PDA

View Full Version : நண்பர்களே வனக்கம்.சக்திவேல்
30-01-2007, 08:46 AM
நண்பர்களே வணக்கம்.
நான் மெக்கானிக்கல் இஞ்சினியராக ஜப்பானில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.
தமிழ்க் கட்டுரைகள் , செய்திகளை கூகிளில் தேடிப்படிப்பது என் பொழுதுபோக்கு.

எழுதுவதில் ஆசையிருக்கின்றது ஆனால் அதிக பழக்கம் இல்லை.

வெங்கட்

பரஞ்சோதி
30-01-2007, 08:54 AM
வாங்க வெங்கட்,

உங்களை தமிழ்மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

leomohan
30-01-2007, 08:57 AM
வாருங்கள் நண்பரே. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

pradeepkt
30-01-2007, 09:48 AM
வணக்கம் வெங்கட்
உங்களுக்கு வரவேற்புகள்

ஷீ-நிசி
30-01-2007, 09:53 AM
வெங்கட்டுக்கு வரவேற்புகள்.. எழுத ஆசைப்பட்டீங்க அல்ல, படிக்க நாங்க ஆசைப்படுறோம். சீக்கிரம் பதியுங்கள்....

அறிஞர்
30-01-2007, 12:30 PM
வாருங்கள் வெங்கட்.. மன்றத்தில் எல்லா பகுதிகளுக்கும் சென்று படியுங்கள்....

நேரம் கிடைக்கும்பொழுது.... துணிந்து எழுதுங்கள்... படிக்க நாங்கள் தயார்.....

மன்றத்தின் முக்கிய நோக்கம் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தான்... எழுதுங்கள்.. பெரிய எழுத்தாளராக உருவெடுங்கள்...

மதி
30-01-2007, 01:00 PM
வரவேற்புகள்..வெங்கட்!

மயூ
30-01-2007, 01:51 PM
வணக்கம் வெங்கட்...
இங்கே எழுதிப் பழகிக்கொள்ளுங்கள். :)

ஆதவா
30-01-2007, 01:51 PM
நன்பர்களே வனக்கம். நான் மெக்கானிக்கல் இஞ்சினியராக ஜப்பானில் வேலை பார்த்துக்கொன்டு இருகின்றேன். தமிழ் கட்டுரைகள் , செய்திகளை கூகிளில் தேடிப்படிப்பது என் பொழுதுபோக்கு. எழுதுவதில் ஆசையிருக்கின்றது ஆனால் அதிக பழக்கம் இல்லை.

வெங்கட்


புதியவர் வெங்கட் அவர்களுக்கு.......... முதலில் நல்வரவு.............

வேலையும் வேலையே உயிராய் நினையும் ஊரும் அருமையானவை.... அதைவிட பொழுது பழுதில்லாமல் போவது இன்னும் அருமை. இங்கே யாருக்குத்தான் நன்றாக எழுதவரும்? நன்றாக படிப்பவர்களுக்குத் தானே??? நம் எழுத்துக்களில் நமக்கு நம்பிக்கை இருந்தாலே போதுமானது வெங்கட். தமிழ்மன்றம் ஒரு எழுத்தாளனை உருவாக்கும் பள்ளிக் கூடம்.. என் வகுப்பு இப்போதுதான் உயர்ந்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.. சில காலத்தில் மன்றத்தைத் தாங்கும் தூணாய் மாறி மன்றத்திற்கு ஒரு அட்டகாசமான எழுத்தாளன் என்ற பெருமையை வாங்கித் தர ஆயத்தமாயுள்ளேன்... ஆக நான் எழுத வந்தபோது உண்டான தயக்கம் இப்போது இல்லை........ உங்களுக்கும் அப்படித்தான்............ நிறைகளுக்கு குட் போடுவோம் அதேசமயம் குறைகளுக்கு குட்டு போடுவோம். சிந்தனை வளர்வதற்கு விமர்சனம் முக்கியம் என்ற ஒரே ஒரு விபரம் மட்டும் நீங்கள் பிடிமானமாய் வைத்திருந்தாலே போதுமானது. நீங்கள் உயருவதற்கு இங்கே படிக்கட்டுக்கள் அழகாய் கட்டி வைக்கப் படும்.....

நாமென்ன பிறக்கும்போதேவா படைப்பாளிகள் ?.. பழக்கமில்லாத பழக்கங்களை பழக்கிக் கொண்டால் நம் புகழ் பழக்கப் பட்டுவிடும்.. இனி உங்கள் எழுத்துக்களை ஆர்வமுடன் பார்வையிடுவேன்.
ஜப்பானில் பணிசெய்யுங்கள் வாழ்க்கைக்கு..... தமிழில் இனி செய்யுங்கள் பல படைப்புகள் மனதின் சந்தோசத்திற்கு...............

வாழ்த்துக்கள்.. வளருங்கள்

மனோஜ்
30-01-2007, 02:07 PM
வாழ்த்துக்கள் வெங்கட்
நம்மவர் உலகில் எங்கிருப்பினும் மன்றம் ஒன்று சேர்த்துவிடும்
தயக்கம் வேன்டாம் துனிவுடன் எழதுங்கள்

இளசு
30-01-2007, 05:55 PM
வாருங்கள் வெங்கட்

அறிஞர், ஆதவா - வின் அழகான வரவேற்பை நான் வழிமொழிகிறேன்.


அன்று தமிழ் எழுத நமக்கு சிலேட்டுப்பலகை..
இன்று நமக்கு தமிழ்மன்ற இணையப்பலகை..

எழுதிப் பழகுவோம் - அனைவரோடும் அன்பாய்
பழகி எழுதுவோம்..


வரவேற்புகள் + வாழ்த்துகள் வெங்கட்...!

மதுரகன்
31-01-2007, 04:19 PM
எழுதுவதில் ஆசையிருக்கின்றது ஆனால் அதிக பழக்கம் இல்லை
முதலில் மன்றத்திற்கு பெருமையுடன் வரவேற்கிறோம்....
அடுத்து..
ஆசை மட்டும் இருந்தாபோதும் வெங்கட்..
மற்றதெல்லாம் தானா பழகிக்கொள்ளலாம்
துணிந்து எழுதுங்கள்
நாங்களெல்லாம் என்ன வானத்திலிருந்து குதித்து வந்தா எழுதுகிறோம்..
எல்லாம் பழகியதுதான்...

வாழ்த்துக்கள் அனைத்திலும் வெற்றி பெற..

thoorigai
01-02-2007, 08:07 AM
சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழோ நாப்பழக்கம். தமிழ்மன்றமோ நட்பினாலே பழக்கம். விளாசுங்கள் விரல்கொண்டு.

வாழ்த்துக்கள்

ஓவியா
02-02-2007, 05:33 PM
வணக்கம் வெங்கட்,
நலமே காண்க.

வருக வருக வருக
உங்கள் வரவு மன்றத்தை சிறப்பிக்கட்டும்

வாழ்த்துக்கள்

தமிழ்பித்தன்
03-02-2007, 03:33 AM
சிந்தனையை சிரத்தில் ஏற்று சீறிவரும் எழுத்தை ஒழுங்காய் அமை தமிழுக்கு கண்ணீரும் வேண்டாம் தண்ணீரும் வேண்டாம் சிறிய மரத்துக்குத்தான் கண்ணீரும் தண்ணீரும் ஆலமரத்துக்கு தேவையில்லை தமிழோ விருட்சமாக வளர்ந்த ஆலமரம் அதைப்போலவே தமிழ்மன்றமும் ஊரிலே ஆலமரத்தடியில் அரட்டியதை தமிழ் மன்றத்திலே அரட்டுகிறோம் அவ்வளவுதான் இடம் வேறுபட்டாலும் பேசும் விடயம் ஒன்றே உங்கள் புதிய கருத்தை பகிருங்கள் பரிமாற நாங்கள் தயார்