PDA

View Full Version : எனக்கொரு கேர்ள் ப்ரண்ட் வேணுமடா!

ஆதவா
05-02-2007, 04:02 PM
சரிடா செல்லம்!
----
ஒகே! வந்துர்ரேன்!
----
டொக்.

"செல்ல ஆஃப் பண்ணிட்டியா?" இது சூர்யா

"ஏண்டா ஒனக்கு பொறாமையா?" இது பிரகாஷ்

" ஒரு நாளைக்கு எத்தனை கேர்ள் ப்ரண்டு கூட டா கல்லை போடுவே?"

" அது எண்ற பழக்கமெல்லாம் கெடயாது.

" டேய் மாப்ள எங்களுக்கும் ஒருத்திய செட் பண்ணுடா நாங்களும் கல்ல போடுவோம்ல" இது சுரேஷ்

" அதெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில ஆகுமாடா? நான் ஏதோ காலேஜ்ல படிச்சேன் அதனால நெறய பேர் பழக்கம் இருக்கு.. நீங்க தண்ட சோறு. காலேஜுலயும் படிக்கறதில்ல. வேலைக்கும் போகறதில்ல. பின்ன எப்படிடா உங்களுக்கெல்லாம் பொம்பள பிரண்டு அமையும்?"

"டேய் அதான் நீயே சொல்றீல்ல. ஏதோ ஒரு நம்பர் குடுறா. நாங்க பிக்கப் பண்ணிக்கறோம்" சூர்யா பேருக்கு ஏத்தமாதிரி சூடாய்ட்டான்,

இந்த நண்பர்களப் பாருங்களேன். உலகத்தில எத்தனை பிரச்சனை நடக்குது.. இவங்களுக்கு கேர்ள் பிரண்டு கெடக்கலயாம். அது பெரிய பிரச்சனையாயி இன்னொருத்தங்கிட்ட பிச்சை கேட்கறமாதிரி கேட்கறானுங்க.......

" சரிடா சுரேஷு! ஒரு நம்பர் தரேன். ஆனா நான் தந்ததா அவகிட்ட சொல்லக் கூடாது"

" அப்படியெல்லாம் சொல்லிருவோமாடா? நீ நம்பர் மட்டும் கொடு! அந்த பொண்ண பிரண்டு ஆக்கிடறோம்"

"சரி இந்தா நோட் பண்ணூ!.. 98..........."

"தேங்ஸ்டா மாமு! இதுமட்டும் பொண்ணுன்னு தெரிஞ்சுது; உனக்கு KR ல பார்ட்டி அரேஞ்ச் பண்ணுறேன்..." சூர்யா.

" சரி! நான் கிளம்பறேன்.. நம்பற மிஸ் யூஸ் பண்ணாதீங்க"

" ஒகே. பய்"

சுரேஷ், " டேய் போன் பண்ணலாமாடா?"

" போடா இவனே! மொதல்ல ஒரு SMS கொடு. எடுத்தவுடனே ஃபோனப் பண்ணி மானத்த வாங்காத. நீ என்னன்னு அவகிட்ட பேசுவ? forward SMS கொடு. பதில் அனுப்புனாள்னா நீயும் ரிப்ளை பண்ணு. ரெண்டு நாளைக்கு இப்படியே கொடுத்துட்டு இரு. அப்பறம் பேசலாம். உனக்கு சந்தேகம் இருந்தா ஏதாவது ஒரு DOT லைன்ல இருந்து ராங் கால் பண்ணு. தெரிஞ்சுருமில்ல."

"அதுவும் சரிதான். இருந்தாலும் உனக்கு அனுபவம்டா. ஒரு SMS அனுப்பறேன். பாக்கலாம். என்ன ரெஸ்பான்ஸ் இருக்குனு."

Message Sent...................

kiin kiin kiin

" ரிப்ளை வந்துருச்சுடா சூரி. "

" என்னன்னு படிடா"

' Who is this"

"யார்ன்னு கேக்குறா. என்ன டைப் பண்ணி அனுப்பறது?"

" பாலா ன்னு போடுடா. நம்ம பேர அவ்வளவு சீக்கிரம் லீக் பண்ணக்கூடாது,, அப்பறம் பின்னாடி ஏதாவது பிரச்சனைன்னா மாட்டிக்குவோம்."

"மாப்ள! இன்னிக்கிதாண்டா உனக்கு அறிவு இருக்கறதே கண்ணுக்குத் தெரியுது"

"ரொம்ப புகழாத. ரெப்ளை பண்ணிட்டியா?"

" பண்ணிட்டேன்"

"என்ன பண்ணுன?"

" I m Bala from erode. may i know whoz that?"

" பின்றடா. பார்க்கலாம். என்ன பதில் அனுப்பறான்னு!//

கீங் கீங். கீங் கீங்.

" வந்துருச்சுடா ரெப்ளையி....... i m sindu from covai. டேய் அவன் சொன்னமாதிரி இது பொண்ணுதாண்டா, பேசலாமா? ஆசையா இருக்குடா"

" வேணாம்டா. இப்படியே மெஸேஜ் அனுப்பியே ரெண்டு நாளைக்கு ஓட்டுவோம். அப்பறமா பாக்கலாம்."

"அதுவும் சரிதான்"

அவனவன் பணமில்லை. பாத்திரமில்லன்னு லோ லோன்னு அலையறான். பாத்தீங்களா இவனுங்க அலையறத.... என்ன பண்னச் சொல்றீங்க. நம்ம பசங்களே இப்படித்தான். கேர்ள்பிரண்டுக்கு ஆயிரத்தெட்டு செலவு பண்ணுவானுங்க. வூட்ல அம்மாவுக்கு ஒரு செலவுன்னா. "எழவு கம்முனு கெட" அப்படிம்பானுங்க.... ம்ம்ம்ம்ம்ம் வயசு அப்படி... சரி
இந்த பசங்க இப்படியே SMS அனுப்பீட்டு இருந்தானுங்க. அப்படியே எடையிடையில செல்லம், புஜ்ஜு, கண்ணு அப்படின்னு வார்த்தைகளை போட்டு அந்த பொண்ண நல்லா கவர்ந்துட்டானுங்க. அதுவும் பாவம் என்ன செய்ய? ஏதோ கடலை போடறதுக்க ரெண்டுபேரு கெடச்சானுங்கன்னு பேசிக்கிட்டு இருக்கு...... அட எப்ப பேசுனாங்க அப்படீன்னு கேக்கிறீங்களா? இவனுங்க கையி சும்மாவா இருக்கும்? ஒரு நாள் போன் பண்ணவான்னு கேட்டானுங்க. அந்த பொண்ணும் சரின்னுட்டா... விளைவு? டெய்லியும் 50 ரூபாய்க்கு ரிசார்ஜ் பண்ணி அப்பங்காச கரியாக்கிட்டு இருக்கானுங்க. சரி சரி அப்பறம் என்னாச்சுன்னு பாக்கலாம்.

" டேய் அவ நெஜமாவே கோயம்புத்தூரா? போய் பாத்துடலாமா? எனக்கு அவ எப்படி இருக்குறான்னு பாக்கனும்டா"

" எனக்கு அதே ஆசைதான். ஆனா திடீர்னு போனா நல்லா இருக்காது.. இன்னொருநாளைக்கு போலாம்"

சூர்யா மனசுக்குள்ளே... இவன எப்படியாவது கலட்டி உடனுமே! என்ன செய்யலாம்? பேசாம அந்த பொண்ணுகிட்ட இவனப்பத்தி இல்லாததும்பொல்லாததுமா போட்டுகொடுத்துட்டா,????

" ஹாய்டா சிந்து எப்படி இருக்கே? "
" ஃபைன் செல்லம். நீ.? ஏண்டா ரெண்டு நாள போன் பண்ல?"
"கொஞ்சம் வேலை இருந்துச்சுமா. அதனாலதான்."
" என்ன பொல்லாத வேல. எங்கிட்ட கூட பேசமுடியாம! எப்ப ஊருக்கு வரப்போற..?"
" தோ கிளம்பிட்டேன்."
"டேய் நிஜமாவா? அன்னிக்கி மாதிரி ஏமாத்தமாட்டேல்ல?"
" நெஜமாத்தான். ஆனா நான் மட்டுந்தான் வரேன். அவன் வரல"
"ஏம்பா?"
"அவனுக்கு ஏதோ வேலை இருக்காம். அவனுக்கு நான் வரதுகூட தெரியாது. அவண்ட சொன்னா கூடவே வருவான். ஆனா வேலை விட்டுட்டுதான் வருவான். அதனாலதான் சொல்லல.,."
"சரிசரி. சீக்கிரமா வா! "
"ஓகே. டேக் கேர். நாம் கோயம்புத்தூர்ல மீட் பண்ணுவோம்... பய்"
"பய்டா"

சூர்யா ஒரு சிக்கல இனி மாட்டப்போறான்ன்னு தெரியாதே அவனுக்கு...... பாக்கலாம் சிந்துவை அவன் பாப்பானா? இல்லை ஊருக்கே திரும்பி வந்துருவானா?

தொடரும்......

மயூ
05-02-2007, 04:13 PM
அனுபவம்
அனுபவம்.
அனுபவம்..... ஹாஹா.... கலாய்ங்க ஆதவா!
இன்றய இள வட்டங்களிடையே நடக்கும் பொதுவான நிகழ்வு :) :p

ஒரு செய்தி..
நீங்க ரிங் கட் பண்ணி உடனே ரிங் பண்ற பெட்டையெண்டா... வேண்டாம் விட்டுடுங்க... பின்னாடி ரொம்பக் கஷ்டப்படுவீங்க :)
அது போல பெரும்பாலும் வடிவான பெட்டையள் நீங்க ரிங் கட் பண்ணிணாலொ அல்லது டெக்ஸ்ட் பண்ணிணாலோ அவ்வவளவா அலட்டிக்கொள்ள மாட்டாங்க!
இவை நான் ஆய்ந்து அறிந்த தத்துவங்கள்!!!!!!:eek: :D :cool:

ஆதவா
05-02-2007, 04:15 PM
அனுபவம்
அனுபவம்.
அனுபவம்..... ஹாஹா.... கலாய்ங்க ஆதவா!
இன்றய இள வட்டங்களிடையே நடக்கும் பொதுவான நிகழ்வு

ஒரு செய்தி..
நீங்க ரிங் கட் பண்ணி உடனே ரிங் பண்ற பெட்டையெண்டா... வேண்டாம் விட்டுடுங்க... பின்னாடி ரொம்பக் கஷ்டப்படுவீங்க :)
அட அனுபவமில்லீங்க.... கதை...........

மயூ
05-02-2007, 04:17 PM
அட அனுபவமில்லீங்க.... கதை...........
சரி சரி ஏதோ ஒன்று கதையைத் தொடர்ந்து சொல்லுங்க! :)

ஆதவா
05-02-2007, 04:20 PM
சரி சரி ஏதோ ஒன்று கதையைத் தொடர்ந்து சொல்லுங்க! :)

தொடர்ரேன். நம்ம சிறுகதை பெருசுகள் நிறஞ்சுருக்கிற மன்றத்தில இப்படி மொத மொதலா கதை எழுதிட்டு கருத்து கேட்டுட்டு அப்பறம் தொடரலாமேன்னு காத்துகிட்டு இருக்கேன்...

கண்டிப்பா தப்பு இருக்கு. ஆனா அது அவங்க சொன்னாதான் நல்லா இருக்கும்..

பார்கலாம். சிறுகதை எழுத்தாளனா நாம் ஆகிறுவோமான்னு????!!!!:)

ஆதவா
05-02-2007, 04:22 PM
அனுபவம்
அனுபவம்.
அனுபவம்..... ஹாஹா.... கலாய்ங்க ஆதவா!
இன்றய இள வட்டங்களிடையே நடக்கும் பொதுவான நிகழ்வு :) :p

ஒரு செய்தி..
நீங்க ரிங் கட் பண்ணி உடனே ரிங் பண்ற பெட்டையெண்டா... வேண்டாம் விட்டுடுங்க... பின்னாடி ரொம்பக் கஷ்டப்படுவீங்க :)
அது போல பெரும்பாலும் வடிவான பெட்டையள் நீங்க ரிங் கட் பண்ணிணாலொ அல்லது டெக்ஸ்ட் பண்ணிணாலோ அவ்வவளவா அலட்டிக்கொள்ள மாட்டாங்க!
இவை நான் ஆய்ந்து அறிந்த தத்துவங்கள்!!!!!!:eek: :D :cool:

உண்மைதாங்க....(ஹிஹி.. நல்ல அனுபவம்...) எல்லாருமே அப்படியில்ல... கடைசிக்கு யார்றா அது நம்மள தொந்தரவு பண்றதுன்னு போனே போட்டுருவாங்க......ஹிஹி எல்லாம் அனுபவம்தான்......:D

ஷீ-நிசி
05-02-2007, 04:24 PM
நல்லா போகுது ;)கதை;) ஆதவா...

அறிஞர்
05-02-2007, 04:25 PM
என்ன நைனா கலக்குறீங்க....

இளமை ஊஞ்சல் ஆடும் கதை...

இன்றைய இளைஞர் சமுதாயத்தின் நிலையை உங்கள் அனுபவத்தில், மன்னிக்கவும் கதையில் பார்க்க முடிகிறது...

பென்ஸ்
05-02-2007, 04:31 PM
சரி இனி உங்கதையை சொல்லு ஆதவா..... சாரி சூர்யா....

ஆதவா
05-02-2007, 04:40 PM
என்ன நைனா கலக்குறீங்க....

இளமை ஊஞ்சல் ஆடும் கதை...

இன்றைய இளைஞர் சமுதாயத்தின் நிலையை உங்கள் அனுபவத்தில், மன்னிக்கவும் கதையில் பார்க்க முடிகிறது...

சரி இனி உங்கதையை சொல்லு ஆதவா..... சாரி சூர்யா....
ஆஹா!!!! நான் அப்பவே நெனச்சேன் சூர்யான்னு போடலாமா இல்ல வேறெதாவது போடலாமான்னு யோசிச்சேன்....:D

அறிஞர் மற்றும் பெஞ்சமின்...... ஏதாவது குறையிருந்தா சொல்லுங்க.. அடுத்த பதிவுல சரி செய்யறேன்...

அறிஞர்
05-02-2007, 04:51 PM
ஆஹா!!!! நான் அப்பவே நெனச்சேன் சூர்யான்னு போடலாமா இல்ல வேறெதாவது போடலாமான்னு யோசிச்சேன்....:D

அறிஞர் மற்றும் பெஞ்சமின்...... ஏதாவது குறையிருந்தா சொல்லுங்க.. அடுத்த பதிவுல சரி செய்யறேன்...
நல்லா இருக்கு...

கடலை போடுறதுன்னு சொல்லுவாங்களா! (இல்லை கல்லை போடுறதுன்னு... சொல்வது மொழி வழக்கமா.... நம்மாளுங்க.. சில பேர் எதுக்குடா.. பொண்ணுங்க தலையில் கல்லை போடனும்.. கேட்க போறாங்க...)...

எளிமையான, இயல்பான எழுத்துக்களே.. வெற்றி பெறும். இதை மாதிரி தொடருங்கள்.. இது என் கருத்து..

பெண்ஸூ அவர் கருத்தை தருவார்..

மயூ
05-02-2007, 04:53 PM
தெளிவான எளிய நடை!
என் தேர்வு இதுதான்! பென்ஸூ அண்ணா எங்க போயிட்டியள்... இங்க ஒரு விமர்சனம் காத்து காத்து ஏங்குதுங்கோ!

மன்மதன்
05-02-2007, 06:25 PM
கண்ணால் கண்ட காட்சிகளை இப்போ கதையாய் படிப்பது போல இருக்கு, தொடருங்க ஆதவா..அப்புறம் என்ன ஆச்சு???

மன்மதன்
05-02-2007, 06:32 PM
உங்கள் கதையின் தாக்கத்தில் உங்களுக்கு நான் அனுப்பிய எஸ்.எம்.எஸ் இங்கே பிரஸ் பண்ணவும். (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=172461#post172461)

மனோஜ்
05-02-2007, 06:43 PM
ஆதவா கதை ஓகே அதேன்ன கதைகுள் ஒருதரு இம்சைய கொடுக்கிறார் :D :D :D :D :D
அவர் இம்சையும் நல்லாதா இருக்கு தொடருங்கள்.....

pradeepkt
06-02-2007, 04:01 AM
அனுபவம்
அனுபவம்.
அனுபவம்..... ஹாஹா.... கலாய்ங்க ஆதவா!
இன்றய இள வட்டங்களிடையே நடக்கும் பொதுவான நிகழ்வு :) :p

ஒரு செய்தி..
நீங்க ரிங் கட் பண்ணி உடனே ரிங் பண்ற பெட்டையெண்டா... வேண்டாம் விட்டுடுங்க... பின்னாடி ரொம்பக் கஷ்டப்படுவீங்க :)
அது போல பெரும்பாலும் வடிவான பெட்டையள் நீங்க ரிங் கட் பண்ணிணாலொ அல்லது டெக்ஸ்ட் பண்ணிணாலோ அவ்வவளவா அலட்டிக்கொள்ள மாட்டாங்க!
இவை நான் ஆய்ந்து அறிந்த தத்துவங்கள்!!!!!!:eek: :D :cool:

நான் என்னமோ நீ முகாமை தகவல் தொழில்நுட்பம் எல்லாம் படிக்கிறதுக்குக் கல்லூரிக்குப் போறேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்... :angry:

pradeepkt
06-02-2007, 04:01 AM
ஆதவா தொடருங்கள் உங்கள் குறுஞ்செய்திக் கோவையை!

சே-தாசன்
06-02-2007, 04:10 AM
நான் என்னமோ நீ முகாமை தகவல் தொழில்நுட்பம் எல்லாம் படிக்கிறதுக்குக் கல்லூரிக்குப் போறேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்... :angry:

சரியா சொன்னீங்க ப்ர்தீப் அண்ணா எப்பிடி மயூரேசன் அண்ணாவைப் பற்றி இப்படி கரெக்டா சொல்றீங்க? :)

pradeepkt
06-02-2007, 04:12 AM
சரியா சொன்னீங்க ப்ர்தீப் அண்ணா எப்பிடி மயூரேசன் அண்ணாவைப் பற்றி இப்படி கரெக்டா சொல்றீங்க? :)
பாம்பின் கால் பாம்பறியும் :D
கிருஷாந்த் மயூரேசன் மீது ஒரு கண்... வேண்டாம்... இரு கண்ணையுமே வைத்திரு. ஏற்கனவே பல கண்கள் அவன்மீது படிவதாயும் அவன் கண்கள் பலர் மீது படிவதாயும் கொழும்பில் இருந்து வரும் பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. :D :D

சே-தாசன்
06-02-2007, 04:12 AM
அருமையான் கதை. ஆனால் இடைவேளை மட்டும் வேண்டாமே. தொடருங்கள்.

மயூ
06-02-2007, 05:41 AM
பாம்பின் கால் பாம்பறியும் :D
கிருஷாந்த் மயூரேசன் மீது ஒரு கண்... வேண்டாம்... இரு கண்ணையுமே வைத்திரு. ஏற்கனவே பல கண்கள் அவன்மீது படிவதாயும் அவன் கண்கள் பலர் மீது படிவதாயும் கொழும்பில் இருந்து வரும் பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. :D :D
உதவிக்கு வருவாங்க என்டோட கம்பஸ் பொடியள் எண்டு பார்த்தா கவுக்குறாங்களெ!
கிருஷாந்..! நோட்ஸ் கேட்டு வருவீங்கள்ல அப்பேக்க கவனிக்கிறன்...! (ஏன் எண்டா என்னட்ட 2ம் ஆண்டுக்குரிய நோட்ஸ் ஒன்றும் இல்லை) :eek: :D

சே-தாசன்
07-02-2007, 01:59 AM
உதவிக்கு வருவாங்க என்டோட கம்பஸ் பொடியள் எண்டு பார்த்தா கவுக்குறாங்களெ!
கிருஷாந்..! நோட்ஸ் கேட்டு வருவீங்கள்ல அப்பேக்க கவனிக்கிறன்...! (ஏன் எண்டா என்னட்ட 2ம் ஆண்டுக்குரிய நோட்ஸ் ஒன்றும் இல்லை) :eek: :D

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா :D

அறிஞர்
07-02-2007, 01:10 PM
எப்ப ஆதவா.. இது தொடரும்...

ஆவலுடன்...

ஆதவா
08-02-2007, 03:43 PM
ரெண்டு நாட்கள் அதிகப்படியான வேலைகள் இருந்தமையால் மன்றத்திற்கு அவ்வளவாக பங்களிக்கமுடியவில்லை........ மன்னிக்கவும்....நாளை எழுதுகிறேன்...

logini
19-03-2008, 06:21 AM
ரெண்டு நாட்கள் அதிகப்படியான வேலைகள் இருந்தமையால் மன்றத்திற்கு அவ்வளவாக பங்களிக்கமுடியவில்லை........ மன்னிக்கவும்....நாளை எழுதுகிறேன்...

என்ன ஆதவா ஒரு வருடமும் ஆகிவிட்டது கதை தொடரவில்லையே??????????

மன்மதன்
19-03-2008, 12:44 PM
என்ன ஆதவா ஒரு வருடமும் ஆகிவிட்டது கதை தொடரவில்லையே??????????

ம்ம் பல நம்பர் மாறிப்போச்சு:D இப்ப எப்படி நியாபகம் இருக்கும்..:rolleyes:

என்னவன் விஜய்
19-03-2008, 04:49 PM
கோயம்புத்தூர்ல
சூர்யாகிட்ட யாரோ பிக்பக்கட் அடிச்சுட்டங்க அதனால பணமும் போய் முகவரியும் போய் செல்லும் போய்...................

சிந்துவின் நினைவுமட்டும் தான் ........................

ஆதவா நன்றாக எழுதி இருந்திங்க,மிகுதி எங்கே?

MURALINITHISH
31-10-2008, 09:23 AM
ஆதவா நன்றாக எழுதி இருந்திங்க,மிகுதி எங்கே?

அதானே அழகாக ஆரம்பிச்சு முடிக்க விட்ட எப்படி

KONGU
25-08-2010, 12:05 PM
கதை நல்லா இருக்கு....!

த.ஜார்ஜ்
26-08-2010, 09:04 AM
இந்த புரளிய மறுபடி கிளப்பி விட்டது யாரு..
அவருதான் அத மறந்துட்டு... இப்ப புதுசா யாரோ ஒரு...

சூரியன்
26-08-2010, 09:10 AM
வருசக்கணக்கா தூங்கீட்டு இருந்த கதையை தட்டி எழுப்பியாச்சு,
ஆதவரே இத கொஞ்சம் கவனிச்சுட்டு போங்க..:)

ஆதவா
26-08-2010, 09:52 AM
நண்பர்களே... இக்கதை தொடர்கதையாக எழுத நினைத்து அப்போதைய சூழ்நிலையில் எழுத முடியாமல் பிறகு கதையினைச் சுருக்கி, சிறுகதையாக்கி எழுதிய கதை இதோ!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7956)