PDA

View Full Version : யார் பக்கம் நீங்கள்?



ஆதவா
04-02-2007, 05:15 PM
நண்பர்கள்! பலர் ஈழத்திலிருந்து எழுதுகிறார்கள். எல்லாரும் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு மொழியை தாய்மொழியாகக் கொண்டாலும் தாய்நாடு என்ற பாசம் இருக்குமல்லவா?

விளையாட்டு இரு நாடுகளையும் இணைக்கும் என்கிறார்கள். அதன்படி விளையாட்டில் ஒரு வினை ஆரம்பிக்கிறேன்.

பிப்ரவரி எட்டுமுதல் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே போட்டிகள் தொடங்க இருக்கின்றன... இந்தியாவைப் பொருத்தவரை நிறைய பிளஸ் பாயிண்டுகள் இருந்தாலும் இன்னும் நம்பிக்கை இல்லை... இலங்கை கடல்கடந்து போய் தோற்றாலும் நம்மவர்களைப் போல மீசையில் மண் ஒட்டுமளவிற்கு மண்ணைக் கவ்வவில்லை........ கிட்டத்தட்ட சமபலம்தான்..... இச்சூழ்நிலையில் ஈழத்து திருமகன்கள் யாருக்கு ஆதரவு கொடுக்கப் போகிறீர்கள்................

தாய்மொழி நாடான இந்தியாவுக்கா? அல்லது தாய்நாடான இந்தியாவுக்கா?

வாக்களியுங்கள்..........................

பிகு: ( இது இலங்கை வாழ் நண்பர்களுக்கு மட்டும்..... கருத்து யார்வேண்டுமானாலும் சொல்லலாம் வாக்குமட்டும் அவர்களிடம் விட்டு விடலாம்.... நமக்கு வேண்டுமென்றால் தனி திரி தொடங்கிவிடலாம்.... )

மதுரகன்
04-02-2007, 05:18 PM
நாங்கள் இந்தியாவை யாசிக்கவில்லை
சுவாசிக்கிறோம்...

மன்மதன்
04-02-2007, 06:56 PM
நமக்கு எதுக்கு தனியாக திரி.? ஒட்டு மொத்த இந்தியாவே தமிழ் மன்றத்தைதானே ஆதரிக்கிறது..:rolleyes:

மயூ
05-02-2007, 04:55 PM
இந்தியா ஏனோ தெரியாது இனம் புரியாத ஈர்ப்பு!
சில வேளைகளில் ஸ்ரீ லங்கா மேலுல்ல வெறுப்பாலோ தெரியாது!!

ஆதவா
05-02-2007, 05:10 PM
பாருங்க யாரோ இலங்கைய ஆதரிக்கிறாங்க.....

அறிஞர்
06-02-2007, 01:29 PM
இந்திய இந்த முறை பலமான அணி போல் காட்சியளிக்கிறது.. இந்தியாவுக்கு எனது ஓட்டு.

இலங்கை சொந்தங்கள், தாய் நாட்டை ஆதரிப்பர் என எண்ணுகிறேன்.

ஷீ-நிசி
06-02-2007, 02:04 PM
எப்போதுமே என் ஆதரவு இந்தியாவிற்குதான்..

maganesh
06-02-2007, 02:45 PM
நண்பர்கள்! பலர் ஈழத்திலிருந்து எழுதுகிறார்கள். எல்லாரும் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு மொழியை தாய்மொழியாகக் கொண்டாலும் தாய்நாடு என்ற பாசம் இருக்குமல்லவா?
தமிழ் எங்கே மதிக்கப்படுகின்றதோ அதுதான் நம் தாய் நாடு. தற்போது என்னைப்போன்றவர்களின் தாய் நாடு தமிழ்நாடுதான் அந்தவகையில் எனது வாக்கு இந்தியாவுக்கே. ஈழத்தில் தனித்தமிழீழம் கிடைத்து தமிழீழ அணி ஆடும்போது எனது வாக்கு மாறுபடலாம். ஈழத்து உறவுகளின் அதிக ஆதரவு இந்திய அணிக்கே.

மதுரகன்
06-02-2007, 04:36 PM
ஈழத்தில் தனித்தமிழீழம் கிடைத்து தமிழீழ அணி ஆடும்போது
இது எம் பேரப்பிள்ளைகளால் கூட முடியுமோ என்னவோ..?

மயூ
07-02-2007, 02:38 PM
இது எம் பேரப்பிள்ளைகளால் கூட முடியுமோ என்னவோ..?
நம்பிக்கை
நம்பிக்கை.....
இந்தியா மனசு வைச்சால் சாத்தியம்... மற்றும்படி... பழைய குப்பைதான்.. எங்கட பேரப்பிள்ளைகளும் ஏதாவது தூக்கிக்கொண்டு அடிபட வேண்டியதுதான்.... :confused:

maganesh
07-02-2007, 03:09 PM
இது எம் பேரப்பிள்ளைகளால் கூட முடியுமோ என்னவோ..?முடியும் என்று நினைத்தால் மலை கூட பஞ்சாகும். முடியாது என நினைதால் நம் நிழல் கூட பாரமாகும் முடியும் என்று நினைப்போமே.

மதுரகன்
08-02-2007, 05:51 PM
இந்தியா மனசு வைச்சால் சாத்தியம்... மற்றும்படி... பழைய குப்பைதான்.. எங்கட பேரப்பிள்ளைகளும் ஏதாவது தூக்கிக்கொண்டு அடிபட வேண்டியதுதான்....

அது கடைசிவரை நடக்காது இறுதிவரை மீண்டும் இந்தியபுடியரசு காலடி வைக்காதென்றே நம்பலாம்...
அது பற்றி வாதாட இரு பொருத்தமான இடமும் அல்ல...


முடியும் என்று நினைத்தால் மலை கூட பஞ்சாகும். முடியாது என நினைதால் நம் நிழல் கூட பாரமாகும் முடியும் என்று நினைப்போமே.

நினைப்பதில் என்ன இருக்கிறது மயூரன் செயலில் நடக்கவேண்டுமே..
பக்கத்தில் இருந்து பார்க்கும் எமக்கல்லவா தெரிகின்றது பாதை எப்படி திரும்புகின்றதென்று..

பாதிப்பேருக்கு நடப்பதெல்லாம் பார்த்துப்பார்த்தே வாழ்க்கை வெறுத்துவிட்டது...

maganesh
09-02-2007, 08:23 AM
நினைப்பதில் என்ன இருக்கிறது மயூரன் செயலில் நடக்கவேண்டுமே..
பக்கத்தில் இருந்து பார்க்கும் எமக்கல்லவா தெரிகின்றது பாதை எப்படி திரும்புகின்றதென்று..
திரும்பம் நிறைந்த பாதையின் முடிவைக் கணிப்பதைக் கணிப்பது கடினமல்லவா அது புதிய பாதையாக இருக்கும் பட்சத்தில்.

ஓவியன்
12-02-2007, 08:21 AM
போகிற போக்கினைப் பார்த்தால் இந்தியாவின் நிலமை மோசமாக உள்ளதே!

முதல் ஆட்டத்திலே மழை வென்றது

வெற்றி பெற வேண்டிய இரண்டாவது ஆட்டத்திலே இந்தியா தோல்வியை ஏற்றது.

maganesh
12-02-2007, 08:31 AM
போகிற போக்கினைப் பார்த்தால் இந்தியாவின் நிலமை மோசமாக உள்ளதே!
முதல் ஆட்டத்திலே மழை வென்றது
வெற்றி பெற வேண்டிய இரண்டாவது ஆட்டத்திலே இந்தியா தோல்வியை ஏற்றது.
இலங்கையின் துடுப்பாட்டத்தைக் காட்டிலும் பந்து வீச்சுச் திறமையே காரண்மாக இருக்குன்றது. இலங்கை அணியின் பழைய தந்திரமான ஜயசூர்யாவை இறுதி ஓவர் வீசச் செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள்.

அறிஞர்
12-02-2007, 01:40 PM
இரண்டாவது ஆட்டத்தில் சங்காகாராவின் ஆபார ஆட்டத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி..

இந்தியாவிற்கு வாய்ப்பிருந்தும் நழுவ விட்டது அதிசயமாக உள்ளது.

அறிஞர்
14-02-2007, 03:17 PM
என்னப்பா இந்தியா மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெற்றிப் பெற்று இருக்கிறார்கள்...

யாரும் ஒன்றும் சொல்லக் காணோம்.

ஆதவா
14-02-2007, 03:24 PM
என்னப்பா இந்தியா மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெற்றிப் பெற்று இருக்கிறார்கள்...

யாரும் ஒன்றும் சொல்லக் காணோம்.


இதுலயும் நம்மாளுங்க ஏகப்பட்ட தவறுகள் செஞ்சு இருக்காங்க..... முதல் தவறு.. சேவக்........... ஒரு காலத்துல சேவக் இருந்த நிலைமையில நான் ரொம்ப ரசிச்சு பார்த்தேன் அவரோட ஆட்டத்தை.. இப்போ சகிக்கல.....


230 ஐயும் கடைசி வரைக்கும் போய்தானே எடுத்தாங்க.....

Mathu
14-02-2007, 03:29 PM
ஹிம்.... ஷகீர்கானின் பந்துவீச்சு மீண்டும் ஒருமுறை கைகொடுத்திருக்கிறது. 42/5விக்கட்.
ஆனால் சிறிய டாக்கெட்டுகே அணி தடுமாறுவதுபோல் இருக்கே...!

டோனி, டிராவிட், தாதா நிதானமான ஆட்டம் ;) :D ;)

வாழ்த்துகள் அணிக்கு

ஆதவா
14-02-2007, 03:32 PM
ஹிம்.... ஷகீர்கானின் பந்துவீச்சு மீண்டும் ஒருமுறை கைகொடுத்திருக்கிறது. 42/5விக்கட்.
ஆனால் சிறிய டாக்கெட்டுகே அணி தடுமாறுவதுபோல் இருக்கே...!

டோனி, டிராவிட், தாதா நிதானமான ஆட்டம் ;) :D ;)

வாழ்த்துகள் அணிக்கு

உண்மைதான்.....

ஷீ-நிசி
14-02-2007, 03:51 PM
சூப்பர் ஃபார்மில் இருக்கும் தல கங்குலிக்கு வாழ்த்துக்கள்

sham
15-02-2007, 05:14 AM
இலங்கைத் தேசிய அணிக்கு எனது ஆதரவுகளை என்றுமே வழங்கியதில்லை. இலங்கை எந்த அணியை எதிர்த்து ஆடுகிறதோ எதிரணி எவ்வணியாக இருந்தாலும் பரவாயில்லை எதிரணிக்கே எனது ஆதரவுகள். தமிழீழம் மலர்ந்து தமிழீழத்திலிருந்து உருவாகும் தமிழ்த்தேசிய அணியே எனது பலகால எதிர்பார்ப்பு. அதுவரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு வழங்க காத்திருக்கும் இந்தியத்தமிழர்களுக்காக எனது ஆதரவு முழுவதும் இந்தியாவுக்கே>>>>>>>