 AM
அழகான பொடியன்களுக்கு மட்டுமே இங்கே அனுமதி!
சரி மதுரகன் உங்க பெர்சனாலிட்டி எப்படி????

அருப்பாடு பட்டு மூளையைக் கசக்கி ஷாம் எழுதிய கவிக்கு வாழ்த்துச்
சொல்வதை விட்டுவிட்டு என்னது சின்னப்பிள்ளைத்தனமா? அட பாருங்க நானே இன்னும் கருத்துச் சொல்லவில்லை.

நண்பா ஷாம். கவி நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் களனிப் பல்கலைக்கழகத்தில் இராசயனப் பிரிவில் கற்கின்றீர்களோ.