PDA

View Full Version : மற்றொரு மாலையில்...



ப்ரியன்
01-02-2007, 08:09 AM
1.

படமாக :

http://priyankavis.googlepages.com/Page-001.jpg

http://priyankavis.googlepages.com/Page-002.jpg

http://priyankavis.googlepages.com/Page-003.jpg

எழுத்தாக :




கண்களை இறுக மூடுகிறேன்
மெல்ல
இருள் படரத் தொடங்குகிறது!
ஒன்று இரண்டு எனத் தொடங்கி
பின்
ஆயிரமாயிரம் பிரதிகளாய்
விழியெங்கும் விரவி நிரைகிறாய்!


ஆகாய சிலேட்டில்
சில ஆயிரம் பெளர்ணமிகள்
சில நூறு சூரியன்கள்
வரைந்து
எச்சில் தொட்டு அழித்து
காலக் குழந்தை விளையாடி
முடித்த ஒரு மாலை பொழுதில்

எதிர்பாரா திசையிலிருந்து
எதிர்பாரா கணத்தில்
தலை கலைக்கும்
காற்றின் வேகமாய்
கவனம் கலைக்கிறது
வழியனுப்ப வந்தவர்களுடன்
கலகலக்கும்
ஒரு குரல்!

அதே பூ முகம்
அதே உயிர் பறிக்கும் கண்கள்!

மெல்ல
இதயத்தின் 'தடக் தடக்'
ஓசையோடு ஒத்து
ஓடத் தொடங்குகிறது
வேகமாய் இரயிலும்!

நாளிதழில் முகம் புதைத்திருந்தவனை
மென்மையாக அதே குரல்
தட்டி எழுப்புகிறது.

'இந்த பெட்டியை கொஞ்சம்
இப்படி நகர்த்தி தருகிறீர்களா?'

நாளிதழ் நகர - என்
முகம் பார்த்ததும்
அவளும் ஒரு கணம்
மூர்ச்சையாகித்தான் போனாள்!

இரயிலோடு போட்டியிட்டு
பின்னால் நகர்ந்துக் கொண்டிருந்த
மரங்கள் வெறித்து வெறுத்து
கவனம் திருப்பிய நிமிடம்!

அதற்காகவே காத்திருந்தவளாய்
அதிரம் குவித்து
'நீங்க?'

'ப்ரியன்'

'நான் ப்ரியா' நினைவிருக்கிறதா?

'ம்!'

மறக்கக் கூடியதா?
அவள் நினைவுகள்!

மறந்தால்!நிலைக்ககூடியதா?
எந்தன் உயிர்!!


- இன்னும் வரும்

மனோஜ்
01-02-2007, 08:18 AM
1.


[INDENT][INDENT][INDENT][COLOR="Red"]
'இந்த பெட்டியை கொஞ்சம்
இப்படி நகர்த்தி தருகிறீர்களா?'

நாளிதழ் நகர - என்
முகம் பார்த்ததும்
அவளும் ஒரு கணம்
மூர்ச்சையாகித்தான் போனாள்!



மின்னலாய் மனதில் வந்த அதே மின்னல் கண்முன்
அறுமையான கவிதை வரிகள் ப்ரியன்

ஷீ-நிசி
01-02-2007, 10:21 AM
ப்ரியன்...அவர்களே!

படிச்சிட்டே வந்தேன்.. திடீர்னு நிறுத்திட்டீங்க.. இது தொடருமா... இல்லை இது முடிந்துவிட்ட கவிதையா?

ப்ரியன்
01-02-2007, 10:49 AM
மின்னலாய் மனதில் வந்த அதே மின்னல் கண்முன்
அறுமையான கவிதை வரிகள் ப்ரியன்

நன்றி மனோஜ்

ப்ரியன்
01-02-2007, 10:49 AM
ப்ரியன்...அவர்களே!

படிச்சிட்டே வந்தேன்.. திடீர்னு நிறுத்திட்டீங்க.. இது தொடருமா... இல்லை இது முடிந்துவிட்ட கவிதையா?

நிறுத்தவில்லை நிசி...தொடரும் கீழே ஒரு ஓரமாய் பாருங்கள்

- இன்னும் வரும்

இருக்கா...இன்னும் இரு பத்து ஏழு நாட்கள் உங்களை இம்சிக்க வளரும்

இளசு
01-02-2007, 11:00 PM
உங்கள் ப்ரியாவை மீண்டும்
நீங்கள் பார்த்ததில்
எங்களுக்கு எக்கச்சக்க மகிழ்ச்சி..

பின்னே..

முன்னர் அவளால் நீங்கள் பொழிந்த
கவிமழையில் நனைந்த ஈரம்
நினைத்தால் இன்னும் சிலிர்க்கிறதே..



நாட்காட்டி திரும்புவதாய் காட்டி
காலம் ஓடியதை படங்களில் பார்த்த
கண்களுக்கு ஆகாய சிலேட்டு - புதுக்காட்சி..


பாராட்டுகள்.. தொடருங்கள்..

ப்ரியன்
02-02-2007, 10:03 AM
உங்கள் ப்ரியாவை மீண்டும்
நீங்கள் பார்த்ததில்
எங்களுக்கு எக்கச்சக்க மகிழ்ச்சி..

பின்னே..

முன்னர் அவளால் நீங்கள் பொழிந்த
கவிமழையில் நனைந்த ஈரம்
நினைத்தால் இன்னும் சிலிர்க்கிறதே..



நாட்காட்டி திரும்புவதாய் காட்டி
காலம் ஓடியதை படங்களில் பார்த்த
கண்களுக்கு ஆகாய சிலேட்டு - புதுக்காட்சி..


பாராட்டுகள்.. தொடருங்கள்..

நன்றி இளசு...

உங்களின் பின்னூடமே ஒரு கவிதையாய் இருக்கிறது

ப்ரியன்
02-02-2007, 10:04 AM
2.
படமாக :

http://priyankavis.googlepages.com/Page-004.jpg

http://priyankavis.googlepages.com/Page-005.jpg

http://priyankavis.googlepages.com/Page-006.jpg

http://priyankavis.googlepages.com/Page-007.jpg

எழுத்தாக :


சாபமென்றால்
வதைப்பட நான்
வதைக்க நீ!

வரமென்றால்
பக்தனாய் நான்
அருள்பாளிக்கும் அம்மனாய் நீ!

சொல்,
என் காதல்
வரமா?சாபமா?!


எப்போதோ
யாரோ
ஊர்பிள்ளைகள் மீதான
இரக்க்கத்தில் தந்த
இறக்கமான நிலமது!

மரங்களே வேலியாய்
தன்னிறமே என்னவென்று மறந்த
ஓடுகள் வேயப்பட்ட கட்டிடங்கள் பலதும்
அங்கொன்றும் இங்கொன்றும்
புது கட்டிடங்களுமாய்
எழுந்து நிற்கும் பள்ளிக்கூடம்!

சூரியன் சுட்டெரிக்கப் போகிறேன்
என்ற எச்சரிக்கை விடுத்து
ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில்
பவனி கிளம்பிய காலை வேளையில்

விடுமுறை கழிந்து
பள்ளி புகுகிறாய்!
நேற்று
புத்தம் புதிதாய் பூத்த பக்கங்களை
தாவணி தவழவிட்டு!

இதுநாள் உனை
காணா சோகத்தில்
சருகாயிருந்த மரங்கள்
மெல்ல உயிர் பெருகின்றன
வறண்ட காற்றாய் நுழைந்து
உன் உயிர்வருடி
தென்றலாகி திரும்பும் காற்றை சுவாசித்து!
மொட்டுகள்
பூக்க துவங்குகின்றன
அவசரமாய்
வசந்தத்தின் முதல்நாள் வந்ததென்று!

இவையாவும் கண்டும் காணாமல்
தாழ்வான அந்நிலத்தில்
தயவுதாட்சணம் ஏதொன்றொன்றும்
அறியா தேவதையாய்
அழகையெல்லாம்
அள்ளி தெளித்து;
முன்னேறுகிறாய்
பன்னிரெண்டாம் வகுப்பு 'அ' பிரிவு நோக்கி
காற்றுடன் உறவாடி வரும்
தாவணி முந்தானையால்
அனைவரையும் தூக்கிலிட்டபடி!

பூ மாறி பூ மாறி
தேன் ருசிக்கும் பட்டாம்பூச்சிகளாய்
உனை மொய்த்து நகர்கின்றன
அனைவரின் பார்வைகள்!

இடது சடையின் ஓரமாய்
ஓரிடம் பார்த்து
ஓர் பூவாய் ஒய்யாரமாய்
அமர்கிறது என்னுடையது மட்டும்!

தரைக்கு கண் பார்க்கவிட்டு
நகர்ந்தவள்
நான் பார்க்கமட்டுமே என
நாணம் கரைந்தொழுகும்
ஓர் ஓரப்பார்வை வீசி கடந்துச் செல்கிறாய்!

விழி நுழைந்து
உயிர் தேடிப் புறப்படும்
அப்பார்வை பிடித்து
இதயத்தின் ஆழத்தில்
அழுத்தி பத்திரப்படுத்துகிறேன்
மழைத்துளி சேர்த்து
முத்து பிரசவிக்கும்
கடலாகிடும் ஆசையோடு!

- உயிர் இன்னும் உருகும்

மனோஜ்
02-02-2007, 02:21 PM
ப்ரியன் அருமையான கவிதை
என் நினைவுகள் மின்டும் பழைமைக்கு புதுபொலிவுடன் உங்கள் கவிதைவரிகளின்மூலம்...

அறிஞர்
02-02-2007, 03:43 PM
1.





கண்களை இறுக மூடுகிறேன்


மெல்ல


இருள் படரத் தொடங்குகிறது!


ஒன்று இரண்டு எனத் தொடங்கி


பின்


ஆயிரமாயிரம் பிரதிகளாய்


விழியெங்கும் விரவி நிரைகிறாய்!
---
அதற்காகவே காத்திருந்தவளாய்
அதிரம் குவித்து
'நீங்க?'

'ப்ரியன்'

'நான் ப்ரியா' நினைவிருக்கிறதா?

'ம்!'

மறக்கக் கூடியதா?
அவள் நினைவுகள்!

மறந்தால்!நிலைக்ககூடியதா?
எந்தன் உயிர்!!



- இன்னும் வரும்

மறக்க முடியாதவளை ]
மாலைப்பொழுதில்
சந்தித்ததை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்...

அவளின் நினைவுகள் தொடரட்டும்..
எங்களை இன்பத்தில் ஆழ்த்தட்டும்.

இளசு
02-02-2007, 07:38 PM
பரவசம் ஊறும் பருவம்..
வரமும் சாபமும் ஒரே இடம்..

இனிய வேதனையை வடிக்க
உங்களுக்கு எளிதாய் வருகிறது..


தொடருங்கள் ப்ரியன்...

தண்டவாளப் பூவாய் உங்கள் காதல்
ப்ரியா
நடந்து வந்தாளா? ரயிலில் வந்தாளா?

மதுரகன்
03-02-2007, 05:03 PM
நினைவுகளின் பொக்கிஷம்..
அற்புதமான வார்த்தைகளின் ஊற்று..
சலிக்காத இனிய நடை
ப்ரியன் அசத்துகிற{ர்கள்..
தொடர்ந்து அசத்துங்கள்..


தண்டவாளப் பூவாய் உங்கள் காதல்
ப்ரியா
நடந்து வந்தாளா? ரயிலில் வந்தாளா?

இளசு அவர்களே
இது சிறீகாந்த் நடித்து இன்னமும் வெளிவராதுள்ள ஓர் படத்தின்(பெயர் மறந்துவிட்டேன்) ட்ரேய்லரில் உள்ள கவிதை போலல்லவா உள்ளது..

"தண்டவாளத்தில் தலைசாய்த்து காத்திருக்கும் ஒற்றைப்பூ என்காதல்
நீ ரயிலில் வருகிறாயா நடந்து வருகிறாயா..?"

ப்ரியன்
05-02-2007, 10:49 AM
ப்ரியன் அருமையான கவிதை
என் நினைவுகள் மின்டும் பழைமைக்கு புதுபொலிவுடன் உங்கள் கவிதைவரிகளின்மூலம்...

நன்றி மனோஜ்

ப்ரியன்
05-02-2007, 10:51 AM
மறக்க முடியாதவளை ]
மாலைப்பொழுதில்
சந்தித்ததை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்...

அவளின் நினைவுகள் தொடரட்டும்..
எங்களை இன்பத்தில் ஆழ்த்தட்டும்.

நன்றி அறிஞர்...நினைவுகள் கட்டாயம் தொடரும்

ஆதவா
05-02-2007, 10:55 AM
பிரியன் கவிதை படிக்க போதிய நேரமில்லை....மன்னிக்க இன்றிரவு படித்து கருத்து சொல்லுகிறேன்.........

ப்ரியன்
05-02-2007, 11:01 AM
பரவசம் ஊறும் பருவம்..
வரமும் சாபமும் ஒரே இடம்..

இனிய வேதனையை வடிக்க
உங்களுக்கு எளிதாய் வருகிறது..


தொடருங்கள் ப்ரியன்...

தண்டவாளப் பூவாய் உங்கள் காதல்
ப்ரியா
நடந்து வந்தாளா? ரயிலில் வந்தாளா?

நன்றி இளா...செத்துக் கொண்டே வாழவும் வாழ்ந்துக் கொண்டே சாகவும் செய்வது காதல் மட்டும்தானே

pradeepkt
05-02-2007, 11:05 AM
நன்றி இளா...செத்துக் கொண்டே வாழவும் வாழ்ந்துக் கொண்டே சாகவும் செய்வது காதல் மட்டும்தானே
அது மட்டுமல்ல

வாழ வைத்தே சாகடிப்பதும், சாகடித்தும் வாழ வைப்பதும் காதல்தான் என்றோர் சான்றோர் கூறுவர்! :D

ப்ரியன்
05-02-2007, 11:08 AM
நினைவுகளின் பொக்கிஷம்..
அற்புதமான வார்த்தைகளின் ஊற்று..
சலிக்காத இனிய நடை
ப்ரியன் அசத்துகிற{ர்கள்..
தொடர்ந்து அசத்துங்கள்..


இளசு அவர்களே
இது சிறீகாந்த் நடித்து இன்னமும் வெளிவராதுள்ள ஓர் படத்தின்(பெயர் மறந்துவிட்டேன்) ட்ரேய்லரில் உள்ள கவிதை போலல்லவா உள்ளது..

"தண்டவாளத்தில் தலைசாய்த்து காத்திருக்கும் ஒற்றைப்பூ என்காதல்
நீ ரயிலில் வருகிறாயா நடந்து வருகிறாயா..?"

நன்றி மதுரகன்


"தண்டவாளத்தில்
தலைசாய்த்து காத்திருக்கும்
ஒற்றைப்பூ என்காதல்
நீ ரயிலில் வருகிறாயா
நடந்து வருகிறாயா..?"

இது அண்ணன் பழநிபாரதியின் கவிதை...காதலின் பின் கதவு தொகுப்பில் முதல் கவிதையும் இதுதான்...நான் படித்து மூன்று நான்கு வருடங்கள் இருக்கும் என்றாலும் இதயம் தங்கிவிட்ட கவிதை அது...அக்கவிதை படத்திலும் பயன்படுத்தப்பட்டிருப்பது காண்பதில் மகிழ்ச்சி

ப்ரியன்
05-02-2007, 11:33 AM
படமாக :

http://priyankavis.googlepages.com/Page-008.jpg

http://priyankavis.googlepages.com/Page-009.jpg

http://priyankavis.googlepages.com/Page-010.jpg

எழுத்தாக :



இசையின் குறிப்பாய்
பேசத் துவங்குகிறாய்!
எங்கோ!தூரத்தில்
இசைகிறது புல்லாங்குழல்
ஒத்தாக!

திருத்திய தேர்வுத்தாள்கள்
அடுக்கப்பட்டிருக்கின்றன
மதிப்பெண் வாரியாய்;

மரம் தங்கி
குளுமை குடித்த காற்று
கள்ளமாய் வகுப்பறை நுழைந்து
நுனி தொட்டு
செல்லமாய் வருடிச் செல்ல
ஸ்பரிசத்தின் கூச்சத்தில்
சிலுசிலுத்து
படபடத்து
அடங்குகின்றன தேர்வுத்தாள்கள்!

உனக்கடுத்தாய் என் பெயரோ
எனது அடுத்தாய் உனதையோ
அல்லது இருபெயரையும்
சேர்த்தோ அழைக்க
ஆசிரியரிடம்
தாள் வாங்கி
திரும்பும் பொழுது
எதிர் எதிர் திசையில்
பயணிக்கும் அதிவேக இரயில்களாய்
கண்கள் நான்கும்
முட்டிக் தொட்டுக் கொள்ளும்!

அக்கணம்,
சூழ்நிலையெங்கும் இருள் கவிந்து
மின்னல் வெட்டி
மழை தன் ஆடை களைகிறது

அம்மணமான மழை
கண்ட வெட்கத்தில்
புன்னகை மொட்டொன்று
இதயத்தினுள்
மெல்ல அவழ்ந்து பூக்கிறது!
முகம் மலர்கிறது!

- உயிர் இன்னும் உருகும்

பென்ஸ்
05-02-2007, 11:41 AM
நண்பா... படங்கள் எங்கே????

ப்ரியன்
05-02-2007, 11:47 AM
நண்பா... படங்கள் எங்கே????

நண்பா.,

படமாக இட்டால் இறக்க நேரமாகுமோ என அஞ்சுகிறேன்..அது அகலபட்டை இணையவசதி இல்லாதவர்களுக்கு இடைஞ்சல்தானே என இடவில்லை பரவாயில்லை என்றால் சொல்லுங்கள் அதையும் இணைத்துவிடுகிறேன்...

ப்ரியன்
05-02-2007, 11:56 AM
நண்பா... படங்கள் எங்கே????

படங்கள் இட்டு விட்டேன் தோழா

ப்ரியன்
05-02-2007, 12:09 PM
பிரியன் கவிதை படிக்க போதிய நேரமில்லை....மன்னிக்க இன்றிரவு படித்து கருத்து சொல்லுகிறேன்.........

மெதுவாக படித்து கருத்து சொல்லுங்கள் நண்பரே

பென்ஸ்
05-02-2007, 12:13 PM
விக்கி...
படத்துடன் அந்த கவிதையை வாசிக்கையில் சுகம் அதிகம்தான்...

என்னை ஒவ்வொரு தொடரிலும் ஒரு புதுமையுடன் சிலிர்க்க வைக்கிறீர்கள்...

நான் இப்போது கவனித்தது...
ஒவ்வொரு தொடரின் துவக்கத்திலும் முன்னுரையாய் ஒரு கவிதை...

தபு சங்கர் வாசம் அடித்து வந்த கவிதைகள் "ப்ரியன்" வாசம் அடிக்க ஆரம்பித்து இருக்கின்றன...

கவிதையை நன்றாக வாசிக்க வேண்டும்...
குற்றம் கண்டுபிடித்து ரொம்ப நாளாயிடுச்சு...

பிச்சி
05-02-2007, 01:01 PM
இவன்ப்ரியன்,

கண்களை இறுக மூடுகிறேன்
மெல்ல
இருள் படரத் தொடங்குகிறது!
ஒன்று இரண்டு எனத் தொடங்கி
பின்
ஆயிரமாயிரம் பிரதிகளாய்
விழியெங்கும் விரவி நிரைகிறாய்!

இதில் நிரைகிறாய் என்றால் என்ன? ஒருவேளை தவறோ?

பிச்சி
05-02-2007, 01:03 PM
சாபமென்றால்
வதைப்பட நான்
வதைக்க நீ!

வரமென்றால்
பக்தனாய் நான்
அருள்பாளிக்கும் அம்மனாய் நீ!

சொல்,
என் காதல்
வரமா?சாபமா?!

இது அருமையா இருக்கு!

பிச்சி
05-02-2007, 01:06 PM
நல்ல் தொடர்கவிதை.. சீக்கிரமே எழுதுங்க ஆர்வமா இருக்கு,...

ப்ரியன்
06-02-2007, 12:01 PM
விக்கி...
படத்துடன் அந்த கவிதையை வாசிக்கையில் சுகம் அதிகம்தான்...

என்னை ஒவ்வொரு தொடரிலும் ஒரு புதுமையுடன் சிலிர்க்க வைக்கிறீர்கள்...

நான் இப்போது கவனித்தது...
ஒவ்வொரு தொடரின் துவக்கத்திலும் முன்னுரையாய் ஒரு கவிதை...

உங்க கண்ணில் சிக்காம போகுமா மாற்றங்கள் :) என் நண்பர்கள் பலருக்கும் இந்த வித்தியாசம் தெரியவில்லை முன்னுரை கவிதையையும் சேர்த்து படித்து குழம்பி எனை குடைந்துவிட்டார்கள்


தபு சங்கர் வாசம் அடித்து வந்த கவிதைகள் "ப்ரியன்" வாசம் அடிக்க ஆரம்பித்து இருக்கின்றன...

கவிதையை நன்றாக வாசிக்க வேண்டும்...
குற்றம் கண்டுபிடித்து ரொம்ப நாளாயிடுச்சு...

நன்றி பென்ஸ்

குற்றம் கண்டுபிடியுங்கள் அதுதான் எனக்கு வேண்டும் என்னை செதுக்கிக் கொள்ள

ப்ரியன்
06-02-2007, 12:18 PM
இவன்ப்ரியன்,

கண்களை இறுக மூடுகிறேன்
மெல்ல
இருள் படரத் தொடங்குகிறது!
ஒன்று இரண்டு எனத் தொடங்கி
பின்
ஆயிரமாயிரம் பிரதிகளாய்
விழியெங்கும் விரவி நிரைகிறாய்!

இதில் நிரைகிறாய் என்றால் என்ன? ஒருவேளை தவறோ?

நிரை - வரிசைப் படுத்து , ஒழுங்காக அமை என்பது பொருள்

ப்ரியன்
06-02-2007, 12:18 PM
சாபமென்றால்
வதைப்பட நான்
வதைக்க நீ!

வரமென்றால்
பக்தனாய் நான்
அருள்பாளிக்கும் அம்மனாய் நீ!

சொல்,
என் காதல்
வரமா?சாபமா?!

இது அருமையா இருக்கு!


நன்றி பிச்சி

ப்ரியன்
06-02-2007, 12:19 PM
படமாக :

http://priyankavis.googlepages.com/Page-011.jpg

http://priyankavis.googlepages.com/Page-012.jpg

http://priyankavis.googlepages.com/Page-013.jpg

எழுத்தாக :



தென்றலின் சிநேகத்தோடு
தடவிச் செல்கிறது - உன்
தாவணி!
புயல் புரட்டியெடுத்த
பூமியாகிறது இருதயம்!


காற்று குடித்து
உப்பிய சக்கர வயிறை
முள் கிழித்து
சப்பையாக்கிட
மிதிவண்டியை தள்ளியபடி
பயணிக்கிறாய் பள்ளி நோக்கி!

தாமதாமாய் புறப்பட்டு
கால இடைவெளியை
வேகத்தினால் நிரப்பிட
பறந்து முன்னேறி வந்தவன்
மிதிவண்டி தள்ளிவரும்
தாவணி மயிலைக் கண்டு
மிதிவண்டி மிதிப்பது விடுத்து
இறங்கி தள்ளி வருகிறேன்
துணைக்காய்!

பெரும் மெளனத்தோடு நகரும்
பிரயணத்தில்
அவ்வப்போது
பரிமாறிக் கொள்கிறோம்!
பட்டாம்பூச்சிகள் இமையானதென
சந்தேகம் கொள்ளுமளவு
படபடக்கும்
விழிகளோடு!

பார்வைகள் தொட்டு புணரும்
கணம் சட்டென
தலை தாழ்த்தி
நாணம் தரையெங்கும்
சொட்டச் சொட்ட
நடை பயிலுகிறோம்!

கட்டி கதைப்பேசியபடி
பின் தொடர்கின்றன - நம்
மிதிவண்டியின் சக்கர தடங்கள்!

- உயிர் இன்னும் உருகும்

அறிஞர்
06-02-2007, 12:44 PM
உருகும் உயிரின் தொடர்ச்சி.. அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தட்டும்.

படங்கள் அழகாக இருக்கிறது தொடருங்கள்...

மன்ற நண்பர்கள்... ஆட்சபேணை தெரிவித்தால்... நீக்கிவிடலாம்.

ப்ரியன்
07-02-2007, 07:50 AM
உருகும் உயிரின் தொடர்ச்சி.. அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தட்டும்.

படங்கள் அழகாக இருக்கிறது தொடருங்கள்...

மன்ற நண்பர்கள்... ஆட்சபேணை தெரிவித்தால்... நீக்கிவிடலாம்.

நன்றி அறிஞரே...

ப்ரியன்
07-02-2007, 07:53 AM
படமாக :

http://priyankavis.googlepages.com/Page-014.jpg

http://priyankavis.googlepages.com/Page-015.jpg

http://priyankavis.googlepages.com/Page-016.jpg

எழுத்தாக :



உன் மெளனம்
மொழியும் மொழியின்
வீரியத்திற்கு முன்
என் கவிதைகள் எல்லாம்
ஏதுமற்ற சூன்யம்!


தமிழ் வகுப்பில்
காமத்துப் பாலிலும்
அகத்திணை பாடல்களிலும்
தலைவன் நானென
தலைவி நீயென
கனவெல்லாம்
தீண்டி உறவாடி
பேசித்திரிந்த நாளது!

பதிலுக்கு
முறைவைத்து
மருதாணியால் சிவந்த
உன் நகம்
வேதியியல் ஆய்வகத்தில்
தீண்டி வைக்க!

காப்பர் சல்பேட்டின் நீலமும்
காப்பர் குளோரைடின் பச்சையும்
பொட்டாசியம் குரோமேட்டின் மஞ்சளும்
பொட்டாசியம் டை குரோமேட்டின் ஆரஞ்சுமென
கலந்து இதய
வானமெங்கும் வண்ணமாய் வெடித்து சிதற!

ஸ்பரிச மயக்கத்தில்
அமிலம் மாற்றி ஊற்றிட
கையிருந்த கூம்பு
வெடித்து சிதறி
கண்ணாடி பூக்களை தூவியது!

எழுந்த புகையில்
கைப்பற்றி நடனமாடியிருந்தோம்
இருவரும்!

உள்ளங்கையளவு தண்ணீர்
முகத்தில் அருவியென தெளிக்க
கண்விழித்து பார்க்கையில்
சுற்றி வகுப்பு நண்பர்களின் முகமெல்லாம்
கவலை மேகம் சூழ
கிடந்திருந்தேன் தரையினில்!

அமிலம் அரித்த எரிச்சல்களை
அதை தொடர்ந்த
முதலுதவி மருந்துகளின் இரணங்களை தாண்டி
உணர்வின் அங்குலம் அங்குலமாய்
விஸ்வரூபம் எடுத்து
உயிர் எல்லாம்
பொழிந்து குளிரூட்டுகிறது
உன் விழியோரம் திரண்டிருந்த
இரு விழி கண்ணீர் துளிகள்!

- உயிர் இன்னும் உருகும்

பென்ஸ்
07-02-2007, 07:57 AM
அறிஞரே...
படங்களாய் கொடுக்க நானே வேண்டினேன்...
இவை மற்ற தளத்தில் பதிவேற்றம் செய்யபட்டு, சுட்டி மட்டுமே இங்கு கொடுக்கபட்டுள்ளது...
இதனால் மன்றம் மெதுவாக வாய்ப்புகள் இல்லை...
ஆனால் பக்கங்கள் பதிவிறக்கம் செய்ய நேரம் எடுக்கலாம்....

விக்கி..
படங்களுடன் தொடருங்கள்....
பக்கம் பதிவிறக்க நேரமாவதாக மன்ற நண்பர்கள் கூறினால் மாற்று வழியை ஆலோசிக்கலாம்...

pradeepkt
07-02-2007, 07:58 AM
அடடா... நிகழ்ச்சிகளைக் கவிதைப் படுத்துவது ஒன்று. நிகழ்வே கவிதை ஆவது இன்னொன்று! உங்கள் கவிதை சொல்லும் சம்பவம் இரண்டாவது. வேதனையிலும் அந்தக் கண்ணீர்த் துளி காட்டும் குளிர்ச்சியை வர்ணிக்க வார்த்தைகள் எங்கிருந்து கிடைக்கும்???

தற்போது யவனராணி வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். அதிலும் கரிகாலனின் கால்களுக்கு அவனது வளர்ப்புத் தங்கை (இங்கே வேறு உறவு) இப்படிக் கண்ணீரால் மருந்து போடுவது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் காட்டியிருந்தார் சாண்டில்யன்.

பென்ஸ்
07-02-2007, 08:12 AM
விக்கி...
முன்னுரை கவிதைகள் அருமை,.....
இன்று மீண்டும் அனைத்தையும் ஒருமுறை வாசித்து போனேன்.... அத்தியாயத்துக்கு ஏற்ற முன்னுரை....

கவிதைகளை இங்கு ...
கதை + கவிதை என்று கொடுப்பதால் வார்த்தைகளை குறைக்க சொல்ல மனம் வரவில்லை...
அனைத்து வார்த்தைகளும் தேவையாய்...
தேர்ந்தவையாய்...

விக்கி....
வாழ்வில் அன்றாடம் நடக்கும் விடயங்களை எழுதுவது -- அனைவரையும் ,
இது என்னுடைய காதல் போன்றது என்று ஒரு உணர்வை கொடுக்கும் ... ஆனால்..
மனதில் என்றும் நிலையாய் நிற்பது நடைமுறைமீறிய காதல்கள் மட்டும்தானே...
இந்த காதலும் எதுவாய் வருகிறது என்று காண காத்திருக்கிறேன்..

ப்ரியன்
08-02-2007, 09:43 AM
அடடா... நிகழ்ச்சிகளைக் கவிதைப் படுத்துவது ஒன்று. நிகழ்வே கவிதை ஆவது இன்னொன்று! உங்கள் கவிதை சொல்லும் சம்பவம் இரண்டாவது. வேதனையிலும் அந்தக் கண்ணீர்த் துளி காட்டும் குளிர்ச்சியை வர்ணிக்க வார்த்தைகள் எங்கிருந்து கிடைக்கும்???

தற்போது யவனராணி வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். அதிலும் கரிகாலனின் கால்களுக்கு அவனது வளர்ப்புத் தங்கை (இங்கே வேறு உறவு) இப்படிக் கண்ணீரால் மருந்து போடுவது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் காட்டியிருந்தார் சாண்டில்யன்.

நன்றி பிரதீப்...நானும் சில மாதங்களுக்கு முன்புதான் யவனராணி படித்தேன்..ஒருவேளை இக்கவிதை அந்த காட்சியமைப்பு அப்படியே மனதில் பதிந்துவிட்ட பாதிப்பாக இருக்கலாம்

ப்ரியன்
08-02-2007, 09:48 AM
விக்கி...
முன்னுரை கவிதைகள் அருமை,.....
இன்று மீண்டும் அனைத்தையும் ஒருமுறை வாசித்து போனேன்.... அத்தியாயத்துக்கு ஏற்ற முன்னுரை....

கவிதைகளை இங்கு ...
கதை + கவிதை என்று கொடுப்பதால் வார்த்தைகளை குறைக்க சொல்ல மனம் வரவில்லை...
அனைத்து வார்த்தைகளும் தேவையாய்...
தேர்ந்தவையாய்...

விக்கி....
வாழ்வில் அன்றாடம் நடக்கும் விடயங்களை எழுதுவது -- அனைவரையும் ,
இது என்னுடைய காதல் போன்றது என்று ஒரு உணர்வை கொடுக்கும் ... ஆனால்..
மனதில் என்றும் நிலையாய் நிற்பது நடைமுறைமீறிய காதல்கள் மட்டும்தானே...
இந்த காதலும் எதுவாய் வருகிறது என்று காண காத்திருக்கிறேன்..

நன்றி பென்ஸ்...எந்த முன்னுரை கவிதையும் அதை தொடரும் கதை நிகழ்ச்சிக்காக எழுதப்பட்டதல்ல. :) அது தனி இது தனி என எழுதியவையே ஆனாலும் பொருந்திப்போனால் மகிழ்ச்சியே...

கவிதை என்றால் நீளம் இடையில் வரும் என்று திட்டமிட்டே கதை + கவிதை என இதை எழுதத் தொடங்கி இருக்கேன் பென்ஸ்...

:) யதார்த்ததை மீறிய காதல் .., தெரியவில்லை பென்ஸ் இன்னும் நான் நாளைய பாகம் கூட எழுதி முடிக்கவில்லை அதனால் முடிவு எப்படி இருக்கும் என எனக்கே தெரியவில்லை என்பது உண்மை பார்க்கலாம் எப்படி முடிகிறதென்று :

ப்ரியன்
08-02-2007, 09:51 AM
படமாக :

http://priyankavis.googlepages.com/Page-017.jpg

http://priyankavis.googlepages.com/Page-018.jpg

http://priyankavis.googlepages.com/Page-019.jpg

http://priyankavis.googlepages.com/Page-020.jpg

எழுத்தாக :


ஒரு மரத்தடியில்
வசந்தத்தில் உனக்காக
காத்திருக்கத் தொடங்கினேன்!
காத்திருந்து நாட்கள் பல
கடந்த இக்காலத்தில்
காய்ந்த இலைகளை
பொழியத் தொடங்கிவிட்டன
மரங்கள் மழையாக!


கரையோரம் துள்ளும்
தங்க மீனாய்
ஆற்றின் ஓரம்
தோழியர் படைசூழ
தண்ணீருக்கு அடியிலும்
மேலுமென கழித்திருப்பாய்
வாரயிறுதி நாட்களை!

உனை இருநாள்
காணாமல் போனால்
இருண்டிடும் கண்களென
மனம் பகர
கால் முந்த
எத்தோச்சையாய் வருவதாய்
சமாதானம் சொல்லி
கடந்து நான்
அழகு கடத்திப் போகும்
அந்நாட்களில்
ஒரு புன்முருவல் பகிர்வோடு
முடிந்துபோகும்
நம் பேச்சு!

தொட்டுக் கொள்ள
உப்பும் மிளகாயும்
தின்றபின் சுவைக்கூட்ட
ஆற்று தண்ணியுமென
தோழியர்களுடன் நீ
குழுமியிருந்த நாளொன்றில்!

வழமைப் போல்
கண் பேசி
கடந்தவனை
இழுத்து நிறுத்தினாய்
'நெல்லிக்காய் சாப்பிடுகிறாயா?' எனும்
கேள்விக் கொக்கியால்!

அழகு
களவாட வந்தவன்
கண்கயிற்றாய் கட்டுண்டு
சொன்னேன்
'ம்!' அதுவே
ம் அவ்வளவே பதில்!
அதுவே முதலில் உன்னிடம்
பேசிய சொல்லும் கூட!
ஒற்றை எழுத்தானாலும்
ஓராயிரம் முறை
உயிர் சிலிர்த்திட
அதுவே போதுமானதாயிற்று!

இருந்த ஒற்றை
நெல்லிக்காயினை
ஓரக்கடி கடித்து தந்தாய்!

நெல்லிக்காய் தின்று
தண்ணீர் குடித்தால்
தொண்டைக்குழி இனிக்குமென்பது
அதுவரை கண்ட அனுபவம்!
ஆனால்
கடித்த பாகத்தின் ஓரம் ஒட்டிய
உன் எச்சில் திவலைகளை குடித்து
உயிரெல்லாம் இனித்தது
அன்று கொண்ட புது அனுபவம்!

- உயிர் இன்னும் உருகும்.

thoorigai
08-02-2007, 10:26 AM
ப்ரியனின் ஏக்கம் தீர்க்கும்
ப்ரியாவின் வருகை ஈர்க்கும்
மலர்கள் ஒன்று கூடியே
மாநாடு ஒன்று நடத்தி
வண்ணமிகு மணமாலை கோர்க்கும்

இந்த இனிய மாலையிலே
இதயங்கனிந்த வாழ்த்துக்கள் ப்ரியனே :)

பென்ஸ்
08-02-2007, 12:56 PM
என்ன விக்கி இது...

கொஞ்சம் கூட நியாயம் இல்லை....
இந்த காதல் எல்லாம் காலங்காலமாய் நாங்களும் செய்ததுதான்...
இந்த நெல்லிகாய்.. புளி... உப்பு முளவு என்று பழைய கதைகளையே பேசி...

நீங்க எல்லாம் இன்னும் தமிழ் சினிமா ரேஞ்சுக்கு வளரலை...

காதலியை அப்படியே தண்ணியில கண்டதும்,
அப்படியே காமிரா ஒரு சுத்து சுத்தி நயகரா நீர்விழ்ச்சி பக்கம் போகுது...
வீழ்ச்சிக்கு கொஞ்சம் மேல நம்ம நாயகி...
தோழிகளோடு கர்ச்சீபை கஸ்டபட்டு கட்டி "மேகம் கருக்குது, மின்னல் அடிக்குது" என்று பாட்டு பாடுறாங்க ...
நம்ம ஹீரோ ஒரு ஹேலிகாப்ட்டரில் பறந்து வந்து ரசிக்கிறார்...

அப்படியே அவர் காலில் போட்டிருக்கும் "நைக்கே" ஸூவில் கல் இடற (கிராமத்து கதையில்லையா.. அதனாலெ டயலாக் எல்லாம் பொள்ளாச்சி பக்கத்திலதான்) ..
திரும்பவும் நியாபகத்துக்கு வந்தவராய்... போயிடுறார்...

அடுத்தநாள்...
அப்படியே தனது பி.எம்.டபியூ 12 சிலின்டர் V- இஞ்ஜின் குறுஸ்ஸியர்ரில் வரும்போது,
அப்போதும் நம்ம ஹீரோயின் குளித்துகிட்டு இருக்காங்க...
கூடவே தண்ணியில ஒரே முல்லை பூவும், ரோசா பூவுமா மிதக்குது...
நம்ம ஹீரோவ பாத்து ஹீரோயின்... "சாப்புட வாறிங்களா" என்று உறக்கத்தில் இருந்து எழும்பியது போல் கேக்கனும் ...
அவரும் "தமிழ் நாட்டில பசியா இருக்கிறவங்க எத்தன பேரு தெரியுமா??? " என்று புள்ளியியல் பேசனும்....
ஹீரோயின் கெஞ்சி கேக்க அவரும் ..
நம்ம ஹீரோயின் வாயில் இருந்து அப்படியே ஒரு "ஸ்டிராபெரி" பழத்தை கவ்வி எடுக்கிறார்...:rolleyes: :rolleyes:

என்ன அருமையான கதை இது...
அதைவிட்டு விட்டு .. புளியங்காய்... நெல்லிகாய்ன்னு கதை சொல்லிகிட்டு... :D :D :D

ஒரு சங்கர் ரேஞ்ஜுக்கு காதலை சொல்லலாமே:p :p :D :D

மதுரகன்
08-02-2007, 05:46 PM
அருமையான வரிகளுடன் நேர்த்தியாக கவிதை எழுதுகிறீர்கள் ப்ரியன்
உங்கள் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

ப்ரியன்
10-02-2007, 05:32 AM
ப்ரியனின் ஏக்கம் தீர்க்கும்
ப்ரியாவின் வருகை ஈர்க்கும்
மலர்கள் ஒன்று கூடியே
மாநாடு ஒன்று நடத்தி
வண்ணமிகு மணமாலை கோர்க்கும்

இந்த இனிய மாலையிலே
இதயங்கனிந்த வாழ்த்துக்கள் ப்ரியனே :)

நன்றி தூரிகை

ப்ரியன்
10-02-2007, 05:36 AM
என்ன விக்கி இது...

கொஞ்சம் கூட நியாயம் இல்லை....
இந்த காதல் எல்லாம் காலங்காலமாய் நாங்களும் செய்ததுதான்...
இந்த நெல்லிகாய்.. புளி... உப்பு முளவு என்று பழைய கதைகளையே பேசி...

நீங்க எல்லாம் இன்னும் தமிழ் சினிமா ரேஞ்சுக்கு வளரலை...

காதலியை அப்படியே தண்ணியில கண்டதும்,
அப்படியே காமிரா ஒரு சுத்து சுத்தி நயகரா நீர்விழ்ச்சி பக்கம் போகுது...
வீழ்ச்சிக்கு கொஞ்சம் மேல நம்ம நாயகி...
தோழிகளோடு கர்ச்சீபை கஸ்டபட்டு கட்டி "மேகம் கருக்குது, மின்னல் அடிக்குது" என்று பாட்டு பாடுறாங்க ...
நம்ம ஹீரோ ஒரு ஹேலிகாப்ட்டரில் பறந்து வந்து ரசிக்கிறார்...

அப்படியே அவர் காலில் போட்டிருக்கும் "நைக்கே" ஸூவில் கல் இடற (கிராமத்து கதையில்லையா.. அதனாலெ டயலாக் எல்லாம் பொள்ளாச்சி பக்கத்திலதான்) ..
திரும்பவும் நியாபகத்துக்கு வந்தவராய்... போயிடுறார்...

அடுத்தநாள்...
அப்படியே தனது பி.எம்.டபியூ 12 சிலின்டர் V- இஞ்ஜின் குறுஸ்ஸியர்ரில் வரும்போது,
அப்போதும் நம்ம ஹீரோயின் குளித்துகிட்டு இருக்காங்க...
கூடவே தண்ணியில ஒரே முல்லை பூவும், ரோசா பூவுமா மிதக்குது...
நம்ம ஹீரோவ பாத்து ஹீரோயின்... "சாப்புட வாறிங்களா" என்று உறக்கத்தில் இருந்து எழும்பியது போல் கேக்கனும் ...
அவரும் "தமிழ் நாட்டில பசியா இருக்கிறவங்க எத்தன பேரு தெரியுமா??? " என்று புள்ளியியல் பேசனும்....
ஹீரோயின் கெஞ்சி கேக்க அவரும் ..
நம்ம ஹீரோயின் வாயில் இருந்து அப்படியே ஒரு "ஸ்டிராபெரி" பழத்தை கவ்வி எடுக்கிறார்...:rolleyes: :rolleyes:

என்ன அருமையான கதை இது...
அதைவிட்டு விட்டு .. புளியங்காய்... நெல்லிகாய்ன்னு கதை சொல்லிகிட்டு... :D :D :D

ஒரு சங்கர் ரேஞ்ஜுக்கு காதலை சொல்லலாமே:p :p :D :D

ஹஹஹ ரசித்தேன் பென்ஸ்...யார் சொன்னது நெல்லிக்காய் யும் ஆறும் இன்று காதலர்களின் விளையாட்டு பொருள் இல்லையென்று..என்னதான் தொலைதொடர்பு வசதிகள்.,தொலைக்காட்சிகள் எல்லாம் வந்துவிட்டாலும் அற்றோரம் கண்ணால் வலைவீசி காதல் மீன் பிடுத்து வரும் இளைஞர் இளைஞிகள் இருக்கும் கிராமங்கள் இன்னும் இருக்கின்றன பென்ஸ் அதைப் போல ஒரு கிராமக் காதலே இது...ஒருவேளை இந்த கதையிலேயே நீங்கள் சொல்லும் சங்கர் வகை வந்தாலும் வரும் பின்னால்

ப்ரியன்
10-02-2007, 05:37 AM
அருமையான வரிகளுடன் நேர்த்தியாக கவிதை எழுதுகிறீர்கள் ப்ரியன்
உங்கள் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

நன்றி மதுரகன்

ப்ரியன்
10-02-2007, 05:46 AM
படமாக :

http://priyankavis.googlepages.com/Page-021.jpg

http://priyankavis.googlepages.com/Page-022.jpg

http://priyankavis.googlepages.com/Page-023.jpg

http://priyankavis.googlepages.com/Page-024.jpg

எழுத்தாக :





தத்தித் தத்தி
தமிழ் கற்று
கவிதையென
எழுதியவையெல்லாம்
நான் கண்டு கொண்ட
உந்தன் செல்லப் பெயர்கள்!


பரிட்சைக்கு முந்தைய
கடைசி பள்ளி வேலை
நாளது;

படிக்க கொடுக்கும்
படிப்பு விடுமுறையை
களிக்க கணக்குப் போடும்
கூட்டம் ஒன்று!
விடுமுறையை தொடரும்
பரிட்சை பற்றிய
பயத்தில் பதறும்
கூட்டம் மற்றொன்று!

இவ்விரு வேறு
கூட்டத்தினிடையில்
பிரிவை எண்ணி
நடுநடுங்கி இருந்தன
இரு கூடுகள்!

கடைசியாய் பயந்தகிடந்த
அந்நிமிடம் வந்தேவிட்டது
அவ்வகுப்பறையில்
நம் கடைசி மணித்துளிகள்!

கையில் கிடைத்த
கூர்மை பொருள் கொண்டு
நீயே சாட்சியென
மேசையிடம் சொல்லியபடி
மேசையின் உள்பக்கம்
ஒரு பைத்தியமாய்
கிழிக்கிறேன்
இருவர் பெயரையும்!

வெட்டி தொங்கவிடப்பட்ட
தண்டவாள கட்டையில்
பள்ளி முடிந்தற்கான
அடையாளமாய்
நீண்ட மணி அடிக்கப்படுகிறது!
அது
ஏனோ உயிருக்கு
மணியடிப்பதாய் தோன்றுகிறது!

காலியான வகுப்பறையின்
வெறுமை நெஞ்சில் அறைய
கண்ணோரம் துளிர்க்கின்றன
கண்ணீர் துளிகள்!

தலைக்குனிந்து
நகர்ந்தவள்!
தூரமாய் சென்று
நின்று வகுப்பையே
பார்த்துக் கொண்டிருக்கிறாய்!

பக்கமாய் நான் வந்ததும்
'நல்லா படி!'
'நல்லா எழுது!' என்ன? என்கிறாய்;
நீ சொன்ன
அதையே கூட உனக்கு திருப்பிச் சொல்ல
தைரியம் இல்லாதவன்
'ம்!' என்றபடி நகர்கிறேன்;
ஒரு குளத்தளவு நீரை
கண்ணில் தேக்கிக்கொண்டு.

- உயிர் இன்னும் உருகும்...

மனோஜ்
10-02-2007, 07:05 AM
காலியான வகுப்பறையின்
வெறுமை நெஞ்சில் அறைய
கண்ணோரம் துளிர்க்கின்றன
கண்ணீர் துளிகள்!

மனதை கண்ணீரில் நிறைத்த வரிகள் ப்ரியன்

ப்ரியன்
12-02-2007, 12:59 PM
நன்றி மனோஜ்

ப்ரியன்
12-02-2007, 01:00 PM
தேவன் சபை நுழைந்தேன்
தடவி தழுவி
மடியில் கிடத்திக் கொண்டது அது;
சாத்தானின் சபை புகும்
வாய்ப்பும் கிட்டியது
சாட்டையை சுழற்றிபடி
கோரநகங்களால் கீறி இரத்தம் சுவைத்து
வரவேற்றது அதே காதல்!

இரயில் நிலையத்தின்
இரைச்சலையும் தாண்டி
குரலும்
சிரிப்பொலியும்
இசையாக காதுமடல் வருட;
கண்கள் தேடி
அவள் உருவம் மேல்
முட்டி நின்றது;
முட்டி நின்ற கண்கள்
மூர்ச்சையாகி
நின்றது நின்றபடியே இருந்தது!

கையிருந்த குழந்தைக்கு
முத்தமிட்டு
கையாட்டி
விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள்;
தன் பங்குக்கு
காதணியும் காற்றுக்கு சாடைக்காட்டி
விளையாடிபடி இருந்தது!

புறப்படுவதற்கான அடையாளமாய்
பெரியதாய் இரயில் கனைக்க
அதுவரை அருகிலிருந்தவனிடம்
குழந்தையை கையளித்து
சிரித்து கையசைத்து
வந்தாள் அவள்;
வழி அனுப்ப வந்த அவன்
நண்பனாக இருக்கலாம்
தூரத்து சொந்தமாயிருக்கலாம்
என கணக்குப் போட்ட
குரங்கு மனது
ஒருவேளை
அய்யோ ஒருவேளை
காதலனாக
கணவனாக இருக்ககூடுமோ
எண்ணிய வேளை
மூலையில் குத்தவைத்து
அழ தொடங்கிவிட்டிருந்தது உயிர்!

அதை தொடர்ந்தே நிகழந்தது
நான் நாளிதழில் முகம் புதைத்ததும்;
அவள் பெட்டி நகர்த்தி தரக் கேட்டதும்;
நாளிதழ் நகர முகம் பார்த்து
அவள் உணர்வுகள் மூர்ச்சை ஆனதும்;
அதே நாங்களேதானென
நாங்கள் உறுதிபடித்திக் கொண்டதும்!

காலச் சக்கரங்கள் மெல்ல சுழல
நினைவுகளின் மேல்
பயணத்திருந்தவனை
அவளின் குரல் கைகாட்டி நிறுத்தியது.

'நல்லா இருக்கியா?'
நான் இல்லையோ என்ற சந்தேகத்தில்
முன்னர் காட்டிய 'ங்க' மரியாதை வெட்டி
அவள் பழைய பழக்கத்தில் பேச ஆரம்பிக்க;
'ம்!'
மூடிய வாய் திறவாமல்
மூச்சு வழியே பதில் சொல்ல
மீண்டும்
பள்ளி வயதை அடைந்திருந்தேன் நான்!

- உயிர் இன்னும் உருகும்.

பென்ஸ்
12-02-2007, 03:49 PM
ப்ரியன்,

தொடர் அருமையாக செல்கிறது...
இந்த அத்தியாயத்தில் பிளாஸ் பேக்கை இணைக்க கஷ்டப்பட்டு இருக்கிங்க போல...

இப்படி இரண்டையும் இணைக்க எடுத்து கொண்ட நேரம் கொஞ்சசசசச்சம் இழுழுழுழுழுழுக்குகுகுகுகுது....

தொடருங்க...

ஆதவா
12-02-2007, 03:55 PM
நண்பரே சிலரது கவிதைகள் பின்னுட்டம் இட நினைத்தும் மறந்து விட்டுப்போயிருப்பேன். அந்த வகையில் இந்த கவிதையும் ஒன்று. உங்கள் கவிதையின் எளிமை என்னை மெய் cஇலிர்க்க வைக்கிறது. தற்cஅமயம் நேரமின்மையால் என்னால் பதிலும் எழுத முடியாமல் போய்விடுகிறது. கவிதைக்கு எப்படி பதில் cஒல்வது? அழகு என்றா? அருமை என்றா? ம்ம்ம்ம்..... நான் இந்த மாதிரி கவிதை புனைய முயன்று தோற்றிருக்கிறேன். உங்களுக்க்லு cஆதாரணமக வந்து வாய்க்கிறது.... நீங்க உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் பிரியன்.,....
வாழ்த்துக்கள்

ப்ரியன்
16-02-2007, 10:20 AM
காதல் கோவிலின்
கருவறையில்
தேவி உனக்கு;
தினம் தினம்
என் கண்ணீரால்
அபிஷேகம்!


பரிட்சை அறை வெளியே
முதல் தேர்விற்கு முந்தைய
பதட்டமான அந்நொடிகள்!

எங்கெங்கோ தேடி
சலிப்படைந்த
கண்கள் தரை தொட்டு
எழும்பிய சமயம்
முகமெல்லாம் புன்னகையாய்
நின்றிருந்தாய் எதிரில்!

'படிச்சிட்டியா?
நல்லா எழுது;
வாழ்த்துக்கள்!'
அவசரமாய் உதிர்ந்த வார்த்தைகள்
இறக்கை விரித்து காற்றில்
பறக்க தொடங்கியிருந்தன;
பக்கத்தில் நானும்
ஒரு காற்றாடியாய் மாறி
நானும் பறந்திருந்தேன்;
எனக்கே ஆச்சர்யம்தான்
மேலே பேசியதெல்லாம்
நான்தானா என்பதில்
எனக்கே பெரும் ஆச்சரியம்தான்!

உனக்கேற்பட்ட ஆச்சரியம்
இன்று சொல்லியா முடியும்!

உனக்கு பேசக்கூட வருமா?
அதிலும் என்னிடம் என்பதாய்
ஒரு பார்வை
மேலாய் படரவிட்டு
'இந்தா கோவில் பிரசாதம்'
கைவிரித்து நீ தர
கண்மூடி தொட்டு நெற்றியில் நான் பூச
கையிருந்த எழுதுகோல் தவறி
மண்ணில் விழுந்தது!

குனிந்து எடுத்து
நல்லா எழுது
என்று உன் தேர்வறை நோக்கி நடந்தாய்!
எனக்கு ஏனோ
மரவெட்டியும் வனதேவதையும்
மனத்திரையில் வந்துப்போனார்கள்!

எனக்கே சொல்லாமல்
வேண்டுமென்றே
எழுதுகோலை தரையில் விட்டது
அந்த உயிர் சாத்தானின் வேலை
என்பது வெகுநாள் தெரியாமலே இருந்தது!

நீ எழுதுகோல் தொட்டுக் கொடுத்த
நினைப்பில்
அன்றைய தேர்வு நன்றாகவே முடிந்தது;
அடுத்தடுத்த தேர்வுகளும்
அவ்வாறே!


- உயிர் இன்னும் உருகும்

அறிஞர்
16-02-2007, 01:36 PM
காதல் கோவிலின்


கருவறையில்


தேவி உனக்கு;


தினம் தினம்


என் கண்ணீரால்


அபிஷேகம்! காதல் அனுபவம் உள்ளவர்கள் செய்யும் விசேஷ அபிஷேகமோ...

அறிஞர்
16-02-2007, 01:38 PM
பரிட்சை அறை வெளியே
முதல் தேர்விற்கு முந்தைய
பதட்டமான அந்நொடிகள்!

நீ எழுதுகோல் தொட்டுக் கொடுத்த
நினைப்பில்
அன்றைய தேர்வு நன்றாகவே முடிந்தது;
அடுத்தடுத்த தேர்வுகளும்
அவ்வாறே!


- உயிர் இன்னும் உருகும்
பரிட்சைக்கு முன் தேவதை வந்து ஆசி கூறினால்....
எல்லாம் நன்றாகவே முடியும்...

தேவதை பற்றிய உயிர் கவிதைகள் இன்னும் உருகட்டும்...

ப்ரியன்
21-02-2007, 12:21 PM
உன் கூந்தல்
உதிர் பூவின்
இதழொன்று கை சேர்கிறது!
இருதயத்தில் மெல்ல
வசந்தம் மலர்கிறது!

நண்பர்களுடன் நீச்சல்
மிதிவண்டி பயணம்
பிள்ளைகளின் கூக்குரலில்லாமல்
தனியே வாடும் பள்ளி
மைதானத்துடன் பேச்சு;
நீ சாய்ந்து அமர்ந்த
திண்டினை
தீண்டுதலென
நகர்கிறது;
விடுமுறை நாட்கள்!

வீடு கடக்கையில்
ஆத்தோரம் தண்ணி அள்ளுகையில்
என
சந்திக்கும் சமயங்களில்
விழியால் உயிர் வருடிக் கொள்கிறோம்
இறகின் பரிவோடு!

ஊர் சுற்றி
கலைத்து திரும்பும் எனை வரவேற்க
காத்திருக்கும்;
விடுமுறையில்
ஏதாவது உருப்படியா
செய்யேன் எனும் அப்பாவின்
குரல்!

அதை
ஒரு காதில் வாங்கி
மறு காதில் ஒழுகிட விடுதல்
நிகழும்
தினம் தினம்!

அப்படியான ஒருநாளில்
உன் தந்தை பெயர் சொல்லி
அவரிடம் புத்தகம்
வாங்கி படி;
அவரிடம் சொல்லி வந்திருக்கிறேன்
என்கிறார் எனதருமை அப்பா!

இதை முன்னமே
சொல்லியிருக்கலாமே என
மனதுள் திட்டியபடி
அம்மாலைவேளையில்
பறந்தேன் உன் இல்லம் நோக்கி!

வந்தவனை வரவேற்றன
கொல்லைப் பக்க
பூவுடன் நீ பேசியிருந்த
பூபாளம்!

வீடு நுழைந்தவனை
அழைத்தமர்த்தி
எனதுருவத்தோடு பேசியிருந்தார் உனதப்பா;
குரல்கேட்டு
ஓடிவந்தவள்
தூணுக்கு பின்னிருந்தபடி
விழியால் பேச ஆரம்பித்தாய்
உயிர் அருவத்தோடு!

உருவத்தை அவரிடம் பேசத் தந்து
உயிரை உன்னிடம் பேசத் தந்து
நான் யாதுமற்ற
ஓர் உருவ நிலையிலிருந்தேன்
அத்தினம்!

- இன்னும் உருகும்...

ப்ரியன்
21-02-2007, 12:33 PM
பரிட்சைக்கு முன் தேவதை வந்து ஆசி கூறினால்....
எல்லாம் நன்றாகவே முடியும்...

தேவதை பற்றிய உயிர் கவிதைகள் இன்னும் உருகட்டும்...

நன்றி அறிஞர்

பென்ஸ்
02-03-2007, 03:12 PM
இத்தனை இடைவேளி எதற்க்கு பிரியன்.... ????

கோபமான ஏமாற்றத்துடன்...

ப்ரியன்
07-05-2007, 12:54 PM
கண்ணீரின் இடையில்
பிறக்கிறது காதல்;
முட்களின் மத்தியில்
பூக்கிறது ரோஜா!

விழியோடு ஒட்டி
உறவாடி உயிரோடு
பேசியிருந்தவனை கலைத்துப்போட்டது
அவரின் குரல்!

என்ன கேட்டார்
ஏது பேசினார் என
அறியா நிலையில்
என்ன கேட்டீங்க
எனத் தடுமாறி
அசடு வழிய கேட்க
அவள் இதழ் சிந்திய
புன்னகை காதோடு
பேசியது கேலி மொழி!

அடுத்து என்ன படிப்பதாய் உத்தேசம்?
மதிப்பெண் பார்த்துதான் முடிவு.
அவளும் அப்படித்தான் சொல்லுறா
நல்லா எழுதியிருக்கியா?
ம் நல்லா எழுதி இருக்கேன்.

அறிந்த மொழியெல்லாம்
அறிவிலிருந்து அவசரமாய் அழிந்திட
அரைகுறையாய் வந்தன
வார்த்தைகள் மட்டும்;

என்ன புத்தகம் படிப்பாய்?
எதுவானாலும் சரி
'ப்ரியா' அந்த புத்தகம் முடித்துவிட்டாயா?
ம் முடிச்சுட்டேன்ப்பா
சரி அதை கொண்டுவந்து தம்பிக்கு தா
அப்பா எழுந்து சென்றிட

அடடா தேவதை படித்த புத்தகமா?
தேவதை கண்கள் வருடிய புத்தகமா?
கனவில் ஆழ்ந்திருந்தேன்.

அமைதியான நீர்நிலையில்
சலனம் உண்டாக்கும் இலையென
உன் குரல்
கனவின் இழை அறுக்க

கையில் தந்தாய் தண்ணீர் தேசம்
மீண்டும்
பயணிக்கத் தொடங்கினேன்
என் கனவு தேசம் நோக்கி!

- இன்னும் உருகும்...

மனோஜ்
07-05-2007, 01:14 PM
மனதை வருடும் கவிதை வரிகள் நன்றி