PDA

View Full Version : இந்திய அணியில் சேவாக்ஆதவா
01-02-2007, 07:15 AM
நண்பர்களே! இன்று ஏதோ நம்மாளுங்க நல்லா விளையாடி கோப்பை வாங்கிட்டாங்க.. சேவக் இருந்த இடத்தை நிரப்ப உத்தப்பா வந்துட்டாரு.. கடைசி போட்டியில அவ்வளவா விளையாடாட்டியும் அவருக்கு எதிர்காலம் இருக்கு... இந்த சூழ்நிலையில சேவக் அணிக்கு வரலாமா? ஒரு சின்ன கேள்வி...........

உங்கள் கருத்துக்களை பதியுங்கள்......... மறக்காம ஓட்டு போடுங்க..
(கள்ள ஓட்டு தவிர்க்கப்படுகிறது:D வாக்காளர் அடையாள அட்டை அவசியம் தேவை:D :D )

ஷீ-நிசி
01-02-2007, 07:49 AM
சேவக் இருக்கலாம் ஆதவா. அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்... (சில நேரங்களில் அவரால் நம் ஆட்டத்தின் போக்கே மாறிவிடுகிறதே என்பது வேறு விஷயம்)

ஷீ-நிசியின் 15 பேர் கொண்ட உலக கோப்பையின் உத்தேச அணி

உத்தப்பா
கங்குலி
ட்ராவிட்
சச்சின்
யுவ்ராஜ்
காம்பிர்

தோனி

பதான்
ஜாகீர் கான்
அகார்கர்
ஹர்பஹன் சிங்

தி.கார்த்திக்
ஷேவாக்
ஸ்ரீ சாந்த்
ரொ.பவார்

மனோஜ்
01-02-2007, 07:56 AM
சேவக் இருக்கலாம் ஆதவா.
அவர் சச்சினுடன் சேர்ந்தால் அட்டத்திற்கு ஒரு விருவிருப்பு உன்டு சில நேரங்களில் இது அணிக்கு பலமாக அமைவதுன்டு

pradeepkt
01-02-2007, 09:02 AM
அவர் பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டுப் போவட்டுமே... :D

ஷீ-நிசி
01-02-2007, 09:24 AM
கடைசி நேர செய்தி...

இலங்கையுடனான முதல் 2 ஆட்டங்களுக்கு ஷேவாக்
தேர்ந்தெடுக்கபட்டுள்ளாராம்..

உ.கோப்பைக்கு தேர்ந்தெடுக்கபடவும் வாய்ப்புள்ளதாம்....
http://www.cricmania.com/cricket/afpNews/index/user/us03/ref/070201083513.pos921ol.xml

அறிஞர்
01-02-2007, 12:53 PM
சேவாக்கிற்கு... திறமை உண்டு.. ஆனால் தொடர்ந்து வெளிபடுத்துவதில்லை....

உள்ளூர் ஆட்டங்களில் பிரகாசித்தால்... வாய்ப்பு வழங்கலாம். இல்லாவிட்டால் வீட்டுக்கு அனுப்பலாம்..

உத்தப்ப நிலைத்து ஆடினால்.. சேவாக்கை வீட்டுக்கு அனுப்பவது தான் சிறந்தது.

அறிஞர்
01-02-2007, 12:53 PM
அவர் பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டுப் போவட்டுமே... :D
இப்படி எல்லாரும் நினைச்சு, நினைச்சே... அணி உறுப்படாம போயிடுச்சு... :angry: :angry:

அறிஞர்
01-02-2007, 12:55 PM
கடைசி நேர செய்தி...

இலங்கையுடனான முதல் 2 ஆட்டங்களுக்கு ஷேவாக்
தேர்ந்தெடுக்கபட்டுள்ளாராம்..

உ.கோப்பைக்கு தேர்ந்தெடுக்கபடவும் வாய்ப்புள்ளதாம்....
http://www.cricmania.com/cricket/afpNews/index/user/us03/ref/070201083513.pos921ol.xml
2 ஆட்டங்களில் ஒரு ஆட்டம் ஒழுங்காக ஆடுவார்.. பின் மற்ற போட்டிகளில் சேர்ப்பார்கள்.. ஆனால் விளையாடாமல் சொதப்புவார்..

ஆஸ்திரேலிய அணி தேர்வாளர்கள் போன்ற ஆட்கள் நமக்கு தேவை... :rolleyes: :rolleyes: :rolleyes:

aren
01-02-2007, 01:30 PM
எனக்குத் தெரிந்து இந்திய அணி உலக கோப்பைக்கு இதுவாகத்தான் இருக்கும்:

1. திராவிட்
2. டெண்டுல்கர்
3. கங்குலி
4. ஷேவாக்
5. யுவராஜ்சிங்
6. தோனி
7. பதான்
8. ஹர்பஜன்
9. கும்ளே
10. அகர்கர்
11. ஜாஹீர்கான்
12. தினேஷ் கார்த்திக்
13. ஸ்ரீசந்த்
14. முனாஃப் படேல்
15. உத்தப்பா

இதில் முனாஃப் படேலுக்கு பதில் கெளதம் காம்பீரோ அல்லது ரைனாவோ உள்ளே வரக்கூடும்.

அறிஞர்
01-02-2007, 01:45 PM
இருவர் கொடுத்த அணிகளும்... நன்றாக உள்ளது...

சிலர் இலட்சுமண்.. உள்ளே வர வாய்ப்பு உண்டு என்கிறார்களே...

மயூ
01-02-2007, 01:49 PM
இராமன் ஆண்டாலும் இராவணண் ஆண்டாலும் மயூக்கு கவலையில்லைல..
உலகில் மயூரேசனுக்குப் பிடிக்காத விளையாட்டு கிரிக்கட்டு..

அறிஞர்
01-02-2007, 01:50 PM
இராமன் ஆண்டாலும் இராவணண் ஆண்டாலும் மயூக்கு கவலையில்லைல..
உலகில் மயூரேசனுக்குப் பிடிக்காத விளையாட்டு கிரிக்கட்டு.. காரணம் இலங்கை அணியா அன்பரே.. :confused: :confused: :confused:

மயூ
01-02-2007, 01:52 PM
காரணம் இலங்கை அணியா அன்பரே.. :confused: :confused: :confused:
இங்கு கணிசமான அளவு தமிழர்கள் இந்தியாவிற்குத் தான் சப்போர்ட்....
முஸ்லிம்கள் பாக்கிஸ்தான்..
அணியில் தமிழர்களை ஓரம்கட்டிவிடுவார்கள்.. முரளீதரன் அபார திறமையால் நிலைத்துக்கொண்டார்... துவேஷம். :confused:

மன்மதன்
01-02-2007, 05:02 PM
ஷேவாக் இடம் பெறுவது இலங்கையின் அந்த 2 போட்டிகளை பொறுத்து அமையலாம். ஷேவாக் அதை மிஸ் பண்ணுவார் என்று தோணலை..

leomohan
01-02-2007, 05:06 PM
உலக கோப்பையில் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அதில் தேரவிட்டால் எடுக்க வேண்டியது தான்.

Mathu
01-02-2007, 11:43 PM
உலக கோப்பையில் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அதில் தேரவிட்டால் எடுக்க வேண்டியது தான்.

வாய்ப்பெல்லாம் உலக கோப்பையில் வேண்டாமே.....:mad:

திறமையை நிரூபித்தவர்களுக்கு மட்டும் அணியில் இடம் கொடுப்போம்.

அத்தனை வீரர்களுக்கும் இதுவரை தேவைக்கு அதிகமாகவே சந்தர்ப்பம் கொடுத்தாகிவிட்டது,

இனி எதிர் அணிக்கு ஏற்றால் போல் வியூகம் அமைத்தால் அதுவே போதும்.

:rolleyes: :cool: :rolleyes:

aren
02-02-2007, 10:44 AM
புது ஆட்களெல்லாம் நம் நாட்டில் விளையாடும்பொழுது விளாசித்தள்ளுவார்கள். வெளிநாட்டில் ஆடும்பொழுது எல்லோரும் அம்பேல்தான்.

எனக்கு கைஃப் மீது இன்னும் நம்பிக்கையிருக்கிறது. அவருடைய பீல்டிங்கும் அபாரம். ஆகையால் அவரை இலங்கையும் ஆடும் ஆட்டங்களில் உள்ளே கொண்டுவர வாய்ப்பிருக்கிறது.

மதுரகன்
04-02-2007, 04:50 PM
ஷேவாக் இடம் பெறுவது இலங்கையின் அந்த 2 போட்டிகளை பொறுத்து அமையலாம். ஷேவாக் அதை மிஸ் பண்ணுவார் என்று தோணலை..
என் கருத்தும் இதுதான் அந்த ஆட்டங்களை கண்டு களித்த பின்னர்
முடிவு செய்யலாமே..

ஆதவா
04-02-2007, 05:08 PM
சேவக்கின் எதிர்காலமே அங்கேதானப்பா இருக்கிறது......... ரெண்டு மேட்சு. இல்ல எதிர்காலமே போச்சு...........

மதுரகன்
04-02-2007, 05:15 PM
சேவக்கின் எதிர்காலமே அங்கேதானப்பா இருக்கிறது......... ரெண்டு மேட்சு. இல்ல எதிர்காலமே போச்சு...........
உண்மைதான் ஆதவா
நன்றாக விளையாடுவார் என நம்பலாம்..
உலககிண்ணத்திற்கு அவர் அனுபவமும் கைகொடுக்கலாம்...

ஆதவா
04-02-2007, 05:17 PM
உண்மைதான் ஆதவா
நன்றாக விளையாடுவார் என நம்பலாம்..
உலககிண்ணத்திற்கு அவர் அனுபவமும் கைகொடுக்கலாம்...

எனக்கு அவர்மீது நம்பிக்கை இல்லைபா!

அறிஞர்
06-02-2007, 01:31 PM
அடுத்த வாரத்தில் சேவாக்கின் உண்மை நிலை... தெரியும்...

maganesh
06-02-2007, 01:59 PM
ஷீ-நிசியின் 15 பேர் கொண்ட உலக கோப்பையின் உத்தேச அணி

உத்தப்பா
கங்குலி
ட்ராவிட்
சச்சின்
யுவ்ராஜ்
காம்பிர்

தோனி

பதான்
ஜாகீர் கான்
அகார்கர்
ஹர்பஹன் சிங்

தி.கார்த்திக்
ஷேவாக்
ஸ்ரீ சாந்த்
ரொ.பவார்
மேற்கிந்திய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்க புரி. அங்கு விளையாட இரு சுழல்கள் தேவையா? பகுதி நேர சுழல் சச்சின், யுவராஜ் இருவருடனும் பகுநேரச் சுழல் அதிரடி துடுப்பாட்ட வீரன் சேவாக் இருக்கலாம்.

ஷீ-நிசி
06-02-2007, 02:02 PM
மேற்கிந்திய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்க புரி. அங்கு விளையாட இரு சுழல்கள் தேவையா? பகுதி நேர சுழல் சச்சின், யுவராஜ் இருவருடனும் பகுநேரச் சுழல் அதிரடி துடுப்பாட்ட வீரன் சேவாக் இருக்கலாம்.

ஒரு சுழலை சப்ஸ்டிடியூட்டீல் போட்டுள்ளேன் நண்பரே!, வீரேந்திர ஷேவாக்கும் இருக்கிறார்.. ஆடும் 11 அவ்வப்போது மாறும்...

பென்ஸ்
07-02-2007, 05:11 AM
எனக்குத் தெரிந்து இந்திய அணி உலக கோப்பைக்கு இதுவாகத்தான் இருக்கும்:

1. திராவிட்
2. டெண்டுல்கர்
3. கங்குலி
4. ஷேவாக்
5. யுவராஜ்சிங்
6. தோனி
7. பதான்
8. ஹர்பஜன்
9. கும்ளே
10. அகர்கர்
11. ஜாஹீர்கான்
12. தினேஷ் கார்த்திக்
13. ஸ்ரீசந்த்
14. முனாஃப் படேல்
15. உத்தப்பா

இதில் முனாஃப் படேலுக்கு பதில் கெளதம் காம்பீரோ அல்லது ரைனாவோ உள்ளே வரக்கூடும்.

ஆரெனின் கணிப்பு இதுவரை தப்பியதில்லை...
இந்தமுறை எப்படி என்று பாக்கலாம்...

பென்ஸ்
14-02-2007, 05:21 AM
ஆரெனின் கணிப்பு இதுவரை தப்பியதில்லை...
இந்தமுறை எப்படி என்று பாக்கலாம்...
ஆரென்... சரியான கணிப்பு....:D :D
உலக கோப்பை வாய்ப்பு யாருக்கு... எதனால்...???

ஓவியா
19-03-2007, 05:46 PM
ஷேவாக் இடம் பெறுவது இலங்கையின் அந்த 2போட்டிகளை பொறுத்து அமையலாம். ஷேவாக் அதை மிஸ் பண்ணுவார் என்று தோணலை..

அதே அதே சபாபதிஉண்மைதான் ஆதவா
நன்றாக விளையாடுவார் என நம்பலாம்..
உலககிண்ணத்திற்கு அவர் அனுபவமும் கைகொடுக்கலாம்...

நன்றி மதுரகன்

அறிஞர்
19-03-2007, 06:20 PM
ஓவியா என்ன சேவாக் ரசிகரா.. அவரின் ஆட்டத்தை என்றாவது பார்த்து இருக்கிறீர்களா..

ஆதவா
19-03-2007, 06:43 PM
ஓவியா என்ன சேவாக் ரசிகரா.. அவரின் ஆட்டத்தை என்றாவது பார்த்து இருக்கிறீர்களா..

இவர் ஆட்டத்தை நான் பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டது... ஏதோ இன்று மட்டும் அதற்கு விதிவிலக்காயிற்று... இலங்கையிடம் இது தொடருமா?

மன்மதன்
19-03-2007, 07:03 PM
ஷேவாக்கின் ஆட்டத்தை இன்று பார்த்திருக்கலாம்..!!

ஓவியா
19-03-2007, 07:08 PM
ஓவியா என்ன சேவாக் ரசிகரா.. அவரின் ஆட்டத்தை என்றாவது பார்த்து இருக்கிறீர்களா..

ஆமாம். :nature-smiley-003:

அமரன்
20-03-2007, 09:19 AM
இது தொடர்ந்தால் சந்தோசம்.

மனோஜ்
20-03-2007, 09:33 AM
சேவாக்கை இப்படி தான் எதிர்பர்க்கபடுகிறார்கள்
இதை தொடர்ந்தால் நலம்

அமரன்
20-03-2007, 10:04 AM
நாம் எதிர்பார்க்கும்போது சொதப்புவது ஷேவாக்கின் பாணி. இம்முறை பார்ப்போம்.

அறிஞர்
20-03-2007, 12:44 PM
ஆடிக்கு ஒரு முறை, அம்மாவசைக்கு ஒரு முறை விளையாண்டால், டீமில் இடம் கொடுப்பது இந்திய அணிதான்...

அமரன்
20-03-2007, 03:50 PM
ஆடிக்கு ஒரு முறை, அம்மாவசைக்கு ஒரு முறை விளையாண்டால், டீமில் இடம் கொடுப்பது இந்திய அணிதான்...

ஆமா. சாதனைகள் புரியவேண்டிய புதியவர்களின் இடத்தை வீணடிக்கின்றார்கள்.

pradeepkt
21-03-2007, 05:47 AM
நாம் எதிர்பார்க்கும்போது சொதப்புவது ஷேவாக்கின் பாணி. இம்முறை பார்ப்போம்.அதான் பாத்துட்டீங்களே...
எப்பவுமே மக்களை ஒரு பயத்திலயே வச்சிருந்தால் விளையாடுவார்கள் என்று தோன்றுகிறது