PDA

View Full Version : பெய்யென பெய்யும் (கவிதை) மழை

tamil81
27-01-2007, 05:59 PM
இங்கே நான் சுவைத்த காதல் கவிதைகள் தொடங்கி திரைப்பட பாடல் வரை
அனைத்து கவிதைகளும் உங்களை நனைக்கும்

எங்கே எனது கவிதை ?

விரை(?) வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெய்யில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே...
பாறையில் செய்ததும் என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
-வைரமுத்து

leomohan
27-01-2007, 06:39 PM
கண்டுக் கொண்டேன் கண்டுக் கொண்டேன். அருமையான பாடல். அந்த படத்தில் அனைத்து பாடல்களுமே அருமை.

நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா - அற்புதமான வரிகள்.

தொடருங்கள். நனைய தயாராக இருக்கிறோம்.

பென்ஸ்
27-01-2007, 07:31 PM
இந்த பாடலில் எல்லா வரிகளும் ஒரு சிறு கவிதையே...

தொடருங்கள்... நனைகிறோம்...

ஓவியா
27-01-2007, 09:48 PM
அருமையான ஆரம்பம்

உங்கள் ரசனயை ரசிக்க நாங்கள் தயார்

தொடருங்கள்

tamil81
28-01-2007, 02:40 AM
சில சம்பவங்களுடன் அவற்றின் பிண்ணணியில் ஒலிக்கும் பாடகளும்
மறக்க முடியாதவைகளாகவே அமைந்துவிடும்
என் வாழ்க்கையில் அது போன்ற ஒன்றுதான் இது.
நானும் எனது காதலை சொல்லாத எனது காதலியும் ஒரே பேருந்தில் எதேச்சையாக சென்ற போது பேருந்தில் ஒலித்து என் உயிரை திருடிய பாடல்
பாடலை கேட்டுக் கொண்டே அவளை நோக்கிய படியே எனது பயணம்
சூழலை மனதில் இருத்தி கவிதையை பாருங்கள்
---------------------------------------------------------------

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி
என் கண் பார்த்தது என் கை சேருமோ
கை சேராமலே கண்ணீர் சேருமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா
உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்
கண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்
உன்னைத் தேடியே இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ
ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்

ஆ...
நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது
கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்
நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்
ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே...விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன்
-வைரமுத்து

aren
28-01-2007, 03:46 AM
வைரமுத்து ஏ.ஆர்.ஆருடன் சேரும்பொழுது எப்படித்தான் இப்படி வரிகள் வந்து கொட்டுகிறதோ தெரியவில்லை.

மறுபடியும் இரண்டு மகான்களும் சேர்ந்து பணியாற்றவேண்டும் அப்பொழுதுதான் நமக்கும் பல சிறந்த பாடல்கள் கிடைக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியா
28-01-2007, 10:11 AM
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ

ஒரு வரி கவிதை

ரசித்தேன், ரசித்தேன் மீண்டும் ரசிக்கின்றேன்

ஷீ-நிசி
28-01-2007, 10:25 AM
இங்கே நான் சுவைத்த காதல் கவிதைகள் தொடங்கி திரைப்பட பாடல் வரை
அனைத்து கவிதைகளும் உங்களை நனைக்கும்

எங்கே எனது கவிதை ?

விரை(?) வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெய்யில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே...
பாறையில் செய்ததும் என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
-வைரமுத்து

நண்பரே... அது விரை அல்ல பிறை

ஷீ-நிசி
28-01-2007, 10:30 AM
சில சம்பவங்களுடன் அவற்றின் பிண்ணணியில் ஒலிக்கும் பாடகளும்
மறக்க முடியாதவைகளாகவே அமைந்துவிடும்
என் வாழ்க்கையில் அது போன்ற ஒன்றுதான் இது.
நானும் எனது காதலை சொல்லாத எனது காதலியும் ஒரே பேருந்தில் எதேச்சையாக சென்ற போது பேருந்தில் ஒலித்து என் உயிரை திருடிய பாடல்
பாடலை கேட்டுக் கொண்டே அவளை நோக்கிய படியே எனது பயணம்
சூழலை மனதில் இருத்தி கவிதையை பாருங்கள்

நண்பா, உங்களுக்கு இப்படி இரு சந்தர்ப்பப்ம் கிடைத்துவிட்டது.. இப்படி இதே போல ஒரு சந்தர்ப்பம் கிடைத்திடுமா என்று நான் ஏங்கின காலங்கள் நிறைய... நிறைய...

என் கண் பார்த்தது என் கை சேருமோ
கை சேராமலே கண்ணீர் சேருமோ

மனோஜ்
28-01-2007, 12:41 PM
நல்ல தொகுப்பு தமிழ் தொடருங்கள்....

tamil81
28-01-2007, 02:50 PM
நண்பரே... அது விரை அல்ல பிறை

கோடான கோடி நன்றிகள்
நன்றி ... நன்றி.......நன்றி

நீண்ட நாள் குழப்பம் இன்று நன்றாகத் தூங்குவேன்

tamil81
29-01-2007, 03:36 AM
காதல் பாடல் உடன்
கொஞ்சம் தத்துவமும் இனி

tamil81
29-01-2007, 03:38 AM
உண்மையில் இப்பாடலை படிப்பதை விட
டி.எம்.எஷ். குரலில் கேட்டு பாருங்கள்
மறக்க மாட்டீர்கள்

உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
ஏழைகள் வாழ்க்கை மலராதோ
ஒருநாள் வாழ்க்கை புலராதோ
-----------------------------
தரை மேல் பிறக்க வைத்தான்-எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்-பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலைகடல் மேலே அலையாய் அலைந்து
உயிரை கொடுப்பவர் இங்கே

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடீநீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவை தவிற
துணையாய் வருவர் யாரோ ?

ஒருநாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜான் வயிரை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
-வாலி

ஷீ-நிசி
29-01-2007, 03:46 AM
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை

மீனவனின் வாழ்க்கையை அழகாய் அடக்கிவிட்ட வரிகள்.....
அருமை நண்பரே... கலந்து தாருங்கள் எல்லா பாடல்களையும்

பிச்சி
29-01-2007, 03:26 PM
தமிழ் தாத்தா!! இது வைரமுத்து எழுதியதா? பழையபாட்டுக்கு எழுதுயிருக்கிறாரா?

tamil81
29-01-2007, 03:45 PM
தமிழ் தாத்தா!! இது வைரமுத்து எழுதியதா? பழையபாட்டுக்கு எழுதுயிருக்கிறாரா?

நண்பரே இப்பாடலை எழுதியவர் வாலி
பாடலின் இறுதியில் எழுதி இருக்கிறேன். பார்க்கவில்லையா ?
இத்தொகுப்பில் அனைவரின் பாடல்களும் இடம் பெறும்

நன்றி

பிச்சி
29-01-2007, 03:48 PM
அட நான் கவனிக்கவே இல்ல., பாடல் தெரிந்ததும் கடைசி வரி வரை படிக்கவில்லை. நன்றி தாத்தா..

tamil81
30-01-2007, 02:29 AM
அட நான் கவனிக்கவே இல்ல., பாடல் தெரிந்ததும் கடைசி வரி வரை படிக்கவில்லை. நன்றி தாத்தா..

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைப்
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

அதுசரி முதல்ல என்னுடைய அவதாரர் படத்தை மாத்தனும்.
நினைக்கிறேன் சரிதானா ?

ஆதவா
30-01-2007, 02:32 AM
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைப்
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

அதுசரி முதல்ல என்னுடைய அவதாரர் படத்தை மாத்தனும்.
நினைக்கிறேன் சரிதானா ?

ஆமாமாம்// இந்த படத்தைப் பார்த்த்டா எனக்கே தாத்தா மாதிரிதான் இருக்கே... நல்லவேளை என்படத்தைப் பார்த்துட்டு எதுவும் சொல்லல,,,

tamil81
11-02-2007, 04:14 PM
வைரமுத்துவின் கவிதை தொகுப்பிலிருந்து ஒரு கவிதை
கொஞ்சம் விட்டு விட்டு
--------------------------
தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?
இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்
இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -
என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -
வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -
சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்
வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -
நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.
சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?
நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்
உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்
என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே
உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?
இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?
என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ
உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது
நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது
பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்
இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்
என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி
என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்
உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்
தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்
புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்
நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது
உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது
இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்
சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.

ஓவியன்
25-02-2007, 06:15 AM
எங்கே எனது கவிதை? - எனக்கு பிடித்த ஒரு கவிதை, அதனை வரிகளாகத் தந்தமைக்கு நன்றிகள்.