PDA

View Full Version : அன்புள்ளம் கொண்டோரே..!



ராஜா
01-02-2007, 08:21 AM
வணக்கம்.

என் பெயர் ராஜா. வாழும்வரை அடுத்தவரை முடிந்தவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எனும் கொள்கை கொண்டவன் நான். அதனால் தானோ என்னவோ எனக்கு எல்லோரும் நண்பர்களாக உள்ளனர்.

உங்களுடன் என்னையும் இணைத்துக் கொள்ளுவீர்கள்தானே..?

மனோஜ்
01-02-2007, 08:27 AM
என்ன ராஜா திருச்சியா நானும் திருச்சி தான்
நீங்க கொடுத்த சிரிப்பில் வயிறு இன்னும்:D :eek: :D தொடருங்கள் உங்கள் நகைசுவைகளை வாழ்த்துக்கள்

pradeepkt
01-02-2007, 09:06 AM
ராஜா என்னங்க இது இத்தனை கலக்கலுக்கப்புறம் ஒரு அறிமுகம்.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதுக்கு??? ஹி ஹி :D

ஆதவா
01-02-2007, 09:18 AM
சிரிக்க வைச்சு அழ வெச்சவர் ராஜா!!! உங்கமேல ஏகப்பட்ட கம்ப்ளைண்டு (சரியான தமிழ்பதம் சொல்லுங்க) எல்லாரோட வயிறும் புண்ணாச்சு... நிறையபேர் மருத்துவ செலவுக்கு காசு கேட்டும் நீங்க கொடுக்கல.... இன்னும் எத்தனையிஓ!!1 அதெல்லாத்தையும் விட அறிமுகம்................ சாரே!! இங்கேயும் எங்கள சிரிக்க வைக்கிறீங்களே!!

நல்வரவு உங்களுக்கு................

ஷீ-நிசி
01-02-2007, 09:27 AM
என்ன இது புதுசா அறிமுகம் ஆகிற மாதிரி என்னையும் இணைத்துக்கொள்வீர்களா என்று கேட்கிறீர்கள். நீங்க தான் எப்பவோ இணைந்திட்டீங்களே....

சிரிப்பு மன்னா, எங்களை சிரிக்க வைக்கனும் இன்னா....

leomohan
01-02-2007, 11:03 AM
ராஜா கைவைச்சா அது ராங்கா போனதில்லை. வாங்க நகைச்சுவை மன்னரே, பல இடத்தில் கலக்கும் நகைச்சுவை நாயகரே.

Gurudev
01-02-2007, 12:08 PM
கம்ப்ளைண்டு (சரியான தமிழ்பதம் சொல்லுங்க)= முறைப்பாடு
wick = திரி
thread = இழை அல்லது நூல்
relax = ஆசுவாசம்
லிஸ்ட்ல = பட்டியலில்

மயூ
01-02-2007, 12:34 PM
வாங்க தலைவா!
ஏற்கனவே பல பதிவுகள் போட்டு மன்றத்தைக் கலக்கியபின்பு சேர்த்துக்குவீங்களா என்று கேட்கின்றீர்களே?
நீங்க ஏற்கனவே சேந்திட்டீங்க!

மதுரகன்
01-02-2007, 02:58 PM
வாருங்கள் ராஜா சிரிப்பு வெடிகளை கொழுத்திப்போடுங்கள்..
வாழ்த்துக்கள்

ஓவியா
01-02-2007, 03:40 PM
அன்பு ராஜா அண்ணா நலமா?

உங்கள் வரவு எங்கள் மகிழ்ச்சியே
தங்களின் தமிழ் தொண்டு எங்களுக்கு அவசியம் வேண்டும்,

விகடகவியாறை கொட்டு முரசு கொட்டி வருக வருகவென்று அழைக்கின்றேன்


பாச மலர் 2007
ஓவியா ;)

அறிஞர்
01-02-2007, 03:50 PM
திருச்சிக்காரர்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி.....

எல்லாரும் நல்ல நண்பர்கள் தான்.. எல்லாவற்றையும் படியுங்கள்.. அனுபவங்களை கூறுங்கள்...

paarthiban
01-02-2007, 03:57 PM
வாங்க ராஜா வணக்கம்

238 பதிவுக்கு அப்புரமா அறிமுகமா . ஜாலியான ஆளு சார் நீங்க.

ராஜா
02-02-2007, 03:25 AM
வரவேற்பு நல்கிய நண்பர்கட்கும் தங்கைக்கும் இதயம் கனிந்த நன்றிகள்..!

Mano.G.
02-02-2007, 03:48 AM
தமிழ்மன்றம் வந்தோரை
கலகலப்பாக்கி சாந்தோசப்படவைக்கும்,
ஒரு நாள் பார்க்காவிட்டாலும் ஏதோ பறிகொடுத்த நிலை,

இப்போதிருக்கும் கலகலப்பை மேலும் கலக்க வந்த
திருச்சி ராஜா அவர்களே

உங்களை வரவேற்பதில்
எனங்களுக்கு மேலும் கலகலப்பு.

மனோ.ஜி