PDA

View Full Version : உதவுங்கள் நண்பர்களே!

ஷீ-நிசி
30-01-2007, 09:49 AM
நண்பர்களே...

நான் i-mate SP3 (windows mobile) உபயோகிக்கிறேன். 1GB Memory card போட்டிருக்கேன். என் தேவை என்னவென்றால். என்னிடம் உள்ள DVD படத்தை என் மொபைலுக்கு ஏற்றவாறு மாற்றி பார்த்திட விரும்புகிறேன். இதற்கு ஏதாகிலும் இலவச மென்பொருள் உள்ளதா நண்பர்களே!

பாரதி
30-01-2007, 10:47 AM
ஆஹா... வாருங்கள் நண்பரே.

நீங்களும் ஐமேட் வைத்திருக்கிறீர்களா..?! என்ன என்ன மென்பொருட்களை நிறுவியுள்ளீர்கள்..?

ஷீ-நிசி
30-01-2007, 10:56 AM
http://www.phoneyworld.com/handsets/features/imate_smartphone3.jpg

விபரம் (http://www.phoneyworld.com/handsets/specs.aspx?phone=i-mate_sp3)

இன்னும் எதுவும் நிறுவ வில்லை. நண்பரே

ஆதவா
30-01-2007, 03:27 PM
நோக்கியாவாக இருந்தால் என்னிடம் கடலே உள்ளது ஷீ!!!.. உங்கள் செல்போன் என்ன என்ன பார்மேட் (format) கள் கொண்ட வீடியோவை இயக்கும்?
உதா: mpeg, RM, avi??

ஷீ-நிசி
30-01-2007, 04:03 PM
நோக்கியாவாக இருந்தால் என்னிடம் கடலே உள்ளது ஷீ!!!.. உங்கள் செல்போன் என்ன என்ன பார்மேட் (format) கள் கொண்ட வீடியோவை இயக்கும்?
உதா: mpeg, RM, avi??

எல்லாமே இயக்கும் ஆதவா

ஆதவா
30-01-2007, 04:11 PM
mobile9.com இது உங்களுக்கு உதவுமா பாருங்கள்......

ஷீ-நிசி
30-01-2007, 04:25 PM
mobile9.com இது உங்களுக்கு உதவுமா பாருங்கள்......

இதையெல்லாம் தாண்டிட்டேன் ஆதவா....

பாரதி
30-01-2007, 07:30 PM
அன்பு நண்பரே,

என்னிடம் ஐமேட் பிடிஏ2 உள்ளது. தொடுதிரை மட்டும் என்பதால் படங்களைக் காண வசதியாக இருக்கும். எஸ்பி3 - திரையின் அளவு சற்று சிறியது.

மீடியா பிளேயர் அவ்வளவு சிறப்பாக செயல்படாது. எனவே TCPMP-பிளேயரை நிறுவிக்கொள்ளுங்கள்.

படங்களை மாற்ற Super மென்பொருளை பதிவிறக்கி உபயோகித்துப்பாருங்கள். உங்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன். கைபேசியின் நினைவகத்தை மனதில் வைத்து உங்கள் கோப்புகளின் அளவுகளை அமைத்துக்கொள்ளுங்கள்.

அறிஞர்
30-01-2007, 08:25 PM
Super video convertor மென்பொருள் தானே தாங்கள் சொல்வது பாரதி..

பாரதி
30-01-2007, 08:40 PM
Super video convertor மென்பொருள் தானே தாங்கள் சொல்வது பாரதி..

அன்பு அறிஞரே,
நீங்கள் கூறியது சரிதான். ஆனால் இது பாடல்களையும் கூட மாற்றுவதற்கு உதவும். ஒரு சிறிய பிரச்சினை என்னவென்றால் மென்பொருளின் அளவு கிட்டத்தட்ட 25MB. மற்றபடி இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்தான்.

சுட்டி இதோ:
www.erightsoft.com/SUPER.html

அறிஞர்
30-01-2007, 09:32 PM
நன்றி பாரதி அண்ணா.. இந்த காலத்தில் 25 mb என்பது ஒரு பெரிய விசயமல்ல...

தமிழ்பித்தன்
31-01-2007, 02:31 AM
http://www.avs4you.com/AVS-DVDtoGO.aspx இதில் இருப்பதை முயற்சியுங்கள் மேலதிக ஆலொசனைக்கு தனிமடலில் தொடருங்கள்

ஷீ-நிசி
31-01-2007, 02:43 AM
அன்பு நண்பரே,

என்னிடம் ஐமேட் பிடிஏ2 உள்ளது. தொடுதிரை மட்டும் என்பதால் படங்களைக் காண வசதியாக இருக்கும். எஸ்பி3 - திரையின் அளவு சற்று சிறியது.

மீடியா பிளேயர் அவ்வளவு சிறப்பாக செயல்படாது. எனவே TCPMP-பிளேயரை நிறுவிக்கொள்ளுங்கள்.

படங்களை மாற்ற Super மென்பொருளை பதிவிறக்கி உபயோகித்துப்பாருங்கள். உங்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன். கைபேசியின் நினைவகத்தை மனதில் வைத்து உங்கள் கோப்புகளின் அளவுகளை அமைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பரே!.. மென்பொருளின் சுட்டி இருந்தால் கொடுங்கள் 25MB என்பது பிரச்சினையில்லை.. 1GB MMC போட்டிருக்கிறேன். PDA2 என்பது JAM மாடலை விட சிறந்ததா? அல்லது இது அதைவிட சிறந்ததா.. நான் jam மாடல் பார்த்திருக்கிறேன். ரொம்ப அருமையாக இருக்கும்.

பாரதி
31-01-2007, 07:32 AM
அன்பு அறிஞரே,
நீங்கள் கூறியது சரிதான். ஆனால் இது பாடல்களையும் கூட மாற்றுவதற்கு உதவும். ஒரு சிறிய பிரச்சினை என்னவென்றால் மென்பொருளின் அளவு கிட்டத்தட்ட 25MB. மற்றபடி இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்தான்.

சுட்டி இதோ:
www.erightsoft.com/SUPER.html

அன்பு நண்பரே,

சுட்டி தரப்பட்டிருக்கிறது.

ஜாம் - தான் பின்னர் வந்தது. ஆனால் ஒவ்வொன்றுக்கும் உரிய சிறப்புகள் தனிதான். மற்றபடி பிடிஏ2-ல் அநேகமாக எல்லா வசதிகளும் இருக்கின்றன.

ஷீ-நிசி
01-02-2007, 05:18 AM
நண்பரே.. super மென்பொருள் உண்மையிலேயே சூப்பர்தான்.. என் தேவைகளை நிறைவேற்றியது... http://www.cutedvd.com இங்கேயும் சில இலவச கன்வர்ட்டர்கள் உள்ளன...
உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..

praveen
01-04-2008, 03:32 PM
கடைசியில் நானும் இங்கே வந்து சேர்ந்து விட்டேன். எனக்கு ஐமேட்-ஜாம் ஒரு அன்பு நண்பர் பரிசளித்தார். விரைவில் அதை நன்கு பார்த்து வேறு என்னென்ன தேவை எங்கே இருந்து மென்பொருள் பெற்றேன் என்று பதிக்கிறேன்.

விண்டோஸ் மொபைல் மென்பொருள் உபயோகிக்கும் நண்பர்கள் தாராளமாக கேள்வி கேளுங்கள், செக் செய்து பதில் தருகிறேன்.

யுனிகோடு வேலை செய்ய வைக்க முயற்சித்து கொண்டிருக்கிறேன். முடிந்ததும் தகவல் தருகிறேன்.

மனோஜ்
01-04-2008, 05:03 PM
சிறப்பான தகவல்கள் நன்றி