PDA

View Full Version : இரவுக் காதலி



ஆதவா
29-01-2007, 06:04 PM
இமை மூடினாலும் மறுக்க
இயலும் போது மனம்
இறுக்க முடிகிறது.
இருந்தும் பிரியோசனமில்லை
எதிரில் இருக்கும் உருவங்கள்
கண்களால் பார்த்தால் புரிகிறது
மங்கலான பார்வையில்...
தோழா! மூடிவிடு என்பது போல்
தினம் ஒரு சப்தம்
காது வழியே அல்லாமல்
கேட்கமுடிகிறது

தேவி அட்கொள்ளுகிறாள்
அவளின் கட்டுப்பாட்டில் கடைசியில்
வந்துதானே ஆக வேண்டும்
இரவு நேரத் தாலாட்டாய்
சோகமாய், காதலாய்,
தேவி அளித்த காட்சி ரணங்கள்
அவளை மீறிய அடக்கம்
இமைகளின் சக்தியறிந்த
இவளூக்கு எங்கிருந்து வந்ததோ
படங்களூம் பாடல்களும்??
இறுதியும் இமை மூடல்தான்
என்றறிந்து இனியும் மூடாமல்
இருப்பதை முடித்துக் கொண்டேன்,,,

மன்மதன்
05-02-2007, 05:46 PM
தூக்கத்தையும் கனவையும் சொல்கிறீர்களா?

ஆதவா
05-02-2007, 05:58 PM
தூக்கத்தையும் கனவையும் சொல்கிறீர்களா?
ஆம்..

ஷீ-நிசி
06-02-2007, 04:13 AM
கனவைப் பற்றிய கவிதை.... புரிந்துகொள்ள சற்று சிரமமாகத்தான் உள்ளது.. இரவு காதலி.. தலைப்பே பலவாறு அர்த்தபடுத்துகிறது...

இவளூக்கு எங்கிருந்து வந்ததோ
படங்களூம் பாடல்களும்??

நல்ல கற்பனை..
நானும் வியந்துள்ளேன்...

கனவைப் பற்றி நான் எழுதின ஒன்று
குருடர்களும் சினிமா பார்க்கிறார்கள்
அவர்கள் கனவுத்திரையில்

இவள் ஒரு அதிசயமான காதலிதான்..

ஆதவா
07-06-2007, 01:59 AM
நன்றிங்க ஷீ! அந்த இருவரிக் கவிதை தூள்.... (நன்றி ரொம்ப நாள் கழிச்சு,.,,,, என்ன செய்ய? மறந்துபோச்சு..)