PDA

View Full Version : சேப்பாக்.காம்

மன்மதன்
29-01-2007, 06:31 PM
என்னதான் சொல்லுங்க ..போட்டியை நேரில் கண்டுகளிப்பதே ஒரு சுகம்தான்.. என்னுடன் ஒரு உங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமான
நண்பர் வந்திருந்தார். செமத்தியான கூட்டம் என்பதால் , டைமுக்கு மைதானம் சென்றாலும், நீண்ட பெரிய க்யூவில் நின்று உள்ளே போவதற்குள் 5 ஓவர் முடிந்திருந்தது. ரொம்ப ஓவர். கம்பீர் கம்பீரமாக பெவிலியனில் உட்கார்ந்திருந்தார். வெளியே வரிசையில் நிற்கும் போதே, ஓஓ வென மைதானத்திலிருந்து கேட்கும் இரைச்சல் அற்புத உணர்வு. நம் நண்பர் அடித்த கமெண்ட்கள் இருக்கிறதே.. அடடா....ஹாஹ்ஹா ரகம்..

ஒருவழியாக உள்ளே சென்று இடத்தை புடிச்சாச்சி. நல்ல இடம். கீழிலிருந்து மூணாவது வரிசை. எங்களுக்கு மேல் வரிசையில் வரிசையாக குடிமகன்கள் கலாய்ச்சிக்கொண்டும், வாட்டர் பாட்டில் கொண்டு அருமையான ட்ரம்ஸ் வாசித்துக்கொண்டும் எங்கள் ஏரியாவை கலக்கினார்கள். நம் நண்பர் கையும் ஊறவே அவர் கையிலும் இரண்டு காலி பாட்டில்கள் சிக்கின.. அப்பப்ப நாங்களும் சேர்ந்து ஏரியாவே ஆஹா ஓஹோவென்றிருந்தது.

முதல் 30 ஓவர். அருமை அருமை. பேரிரைச்சல் அடங்கவே இல்லை. அப்புறம் ஆரம்பித்தது கொட்டாவி.. அதுவும் கடைசி வரை அடங்கவே இல்லை. நாமதான் வெறித்தனமா இந்தியாவை நேசிப்போமா.. நம்ம ஆள் 4,4ஆக அடிக்கும் போது நாற்காலியில் ஏறி நின்று ஆட்டம் போட்டோம் ... (பல சமயங்களில் கேமராவை நோக்கிதான்..:D) அது எல்லாம் 26 ஓவரில் காலி. அப்புறம் வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங் பண்ணும் போது முதல் பந்தில் கேல் ஆட்டம் இழந்தபோது தூக்கம் கலைந்தது. அதே உற்சாகம். அத்துடன் நம்ம ஆட்கள், அதான் வீரர்கள் (விதியேன்னு அப்படித்தான் அழைக்கவேண்டியிருக்கிறது:rolleyes:) நல்லா சாப்பிட்டு வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன், மூளை சரியா வேலை செய்யாம , அல்லது 2 மேட்ச்தான் ஜெயிச்சிட்டோமே, போனா போவுது என்று இந்த மேட்சை தாரை வார்த்து கொடுத்தனர்.

கண்டிப்பாக இது ஜெயிக்க வேண்டிய மேட்ச். ஸ்ரீசாந்த் தன் பௌலிங்கை மறந்து போயி விக்கெட் கீப்பரை விடவும் அகலமாக பந்து போட்டு 5,5 ரன்களாக கொடுத்தும், அவரையே தொடர்ந்து திசை (End) மாத்தாமல் கொடுத்தது, கங்குலி அல்லது தோனி மற்றும் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்த மேட்ச் ஆடியதற்கும் விளைவாகவே இந்த தோல்வியை கருதுகிறேன்..

மற்றபடி வெஸ்ட் இண்டீஸ் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் அதாவது பவுண்டரி, சிக்ஸர்களுக்கு நம்ம ஆடியன்ஸ் கைதட்டி உற்சாகமூட்டினர். சாமுவேல் 98ல் அவுட் ஆகி போகும் போது எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். லாராவுக்கு சென்னை ரசிகர்கள் அதிகம். கடைசியில் இந்தியா இழுவை போட்ட போதுகூட 'அடச்சே சீக்கிரம் முடிங்கப்பா..வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்கட்டும்' என்ற கமெண்டை கேட்க முடிந்தது. கடைசியில் கண்ட்ரோல் பண்ணுகிறோம் பேர்வழி என்று இந்தியா பண்ணியது கோமாளித்தனமானது. அதை முன்னாடியே பண்ணினால் என்னாவாம்?

சரி மேட்சை விடுவோம்.. சில சுவாரஸ்யங்களை பார்ப்போம்..

முதல் சுவாரஸ்யம் , என் கூட வந்து நன்றாக கமெண்ட் அடித்த நண்பர் பூ. அடுத்து, எங்களுக்கு இரண்டு வரிசை அதாவது முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு நபர் சரியான கிரிக்கெட் பைத்தியம். அந்த பக்கம் ஃபீல்டிங் நின்ற அனைத்து வீரர்களும் அந்த நபரை (ஒரு 25 வயது இருக்கலாம்) கொலைவெறியுடன் பார்த்துவிட்டுதான் சென்றார்கள். சச்சின் உள்பட. ஏன் என்று 'பூ' விளக்கினால் நன்றாக இருக்கும்.

அப்புறம், மைதானத்தில் ஆடியன்ஸை கவர் பண்ணுவதற்கு காமிரா ஒண்ணே ஒண்ணு. அது முதலில் எங்கள் பக்கம் இருந்தது, எங்கள் பக்கம் இருந்தவரை எங்களுக்கு 20 இருக்கைகள் தள்ளி ரோஜாக்கூட்டம் ஒன்று இருந்தது, அந்த ஜொள்பாண்டி கேமராமேன் எப்ப பார்த்தாலும் அந்த ரோ.கூ வையே கவர் பண்ணிக்கிட்டு இருந்தாப்ல. அதுல 'பூ'வுக்கு ரொம்ப கோபம். (நாம கவர் பண்ண முடியலேன்னு கூட இருக்கலாம் :rolleyes:)

அலை ஏற்படுத்துவதில் சென்னை ரசிகர்களுக்கு முதலிடம் தரலாம். நன்றாக என்ஜாய் பண்ணினோம்.

கேண்டீன் கொள்ளை லாபத்தில் இயங்கியது. இரண்டு சின்ன சைஸ் சப்பாத்தி (ஒண்ணரைதான் இருந்தது 30ரூ, நாலு சமோசா 30ரூ...)

மேட்ச் பார்க்க ஒரு வி.ஐ.பி குடும்பத்துடன் வந்திருந்தார். அவர் படம் இணைத்துள்ளேன்.

http://img.photobucket.com/albums/v372/manmathan/Image020.jpg

http://img.photobucket.com/albums/v372/manmathan/Image019.jpg

வீடியோ இங்கே (http://smg.photobucket.com/albums/v372/manmathan/?action=view&current=Video003.flv)

மற்ற விசயங்களை பூவிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்..:D:D

(சென்ற வருடம் நான், சேரன், பூ மேட்ச் பார்க்க போனோம். மழை பார்த்து வந்தோம். இந்த தடவை மேட்ச் பார்த்தோம். ரசித்தோம். வருடத்திற்கு இரண்டு மேட்சாவது நடத்தினால் நன்றாக இருக்கும்..;);))

leomohan
29-01-2007, 07:06 PM
நேரடி வர்ணனைக்கு நன்றி மன்மதன். கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள். மாட்ச் பார்த்தீர்கள்.

ஷீ-நிசி
30-01-2007, 03:03 AM
சேப்பாக்கத்தில் மேட்ச் என்றால் தவறாமல் கலந்துகொள்வேன். போன தடவை இரண்டுமுறை சேப்பாக்கம் சென்று மழையால் ஏமாற்றத்தோடு வீட்டுக்கு வந்தேன். இந்த முறை குறைந்தபட்ச டிக்கெட்டையே 400 ஆக மாற்றியதால் நான் வாங்கவில்லை. நம்ம பசங்க நம்மை நோக வைத்துவிடுவார்கள் எனற காரணத்தினால், ஆனால் உத்தப்பாவின் ஆட்டமும் முதல் 30 ஓவர்களும் பார்த்தபோது, அடடா, மிஸ் பன்னிட்டோமே மேட்சை, இந்தியா முதல் தடவையா 400 தொடபோகுதேனு நெனச்சேன்.. அப்படியே ஆசையில் மண்ணள்ளி போட்டானுங்க பசங்க... மன்மதன் அவர்கள் மிக அழகாக தொகுத்து உள்ளார். ரஜினியோடு அதே வரிசையில் தனுஷும் அவர் மனைவி ஐஸ்வர்யாவும் கூட இருந்தார்களே!

aren
30-01-2007, 03:52 AM
தொலைகாட்சியில் காட்டியும் முதல் 15 ஓவர்களை பார்க்கமுடியாவில் கோட்டைவிட்டது நினைத்து வருந்தினேன், ஏனெனில் இந்தியா பாட்டிங் செய்ததிலேயே அந்த 15 ஓவர்கள்தான் மிகவும் சிறப்பாக இருந்திருக்கிறது.

நானும் நினைத்தேன், நம்ம தலையிடம் பேசி ஒரு டிக்கெட் வாங்கி சென்னைவந்து மாட்ச் பார்க்கலாமா என்று, ஆனால் வேலை விஷயமாக வெளியூர் செல்லவேண்டியிருந்ததால் அது நடக்கவில்லை.

மன்மதனும் பூவும் பார்த்து ரசித்ததில் ஒரு திருப்தியே. ஆனால் மக்கள் தோற்றுவிட்டார்களே?

பிட்ச் அருமையாக இருப்பதைப் பார்த்தவுடன் திராவிட் கங்குலியை கழட்டிவிட்டார் இந்த மாட்சில் என்று என் நண்பர் ஒருவர் கூறினார். அது உண்மைதானோ என்று முதல் 15 ஓவரின் பாட்டிங் பார்த்தபொழுது நினைக்கத் தோன்றுகிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

arun
30-01-2007, 05:00 AM

அவர் சொன்னது சரி தான்

எங்கே கங்குலி சதம் அடித்து விட்டால்?

arun
30-01-2007, 05:07 AM
சென்னையில கிரிக்கெட் மேட்ச் நடந்தால் மெரினா பீச் அலை சத்தத்தை விட மக்கள் அலை அதிகம் இருக்கும்

அதுவும் நம்ம சென்னை மக்கள் எந்த அணி ஆடினாலும் சமமாக பாராட்டுவார்கள்

நம்ம ஆளுங்க ஜெயிச்சி இருந்தா சூப்பரா இருந்து இருக்கும்

முழு அணி ஆடி இருந்தால் கண்டிப்பாக வென்று இருப்போம்

மினிமம் 400 ரூபாய் டிக்கெட் என வைத்து விட்டு முண்ணனி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது ரொம்ப தப்பு

சென்னையில எப்பவோ தான் மேட்சே நடக்குது

அதுல நம்ம வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துட்டா நாம எப்ப தான் அவங்க விளையாடுறத நேர்ல பாக்குறதாம்?

இதில் காமெடி என்னவென்றால் 16 மாதம் ஓய்வில் இருந்து விட்டு வந்த கங்குலிக்கும் ஓய்வு வேடிக்கையாக இல்லை? :D :D :D

pradeepkt
30-01-2007, 05:35 AM
ம்ம்ம் மேட்சை விட விஐபியை முக்கியமாகப் படம் எடுத்த மன்மதனுக்கு நன்றி!
மத்தபடி நமக்கும் கிரிக்கெட்டுக்கும் ஏணி என்ன ஏரோப்ளேன் வச்சாலும் எட்டாது :D

பரஞ்சோதி
30-01-2007, 09:11 AM
நண்பா, தலை வரலையா?

நான் சென்னையில் இருந்திருந்தா வந்திருப்பேன்.

பூ - கிரிக்கெட் வெறியராச்சே, சொல்லவே வேண்டாம்.

எனக்கு என்னமோ கிரிக்கெட் பார்ப்பதை விட விளையாடுவது தான் ரொம்ப பிடிக்குது.

மனோஜ்
30-01-2007, 02:53 PM
மன்மதன்
நா ஒரு முறையாவது நேரடியா பார்க்கனும்
இப்பதான் ஆசை வருது
ஏநா இந்த கூட்டத்துல போயி யாருட மாட்டி முலிக்கிறது:eek: அப்படினு விட்றது நீங்க சென்ன பிறகுதான் அதுலையும் ஒரு சுகம் இருக்கு..
வர்ணனைக்கு நன்றி

அறிஞர்
30-01-2007, 03:24 PM
வர்ணனை கொடுத்த மன்மதனுக்கு நன்றி.....

நாங்கள் பார்க்காத மேட்சை பற்றி.... சுருக்கமாக அழகாக... இங்கு கொடுத்து... கலக்கிவிட்டீர்கள்...

பூவை படம் பிடிக்காமல் பூக்களை படம் படித்த ஜொல்லுபார்ட்டியை என்ன செய்யலாம்!!!!

பூ.. கொஞ்சம் கிரிக்கெட் பைத்தியத்தை பற்றிச்சொல்லுங்களேன்....

விஐபி வீடியோ கிளிப் அருமை...
-----
மணியாவுடன் இணைந்து பார்க்கவில்லையா......
மணியா தங்கள் விமர்சனம் வேண்டும்....

மன்மதன்
30-01-2007, 05:13 PM
நேரடி வர்ணனைக்கு நன்றி மன்மதன். கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள். மாட்ச் பார்த்தீர்கள்.

நன்றி மோகன். அடுத்து இங்கே மேட்ச் நடக்கும் போது நீங்களும் வாங்க.

மன்மதன்
30-01-2007, 05:15 PM
மன்மதன் அவர்கள் மிக அழகாக தொகுத்து உள்ளார். ரஜினியோடு அதே வரிசையில் தனுஷும் அவர் மனைவி ஐஸ்வர்யாவும் கூட இருந்தார்களே!

நன்றி ஷீ-நிசி. மூன்றாவதாக உள்ள வீடியோ லிங்கையும் பாருங்களேன்.:)

மன்மதன்
30-01-2007, 05:16 PM
சென்னையில கிரிக்கெட் மேட்ச் நடந்தால் மெரினா பீச் அலை சத்தத்தை விட மக்கள் அலை அதிகம் இருக்கும்
அதுவும் நம்ம சென்னை மக்கள் எந்த அணி ஆடினாலும் சமமாக பாராட்டுவார்கள்
நம்ம ஆளுங்க ஜெயிச்சி இருந்தா சூப்பரா இருந்து இருக்கும்
முழு அணி ஆடி இருந்தால் கண்டிப்பாக வென்று இருப்போம்
மினிமம் 400 ரூபாய் டிக்கெட் என வைத்து விட்டு முண்ணனி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது ரொம்ப தப்பு
சென்னையில எப்பவோ தான் மேட்சே நடக்குது
அதுல நம்ம வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துட்டா நாம எப்ப தான் அவங்க விளையாடுறத நேர்ல பாக்குறதாம்?
இதில் காமெடி என்னவென்றால் 16 மாதம் ஓய்வில் இருந்து விட்டு வந்த கங்குலிக்கும் ஓய்வு வேடிக்கையாக இல்லை? :D :D :D

மிகவும் சரியா சொன்னிங்க அருண்..

மன்மதன்
30-01-2007, 05:22 PM
மன்மதன்
நா ஒரு முறையாவது நேரடியா பார்க்கனும்
இப்பதான் ஆசை வருது
ஏநா இந்த கூட்டத்துல போயி யாருட மாட்டி முலிக்கிறது:eek: அப்படினு விட்றது நீங்க சென்ன பிறகுதான் அதுலையும் ஒரு சுகம் இருக்கு..
வர்ணனைக்கு நன்றி

கூட்டத்துல தொலைந்து போக நீங்க என்ன குழந்தையா.. மேட்ச் போறேன் வாங்கன்னு கூப்பிட்டா நாங்க கூட வரமாட்டோமா என்ன??:D:D

மன்மதன்
30-01-2007, 05:22 PM
வர்ணனை கொடுத்த மன்மதனுக்கு நன்றி.....
நாங்கள் பார்க்காத மேட்சை பற்றி.... சுருக்கமாக அழகாக... இங்கு கொடுத்து... கலக்கிவிட்டீர்கள்...
பூவை படம் பிடிக்காமல் பூக்களை படம் படித்த ஜொல்லுபார்ட்டியை என்ன செய்யலாம்!!!!
பூ.. கொஞ்சம் கிரிக்கெட் பைத்தியத்தை பற்றிச்சொல்லுங்களேன்....
விஐபி வீடியோ கிளிப் அருமை...
-----
மணியாவுடன் இணைந்து பார்க்கவில்லையா......
மணியா தங்கள் விமர்சனம் வேண்டும்....

நன்றி அறிஞரே.. தலை வரவில்லை. வேலையில் பிஸி.

gragavan
31-01-2007, 12:29 AM
நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. என்னவோ அதன் மேல் ஒரு அது. ஆனாலும் மன்மதனின் வருணனை நல்ல கதம்பமாகப் படிக்க நன்றாக இருந்தது. keep it up madan.

சிவாஜி பட கெட்டப் போல இருக்கு.

மதுரகன்
31-01-2007, 05:54 PM
அருமை மன்மதன் கிரிக்கெட் விமர்சனத்திலும் கலக்குறீங்க..