PDA

View Full Version : இது தான் காதல் என்று உங்களுக்குத் தெரியாĪlenram80
04-02-2007, 12:12 AM
மனதை மயக்கும் மன்மத மாலை நேரம்!
சூழ்நிலையை புரிந்து கொண்டு, மெல்லலை கொண்டு
மெல்லிசை பாடும் மெரினா பீச்!
தாஜ்மஹாலின் படியில் தலை வைத்துப் படுத்த திருமால் மாதிரி
அவளின் மடியில் தலை வைத்து நான்!

என் முடியில் நாதமீட்டும் அவளது விரல்கள்!
அறிவை தொலைத்து விட்டு அவளின் அழகில் மூழ்கினேன்!
முதன் முதலாய் நக்கீரன் மேல் கோபம் வந்தது!
ரசனை கெட்ட மனிதனாக இருந்திருப்பானோ என்று!
பாண்டிய மன்னன் மேலும் கோபம் வந்தது!
இவளைப் போல அவனுக்கும் எவளோ கிடைத்திருக்கிறாளே என்று!
ஆமாம்! அப்படி ஒரு மணம் வந்தது,
என் முகத்தை ஆசையோடு தொட்டு பார்க்கும் அவளது அள்ளி முடிந்த முடியிலிருந்து!

ஏய்! கொஞ்சம் பொறு!
உன் வலது கண்ணிலிருந்து 132 மில்லிமீட்டர் கீழே
நேற்று ஒரு பரு இருந்ததே?
என்னவாயிற்று அதற்கு?

உன் இடது காதிலிருந்து நேர் மேலே 143-வது முடி
ஒன்று நரைத்திருந்ததே?
என்னவாயிற்று அதற்கு?

என்னடி பார்க்கிறாய்?
உன்னை விட, உன்னைப் பற்றி எனக்கு அதிகம் தெரியும்!

ஏ! முடியை கோதும் சீப்புகளே!
பருக்களைக் கில்லும் நகங்களே!
இனி, என் அனுமதியின்றி எதையும் பிடுங்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை!
மீறினால், உங்கள் பல்லை பிடிங்கி விடுவேன்! ஜாக்கிரதை!

கொஞ்சம் கொஞ்சமாய் சொர்க்கத்துக்குச் சென்று கொண்டிருந்தேன்!
கொஞ்சம் கொஞ்சமாய் அவள், அவள் வீட்டைப் பற்றி பேச்சு எடுத்தாள்!
நான் போகும் தடம், தடுமாறி நரகப் பக்கம் நகரக் கண்டேன்!

உன் அப்பன் அவசரமாய் முடிவெடுக்கும் ஆத்திரக்காரன் என்றாய்!
பத்தரிக்கை அடிக்கலாம் என்ற நம்பிக்கை வந்தது எனக்கு!
வெறி கொண்ட ஆறு தான், இறுதியில் வண்டல் பரப்பும்!
ஆத்திர மனிதனைத் தான் ஆறச் செய்ய முடியும்! - என்பதால்!

உன் அம்மா காதலுக்கு எதிராய் கட்டம் போடும் கள்ளி என்றாய்!
பந்தல் போடலாம் என்ற நம்பிக்கை வந்தது எனக்கு!
கள்ளிச் செடியில் தான் வெள்ளைப் பூ பூக்கும்! - என்பதால்!

உன் தம்பி, காதலுக்கு எதிராய் கறுப்புக் கொடி காட்டுபவனா?
வாழை மரம் கட்டலாம் என்ற நம்பிக்கை வந்தது எனக்கு!
உன் பக்கத்து வீட்டு பவித்ராவை அவனிடம் பழகச் சொல்லலாம் என்பதால்!

உன் தங்கை கூட, காதல் கொடுமை என்கிறாளா?
பட்டுப்புடவை வரை எடுக்கலாம் என்ற நம்பிக்கை வந்தது எனக்கு!
'ஒன்றுமில்லை! தமிழ் படங்களே பார்க்காமல் கெட்டுப் போயிருக்கிறாள்!
இந்தா 1000 ரூபாய்!
இன்றிலிருந்து வெளியாகும் அத்தனை படங்களையும் பார்க்கச் சொல்!
காதலுக்கு ஜே பொடுவாள்' என்று சொல்லலாம் என்பதால்!

என்னது? உன் தாத்தா, ஆயா கூட காதலுடன் காயா?
இப்போது தான் புரிகிறது!
'அனையப் போகும் விளக்கு தான் பிரகாசமாய் எரிந்து தொலைக்கும்' என்பது!
இப்போது "முழு நம்பிக்கை" வந்தது எனக்கு!
நம் காதல், கல்யாணத்தில் முடிந்து பரிபூரணமாகப் போகிறதென்று!
'அனுபவஸ்தர்களை உன் அன்பால் உன்பால் வளைக்க முடியும்' என்பதால்!

பங்காளிகள், மாமன்கள் என்று எவனாவது இருக்கிறான்களா? என்றேன்!
"ஏன்? இவ்வளவு பேரை சமாளிக்க முடியாது.
வா! சொல்லிக் கொள்ளாமலேயே ஓடு விடலாம் என்கிறாயா?" என்றாள்!
நான் சொன்னேன்!
"அடி, என் கம்யூனிசவாதியே! நான் பொதுநலவாதி அல்ல! சுயநலவாதி!
நீயும் வேண்டாம்! உன் காதலும் வேண்டாம்! என்று கூறி
உன்னிடமிருந்தே ஓடிவிடலாம் - என நினைத்தேன்" என்றேனே பார்க்கலாம்!

சென்ற உலகப் கோப்பையில் அக்தர் பந்தில் சச்சின் அடித்த சிக்ஸர் போல
ஒரு பிடி மண்ணை எடுத்து, என்னைப் பார்த்து வீசி அடித்து ஒடினாள்!

பாவம்! இதுவரை அவளை ரசித்த அலைகள்
அவள் பின்னால் ஒட நினைத்தன...
அதற்குள் கடல் அவைகளை இழுத்துக் கொண்டது!!!

"இந்தா பிடி" என்று சொல்லி நான் அவளை விரட்டினேன்!!!

பிடித்தலும், கடித்தலும்,
அடித்தலும், கிடித்தலும்
மடித்தலும், ஒடித்தலும்,
குடித்தலும், துடித்தலும்
வெடித்தலும், முடித்தலும் - தான்
காதல் என்று உங்களுக்கு தெரியாதா என்ன?

மதுரகன்
04-02-2007, 04:28 PM
அற்புதமான கவிதை லெனின்..
உங்கள் கவிதைகளில் சமுதாய கண்ணோட்டத்துடன் கூடியதொரு யதார்த்தம் தென்படுகின்றது...
அற்புதமான் வார்த்தைவடிவமைப்புகள் எளியதொரு நடை..
நாங்கள் பழகிய வார்த்தைகளை கொண்டெ வித்தியாசமான கோலம் போடும் உங்கள் பாங்கில் வியக்கிறேன்...
வாழ்த்துக்கள்..

lenram80
11-02-2007, 11:34 AM
இக்கவிதையோடு என் காதலை ரசித்த மதுரகனுக்கு நன்றி. :)

pradeepkt
12-02-2007, 04:29 AM
ஒரே கேள்வி!
காதல் என்பது இதுதானா????

ஓவியா
12-02-2007, 08:39 PM
உங்க கவிதை ரொம்ப கலக்கல். ரசித்தேன்

அருமையாய் எதிர்ப்பதம் யோசித்து எழுதியில்லீர்கள்.

பாரட்டுகிறேன்

திறமையான கவிஞ்சரை பாராட்டுவதில் பெறுமை கொள்கிறேன்.

இதுதான் காதல் என்பது எற்ற்க்கதக்கவையாக இல்லை. ;)

...............................................................................................................................................................
தாஜ்மஹாலின் படியில் தலை வைத்துப் படுத்த திருமால் மாதிரி :eek: :eek: :D
அவளின் மடியில் தலை வைத்து நான்!

ஓவியா
12-02-2007, 08:41 PM
ஒரே கேள்வி!
காதல் என்பது இதுதானா????

:D :D :D :D

தல,
நீங்களே குழம்புனா எப்படி??
எப்படி பேச்சுலர் சங்கத்த சமாலிக்கறது!!!!

pradeepkt
13-02-2007, 03:52 AM
:D :D :D :D

தல,
நீங்களே குழம்புனா எப்படி??
எப்படி பேச்சுலர் சங்கத்த சமாலிக்கறது!!!!
அப்ப பேசாம சங்கத்தைக் கலைச்சுருவோமா??? :rolleyes: :D

ஷீ-நிசி
15-02-2007, 03:46 AM
கவிதை ரொம்ப நல்லாருக்கு லெனின்.. உங்கள் கவிதையில் நடைமுறை வார்த்தைகள் மின்னுகிறது.. வாழ்த்துக்கள்.

மதி
15-02-2007, 04:29 AM
நன்றாய் ரசித்து எழுதியிருக்கிறீர்கள்..! பாராட்டுக்கள் லெனின்.

மதி
15-02-2007, 04:33 AM
அப்ப பேசாம சங்கத்தைக் கலைச்சுருவோமா??? :rolleyes: :D
ஐயோ...
பிரதீப் சங்கத்த கலைச்சுடாதீங்க...
சங்கத்துக்கு நிரந்திர தலைவர் நீங்க தான்னு எல்லாரும் பேசும் போது இப்படி சொல்றாங்க..?
என்ன ஓவியாக்கா... சரி தானே..?

pradeepkt
15-02-2007, 09:08 AM
ஐயோ...
பிரதீப் சங்கத்த கலைச்சுடாதீங்க...
சங்கத்துக்கு நிரந்திர தலைவர் நீங்க தான்னு எல்லாரும் பேசும் போது இப்படி சொல்றாங்க..?
என்ன ஓவியாக்கா... சரி தானே..?
அடப் பாவிகளா... :angry: :angry: :angry:
இதுக்காவது சீக்கிரம் ஏதாச்சும் செய்யணும் (சிவப்பதிகாரம் பாக்கணும்னு சொல்லலை :D)

மதி
15-02-2007, 09:57 AM
ஏதாச்சும் செஞ்சா நல்லா தான் இருக்கும்..நாங்களாவது கல்யாண சாப்பாடு சாப்பிடுவோம்ல.

lenram80
16-02-2007, 12:06 AM
நன்றி ஓவியா,ஷீ-நிசி, மதி, ப்ரதீப்