PDA

View Full Version : கற்பனை கேள்வி பதில்கள்



leomohan
27-01-2007, 06:34 PM
ஒரு நாள் ஆசிரியர் என்னை அழைத்து நம் பத்திரிக்கையில் கேள்வி பதில் பகுதி தொடங்கினால் என்ன என்று கேட்டார். நானும் என்னுடைய வழக்கமான குறும்புடன் ஐயா அதற்கு யாராவது கேள்வி கேட்க வேண்டும். அப்போது தான் நாம் பதில் எழுத முடியும் என்றேன்.

ஏம்ப்பா நீ தான் கற்பனை பேட்டியெல்லாம் எடுக்கிறாயே. கற்பனை கேள்வி பதில் தொடங்கேன் என்றார்.

அவர் சொன்னது நியாயமாக படவே இந்த கேள்வி பதில்.

கே: த்ரிஷாவின் இடையளவு என்ன? மன்னார்குடி கலியபெருமாள்.

ப: மன்னிக்கவும் நீங்கள் தவறான முகவரிக்கு இந்த கேள்வியை அனுப்பிவிட்டீர்கள். சற்று பொரும் குமுதத்தின் முகவரியை தருகிறேன்.

கே: சன் டிவி ஃபளாஷ்நியூஸில் சென்னையில் பயங்கரம் என்று படித்து பதறிவிட்டேன். என்னாச்சு?
திருகழுகுன்றம் செந்தில்.

ப: அதுவா ஒரு சைக்கிளும் ஒரு ரிக்ஷாவும் மோதி கொண்டுவிட்டது. இப்படியெல்லாம் செய்தால் தானே நீங்கள் 2 ரூபாய் கொடுத்து தமிழ் முரசு வாங்கி படிப்பீர்கள்.

கே: ஐயா ஒரு ஜோக்?
சென்னை சொக்கலிங்கம்.
ப: ஏம்ப்பா மெனக்கெட்டு தபால் நிலையம் போய் தபால் அட்டை வாங்கி இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் காசை வீணடிக்கிறீர். போய் வேலையை பாருமய்யா.

கே: சமீபத்தில் நடந்த எம் எல் ஏ கொலையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சேத்தியாதோப்பு சேகர்.

ப: கொலை என்பது நிஜம். அதைப்பற்றி நினைத்து நான் எழுதினால் அது கற்பனை. என்ன நினைக்கிறார்கள் என்பதை படிக்க வேண்டுமானால் ஜூனியர் விகடன், நக்கீரன் வாங்கி படியுங்களேன்.

கே: தனுஷின் வீட்டில் ஏதாவது நல்ல செய்தியா?
திருப்பூர் தினகரன்.

ப: யோவ். இந்த மாதிரி விசயத்துக்குதான் விகடன்-ற ஒரு மாபெரும் பழைய பத்திரிக்கை இருக்கே என்னை ஏய்யா தொந்தரவு பண்றே!

ஆதவா
27-01-2007, 06:38 PM
அருமை மோகன்....... சிரிக்கவைத்து நெத்தியடி

tamil81
28-01-2007, 02:59 AM
அற்புதம்
மீண்டும் மீண்டும் படித்து பார்த்து
ரசித்தேன்

மயூ
28-01-2007, 03:11 AM
சிரிக்க வைத்தவை விட சற்றே சிந்திக்க வைத்தது... :)

ஷீ-நிசி
28-01-2007, 09:53 AM
நல்ல தைரியமாக உங்கள் கருத்துக்களை சிரிப்போடு விலாசுகிறீர்கள். அருமை அருமை

leomohan
28-01-2007, 10:21 AM
அருமை மோகன்....... சிரிக்கவைத்து நெத்தியடி

நன்றி ஆதவா. இது தேனீ மாத இதழுக்காக முன்பு நான் எழுதியது. தேனீ இப்போது இணைய மாத இதழாக வருகிறது. நீங்களும் பங்களிக்கலாமே.

leomohan
28-01-2007, 10:21 AM
அற்புதம்
மீண்டும் மீண்டும் படித்து பார்த்து
ரசித்தேன்


இது சாம்பிள் தான் தமிழ். தமிழ் நாட்டில் பல காரியங்கள் நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது நாட்டின் நிலைமை அப்படி.

leomohan
28-01-2007, 10:22 AM
சிரிக்க வைத்தவை விட சற்றே சிந்திக்க வைத்தது... :)


நன்றி மயூரேசன். ஐயோ நான் சிந்திக்க வைக்கலைங்கோ.

leomohan
28-01-2007, 10:22 AM
நல்ல தைரியமாக உங்கள் கருத்துக்களை சிரிப்போடு விலாசுகிறீர்கள். அருமை அருமை

நம்ம நாட்டில் Freedom of Speech மட்டும் தான் இன்னும் பாக்கியிருக்கிறது. இதையே தமிழ் நாட்டில் இருக்கும் போது சொல்லியிருந்தால் ஆசிட் ஊற்றியிருப்பார்கள். :D

ஷீ-நிசி
28-01-2007, 10:57 AM
நம்ம நாட்டில் Freedom of Speech மட்டும் தான் இன்னும் பாக்கியிருக்கிறது. இதையே தமிழ் நாட்டில் இருக்கும் போது சொல்லியிருந்தால் ஆசிட் ஊற்றியிருப்பார்கள். :D

நீங்க தமிழ் நாட்ல இல்லை என்பதை மறந்துட்டேன் நண்பரே..

ஆனாலும் அதற்கும் ஒரு துணிவு வேண்டும்.. உங்களிடல் நிறையவே உள்ளது.

மதுரகன்
28-01-2007, 05:05 PM
நல்லா நகைச்சுவை எழுதுகிறீர்கள் மோகன்...
வாழ்த்துக்கள்..
இப்படியே நிறுத்திவிடாது தொடருங்கள்...

pradeepkt
29-01-2007, 01:10 PM
நடத்துங்க மோகன்.
இனி மன்றத்தில் மோகனின் கேள்வி பதில் பகுதி ஆரம்பிச்சுற வேண்டியதுதான்

leomohan
29-01-2007, 01:58 PM
நன்றி ப்ரதீப், மதுரகன் மற்றும் ஷீ.

அறிஞர்
29-01-2007, 02:24 PM
இதை... போல்...
மோகன் கேள்வி-பதில் ஆரம்பிங்கள்..

கேள்வியும் நானே-பதிலும் நானே என்ற பாணியில்..

மன்மதன்
29-01-2007, 07:10 PM
நல்ல கற்பனை வளம்.. இது மாதிரி நிறைய எங்களுக்காக தயார் பண்ணுங்க.. படிக்க நாங்க இருக்கிறோம்.

இளசு
29-01-2007, 07:27 PM
சிக்கென சில கருத்துகள் சொல்ல நல்ல பாணி..
மோகனுக்கு கைவந்த பாணி..

பாராட்டுகள். தொடருங்கள்.

leomohan
29-01-2007, 07:40 PM
இதை... போல்...
மோகன் கேள்வி-பதில் ஆரம்பிங்கள்..

கேள்வியும் நானே-பதிலும் நானே என்ற பாணியில்..


நன்றி அறிஞரே. யாராவது கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும். :)

leomohan
29-01-2007, 07:40 PM
நல்ல கற்பனை வளம்.. இது மாதிரி நிறைய எங்களுக்காக தயார் பண்ணுங்க.. படிக்க நாங்க இருக்கிறோம்.


நன்றி மன்மதன். நிஜமான கேள்விகள் கேட்டால் என் கற்பனை பதில்களை தருகிறேன். அடிக்காமல் இருந்தால் சரி. :)

leomohan
29-01-2007, 07:41 PM
சிக்கென சில கருத்துகள் சொல்ல நல்ல பாணி..
மோகனுக்கு கைவந்த பாணி..

பாராட்டுகள். தொடருங்கள்.


நன்றி இளசு.

leomohan
29-01-2007, 07:49 PM
சிம்புவிடம் கற்பனை பேட்டி

லியோ - வணக்கம்.

சிம்பு - சொல்லமாட்டேன் வணக்கம். ஏன்னா நிருபருக்கும் எனக்கும் பிணக்கம்.

லியோ - ஐயோ என்னங்க நீங்க உங்க அப்பா மாதிரி ஆரம்பிச்சிட்டீங்க.

சிம்பு - உன் கண்ணு நொள்ளை. எங்க அப்பாவுக்கு நான் புள்ளை. கேளுடா கேள்விய இல்லாட்டா இடத்தை பண்ணு காலிய.

லியோ - உங்கள் அடுத்தப்படம்?

சிம்பு - லூசுப்பையா

லியோ - என்னங்க படம் பெயர் கேட்டா திட்டறீங்க.

சிம்பு - அதான்டா அடுத்த படம். புரிஞ்சுக்கடா நீ ஜடம்.

லியோ - உங்களுக்கு தனுஷூக்கும் ஆக மாட்டேங்குதாமே எதக்கு.

சிம்பு - அவன் கட்டிக்கிட்டா ஒரு பொண்ணே, அவ தான்டா என் கண்ணே

லியோ - அப்ப நயன்தாரா

சிம்பு - அது யாருடா நயன்தாரா, அவ தான் என் கால வார்ரா

லியோ - நீங்க படம் எடுக்கிற அளவுக்கு மெச்சூரிட்டி வர்லைன்னு பேசிக்கறாங்களே.

சிம்பு - எனக்கு தேவையில்லை மெச்சூரிட்டி, என் படம் பார்க்க வர்றவங்க லூஸு மெஜாரிட்டி

லியோ - இந்த வயசுல உங்கப்பா டூயட் பாடி ஆடினது சகிக்கலைன்னு சொல்றாங்களே. இதை தடுத்து தமிழ் திரை உலகத்தை காப்பத்தக் கூடாதா.

சிம்பு - அவர் தான்டா என் அப்பா, ஆடுவாருடா டான்சு டப்பா, இதெல்லாம் என்ன தப்பா, விஜயகாந்து ஆடினா பாக்குறியே நீ சுப்பா

லியோ - ஐயா ஆளை விடப்பா.

சிம்பு - போடங் ................... நீ என்ன பெரிய பிஸ்தா. நான் போய் சாப்பிடுவேன் பாஸ்தா.

மன்மதன்
29-01-2007, 08:08 PM
ஐய்யோ சிம்புவும் லியோவும் அடிக்கிறாங்க லூட்டி.. நாம மாட்டிக்கிட்டோமே வசமா மாட்டி.. இதயே காரணம் காட்டி.. அடுத்து லியோவை தனுஷ்கிட்டே போவோமே ஓட்டி..:D:D

லியோ, நீங்க கொஞ்ச நேரம் தனுஷ்கிட்டே பேச முடியுமா??

leomohan
29-01-2007, 08:11 PM
ஐய்யோ சிம்புவும் லியோவும் அடிக்கிறாங்க லூட்டி.. நாம மாட்டிக்கிட்டோமே வசமா மாட்டி.. இதயே காரணம் காட்டி.. அடுத்து லியோவை தனுஷ்கிட்டே போவோமே ஓட்டி..:D:D

லியோ, நீங்க கொஞ்ச நேரம் தனுஷ்கிட்டே பேச முடியுமா??

ஓ அவசியம். தங்கள சித்தம் என் பாக்கியம்.

leomohan
29-01-2007, 08:16 PM
தனுஷூடன் ஒரு கற்பனை பேட்டி

லியோ - வணக்கம்

தனு - ....

லியோ - வணக்கம்

துனு - நான் ரொம்ப அடக்கமானவங்க. நான் அதிகமா பேசமாட்டேன். எனக்கு பந்தாவெல்லாம் கிடையாது. நான் பேசவே மாட்டேங்க.

லியோ - சரி அதுக்கு வணக்கம் சொல்லலாமே.

தனு - நான் 14 வயசிலே வணக்கம் சொல்லனும்னு முடிவ பண்ணிட்டேங்க. எங்க அப்பா அப்பவே ஒரு நாள் நீ பெரிய வணக்கம் சொல்ற ஆளா வரப்போறாருன்னு சொல்லிட்டாரு. என் அண்ணன் தான் எனக்கு வணக்கம் சொல்ல கத்து கொடுத்தாரு. அப்பவெல்லாம் அவரோட சண்டை போடுவேன்.

லியோ - சரிங்க வணக்கம் சொல்லுங்க.

தனு - எனக்கு ரஜினி சாரை தெரியாதுங்க. ஆனா நான் வணக்கம் சொல்ற ஸ்டைலு ரஜினி சார் மாதிரி இருக்குன்னு சொல்றாங்க. இப்ப நான் அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டதாலே அவரு மாதிரி வணக்கம் சொல்லலை. நான் எப்பவுமே ரஜினி சார் மாதிரி தான் வணக்கம் சொல்றேன்.

லியோ - சரிங்க இப்பவாவது வணக்கம் சொல்லுங்க.

தனு - சரி. வணக்கம். கேள்வி கேளுங்க.

லியோ - என்ன கேள்வி கேட்கறது. இருந்தது 30 நிமிஷம். அதுல வணக்கம் சொல்றதுக்கே இத்தனை நேரம் ஆயிடுச்சு. போய்யா.

nonin
30-01-2007, 12:39 AM
என்ன மோகன், இப்படி இறங்கிட்டிங்க!!!!!!மாறுபட்ட சிந்தனையான கருத்துகள்,தமிழ்நாட்டு நடிகர்கள் செய்கின்ற கேலிக்கூத்த சொல்லி காலை வாரி விடுகிற நையாண்டி, வார்த்தை விளையாட்டு ஆடும் பிள்ளை குணம், உங்கள் பரிமாணம் வியக்கவைக்கிறது.கலக்குங்க.வாழ்த்துக்கள்.

leomohan
30-01-2007, 07:53 AM
என்ன மோகன், இப்படி இறங்கிட்டிங்க!!!!!!மாறுபட்ட சிந்தனையான கருத்துகள்,தமிழ்நாட்டு நடிகர்கள் செய்கின்ற கேலிக்கூத்த சொல்லி காலை வாரி விடுகிற நையாண்டி, வார்த்தை விளையாட்டு ஆடும் பிள்ளை குணம், உங்கள் பரிமாணம் வியக்கவைக்கிறது.கலக்குங்க.வாழ்த்துக்கள்.

எண்ணக் குதிரை வேகமாக ஓடும் போது எழுத்துக்களும் வேகத்திற்கு ஈடு கொடுப்பது தானே நியாயம்.

pradeepkt
30-01-2007, 09:45 AM
அது சரி... உங்க கற்பனைக் குதிரை பறக்கயில்ல செய்யுது?

மனோஜ்
30-01-2007, 02:17 PM
அறுமையான கற்பனை கேள்விக்கு
லியோவிக்கு என்ன செல்றது:confused:
எப்படி செல்றது:confused:
இப்படி செல்லலாமா:rolleyes:
இல்ல இப்படி செல்லாமா;)
எப்படி சென்னா என்ன இப்படி தானே செல்ல பொரோம்B)
இப்படி யேசெல்லிருவேம்:rolleyes:
சரி லியே செல்லமடுமா:p
லியே .....உஸ் ....உஸ்:D
சரி ....உம்
செல்லட்டா:D

லியேவுக்கு வணக்கம்:D :D :D :D :D

leomohan
30-01-2007, 04:43 PM
ஹா ஹா. நன்றி மனோ.