PDA

View Full Version : ஓவியனின் அறிமுகம்.



ஓவியன்
04-02-2007, 05:41 AM
அன்பார்ந்த தமிழ் உறவுகளே!

நான் தொழில் நிமித்தம் புலம் பெயர்ந்து வாழும் ஒரு ஈழத்துத் தமிழன், எனது சொந்த பிரேதேசம் இலங்கையின் அரசியல் தலைவிதியினை இன்று நிர்ணயித்துக் கொண்டிருக்கும் வன்னி என்பதிலே பெருமை கொள்கின்றேன்.

ஓவியம், வரலாறு, இலக்கியம் போன்றவற்றிலே மிகுந்த ஈடுபாடு கொண்ட நான் எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை அறிந்து கொள்ளவும் இந்த தமிழ் மன்றம் ஒரு சரியான தளமாக அமையுமென்ற நம்பிக்கையுடன் எனது அறிமுகத்தை நிறைவு செய்து கொள்கின்றேன்.


நன்றி

வணக்கம்.

leomohan
04-02-2007, 07:01 AM
அன்பார்ந்த தமிழ் உறவுகளே!

நான் தொழில் நிமித்தம் புலம் பெயர்ந்து வாழும் ஒரு ஈழத்துத் தமிழன், எனது சொந்த பிரேதேசம் இலங்கையின் அரசியல் தலைவிதியினை இன்று நிர்ணயித்துக் கொண்டிருக்கும் வன்னி என்பதிலே பெருமை கொள்கின்றேன்.

ஓவியம், வரலாறு, இலக்கியம் போன்றவற்றிலே மிகுந்த ஈடுபாடு கொண்டவன் நான் எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை அறிந்து கொள்ளவும் இந்த தமிழ் மன்றம் ஒரு சரியான தளமாக அமையுமென்ற நம்பிக்கையுடன் எனது அறிமுகத்தை நிறைவு செய்து கொள்கின்றேன்.


நன்றி

வணக்கம்.
வாருங்கள் ஓவியன். உங்களுக்கு நல்வரவு.

எம் மன்றத்தில் ஏற்கனவே ஒரு ஓவியா உண்டு. :)

பரஞ்சோதி
04-02-2007, 07:05 AM
மன்றத்தில் உதயமாகி இருக்கும் புதிய உறவினை வருக வருக என வரவேற்கிறேன்.

thoorigai
04-02-2007, 09:18 AM
வாரும் ஓவியனே (ரே),
(தமிழ்) வண்ணக் கோலத்தினால் மன்றத்தினை அலங்கரிக்க வாரும்.
வாழ்த்துக்கள்

மயூ
04-02-2007, 10:29 AM
ஓவியனே வருக!
உங்கள் அறிமுகத்தால் இன்னுமொருவரும் மன்றத்தில் இணைந்துகொண்டுள்ளாரே! வாழ்த்துக்கள்..
ஈழத்திலே பிறந்து வளர்ந்த போதும் இன்னமும் வன்னியைப் பார்க்காத குறை மனததில் உண்டு.. உங்களைப் பார்த்தாவது அதைக் களைந்து கொள்ளலாம் தானே!

ஆதவா
04-02-2007, 10:52 AM
வாங்க ஓவியன்............. உள்வரவு நல்வரவு

Mano.G.
04-02-2007, 02:58 PM
வாங்க ஓவியன் அவர்களே,
உங்களை இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி


மனோ.ஜி

மதுரகன்
04-02-2007, 03:47 PM
வாங்க ஓவியன் உங்க வரவு நல்வரவாகுக..
ஏற்கனவே ஓவியான்னு ஒருவர் இருந்துகொண்டு செய்யும் லொள்ளுகள்போல் நீங்களும் செய்யமாட்டீர்கள் என நம்புகிறேன்...

மன்மதன்
04-02-2007, 05:28 PM
வாருங்கள் ஓவியன். உங்கள் படைப்புகளை இங்கே தீட்டுங்கள்.

ஓவியன்
05-02-2007, 04:25 AM
என்னை மனதார வரவேற்ற அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்!

ஓவியன்
05-02-2007, 04:27 AM
எம் மன்றத்தில் ஏற்கனவே ஒரு ஓவியா உண்டு. :)

அப்படியா செய்தி!

அவருடன் நட்பு கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றேன்!

சே-தாசன்
05-02-2007, 04:32 AM
ஓவியனின் வரவு நல்வரவாகுக.

அறிஞர்
05-02-2007, 02:04 PM
நண்பர் ஓவியனின் வருகை.. மன்றத்தை சிறப்பிக்கட்டும்.

தங்களின் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்...

ஷீ-நிசி
05-02-2007, 03:42 PM
வாருங்கள் நண்பரே! வாழ்த்துக்கள்

pradeepkt
06-02-2007, 03:32 AM
வாங்க ஓவியன்.
ஏற்கனவே சகோதரி ஓவியா கலக்கிக்கிட்டு இருக்காங்க.
நீங்களும் உங்கள் ஓவியப் படைப்புகளைக் கொடுங்கள்.

விகடன்
08-02-2007, 04:34 PM
வணக்கம் ஓவியன்,

உமது வரவும் நல்வரவாகுக. உமக்கு தமிழில் நல்ல புலமை இருப்பதாக அறிந்திருந்தேன். அதுமட்டுமின்றி cஇத்திரத்தை உயிரோட்டத்துடன் வரையும் வல்லமை படைத்தவர் என்றும் அறிந்திருக்கிறேன். உங்களது திறமைகளை இதிலும் காட்டி தளத்தின் மேம்பாட்டிற்கு பாடுபட வாழ்த்துகிறேன்.

மனோஜ்
08-02-2007, 06:37 PM
வணக்கம் ஓவியன்
மன்றத்தில் ஓவியமாக திகழ வாழ்த்துக்கள்

paarthiban
09-02-2007, 08:08 AM
வாருங்கள் ஓவியன் அவர்களே. அன்புடன் வவரேற்கிறோம்.

ஓவியா
09-02-2007, 04:06 PM
வாங்க ஓவியன்.
ஏற்கனவே சகோதரி ஓவியா கலக்கிக்கிட்டு இருக்காங்க.
நீங்களும் உங்கள் ஓவியப் படைப்புகளைக் கொடுங்கள்.


:D :D :D

நான் வரவில்லையென்றாலும், என்னை நினவு கூறுகின்றீர்களே!! நன்றி சின்ன தல

ஆமா, என்னை வச்சு கீமேடி பன்னவில்லையே தலிவா :D

ஓவியா
09-02-2007, 04:18 PM
அப்படியா செய்தி!

அவருடன் நட்பு கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றேன்!

:eek: :eek: :D :D :) :)

வணக்கம் ஓவியன்,

நீங்க நட்பு கொள்ள ஆவலுடன் காத்திருக்கும் ஓவியா நாந்தான்.

தங்களை இருகரங்கூப்பி தமிழ்மன்றதிற்க்கு வருக வருகவென்று வரவேற்கிறேன்

அனைத்து தமிழ் எழுதுகளையும் கோர்த்து தங்களின் படைப்புகளை இங்கே வரையவும்.

வாழ்த்துக்கள் :)

ஓவியா
09-02-2007, 04:26 PM
வாருங்கள் ஓவியன். உங்களுக்கு நல்வரவு.

எம் மன்றத்தில் ஏற்கனவே ஒரு ஓவியா உண்டு. :)

மோகன் சார் வணக்கம்

முதலில் எம் மன்றம் என்ற தங்களின் உரிமை பாராட்டுக்கு மிக்க நன்றி. தங்களின் தொண்டு என்றும் மன்றத்தை சிறப்பிக்கட்டும். :)

அடுத்து எம்மை நினைவுகூர்ந்தமைக்கும், நன்றீங்க தலிவா :D

ஓவியன்
10-02-2007, 08:30 AM
:eek: :eek: :D :D :) :)

வணக்கம் ஓவியன்,

நீங்க நட்பு கொள்ள ஆவலுடன் காத்திருக்கும் ஓவியா நாந்தான்.

:)


ஆகா!

வந்து விட்டீர்களா!

உங்களது வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள் கோடி!........

சொல்லிட்டீங்க இல்ல இனி கலக்கிடுவோம் ஒரு கலக்கு!!!!!!!!

sham
10-02-2007, 08:43 AM
வருக ஓவியனே. வன்னிமண் சிறப்பை எடுத்துரைப்பீராக.........

ஓவியன்
12-02-2007, 08:09 AM
வருக ஓவியனே. வன்னிமண் சிறப்பை எடுத்துரைப்பீராக.........

வன்னி மண்ணினைப் பற்றி ஒரு தனித் திரி தொடக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் ஒரு வார்த்தையில் அதன் சிறப்பைச் சொல்லலாம்
வன்னி மண் - வணங்கா மண்

maganesh
12-02-2007, 08:47 AM
வன்னி மண் - வணங்கா மண்
அந்தக் காலந்தொட்டு அது அடங்கா மண். வெள்ளையர் காலத்திலே அது அடங்காப் பற்று என்றும் அழைக்கப்பட்டது. வெள்ளையர் இலங்கையில் இறுதியாகக் கைப்பறிய இடம் வன்னி மண்தான். உங்க முயற்சியைத் தொடங்குங்கள். முடிந்தளவு தகவல்களை பகிர்வேன்.

ஓவியன்
22-02-2007, 07:13 AM
உங்க முயற்சியைத் தொடங்குங்கள். முடிந்தளவு தகவல்களை பகிர்வேன்.

நன்றி நண்பரே!

உங்களது பெயரே எனது சகோதரரினதும் பெயர், உங்கள் கருத்துக்களைப் பார்க்கும் போது எனது சகோதரனின் கருத்துக்களைப் பார்ப்பது போல உள்ளது.

அன்புரசிகன்
23-02-2007, 10:42 AM
வன்னி மண்ணினைப் பற்றி ஒரு தனித் திரி தொடக்கும் எண்ணம் உள்ளது.

உங்களது பெயரே எனது சகோதரரினதும் பெயர், உங்கள் கருத்துக்களைப் பார்க்கும் போது எனது சகோதரனின் கருத்துக்களைப் பார்ப்பது போல உள்ளது.

ஆகவே 2 x மயூரன் + 1 x ஓவியன். போதாதா என்ன? அடிக்கிற அடியில் தாளத்தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாமா? ம் ம் .. பட்டையை கிளப்புங்கள். அடி யேதும் எடுத்துதரவேண்டியதாயின் தகுந்தவர்களை நாடுங்கள். வாழ்த்துக்கள்.

மதி
23-02-2007, 01:19 PM
ஓவியனுக்கு வரவேற்புகள்..!

இளசு
23-02-2007, 06:08 PM
ஓவியன் என்ற அழகான பெயருடன்
இனிமையான அறிமுகத்துடன் வந்திருக்கும்
உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்..

ஓவியன்
25-02-2007, 05:41 AM
ஓவியன் என்ற அழகான பெயருடன்
இனிமையான அறிமுகத்துடன் வந்திருக்கும்
உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்..

நன்றிகள் அன்பரே!!!

உங்கள் வாழ்த்துக்கள் என்னைப் போன்ற பதியவர்களுக்கு என்றுமே ஏணிப் படிகள்!

விகடன்
15-03-2007, 07:55 PM
ஓவியன் என்ற அழகான பெயருடன்
இனிமையான அறிமுகத்துடன் வந்திருக்கும்
உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்..


நீங்கள் கவிதைகள் வரையும் திறமை உடையவரோ?

ஓவியன்
17-03-2007, 12:40 PM
நீங்கள் கவிதைகள் வரையும் திறமை உடையவரோ?

யாரிடம் கேட்கிறீர்கள் யாவா?

என்னிடமா இல்லை இந்தப் பதிப்பினைப் பதித்தவரிடமா?

விகடன்
24-03-2007, 04:48 PM
உங்கள் கதையைப்பார்த்தால் உங்களுக்கும் கவிதை வரையத்தெரியும் போல் உள்ளதே!

பரவாயில்லை நீங்களும் கவிதைகளை இரத்தினச் சுருக்கமாகத் தரலாம். தப்பிலை... தடையும் இல்லை.

ஓவியன்
25-03-2007, 03:16 AM
உங்கள் கதையைப்பார்த்தால் உங்களுக்கும் கவிதை வரையத்தெரியும் போல் உள்ளதே!

பரவாயில்லை நீங்களும் கவிதைகளை இரத்தினச் சுருக்கமாகத் தரலாம். தப்பிலை... தடையும் இல்லை.

அடடா!

வீணா வாயைக் கு(கெ)டுத்திட்டம் போல!!

:icon_tongue: :icon_tongue:

விகடன்
25-03-2007, 06:55 AM
அடடா!

வீணா வாயைக் கு(கெ)டுத்திட்டம் போல!!

:icon_tongue: :icon_tongue:
ஐயோடா...

அதுகூட உங்களிடம் இருக்கா!!!
அப்படியென்றால் பேசவும் வரும் இல்லையா?

இளசு
25-03-2007, 08:02 AM
அடடா!

வீணா வாயைக் கு(கெ)டுத்திட்டம் போல!!

:icon_tongue: :icon_tongue:

யாருங்க அது வீணா?:liebe028:
சொல்லவே இல்ல....

ஓவியன்
25-03-2007, 08:49 AM
யாருங்க அது வீணா?:liebe028:
சொல்லவே இல்ல....

அடடடா!

வம்பிலே மாட்டிவிடுவதென்றே கங்கணம் கட்டி வந்திருக்கீங்களா???

(கொசுறு - இதே பெயரில் சிறிய வயதில் ஒரு பெண் என்னுடன் படித்ததாக ஞாபகம். இப்போ எங்கே இருக்காங்களோ தெரியலை???)

:D :D

அன்புரசிகன்
25-03-2007, 10:40 AM
(கொசுறு - இதே பெயரில் சிறிய வயதில் ஒரு பெண் என்னுடன் படித்ததாக ஞாபகம். இப்போ எங்கே இருக்காங்களோ தெரியலை???):D :D
சிறியவயதில் படித்த, உங்களுடன் வம்பளந்த ... ஒரே பெண்கள் மயம் போங்க.... நீங்கள் ஒரு கண்ணன் ... (இல்லை நான் ஓவியன் என்று புளித்த கடி விடாதீர்கள்.)

ஓவியன்
25-03-2007, 11:03 AM
சிறியவயதில் படித்த, உங்களுடன் வம்பளந்த ... ஒரே பெண்கள் மயம் போங்க.... நீங்கள் ஒரு கண்ணன் ...

ஐயோ!
அதை ஞாபகப் படுத்தாதீங்க!, வெட்கமா இருக்கு.

:sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018:

march
25-03-2007, 01:28 PM
வர்ணங்கள் உன்னோடு போய்விட்டதால், தூரிகையுடன் மட்டும் காத்திருக்கிறான் இந்த ஓவியன் - மீண்டும் நீ வருவாயென (வர்ணங்களுடன்)

ஏன் மீண்டும் நீ வருவாயென (வர்ணங்களுடன்) வரவில்லை யென்றால் கடைக்கு போய் வர்னம் வாங்கி தூரிகையினால் வரைய வேண்டியது ஏன் காத்திருக்கவேண்டும்.

வித் லவ்
மார்ஷ்

ஓவியன்
25-03-2007, 01:47 PM
ஏன் மீண்டும் நீ வருவாயென (வர்ணங்களுடன்) வரவில்லை யென்றால் கடைக்கு போய் வர்னம் வாங்கி தூரிகையினால் வரைய வேண்டியது ஏன் காத்திருக்கவேண்டும்.[/B]


உங்களை சிறந்த கண்டு பிடிப்பாளருக்கான விருதுக்குச் சிபாரிசு செய்கிறேன்!

:aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033:

march
25-03-2007, 01:54 PM
சொலுசன் சொன்னேன் அவ்வளவுதான்

வித் லவ்
மார்ஷ்

விகடன்
25-03-2007, 05:17 PM
சிறியவயதில் படித்த, உங்களுடன் வம்பளந்த ... ஒரே பெண்கள் மயம் போங்க.... நீங்கள் ஒரு கண்ணன் ... (இல்லை நான் ஓவியன் என்று புளித்த கடி விடாதீர்கள்.)

அப்படி போடுங்க அன்புரசிகா,
இருந்தாலும்...
எப்படி இந்தளவு குறுகிய காலத்தில் ஓவியனின் இயல்பான சுபாவத்தை கண்டுபிடித்தீர்கள்?

அது சரி... இதெல்லாத்தையும் கண்டறிய என்ன இறக்கி அணியா வேண்டும்.

ஓவியன்
26-03-2007, 03:13 AM
அப்படி போடுங்க அன்புரசிகா,
.

எப்படிப் போடுறது யாவா?
இப்படியா :food-smiley-002: (நன்றி - ஆதவா)

ஹி,ஹி,ஹி!!!!!!!!!!!

விகடன்
26-03-2007, 10:09 AM
ஐயோ ஓவியனே!
உம்மை நினைத்து சிரிப்பதா அல்லது உமக்கு இப்படி ஆகிவிட்டதை நினைத்து கவலைப்படுவதா என்று தெரியவில்லை..

உம்மை நீரே கேலி பண்ணுவதாக அல்லவா நீர் வழங்கியது இருக்கிறது...

ஓவியன்
26-03-2007, 10:30 AM
ஐயோ ஓவியனே!
உம்மை நீரே கேலி பண்ணுவதாக அல்லவா நீர் வழங்கியது இருக்கிறது...

எனது அறிமுகத் திரியிலேயே என்னை நானே கேலி பண்ணியதாகக் கூறியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!
:icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap:

(இது தான் நம்ம தமிழ் மன்ற ஸ்டைலாக்கும்)

விகடன்
26-03-2007, 02:36 PM
[COLOR="DarkRed"]எனது அறிமுகத் திரியிலேயே என்னை நானே கேலி பண்ணியதாகக் கூறியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

என்னவோ தெரியவில்லை ஓவியன். உண்மைகளை தாமதமின்றி உடைத்துவிடுவேன். எதிரில் இருப்பவர் மனம் எப்படி சஞ்சலப்படும் என்று சிந்திப்பது மிகக் குறைவு. உண்மைதானே என்று ஒரு அலட்சியப்போக்குத்தான் காரணம். அந்த வகையில் உம்மைப்பற்றி உமது கருத்தைப்பற்றி உண்மையை சொல்ல நேரிட்டது..

உண்மையை சொல்வதையும் கண்ணிப்பீரோ..... சில நாட்டில் நடமுறையிலிருக்கும் தடைகளைப்போல....

பிச்சி
05-04-2007, 10:14 AM
வாங்க ஓவியன்
உங்க வரவு நல்வரவாகுக
பிச்சி

ஓவியன்
29-09-2007, 06:47 PM
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

மன்றத்தாயின் மடியிலே இது எனது எட்டாயிரமாவது பதிப்பு...
இந்த மன்றத்திலே என் முதல் பதிவைத் தொடங்கிய அதே திரியிலே என் எட்டாயிரமாவது பதிவைப் பதிப்பதில் கொள்ளை மகிழ்ச்சி.....

மீள நான் இந்த மன்றத்திலே நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்கிறேன், எனக்கே பிரமிப்பாக இருக்கின்றது, இரண்டாயிரம் பதிவுகளை எட்ட திக்கு முக்காடிய இந்த ஓவியன் எப்படி இவ்வளவு தூரம் வந்தான் என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன், அதற்கு காரணம் குடும்பம் போல் பழகி சகோதர சகோதரிகளாக கூடிக் குலாவி நல்லவனவற்றைத் தட்டிக் கொடுத்தும், அவ்வாறல்லாதவற்றை வெட்டித் திருத்தவும் தவறாத மன்ற உறவுகளின் அன்பின் நிழலில் நான் தங்கியிருப்பதன்றி வேறில்லை.

இந்த எட்டாயிரம் பதிவுகளில் தான் எத்தனை எத்தனை சந்தோசங்கள், ஆச்சர்யங்கள், சோகங்கள், பிரிவுகள்....
ஒரு குடும்பமாக கூடிக் குலாவும் போது சந்தோசம் இருக்கும் அதே வேளை சோகங்களும் பிரிவுகளும் இருக்கும் தானே........
எனக்கு முன்பெல்லாம் என்னால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஆனால் இப்போது காலம் தந்த அனுபவம் என்னும் பாடத்தில் எல்லாமே புரிகிறது.

இங்கே கிடைக்கும் பதவிகள், தகுதிகள் போன்றவை நிரந்தரமானவையல்ல...
அவை நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கும், மாறியே ஆகவேண்டும் அது தான் காலத்தின் நியதியும் கூட.....

ஆனால், இங்கே நாம் சம்பாதித்த சம்பாதித்துக் கொண்டிருக்கும், சம்பாதிக்கப் போகும் அன்பு உறவுகளின் பாசப் பிணைப்பும், இங்கே நாம் விதைக்கும் எங்கள் பதிவுகளின் எச்சங்களும் காலத்தினால் அழியாதவை. அந்த காலத்தினால் அழியாத அரும் சொத்துக்களை எங்களால் இயன்றவரை நாம் சம்பாதிக்க வேண்டும். நானும் அந்த நோக்கத்துடனேயே இந்த வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றேன்....

அத்துடன் அன்பு என்ற எதனையும் சாதித்துக் காட்டவல்ல ஆயுதத்தை சம்பாதிக்க வழி சமைத்த இந்த தமிழ் மன்றத்திற்கு எப்படி நன்றி சொல்வதென்று எனக்கு விளங்கவில்லை....
இருந்தாலும் கம்பராமயணத்தில் கம்பர் கூறியது போன்று, பாற்கடலை குடிக்க எத்தனிக்கும் ஒரு சிறு பூனை போல் இந்த மன்றத்திற்கும் மன்ற உறவுகளுக்கும் நன்றிகள் கூறி நிற்கின்றேன்.....

நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி..........

அன்புரசிகன்
29-09-2007, 06:54 PM
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!


அத்துடன் அன்பு என்ற எதனையும் சாதித்துக் காட்டவல்ல ஆயுதத்தை சம்பாதிக்க வழி சமைத்த இந்த தமிழ் மன்றத்திற்கு எப்படி நன்றி சொல்வதென்று எனக்கு விளங்கவில்லை....
இருந்தாலும் கம்பராமயணத்தில் கம்பர் கூறியது போன்று, பாற்கடலை குடிக்க எத்தனிக்கும் ஒரு சிறு பூனை போல் இந்த மன்றத்திற்கும் மன்ற உறவுகளுக்கும் நன்றிகள் கூறி நிற்கின்றேன்.....


நன்றி தலிவா... :D

உங்கள் எட்டாயிரம் பதிவில் உங்கள் வரவுத்திரியை நினைவுகூர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.

அமரன்
29-09-2007, 07:03 PM
அட ஓவியன் சொன்னது அன்பின் அர்த்தம் இதுதானா?:rolleyes::rolleyes::rolleyes:

ஓவியன்
29-09-2007, 07:03 PM
நன்றி தலிவா... :D

உங்கள் எட்டாயிரம் பதிவில் உங்கள் வரவுத்திரியை நினைவுகூர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.

மிக்க நன்றி அன்பு! :D

ஓவியன்
29-09-2007, 07:07 PM
அட ஓவியன் சொன்னது அன்பின் அர்த்தம் இதுதானா?:rolleyes::rolleyes::rolleyes:

ஏம்பா, நான் சீரியஸா எனது 8000 வது பதிப்பை பதித்தால் என்னை வைத்துக் காமெடி பண்ணுறீங்களே....? :fragend005:

இது உங்களுக்கே நியாயமா இருக்கா...??? :confused:

அன்புரசிகன்
29-09-2007, 07:26 PM
ஏம்பா, நான் சீரியஸா எனது 8000 வது பதிப்பை பதித்தால் என்னை வைத்துக் காமெடி பண்ணுறீங்களே....? :fragend005:

இது உங்களுக்கே நியாயமா இருக்கா...??? :confused:

அறிமுகப்பகுதியில் :icon_rollout: எவனாவது சீரியஸா பதிவானா...:lachen001::D

அறிமுகப்பகுதியின்னா அது நமது வார்த்தையில கலாய்ப்புப்பகுதி... :icon_b::medium-smiley-075::medium-smiley-080:

பூமகள்
30-09-2007, 05:28 AM
அன்பின் இலக்கணமாய் திகழும் அன்பு ஓவியன் அண்ணாவின் எட்டாயிரமாவது பதிவு நன்றி நவிழல் அதுவும் முதன் முதலில் காலடி எடுத்த வைத்த இடத்திலேயே...!!
அன்று மன்றத்தின் வாசலில் நுழைந்த ஓவியன் அண்ணா, இன்று மன்றத்தின் இதயத்தில் அழகான ஓர் இடத்தில் வீற்றிருக்கிறார் பாசமிக்க அன்பராய்...!!
வருக என வரவேற்கிறேன். உங்களின் வழியில் அன்புத் தங்கை நானும் பயணிக்கிறேன்...!!
இன்னும் பல்லாயிரம் பதிவுகளை ஓவியன் அண்ணா ஓவியச் சித்திரமாய் மன்றத்தில் தீட்டிட இறைவனை இறைஞ்சுகிறேன்.

ஓவியன்
30-09-2007, 01:34 PM
ஆகா என்னை வரவேற்கின்றீர்களா பூமகள்....! :)

மிகுந்த நன்றி உங்கள் அன்புக்கு....
அந்த அன்பின் நிழலிலே எனக்கு இன்னும் புது வலிமை கிடைக்கும் தங்கையே....

பூமகள்
30-09-2007, 01:36 PM
ஆகா என்னை வரவேற்கின்றீர்களா பூமகள்....! :)

இது தானே வாய்ப்பு முன் வந்தவரை பின் வந்தவர் வரவேற்க...(சீனியரை ஜூனியர் கலாய்க்க...:D) ஹீ ஹீ...!!:lachen001:

ஓவியன்
30-09-2007, 01:39 PM
இது தானே வாய்ப்பு முன் வந்தவரை பின் வந்தவர் வரவேற்க...(சீனியரை ஜூனியர் கலாய்க்க...:D) ஹீ ஹீ...!!:lachen001:

ஆமா சைக்கிள் கப் கிடைச்சா போதுமே...
ஆட்டோ ஸ்டார்ட் பண்ணிடுவியளே.....!!! :lachen001:

பூமகள்
30-09-2007, 01:42 PM
விட்ருவோமா..:icon_b: உங்கள் தங்கை ஆச்சே.. :icon_rollout: உங்க ட்ரைனிங் வேறு.. :cool:சொல்லவா வேணும் ஓவியன் அண்ணா???:sport-smiley-018: :D

பூமகள்
30-09-2007, 01:44 PM
ஆமா சைக்கிள் கப் கிடைச்சா போதுமே...
:lachen001:
ஓவியன் அண்ணா...:confused: சைக்கிளை கப் (cup)ல எப்படி அண்ணா நிறுத்தினீங்க... ??:D :sport-smiley-013: :sport-smiley-018:

சிவா.ஜி
30-09-2007, 01:45 PM
என்னடா இது ஓவியன் என்று வேறுயாராவது புதிதாக மன்றத்தில் இணந்திருக்கிறார்களா என்று நினைத்தேன். எட்டாயிரப் பதிவைப் பதிக்க தான் எட்டுவைத்த முதற்பதிவை எட்டிப்பிடித்து எடுத்துவந்திருக்கும் ஓவியனின் சிந்தனையை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை(அதனால் பாராட்டாமல் இருக்க முடியுமா...நம்ம ஓவியனாச்சே)அன்பு(மறுபடியும் ரசிகர் நுழையப்போகிறார்) என்ற பாற்கடலில் அவரோடு சேர்ந்து நானும் பயணப்படுவதில் பெருமிதமடைகிறேன். வாழ்த்துக்கள் ஓவியன்.

ஓவியன்
30-09-2007, 03:33 PM
என்னடா இது ஓவியன் என்று வேறுயாராவது புதிதாக மன்றத்தில் இணந்திருக்கிறார்களா என்று நினைத்தேன். எட்டாயிரப் பதிவைப் பதிக்க தான் எட்டுவைத்த முதற்பதிவை எட்டிப்பிடித்து எடுத்துவந்திருக்கும் ஓவியனின் சிந்தனையை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை(அதனால் பாராட்டாமல் இருக்க முடியுமா...நம்ம ஓவியனாச்சே)அன்பு(மறுபடியும் ரசிகர் நுழையப்போகிறார்) என்ற பாற்கடலில் அவரோடு சேர்ந்து நானும் பயணப்படுவதில் பெருமிதமடைகிறேன். வாழ்த்துக்கள் ஓவியன்.

ஹீ,ஹீ!!!

மிக்க நன்றிங்க சிவாஜி!!!. :)

ஓவியன்
30-09-2007, 03:36 PM
ஓவியன் அண்ணா...:confused: சைக்கிளை கப் (cup)ல எப்படி அண்ணா நிறுத்தினீங்க... ??:D :sport-smiley-013: :sport-smiley-018:

அட இது கூட உங்களுக்கு தெரியாதா, சைக்கிளை உருட்டிக் கொண்டு போய் கப்பினுள் நுழைத்து நிறுத்த வேண்டும்....!! :lachen001:

நுரையீரல்
01-10-2007, 04:09 AM
ஓவியன் என்ன ஒரு அழகான புனைப்பெயர். கவிபாடும் கவிஞனின் வரிகளுக்கோ ஒரு அர்த்தம். ஓவியனின் வண்ணத்துக்கு ஒரு அர்த்தம், உருவத்துக்கு ஒரு அர்த்தம், உருவத்தின் முக பாவனைகளுக்கு ஒரு அர்த்தம் என கூறிக்கொண்டே செல்லலாம்.

உங்கள் புனைப்பெயருக்குள் ஒளிந்திருக்கும் ஓராயிரம் அர்த்தங்களை, இந்த தமிழ் மன்றம் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள்.

என்றுமே அன்புடன்..

S. ராஜா

சூரியன்
01-10-2007, 04:14 AM
அண்ணா உங்களின் அறிமுக பகுதியிலே 8000படைப்பை கொண்டாடிட்டீங்க..

ஓவியன்
01-10-2007, 04:22 AM
மிக்க நன்றி ராஜா மற்றும் சூரியன்...

இன்று நான் எட்டாயிரத்தை எட்டிப் பிடித்தாலும், தத்தித் தத்தி வந்து இங்கே நான் பதித்த என் முதல் பதிவை மறக்க முடியுமா....!
அதனாலேயே என் எட்டாவது ஆயிரத்திற்கான பதிப்பை இங்கே பதித்தேன்....

அக்னி
03-10-2007, 12:30 PM
முதல் காலடியில் எட்டாயிரமாவது சுவடு...
தத்தித் தத்தி வைத்த முதற் பதிவில், எட்டாயிரமாவது பதிவின் கொண்டாட்ட விழா... நன்றியுணர்ச்சியாக...
பாராட்டுக்கள்...
தவிர, அனுபவ ஊறல், தெளிவு, அழுத்தம் யாவும் வளர்ந்துகொண்டே உங்கள் எழுத்தில்...
என்றும் சிறக்க வாழ்த்துகின்றேன்...

பென்ஸ்
03-10-2007, 12:54 PM
அட நான் நம்ம ஓவியனை வரவேற்கவேயில்லையோ...
நல்வரவு மக்கா...

ஜெயாஸ்தா
03-10-2007, 02:13 PM
நானும் உங்களுக்குப் பின்தான் மன்றத்திற்கு வந்தேன். அதனால் அப்போது வரவேற்க முடியில்லை. இருந்தாலும் இந்தத்திரியின் மூலம் நீங்கள் எட்டா......................யிரத்தைக் கடந்ததற்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலர்
03-10-2007, 04:20 PM
நம்ம ஓவியரின் 8000யிரம் எங்கேன்னு இவ்வளவு நேரமும் நான் தேடிட்டு இருந்தேன்......

அப்பாடா கிடைச்சிடுச்சி...


உலகிலே எவனொருவன் தான் வந்த பாதையைத் திரும்பிப் பார்கிறானோ, அவன் தனக்கு முன்னால் போவோரின் சாதனைகளை முறியடிக்க திட்டமிடுகிறான் என்று அர்த்தமாம்......

ஓவியரே இது எனக்கு நீங்கள் அனுப்பினது.......இப்போது நீங்கள் திரும்பி பாக்குறீர்கள்... சீக்கிரம் முன்னால் போவோரின் சாதனைகளை முறியடிக்க என்னுடைய வாழ்த்துக்கள்......

அறிமுக பகுதியிலே 8000++ கொடுத்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள்

Narathar
04-10-2007, 01:17 PM
நான் விடுப்பில் இருந்த காலப்பகுதியில் மன்றில் அறிமுகமாகியிருக்கின்றார் ஓவியன்....
அப்போது அவரை வரவேற்க கிடைக்கவில்லை....
இப்போது அந்த குறையை தீர்த்துக்கொள்கிறேன்

praveen
04-10-2007, 02:02 PM
வாழ்த்துக்கள் ஓவியன், இவ்வளவு சீக்கிரமா 8000 பதிவு கண்டு, இதன் பின்னரே நான் உங்களை இங்கே கண்டு கொண்டேன்.

என்ன ஓவியன் உங்கள் அவதாரை மாற்றி என் மனதை மாற்றி விட்டீர்கள், இனி நமக்குள் சண்டையெல்லாம் கிடையாது. நமக்கு பெண்கள் பற்றிய ஆராய்ச்சி அறிவு சற்று கம்மி, அது யார் படமுங்க.?

அமரன்
04-10-2007, 02:04 PM
என்ன ஓவியன் உங்கள் அவதாரை மாற்றி என் மனதை மாற்றி விட்டீர்கள், இனி நமக்குள் சண்டையெல்லாம் கிடையாது. நமக்கு பெண்கள் பற்றிய ஆராய்ச்சி அறிவு சற்று கம்மி, அது யார் படமுங்க.?

இதோ ஆரம்பிச்சுடுச்சே சண்டை..:confused:

Narathar
04-10-2007, 02:07 PM
என்ன ஓவியன் உங்கள் அவதாரை மாற்றி என் மனதை மாற்றி விட்டீர்கள், இனி நமக்குள் சண்டையெல்லாம் கிடையாது. நமக்கு பெண்கள் பற்றிய ஆராய்ச்சி அறிவு சற்று கம்மி, அது யார் படமுங்க.?


அவள் எம்மா வொட்சன்........ ( என்று நினைக்கின்றேன் )
ஹரி பொட்டரின் நண்பியாக வரும் நாயகி
இவள் மீதி நம்ம ஓவியருக்கு என்ன காதலோ????
நாமறியோம்

மலர்
04-10-2007, 02:09 PM
இதோ ஆரம்பிச்சுடுச்சே சண்டை..:confused:

அதான் பத்த வச்சிட்டியளே
வெடிக்குதான்னு பாக்கலாம்...

ஓவியன்
04-10-2007, 02:22 PM
என்ன ஓவியன் உங்கள் அவதாரை மாற்றி என் மனதை மாற்றி விட்டீர்கள், இனி நமக்குள் சண்டையெல்லாம் கிடையாது. நமக்கு பெண்கள் பற்றிய ஆராய்ச்சி அறிவு சற்று கம்மி, அது யார் படமுங்க.?

அது நம்ம ஹேர்மானிங்க (எம்மா வட்சன்)........!!!
நம்ம மயூ இருக்கரில்லையோ மயூ அவர் தன்னோட அவதாருக்கு இந்த எம்மவைத் தான் மாற்றி மாற்றி போடுவார்....
அதென்ன அவர் மட்டும் தானா எம்மவை அவதாரா போடலாம் அப்படினு வந்திச்சு பாருங்க கோபம்.....
உடனே என்னோட தற்காலிக அவதாராகிட்டன்......!!! :D

ஓவியன்
04-10-2007, 02:31 PM
அனுபவ ஊறல், தெளிவு, அழுத்தம் யாவும் வளர்ந்துகொண்டே உங்கள் எழுத்தில்...
என்றும் சிறக்க வாழ்த்துகின்றேன்...
முக்க நன்றி அக்னியாரே!!!

அட நான் நம்ம ஓவியனை வரவேற்கவேயில்லையோ...
நல்வரவு மக்கா...
ஆகா பென்ஸண்ணா!!!
மிக்க நன்றிங்க....

நானும் உங்களுக்குப் பின்தான் மன்றத்திற்கு வந்தேன். அதனால் அப்போது வரவேற்க முடியில்லை. இருந்தாலும் இந்தத்திரியின் மூலம் நீங்கள் எட்டா......................யிரத்தைக் கடந்ததற்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி ஜே.எம்!!!
யார் முன்னர் வந்தது என்பது முக்கியமில்லை, யார் முன்னர் சாதிக்கிறார்கள் என்பதே முக்கியம்....

மன்றத்திலே என்னை விட எத்தனையோ மடங்கு சாதிக்க என் வாழ்த்துக்கள்.


நம்ம ஓவியரின் 8000யிரம் எங்கேன்னு இவ்வளவு நேரமும் நான் தேடிட்டு இருந்தேன்......

அறிமுக பகுதியிலே 8000++ கொடுத்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள்

அன்புத் தங்கையே!!!

எனது 8000 வது பதிப்பைத் தேடிய உங்கள் அன்புக்கு நன்றிகள் கோடி...
அந்த வசனம் எனது மூவாயிரமாவது பதிவின் போது மனோ அண்ணா வாழ்த்திய வாழ்த்து.

அந்த வசனம் எனக்கு ரொம்பவே பிடித்தது, அதனாலேயே அதனை உங்களுக்கு வாழ்த்த தனி மடலிலே பாவித்தேன்....

அதனை மீண்டும் இங்கே ஞாபகமூட்டியமைக்கு நன்றிகள் பல.....! :)



அப்போது அவரை வரவேற்க கிடைக்கவில்லை....
இப்போது அந்த குறையை தீர்த்துக்கொள்கிறேன்

மிக்க நன்றி அண்ணா!!!
ஒரு பிரபல்யமானவரின் வாழ்த்துக் கிடைத்ததில் எனக்கு மிகுந்த சந்தோசம்...!!! :)

Narathar
04-10-2007, 02:43 PM
மிக்க நன்றி அண்ணா!!!
ஒரு பிரபல்யமானவரின் வாழ்த்துக் கிடைத்ததில் எனக்கு மிகுந்த சந்தோசம்...!!!

இது கொஞம் ஓவாரா இல்லே??:smilie_abcfra:

விகடன்
07-10-2007, 05:09 AM
இது கொஞம் ஓவாரா இல்லே??:smilie_abcfra:
அடடா!
உங்களுக்கு விளங்கிட்டுதா?:lachen001:

ஓவியன்
07-10-2007, 05:19 AM
இது கொஞம் ஓவாரா இல்லே??:smilie_abcfra:

பின்னே இல்லாமலா, நீங்க யாரு....???
அந்த இரகசியம் உடைக்கப்படும் வரை நீங்கள் பிரபல்யமானவரே.......! :)

rajaji
07-10-2007, 09:42 AM
மிகத் தாமதமாக இத் திரியினைக் கண்டு விட்டேன்....

பரவாயில்லை..... என்றும் உங்கள் சேவை இத் தமிழ்மன்றத்திற்கு கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.....

8000 போஸ்ட் கடந்து விட்டீர்கள்.....
வாழ்த்துக்கள்.... நிச்சயமாக இது ஒரு இமாலய சாதனை....

உங்கள் இச் சேவை தொடரட்டும்....

( உங்கள் வருகை நல்வரவாகிவிட்டது.... என்னடா இறுதியில் வரவேற்கிறேன் என கோவிச்சுக்காதீங்க.. நாட்கள் பல ஆனதால்தான் இப்படி இறுதியில் வரவேற்கிறேன்)

ஓவியன்
09-10-2007, 05:10 AM
மிக்க நன்றி ராஜாஜி உங்கள் அன்புக்கு....
8000 எல்லாம் பெரிய சாதனை இல்லை, அதற்கும் மேலாக உங்களைப் போன்ற அன்பு மன்ற உறவுகளைச் சம்பாதிப்பதே இமாலய சாதனை. :)

ஆதவா
12-10-2007, 02:10 PM
வாங்க ஓவியன்............. உள்வரவு நல்வரவு

அடடே! நம்ம ஓவியருக்கு பலமான வரவேற்பு கொடுக்காம இப்படி மந்தப்படுத்திட்டனே! சரி போகட்டும்

வாங்க ஓவியரே! (அதென்ன வாங்க? அதான் வந்துட்டாரே)