PDA

View Full Version : கள்ளியிலும் பால்gragavan
30-01-2007, 04:26 PM
1ம் பகுதி

நகத்தைக் கடித்தபடி காத்திருந்தாள் சந்தியா. வந்து பத்து நிமிடங்களாகிறது. அதனால்தான் கொஞ்சம் டென்ஷன். விரல்களைக் கைகளின் உட்பக்கமாக மடக்கி விரல்களைப் பார்த்தாள். அழகான விரல்கள். மாநிறத்து விரல்களுக்கு ஏற்ற வெளிரிய சாக்லேட் நிறத்தில் நகப்பூச்சு. பளபளப்பாக இருந்தது.

காத்திருத்தலும் சமயங்களில் அலுப்புதான். ஜி.என்.செட்டி ரோட்டிலிருந்த பாரிஸ்டா காஃபிக் கடையில்தான் சந்தியா காத்திருக்கிறாள். மெத்தன்ற சோபாவுக்குள் அமிழ்ந்தபடி ஒயிலாக அமர்ந்திருந்தாள். பச்சைச் சுடிதார் அவளை எடுப்பாகக் காட்டியது. முப்பது என்பதை ஐந்து குறைத்து இருபத்தைந்து என்று காட்டியது.

"அலோக்...சீக்கிரமா வா!" மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். வெள்ளை டி-ஷர்ட்டும் கருப்பு ஜீன்சும் அவனது அடையாளங்கள். ஐந்தடி பதினோரு அங்குலம். அறுபத்தைந்து கிலோ எடை. கட்டுடல். வழுவழு முகம். வெள்ளைத் தோல். வயது இருபத்து மூன்று. சொந்த ஊர் சண்டிகர். ஆறு மாதங்களாகச் சென்னையில் வேலை. இவ்வளவுதான் அலோக்கைப் பற்றி சந்தியாவிற்குத் தெரிந்த விவரங்கள். கூடுதலாக அவனுடைய தொலைபேசி எண்ணும் தெரியும்.

சாட்டிங்கில் கிடைத்தது அலோக்கின் தொடர்பு. இன்று சந்திப்பதாக ஏற்பாடு. மாலை நான்கு மணிக்குச் சந்தியாவை பாரிஸ்டாவிற்கு வரச் சொல்லியிருந்தான் அலோக். அவளும் டைடல் பார்க்கிலிருந்து புறப்பட்டு நான்கு மணிக்கெல்லாம் வந்து விட்டாள்.

இப்பொழுது சந்தியாவின் கடிகாரத்தில் நான்கு மணியாகி ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தன. அதுதான் டென்ஷனுக்கான காரணம். உள்ளே வருகின்ற ஒவ்வொரு இளைஞனையும் அடையாளம் பார்த்தாள். உயரமாகயிருந்தால் நிறமில்லை. நல்ல நிறமாக இருந்தால் வயது முப்பதுக்கு மேல். எல்லாம் பொருந்தி வந்தால் மீசையிருக்கிறது. மீசையில்லாமல் வந்தால்.....கூட ஆளிருக்கிறது.

காத்திருக்கும் பதட்டத்தோடு வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பேசாமல் வீட்டிற்குப் போய் விடலாமா என்று தோன்றியது. "போன வாரம் பாத்த விஷால் பதினஞ்சு நிமிஷம் தாமதாமா வந்தான். அது போல இவனும் வந்தால்! பேசாம விஷாலையே கூப்பிட்டிருக்கலாம்...." சந்தியாவின் எண்ண ஓட்டம். அலோக்கிற்கு போன் செய்தாள். ரிங் போகிறது. ஆனால் பதிலில்லை.

சரியாக நான்கு மணி பத்து நிமிடங்களுக்கு அலோக் உள்ளே நுழைந்தான். அவனும் சந்தியாவைத் தேடினான். பச்சை சுடிதாரைப் பார்த்ததும், "நீங்கதான் சந்தியாவா?" என்று கேட்டான்.

முகத்தில் மலர்ச்சியோடு ஆமாம் என்று தலையசைத்தாள். அவளுக்கு முன்னே இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். "மன்னிக்கனும். வெயில் அதிகம். ஆஃபீஸ்ல இருந்து நேரா வர்ரேன். வழியெல்லாம் ஒரே நெரிசல். அதான் நேரமாச்சு."

தலையைத் தலையை ஆட்டி அவன் சொன்னது அவளுக்கு அழகாகத் தோன்றியது. பஞ்சாப் பசங்களே ஒரு கணக்குதான் என்று மனதில் நினைத்துக் கொண்டாள். "அதனாலென்ன....நானும் வந்து பத்து நிமிஷந்தான் ஆகுது. சரி. என்ன சாப்பிடுறீங்க? காபி அல்லது டீ?"
"ஒன்னும் வேண்டாம் சந்தியா! உங்களப் பாக்கத்தான் வந்தேன். சரி. அடுத்து என்ன? உங்க வீடு எங்கயிருக்கு? பக்கத்திலயா? எனக்கு இன்னமும் சென்னை பிடிபடலை. நீங்க பேரச் சொன்னாலும் எனக்குத் தெரிஞ்சிருக்காது" சொல்லி விட்டுச் சிரித்தான்.

தலையைச் சாய்த்து புன்னகைத்தாள் சந்தியா. அவளது மேனரிசம் அது. பார்ப்பவரை வசீகரிக்கும் மேனரிசம். "என்னோட வீடு பக்கத்துல இல்லை. பெசன்ட் நகர்ல இருக்கு. ஆனா...." இழுத்தாள் சந்தியா.
"பெசன்ட் நகர். எலியட்ஸ் பீச் இருக்கே. அங்கதானே. அது ரொம்ப தூரம். என்னோட வீட்டுக்கு வாங்களேன். பக்கத்துலதான். சரவணா ஸ்ட்ரீட்!"

சம்மதித்தாள் சந்தியா. அவனது பைக்கை அவளது சாண்ட்ரோ பின்பற்றியது. பாண்டி பஜார் வழியாக சரவணா தெருவில் நுழைந்தார்கள். நான்கைந்து வீடுகள் தாண்டி ஒரு வீட்டிற்குள் இருவரும் நுழைந்தார்கள். ஓரளவு வசதியான வீடாகவேயிருந்தது. முதன்முதலாக வரும் சந்தியாவை வரவேற்றான் அலோக். உள்ளே நுழைந்ததும் மறக்காமல் கதவைச் சாத்தினான்.

"நீங்க நல்லாயிருக்கீங்க சந்தியா. எனக்கு உங்கள ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்களுக்கு நல்ல காண்டேக்ட்ஸ் நிறையத் தர்ரேன்." புதிய சூழலில் அமைதியாக இருந்தாள் சந்தியா. பகல் பொழுதில் எல்லா சன்னல்களும் மூடப்பட்டு ஒருவித அரைகுறை இருட்டு இருந்தது.

தனிமை துணிவு தர சந்தியாவின் தோளில் கைவத்து உள்ளே அழைத்துச் சென்றான். அவளிடம் எதிர்ப்பு இல்லை. ஒத்துழைப்புதான் இருந்தது. முழுமையான ஒத்துழைப்பு. ஒரு மணி நேரமும் ஒரு நொடி போலக் கழிந்தது. இருவருமே வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

அவளது நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னான். "சந்தியா! அடிக்கடி இங்க வரனும்." அவனைக் கட்டிக் கொண்டு மெல்லிய குரலில் சொன்னாள். "கண்டிப்பா அலோக்." அவளுக்கு யாரையோ பழிவாங்கிய திருப்தி. அந்த வெறி இன்பமாக மாறி தலை முதல் கால்வரை ஓடியது.
அவள் மனக்கண்ணில் ஒரு ஆணின் முகம் தோன்றியது. அவனைப் பார்த்து அவள் மனம் கெக்கலித்தது. அலோக்கை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். பழிக்குப் பழி. போட்டியில் தன்னைத் தள்ளி விட்டு முன்னே ஓடியவனை தான் முந்திய மகிழ்ச்சி அவளுக்கு. அந்த முகம் வெதும்பி நொந்து கொஞ்சம் கொஞ்சமாக அவளது மனக்கண்ணிலிருந்து மறைந்தது. அந்த முகத்திற்குரியவனை வென்ற வெறி புன்னகையாக விரிந்தது.

சற்று நேரம் கழித்து உடைகளைச் சரி செய்து கொண்டு கிளம்பினாள். அலோக்கிடம் விடைபெற்றுக் கொண்டாள். அப்படியே அவனுடைய நண்பர்களின் செல்போன் நம்பர்கள் இரண்டும் பெற்றுக் கொண்டாள். டாடா சொல்லி விட்டு அவளது சாண்ட்ரோவை பெசன்ட் நகர் பக்கம் ஓட்டினாள். சென்னை நெரிசலில் அவளது சாண்ட்ரோ சரக்கென்று லாவகமாகச் சென்றது.

அஷ்டலட்சுமி கோயில் பக்கத்திலிருந்தது ஸ்ரீநிதி அபார்ட்மெண்ட்ஸ். வசதியானவர்களுக்கான அபார்ட்மெண்ட். உள்ளே நுழைந்து லிஃப்டில் ஏறி நான்காம் மாடிக்குச் சென்றாள். வீட்டு எண் 402. சந்தியாவின் சொந்த வீடு.

அழைப்பு மணி ஓசை கேட்டு ஐம்பத்தைந்து வயதான பெண்மணி கதவைத் திறந்தார். அது சந்தியாவின் அம்மா சிவகாமி. "என்னம்மா ஆஃபிசிலயிருந்து இன்னைக்குச் சீக்கிரமா வந்திட்ட! வேலை சீக்கிரமா முடிஞ்சிருச்சா?" அலுவலகத்திலிருந்து வழக்கமாக ஏழுமணிக்கு வரும் மகள் இன்றைக்கு ஆறுமணிக்கெல்லாம் வந்திருக்கிறாளே.

மகள் களைப்பாக இருப்பதைப் பார்த்தாள். "ரொம்ப களைப்பா இருக்க. இரு மொதல்ல காஃபி போட்டுட்டு வர்ரென். குடிப்ப. இப்பத்தான் வீட்டைப் பெருக்கித் தொடச்சிட்டு கனகம் போனா. உள்ள சுந்தர் எழுந்திருச்சிட்டான். கைகால் கழுவிட்டு அவனப் பாத்துக்கோ."

படுக்கையறைக்குள் நுழைந்தாள் சந்தியா. ஹேண்ட் பேக்கை கழற்றி சுவற்றிலிருந்த பிளாஸ்டிக் கொக்கியில் மாட்டினாள். ஏஸியின் மெல்லிய குளிர் இதமாக இருந்தது. பாத்ரூமிற்குச் சென்று முகம் கைகால் கழுவிட்டு வந்தாள். கட்டிலில் சுந்தர் கையைக் காலை ஆட்டிக் கொண்டிருந்தான். சந்தியாவைப் பார்த்ததும் அவனுக்கு குஷி கூடியது. கையைக் காலை வேகமாக அசைத்தான். ஏழு மாதக் குழந்தை சுந்தர்.
சுந்தரை இரண்டு கைகளிலும் அள்ளி அணைத்தாள். அந்த வெதுவெதுப்பில் அவள் கண்களில் கண்ணீர் வந்தது. ஏதோ ஒரு சோகம் நெஞ்சைக் கவ்வியது. சோகத்தையும் அழுகையையும் அப்படியே விழுங்கினாள். மனதில் உறுதி எழுந்தது. மனக்கண்ணில் மீண்டும் அந்த உருவம் தெரிந்தது. தலையைச் சாய்த்து அந்தக் கண்ணுக்குத் தெரியாதவனைப் பார்த்துச் சிரித்தாள். மனதில் ஆங்காரம் கூடியது. "பாருடா! பார். இன்னைக்கு நானொரு அம்மா. ஆனா நீ?" அவள் கேட்டதும் அந்தக் கற்பனை உருவம் தலையைக் குனிந்தது.

தொடரும்.....

மனோஜ்
30-01-2007, 04:48 PM
ராகவன் அவர்களே பெங்கலுரில் நடந்த விஷயம் போலிருக்கு
யார் அந்த கற்பனை உருவம் மோல செல்லுங்க...

மன்மதன்
30-01-2007, 05:49 PM
எடக்குமடக்கா போகுதே.. அடுத்த எபிசோடு எப்போ?
(நாம சங்கிலி்கதை ஒண்ணு எழுதினோமே அதையும் பதியவேண்டியதுதானே.)

பென்ஸ்
30-01-2007, 06:07 PM
ராகவா...
யாரை பத்தி கதை எழுதுறிங்க.....
அடுத்த பதிவை போடுறதுக்கு முன்னமே உம்மை போனில் பிடிக்கனுமையா...

இளசு
30-01-2007, 06:37 PM
இழப்புகளில் விழுந்தவர்கள்...
பள்ளத்தில் மண் தோண்டி
இழப்பை மேடாக்க முனைபவர்கள்..
இருட்டில் வெளிச்சம் தேடுபவர்கள்...

நாயகியைப் பற்றிய முதல் எண்ணம் இது..

நிஜங்கள் பலநேரம் கற்பனையை விட இருட்டானவை..

தொடருங்கள் ராகவன்...

gragavan
31-01-2007, 12:06 AM
ராகவன் அவர்களே பெங்கலுரில் நடந்த விஷயம் போலிருக்கு
யார் அந்த கற்பனை உருவம் மோல செல்லுங்க...
கதைல சென்னைன்னு வருதுங்க. பொங்கலூர் இல்லை. :-)

gragavan
31-01-2007, 12:11 AM
எடக்குமடக்கா போகுதே.. அடுத்த எபிசோடு எப்போ?
(நாம சங்கிலி்கதை ஒண்ணு எழுதினோமே அதையும் பதியவேண்டியதுதானே.)
அடுத்த எப்பிசோடு விரைவில் வரும். எடக்கு மடக்குன்னா என்ன மன்மதன்?

சங்கிலிக் கதையா? அத மட்டும் கேக்காத. அதுல அடுத்த அத்தியாயம் எழுதச் சொல்லிக் கொடுக்குறப்போ அதுவரைக்கும் எழுதுனதப் படிச்சிட்டு காணாமப் போயிர்ராங்க. அதுனால நோ ரிஸ்க்.

gragavan
31-01-2007, 12:12 AM
ராகவா...
யாரை பத்தி கதை எழுதுறிங்க.....
அடுத்த பதிவை போடுறதுக்கு முன்னமே உம்மை போனில் பிடிக்கனுமையா...
வேற யாரு பெஞ்சமின்? உங்களைப் பத்தி நெனச்சாலு நூறாயிரம் கதைக்கு இன்ஸ்பிரேஷன் வருதே!

gragavan
31-01-2007, 12:16 AM
இழப்புகளில் விழுந்தவர்கள்...
பள்ளத்தில் மண் தோண்டி
இழப்பை மேடாக்க முனைபவர்கள்..
இருட்டில் வெளிச்சம் தேடுபவர்கள்...

நாயகியைப் பற்றிய முதல் எண்ணம் இது..

நிஜங்கள் பலநேரம் கற்பனையை விட இருட்டானவை..

தொடருங்கள் ராகவன்...

உண்மைதான் இளசு அண்ணா. கற்பனையில் நாம் அனைத்தையும் சொல்வதில்லை. ஆனால் உண்மை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

pradeepkt
31-01-2007, 05:14 AM
அடுத்த எப்பிசோடு விரைவில் வரும். எடக்கு மடக்குன்னா என்ன மன்மதன்?

சங்கிலிக் கதையா? அத மட்டும் கேக்காத. அதுல அடுத்த அத்தியாயம் எழுதச் சொல்லிக் கொடுக்குறப்போ அதுவரைக்கும் எழுதுனதப் படிச்சிட்டு காணாமப் போயிர்ராங்க. அதுனால நோ ரிஸ்க்.
எடக்குன்னா எடக்கு...
மடக்குன்னா மடக்கு...
இதெல்லாம் ஒரு கேள்வியாப்பா... ஹி ஹி...

ஐயா, ஒரு வழியா உங்களுக்குள்ள குமுறிக்கிட்டு இருந்த எரிமலைய வெளிய கொண்டு வாரீக போல... நடத்துங்க நடத்துங்க.

gragavan
31-01-2007, 02:40 PM
எடக்குன்னா எடக்கு...
மடக்குன்னா மடக்கு...
இதெல்லாம் ஒரு கேள்வியாப்பா... ஹி ஹி...

ஐயா, ஒரு வழியா உங்களுக்குள்ள குமுறிக்கிட்டு இருந்த எரிமலைய வெளிய கொண்டு வாரீக போல... நடத்துங்க நடத்துங்க.

எரிமலையா? உள்ள ஒரு லாவாக்கடலே வெந்துக்கிட்டிருக்கு. இது சும்மா உலுவுலுவாங்காட்டிக்கு.

மனோஜ்
31-01-2007, 03:08 PM
கதைல சென்னைன்னு வருதுங்க. பொங்கலூர் இல்லை. :-)

கதைல சென்னைவருது அனா சம்பவம் நடந்தது பொங்கலுறானு கேட்டேன் ராகவன் அவர்களெ

ஷீ-நிசி
31-01-2007, 03:34 PM
பொதுவா கதைகள் படிப்பதில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை.
இந்த கதை ரொம்ப ஆர்வமா போயிட்டிருக்கு...நண்பரே..

gragavan
31-01-2007, 04:58 PM
கதைல சென்னைவருது அனா சம்பவம் நடந்தது பொங்கலுறானு கேட்டேன் ராகவன் அவர்களெ

ஐயோ! இது கதை. அப்புறம் எப்படி நடந்திருக்கும்?

மன்மதன்
31-01-2007, 05:25 PM
எடக்குன்னா எடக்கு...
மடக்குன்னா மடக்கு...
இதெல்லாம் ஒரு கேள்வியாப்பா... ஹி ஹி...பதில் கிடச்சாச்சா ராகவரேB)B) தேங்க்ஸ்பா பிரதீப் ;);) (நாங்கெல்லாம் இம்சை அரசன் ரசிகருங்கோ.....:D:D)

அறிஞர்
31-01-2007, 06:53 PM
சில உண்மை சம்பவங்களை, கற்பனைகளோடு சேர்த்து படித்தால் சுவாரஷ்யமாக இருக்கும்...

தொடருங்கள்.. தங்கள் தொடர்கதையை....

மனோஜ்
01-02-2007, 08:32 AM
ஐயோ! இது கதை. அப்புறம் எப்படி நடந்திருக்கும்?

நடந்த சம்பவத்த கதையா செல்றிங்கனு நினைச்சேன் :D :D சரிசரி கேவிச்சுகாம செல்லுங்க ராகவன் அவர்கலே

ஓவியா
10-02-2007, 04:57 PM
ராகவன்,
முதல் அத்தியாயம் நல்ல தொடக்கம்.

தொடர வாழ்த்துக்கள்

மயூ
15-02-2007, 02:35 PM
ஏதொ பழிவாங்கும் படலம் போல உள்ளதே??? மற்றய பாகங்களையும் வாசித்துவிட்டு வருகின்றேன்....