PDA

View Full Version : ஜூலை மாதத்தில் கடைசி ஹரிபோட்டர் புத்தகம

மயூ
03-02-2007, 01:45 PM
http://www.informativos.telecinco.es/imgsed/harrypotter_070103_400.jpg
"Harry Potter and the Deathly Hallows," என்ற கடைசிப் புத்தகத்துடன் ரெளவ்லிங்கின் பிரபலமான ஹரிபோட்டர் கதை முடிவிற்கு வருகின்றது. இந்த கடைசிக் கதைப்புத்தகம் ஜூலை 21 ல் வெளிவரும் என எழுத்தாளர் ரெளலிங் தெரிவத்தார்.

இத்தகவலை ரெளலிங் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் வெளியீட்டாளரான புளூம்பரி நிறுவனம் கருத்துத் தெரிவிக்கைளில் இவர்கள் சிறுவருக்கான பதிப்பு, வயது வந்தவருக்கான பதிப்பு மற்றும் ஒலிபுத்தகம் என்பவற்றை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வெளியீட்டாளர் கருத்துத் தெரிவிக்கையில் இந்தப் புத்தம் $34.99 விலைக்குக் கிடைக்கும் என்று கூறினார். டிலுக்ஸ் பதிப்பு 65 அமெரிக்க டாலருக்கும்.. ஹார்ட் பக் லைப்ரரிப் பதிப்பு 39.99 அமெரிக்க டாலருக்கு கிடைக்கும் என்றும் கூறினார்.

முதலாவது பாகம் வெளியிட்டு இன்றுடன் 10 வருடங்கள் முடிவடைவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது 325 மில்லியன் வரை பொட்டர் புத்தகங்கள் விற்றுத் தீர்த்துள்ளன. இது 64 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது (சிங்களம் உட்பட).

கடைசியாக வெளிவந்த புத்தகமான Harry Potter and the Half-Blood Princes, என்ன புத்தகம் பிருத்தானியாவில் மட்டும் 2 009 574 பிரதிகள் விற்றுத் தீர்த்துள்ளன.

புத்தகம் வெளிவரும் விடையம் லண்டன் பங்குச் சந்தைக்கு அறிவிக்கப்பட்டுள்னது என்றால் பாருங்கள் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்துமளவிற்கு இது வளர்ந்துள்ளது.

மேலும் தகவல்களுக்குப் எழுத்தாளரின் தளத்தைப் பார்க்க.... (http://www.jkrowling.com/)

pradeepkt
05-02-2007, 11:28 AM
ஆமா ஆமா
எனக்கு இப்ப இருந்தே மனசு பக்கு பக்குன்னு அடிச்சுக்கிருது... இந்த ரொலிங் கிழவி ஹாரி பாட்டரைக் கொல்லப் போறான்னு கேட்டு எனக்கு இப்பவே ரத்தக் கொதிப்பு அதிகமாயிருச்சு.

இப்ப மூன்றாவது தடவையா எல்லாப் புத்தகங்களையும் படிக்க ஆரம்பிச்சுருக்கேன். அந்தம்மா ஏதாச்சும் குறிப்புகள் கொடுத்திருக்கான்னு பாத்துக்கிட்டு இருக்கேன். இப்ப மூன்றாவது பாகம் வரைக்கும் வந்துருக்கு... ஒண்ணும் குறிப்புகள் தென்படலை.

ராகவா, மயூரேசா, உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா?

ஹாரி பாட்டர் திரி ஒண்ணு ஆரம்பிச்சு பல கேள்வி-பதில்களை நம்ம பரிமாறிக்கிட்டா என்ன?

மயூ
05-02-2007, 03:55 PM

ம்.. நல்ல சிந்தனைதான் நான் இன்னும் 5ம் 6ம் புத்தகங்கள் வாசிக்கவில்லை... இம்மாதம் புத்தகக்கடைக்கு சென்று லெண்ட் பண்ண வேண்டும்....

ஹாரிப்போட்டரைக் கொல்லப் போறதாத்தான் உலகமே மிரண்டு போயிருக்கு! பார்ப்போம் என்ன நடக்கப்போகின்றது என்று!

ஆரம்பியுங்கள் பிரதீப் அண்ணா!
என் ஆதரவு உண்டு

pradeepkt
06-02-2007, 03:38 AM
உனக்கு ஹாரி பாட்டர் இ புத்தகம் வேண்டுமா?

மயூ
06-02-2007, 05:25 AM
உனக்கு ஹாரி பாட்டர் இ புத்தகம் வேண்டுமா?
இ-புத்தகம் ஏற்கனவே உள்ளது!:cool:
இன்று ஐந்தாவது புத்தகம் வாடகைக்கு எடுத்தேன் (மாதம் 100 ரூபா)
இன்றே வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.. ஏழாம் புத்தகவம் வர முதல் இந்த இரண்டும் வாசித்து முடிக்க வேண்டும். :)

pradeepkt
06-02-2007, 07:06 AM
இ-புத்தகம் ஏற்கனவே உள்ளது!:cool:
இன்று ஐந்தாவது புத்தகம் வாடகைக்கு எடுத்தேன் (மாதம் 100 ரூபா)
இன்றே வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.. ஏழாம் புத்தகவம் வர முதல் இந்த இரண்டும் வாசித்து முடிக்க வேண்டும். :)
ஆமாமா... சீக்கிரம் படி...
நான் முதல் நான்கு புத்தகங்களை ஒன்றாக வாங்கினேன், நம்ம ராகவன் புண்ணியத்தில். நான்காவது புத்தகம் படித்து முடித்தவுடன் கைகால் ஓடவில்லை. அன்று சாயங்காலமே அடித்துப் பிடித்து ஓடி பழைய புத்தகக் கடையில் மீதி இரண்டு புத்தகங்களையும் வாங்கி விட்டேன். அப்புறம் என்ன சனி ஞாயிறு சேர்த்து அடுத்து திங்கட் கிழமையும் விடுமுறை எடுத்துக் கொண்டு இரண்டையும் படித்துத் தீர்த்தேன் :D

இப்ப பழைய புத்தகம் உதவாது. ஜூலை 31ம் தேதி புதுசுதான் வாங்கணும் :angry:

மயூ
06-02-2007, 07:22 AM

ஒரு சில நாட்களிலேயே புத்தகம் எல்லாம் வாசிச்சு முடிச்சனீங்களா???? அம்மாடியோவ்.. எனக்குன்னா குறைஞ்சது 3 வாரங்களாவது ஆகும்...

ஆதவா
06-02-2007, 07:23 AM
உனக்கு ஹாரி பாட்டர் இ புத்தகம் வேண்டுமா?
எனக்கு வேண்டும்./......

மயூ
06-02-2007, 07:25 AM
மன்ற இ-புத்தகசாலையில் ஏற்றியுள்ளனரே காணவில்லையா? :)

ஆதவா
06-02-2007, 07:27 AM
மன்ற இ-புத்தகசாலையில் ஏற்றியுள்ளனரே காணவில்லையா? :)
பார்க்கிறேன்...

ஆதவா
06-02-2007, 07:29 AM
ரெண்டுதானே இருக்கு..........???

மயூ
06-02-2007, 07:43 AM
ரெண்டுதானே இருக்கு..........???
ஆதவா உங்க மின்னஞ்சல் முகவரியைத்தாங்க நான் அனுப்பிறேன்!

pradeepkt
06-02-2007, 11:25 AM
ஒரு சில நாட்களிலேயே புத்தகம் எல்லாம் வாசிச்சு முடிச்சனீங்களா???? அம்மாடியோவ்.. எனக்குன்னா குறைஞ்சது 3 வாரங்களாவது ஆகும்...
நான் வெறியோடு வாசிச்சு முடிச்சேன்... ராத்திரி பகல் பாராம :)
நீ ரசிகன்... மெதுவா ரசிச்சு ருசிச்சுப் படிக்கிறே...
இப்பக் கூட நான் மூன்றாவது வாசிப்பில் இருக்கிறேன். முதல் இரண்டு புத்தகங்களுக்கு மட்டும் 3 வாரங்கள் ஆயின. மூன்றாவது புத்தகம் இன்னும் இரண்டு வாரங்கள் எடுத்தது... ஹி ஹி :D

அறிஞர்
06-02-2007, 04:10 PM
அன்பரே.. கிடைக்கும் புத்தகங்களை கொடுங்கள்... மன்றத்தில் ஏற்றி வைப்போம். பலருக்கும் பயன்படும்.

மயூ
09-02-2007, 07:24 AM
http://www.privet-drive.com/viewnews.php?id=310
நம்ம ஹரிக்கு காலம் சரியில்லைதான் போல் உள்ளது!!!

pradeepkt
09-02-2007, 08:47 AM
உண்மைதான் மயூரேசா,
ஹாரியைக் கொன்னிருந்தா இந்தப் பொம்பளையை என்ன செஞ்சாத் தகும் :mad: :mad: :mad: :mad:

மயூ
09-02-2007, 08:51 AM
உண்மைதான் மயூரேசா,
ஹாரியைக் கொன்னிருந்தா இந்தப் பொம்பளையை என்ன செஞ்சாத் தகும் :mad: :mad: :mad: :mad:
எதுவும் எக்குத் தப்பா போனா.. அல்-கைடாவோட லிங் எடுப்பமா!!!!:eek: :eek:

maganesh
09-02-2007, 08:56 AM
ஹாரியைக் கொன்னிருந்தா இந்தப் பொம்பளையை என்ன செஞ்சாத் தகும்
தலைவா. சொல்லு என்னா பண்ணனும் அந்தப் பொம்பளைய. செஞ்சுட்டு அப்புறமா உன்னைக் கண்டுக்கிறே.

maganesh
09-02-2007, 08:58 AM
எதுவும் எக்குத் தப்பா போனா.. அல்-கைடாவோட லிங் எடுப்பமா
எதுக்கு. ஏன். நான் ஒருத்தன் இங்கிருப்பது தெரியவில்லையா?

மயூ
09-02-2007, 09:13 AM
எதுக்கு. ஏன். நான் ஒருத்தன் இங்கிருப்பது தெரியவில்லையா?
இப்பிடிச் சொல்லி சொல்லியே மற்றவங்கள உசாரேத்தி பப்பாளி மரத்தில ஏற்றி விடுங்க!!! :) :D :D

ஓவியன்
17-03-2007, 12:36 PM
மயூரேசா எனக்கும் கருணை காட்ட கூடாதா?

அது தான் இ-புத்தகம், மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் கருணை காட்டவும்.