PDA

View Full Version : சுவைக்க-சிரிக்க

aromabest
28-01-2007, 04:42 PM
ஒருவன் இரண்டு நீச்சல் குளங்களை தன் வீட்டில் கட்டினான். அதில் ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான். ஏன் அப்படியென்று கேட்டதற்கு,

"அட! அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா" என்றான்.

aromabest
28-01-2007, 04:43 PM
விண்டோஸுக்க்கும், லைனுக்ஸுக்கும் கல்யாணம்
அந்த அப்ளிக்கேஷன் ஸாஃப்ட்வேரெல்லாம் ஊர்கோலம்
இன்டெர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்
அந்த டிவைஸ் டிரைவர் எல்லாத்துக்கும் கும்மாளம்

கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்

...

மாப்பிள்ளை 'C' ஸ்ட்ராங்கான ஆளுங்கோ
அந்த மணப்பொண்ணு 'C++'தானுங்கோ

இந்த திருமணத்த நடத்தி வைக்கும்பெரிய மனுசன் யாருங்கோ
இந்த திருமணத்த நடத்தி வைக்கும்பெரிய மனுசன் யாருங்கோ

தலைவரு பில் கேட்ஸுதானுங்கோ!!!

leomohan

போடு ஆரம்பமே நகைச்சுவையா. நல்லது

வாருங்கள் நண்பரே. உங்கள் வரவு நல்வரவாகட்டும். அறிமுகப்பகுதியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்களேன்.

aromabest
28-01-2007, 04:45 PM
இன்டர்வியூவர் : நீங்க மூன்றாவது மாடில இருக்கிறதா கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிச்சுருது! எப்படி தப்பிப்பீங்க?

சர்தார் : ரொம்ப ஈஸி! டக்குனு கற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.

மனோஜ்
28-01-2007, 04:50 PM
நல்ல நகைசுவைகள்
உங்களை நாங்கள் அறிந்து கொன்டால் இன்னும் சுலபமாக கருத்துகூற முடியும்

மதுரகன்
28-01-2007, 04:57 PM
இன்டர்வியூவர் : நீங்க மூன்றாவது மாடில இருக்கிறதா கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிச்சுருது! எப்படி தப்பிப்பீங்க?

சர்தார் : ரொம்ப ஈஸி! டக்குனு கற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.

சிரிப்பு ஓயவில்லை...
அற்புதமாய் தொடருங்கள்..
அதற்கு முன் உங்களை அறிமுகம் செய்யுங்கள்...

aromabest
28-01-2007, 05:20 PM
வழ்வது காட்டில்,உண்பது ஒட்டை பிடிக்கப் 10 போர் கொள்றதுக்கு 2 போர் யார் அவர்?

இளசு
28-01-2007, 06:28 PM
நேர்முகம், நீச்சல் குளச் சிரிப்புகள் மிக அருமை..

வாள மீன் பாட்டு அமர்க்களம்...
இன்னும் முழுமையாக்கலாம்.

விடுகதை - விடை தெரியலைங்கோ....

பாராட்டுகள் அரோமா அவர்களே..

pradeepkt
29-01-2007, 01:04 PM
அது விடுகதைன்னு புரிஞ்சிக்கிறதுக்கே நேரம் ஆச்சு...
அரோமா, கொஞ்சம் அதுக்கு விடையச் சொல்லீருங்களேன்...

ஷீ-நிசி
29-01-2007, 02:09 PM
நகைச்சுவை, விடுகதைனு கலந்து கட்டி அடிக்கிறீங்க.... வாழ்த்துக்கள்

அறிஞர்
29-01-2007, 02:16 PM
விண்டோஸுக்க்கும், லைனுக்ஸுக்கும் கல்யாணம்
அந்த அப்ளிக்கேஷன் ஸாஃப்ட்வேரெல்லாம் ஊர்கோலம்
இன்டெர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்
அந்த டிவைஸ் டிரைவர் எல்லாத்துக்கும் கும்மாளம்

கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்

...

மாப்பிள்ளை 'C' ஸ்ட்ராங்கான ஆளுங்கோ
அந்த மணப்பொண்ணு 'C++'தானுங்கோ

இந்த திருமணத்த நடத்தி வைக்கும்பெரிய மனுசன் யாருங்கோ
இந்த திருமணத்த நடத்தி வைக்கும்பெரிய மனுசன் யாருங்கோ

தலைவரு பில் கேட்ஸுதானுங்கோ!!!
மீன் கல்யாண பாட்டு.....
அன்பரின் கைவண்ணத்தில்...
கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் கல்யாண பாட்டானது.. சிறப்பாக இருக்கிறது..

தொடருங்கள்.

அறிஞர்
29-01-2007, 02:17 PM
இன்டர்வியூவர் : நீங்க மூன்றாவது மாடில இருக்கிறதா கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிச்சுருது! எப்படி தப்பிப்பீங்க?

சர்தார் : ரொம்ப ஈஸி! டக்குனு கற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.
புத்திசாலியான சர்தார்.. அருமை... அன்பரே..

aromabest
29-01-2007, 04:09 PM
எலி சாப்பிட்டு மிச்சம் வைத்த சாதம் என்ன சாதம்?
எலிமிச்ச சாதம்

aromabest
29-01-2007, 04:12 PM
'என் மாமியார் வாழைப் பழத்தோல்ல சறுக்கி விழுந்துட்டாங்க...''

''நீ என்ன பண்ணிட்டிருந்த...''

''நான் வாழைப்பழம் சாப்பிட்டுட்டிருந்தேன்...''

aromabest
29-01-2007, 04:14 PM
சொந்த ஊர் எது?"

"அந்த அளவுக்கெல்லாம் வசதி இல்லீங்க...சொந்த வீடுதான் இருக்கு!"

aromabest
29-01-2007, 04:20 PM
ஒருவன்: "டேய், என் கனவுல நேத்து த்ரிஷா வந்தாங்க... ஆனா அவங்க பேசியது எதுவும் எனக்கு கேட்கல... அது ஏன்டா?"

மற்றொருவன்: "டப்பிங் பேசுறவங்களும் கூட வந்தாங்களா பாத்தியா?"

ஒருவன்: "??!!!??"

aromabest
29-01-2007, 04:21 PM
ஆசிரியர்: சூரியன் மறைந்தது. இது நிகழ் காலமா, எதிர் காலமா, இறந்த காலமா?
மாணவன்: சாயங்காலம் சார்

aromabest
29-01-2007, 04:35 PM
கடல் அரிப்பை தடுக்க என்ன செய்யணும்?

நல்லா சொறிஞ்சி விடணும்.......

ஷீ-நிசி
29-01-2007, 04:43 PM
கடல் அரிப்பை தடுக்க என்ன செய்யணும்?

நல்லா சொறிஞ்சி விடணும்.......

ஹ ஹ ஹ ஹ ஹ;)
அருமை அருமை

மதுரகன்
29-01-2007, 05:29 PM
சொந்த ஊர் எது?"

"அந்த அளவுக்கெல்லாம் வசதி இல்லீங்க...சொந்த வீடுதான் இருக்கு!"

கடல் அரிப்பை தடுக்க என்ன செய்யணும்?

நல்லா சொறிஞ்சி விடணும்.......

அருமை அரோமா.
தொடருங்கள்...

மன்மதன்
29-01-2007, 07:44 PM
ஒருவன்: "டேய், என் கனவுல நேத்து த்ரிஷா வந்தாங்க... ஆனா அவங்க பேசியது எதுவும் எனக்கு கேட்கல... அது ஏன்டா?"

மற்றொருவன்: "டப்பிங் பேசுறவங்களும் கூட வந்தாங்களா பாத்தியா?"

ஒருவன்: "??!!!??"

நல்ல நகைச்சுவை.. தொடர்ந்து கொடுங்க.. இன்னிக்கு திரிஷாவை நுங்கம்பாக் ஷாப்பிங்ல பார்த்தேன். கூடவே டப்பிங் ஆர்டிஸ்ட் வரலை. டிரைவர்தான் வந்தான்..:D:D

leomohan
29-01-2007, 07:55 PM
கடல் அரிப்பை தடுக்க என்ன செய்யணும்?

நல்லா சொறிஞ்சி விடணும்.......

ஐயோ நல்ல கடிச்சிட்டீங்க. தூள். தொடருங்கள்.

இளசு
29-01-2007, 08:00 PM
ஒவ்வொண்ணும் செம்ம ...... சிரிப்பு...

அசத்துறீங்க அரோமா.. தொடருங்கள்..

SathishVijayaraghavan
30-01-2007, 06:07 AM
தமிழ் படத்து டயலாக்குகள்

pradeepkt
30-01-2007, 07:20 AM
தமிழ்ப் பட டயலாக்குகளை நீங்க அடிச்சு வெளாசிருக்குறதைப் பாத்துச் சிரிச்சு சிரிச்சு வந்தேன் சீனாத் தானாடோய்...

ஷீ-நிசி
30-01-2007, 07:41 AM
தமிழ் பட டயலாக்குகள் எல்லாமே தூள் ரகம்... தொடருங்கள் நண்பரே,

maganesh
06-02-2007, 01:28 PM
அப்படிப்போடு. தண்ணி இருந்தால்தான் அது குளம். இல்லாது விட்டால் அது பாழும் கிணறு. நல்ல சிரிப்புத் துணுக்குத்தான் போங்கள்.

aromabest
07-06-2007, 03:57 PM
மூலை வேலை செய்ய கொஞ்ஞம் யோசிக்கட்டும்.முயற்சி செய்யுங்கள்.

aromabest
07-06-2007, 04:00 PM
http://001

தாமரை
07-06-2007, 04:03 PM
வழ்வது காட்டில்,உண்பது ஒட்டை பிடிக்கப் 10 போர் கொள்றதுக்கு 2 போர் யார் அவர்?

பேன்...

விகடன்
07-06-2007, 04:38 PM
ஒருவன் இரண்டு நீச்சல் குளங்களை தன் வீட்டில் கட்டினான். அதில் ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான். ஏன் அப்படியென்று கேட்டதற்கு,

"அட! அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா" என்றான்.

இன்டர்வியூவர் : நீங்க மூன்றாவது மாடில இருக்கிறதா கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிச்சுருது! எப்படி தப்பிப்பீங்க?

சர்தார் : ரொம்ப ஈஸி! டக்குனு கற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.

ஆற்புதமாக இருக்கிறது.
தொடருங்கள்.

விகடன்
07-06-2007, 04:45 PM
கடல் அரிப்பை தடுக்க என்ன செய்யணும்?

நல்லா சொறிஞ்சி விடணும்.......

அருமையாக இருந்தது. மேலும் வாசித்துவிட்டு அப்பப்போ பின்னூட்டமிடுகிறேன்.

பி.கு: ஒவ்வொன்றாக பின்னூட்டமிட எனக்கு பொறுமையில்லை

விகடன்
07-06-2007, 04:48 PM
அதுசரீங்க. இன்னும் அந்த விடுகதைக்குத்தான்....