PDA

View Full Version : எனது டைரியிலிருந்து சில குறிப்புகள்ஆதவா
27-01-2007, 04:38 PM
நண்பர்கள், தோழிகள், சகோதரர்கள், சகோதரிகள் ஆகிய உங்கள் எல்லாருக்கும் எனது நன்றி கலந்த வணக்கம்.....

எனது எண்ணங்களை எங்கே பறக்க விடுவது என்று நீண்ட நாட்களாக குழம்பிப் போயிருந்தேன்... நல்லவேளை. தமிழ்மன்றம் கிடைத்தது.. பறந்து கொண்டிருக்கிறேன்..

இனி,
எனது டைரியிலிருந்து சில குறிப்புகள்.... டைரியில் எழுதிய யாவும் பகிர்தல் நல்லதல்ல..... ஆயினும் யாருக்கும் துன்பமில்லாத சில செய்திகளையும் அனுபவங்களையும் பகிர்தல் தவறல்ல என என் மனம் சொல்கிறது

எனது டைரியைப் பற்றி: நான் டைரி எழுத ஆரம்பிக்கும்போது எனக்கு வயது 11 இருக்கும் (ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்ததாக ஞாபகம்) ஆனால் அவைகள் சில தாள்களில் எழுதிய காரணத்தினால் அழிந்து போயின.. அது போல சிலவற்றை அப்பா படித்து கிழித்துப் போட்டார்....(அதற்கு பல குடும்ப காரணங்கள்)
யாரும் படிக்காமல் இருக்கும் வண்ணம் டைரி எழுதத் துவங்கியது நான் 10ம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன்.... எப்படி? ஒருவரையோ அல்லது ஒரு பொருளையோ குறிக்கும்போது, பட்டப்பெயர் போட்டு கதை எழுதுவது போல எழுதுவேன்... யாருக்கும் புரியாது. எனக்கு மட்டுமே புரியும் வகையில் இருக்கும்... தற்போது கவிதை கலந்து எழுதுவதால் யாருக்கும் புரியாது...
முதலில் டைரியெல்லாம் வாங்கவில்லை... நோட்டு புத்தகத்தில் தான் எழுதினேன்.. தற்சமயம் 2007ல் தான் டைரி தனியாக வாங்கி எழுத ஆரம்பித்துள்ளேன்.

என் குடும்பம் ஒரு சிறு அறிமுகம்: அப்பா, அம்மா, தம்பி, தங்கை,, நான்.. ஆக ஐந்துபேர்........
அப்பா ஒரு ஓவியர்; அம்மா, தேவியர்; நானோ காவியன்.... எப்படி குடும்பம்????
அப்பாவின் குடும்பமும் அம்மாவின் குடும்பமும் மிகமிக பெரியது.... ஒரு என் கல்யாணத்திற்கு இவர்கள் குடும்ப நபர்களை அழைத்தாலே போதுமானது.... அந்த அளவுக்கு.............. இதிலே கொடுமை என்ன வென்று கேளுங்கள்....
இத்தனை பேரப்பிள்ளைகளிலும் ஆணாகப் பட்டவன் நான் ஒருவனே.... எனக்கு நிறைய தங்கைகள் உண்டு (முறைப் பெண்களும்தான்,,) ஆண்களில் என் வயதுக்கு ஈடானவர்கள் ஒருவர்கூட இல்லை...(அப்பா வகையில் ஒருவர் உண்டு ஆனால் அவ்வளவாக தொடர்பு இல்லை...).. எல்லாம் பெண்கள்... அதனால்தான் என்னவோ எனது உறவினர்கள் மத்தியில் நான் ஒரு ஸ்டார்.... அவ்வளவு எளீதில் என்னை விடமாட்டார்கள்.... ( நிறையபேரை எனது அம்மாவாகவே நினைத்துவருகிறேன்... சித்தி, அக்கா, பெரியம்மா, இன்னும் பலர்/// )

நான் சிறு வயதில்: சிறு வயதில் நான் ரெம்ப ரெம்ப அழகான குழந்தையாம்... ஜப்பான் குழந்தை மாதிரி இருப்பேனாம்.... நிறைய் துறுதுறு..... அடங்க மாட்டேன்... என்னை வைத்து ஒரு போட்டோ கூட எடுக்க முடியாதாம்.. அந்த அளவுக்கு குறும்பு... நான் வளர்ந்தது ஈரோட்டில், ... இரண்டாம் வகுப்பு வரை அங்கேதான் படித்தேன்.. அப்பறமாக குடும்பத்தோடு திருப்பூர் வந்துவிட்டோம்.
சிறு வயதில் என்னை அடக்கவே என் கையில் புத்தகத்தைத் திணித்தார் எனது தந்தை.... என் கையில் முதன் முதலாக கிடைத்த புத்தகம் கந்த சஷ்டி கவசம்... அப்பறம் என்ன வென்று தெரியவில்லை... சில நாட்களில் இராமாயணமும் மகாபாரதமும் படித்தேன்... எனக்கு அந்த நாட்களில் புத்தகம் படிப்பது மிகவும் பிடித்துப் போனது... நண்பர்களே நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ, நான் ஐந்தாம் வகுப்பு முடிக்கும்போது ராமாயணமும் பாரதமும் முடித்துவிட்டேன்... எனது ஆர்வத்தில் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார் தந்தை.
அப்போது கிடைத்த புத்தகம் தான் பாரதியார் கவிதைகள்.......

கவிதை எழுதியது : நிச்சயமாக சொன்னால் எனது கவிதைக்கு விதை விதைத்தது பாரதிதான்... நல்ல ஞாபகம் இருக்கிறது... பாரதியின் புத்தகத்தை அவ்வளவாக நான் முதலில் விரும்பிப் படிக்கவில்லை.. கவிதைகள் எனக்குப் புரியாது.. ஒரு சமயம் தந்தை என்னிடம் ஒரு கவிதை படித்து விளக்கம் கேட்டார்..

வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்
கொள்ளை யின்பம் குலாவு கவிதை
கூறு பாவலர்தம் உள்ளத்திருப்பாள்

எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.... அப்போது தந்தை சொன்னார்,,, " ஈஸியாய்னி உண்டிந்த கவித நிங்கு தெலிக்க போத எட்ட தமிழ் ராத்துவு?"
(மிக எளிமையான இந்த செய்யுளே உனக்கு விளங்காத போது நீ எப்படி தமிழ் படிப்பாய்?)

நான் முதலில் இந்த கவிதையை திரும்பத் திரும்ப படித்தேன்...

வெள்ளைத் தாமரை - வெள்ளைத் தாமரை புரியுதே
பூவிலிருப்பாள் - பூவில் உட்கார்ந்து இருப்பாள் (சரஸ்வதி தானே!!)
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள் - அதெப்படி ஒலியில் இருக்க முடியும்????
கொள்ளை யின்பம் - புரியவில்லை; கொள்ளை என்றால் கொள்ளை அடிப்பதா?
குலாவு கவிதை - சுத்தமாக புரியவில்லை... குலாவு என்றால் தமிழா?
கூறு பாவலர்தம் - அய்யோ!!! பாவலர்னா இன்னா?

கொஞ்சம் புரிந்தது போல இருந்த்து... என் அப்பாவே சொல்லிக் கொடுத்தார்... இது இது இன்ன வார்த்தைகள் என்று..... அப்பறமாக எனக்கு ஒரு வெறியா போட்டுது. எல்லா கவிதைகளையும் படித்து புரிந்து கொண்டேன். தமிழ் வாத்தியார்களிடம் வார்த்தை அர்த்தம் தெரிந்து கொண்டேன்... இது எவ்வளவு பயனாய் போட்டுது? நான் செய்யுள் பகுதியில் கேள்வி பதிலெல்லாம் படிக்கமாட்டேன்.. செய்யுளை மட்டும் படித்துவிட்டு நானாகவே உரை எழுதுவேன்.... (பின்னாடி எனக்கு பாராட்டெல்லாம் கிடைத்தது..)

இது இருக்க,,, நானும் பாரதியார் மாதிரி கவிதை எழுத ஆரம்பித்தேன்... அவரது சுய சரிதையில் அவர் சின்ன வயதில் சந்தங்களை அடுக்கிக் கொண்டே இருப்பதாக எழுதியிருந்ததை கவனித்தேன்.... அதே மாதிரி நானும்
உழி
கழி
பழி
விழி
கிழி

என்று அடுக்கிக் கொண்டே போனேன்... நிறைய வார்த்தைகள் எனக்கு புதிதாகத் தோன்ற, தமிழ் வாத்தியார்களிடம் சந்தேகம் தீர்த்துக் கொண்டேன்... பாரதியின் பல கவிதைகளுக்க்கு எளிதில் அர்த்தம் புரியும் அளவிற்கு அவரால் ஞானம் பெற்றேன்....

நிச்சயமாக எனது முதல் கவிதை இதுதான்:

எந்தையும் தாயையும் என்னைக் காவல்கொள்
தந்தையும் தங்கையும் தம்பி யோடுமே
சிந்தை தவறாது காத்த கடவுளுக்கும்
முந்தை யோருக்கும் போற்றி!!!

இதற்கு வெண்பா என்று பெயரிட்டு டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்.... ஆனால் வெண்பா அல்ல.... இன்னும் சில வரிகள் எழுதினேன்... இரண்டாவது கவிதை....

என்னை உலகிற்களித்த தாய்க்கு நன்றி!
தென்னை போல் வளர்த்த தந்தைக்கு நன்றி!
முன்னை விடவும் பொலிவு தந்த கடவுளுக்கு நன்றி!
பின்னையாவும் நடக்கு மிந்த காலத்திற்கும் நன்றி!

வாழ்விக்க வந்த காந்திக்கும் நன்றி!
தாழ்வு கொண்டென்னை உயர்த்திய பெரியாருக்கும் நன்றி!
வீழ்ந்த பகைவனை அரவணைக்கு அன்புக்கு நன்றி!
சூழ்ந்த சுற்றத்திற்கும் நன்றி!

பேச வைக்கும் தமிழுக்கு நன்றி
பாசங் கொண்ட உயிர்களுக்கும் நன்றி!
தேசமது என்னை வளர்த்ததற்கும் நன்றி
மோசம் போகாது காத்த அனைவருக்கும் நன்றி!!

இது எழுதியதும் எனக்குள்ளே ஒரு பாரதி தோன்றிவிட்டதாகவும் நான் பெரிய கவிஞனாகிவிட்டதாகவும் நினைப்பு....

மீதி உங்கள் வரவேற்புக்கு தக்க.....

மனோஜ்
27-01-2007, 04:51 PM
ஆதவா
ஆதியிலேயே இந்த கலக்கல்னா மீதி செல்லவா வேனு...
உங்களை பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி
தொடருங்கள் சின்ன பாரதி

ஆதவா
27-01-2007, 05:02 PM
ஆதவா
ஆதியிலேயே இந்த கலக்கல்னா மீதி செல்லவா வேனு...
உங்களை பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி
தொடருங்கள் சின்ன பாரதி

மிக்க நன்றி...... சின்ன பாரதி எல்லாம் ரெம்ப பெரியது........ அதற்கும் எனக்கும் உலக தூரம்.. தொடர்ந்து படியுங்கள்.... எனது ரணமும் காதலும் தெரிந்துகொள்வீர்கள்

ஓவியா
27-01-2007, 05:13 PM
அன்பு தம்பி ஆதவா
தங்களின் டைரி படிக்க சுவையாக இருகின்றது

தங்களுக்கு இளய வயதிலே மிகவும் தெளிந்த சிந்தனை
மனதார பாராட்டுகிறேன்

வெண்பா அருமை, கவிதை நன்று
தொடருங்கள்

ஆதவா
27-01-2007, 05:15 PM
அன்பு தம்பி ஆதவா
தங்களின் டைரி படிக்க சுவையாக இருகின்றது

தங்களுக்கு இளய வயதிலே மிகவும் தெளிந்த சிந்தனை
மனதார பாராட்டுகிறேன்

வெண்பா அருமை, கவிதை நன்று
தொடருங்கள்

எனதருமை அக்கா!!! மிக்க நன்றி..... அது வெண்பா அல்ல அக்கா!!

மதுரகன்
27-01-2007, 05:37 PM
படிக்க படிக்க ஆர்வம் கூடுகின்றது அடுத்த பதிப்பு எப்போது...

ஆதவா
27-01-2007, 06:08 PM
படிக்க படிக்க ஆர்வம் கூடுகின்றது அடுத்த பதிப்பு எப்போது...
விரைவில் தருகிறேன் நண்பரே!

பென்ஸ்
27-01-2007, 06:44 PM
ஆதவா...

மன்றத்தில் பாரதியின் குறிப்புகள் நான் வாசிக்க ஆரம்பித்த போது எனக்கு வாழ்க்கையின் நிகள்வுகளை இத்தனை அருமையாக, பண்பாக கொடுக்க வேண்டியவற்றை மட்டும் அழகாக கொடுக்க முடியுமா என்று வியப்பேன்...
நம்ம பரம்ஸ் விளையாட்டகவே வேட்டையாடுபவர்... எல்லோர் உள்ளத்தையும்... அருமையான நினைவுகளில் அப்படியே நம்மை சிறுவயதுக்கு கொண்டுபோவார்...
நம்ம கவிதா.... கவிதையாலும், எழுத்தாலும் நினைவுகளை பகிர்ந்து சிலிர்க்க வைப்பார்கள்...
அப்புறம்... நானும் சில நினைவுகளை கொடுத்தேன்....
அதை தொடர்ந்து நம்ம அன்பு தம்பி மயூரேசன் கொடுக்க ஆரம்பித்தான்...

எல்லோர் எழுத்திலும் ஒரு கண்ணியம் இருக்கும்... அதனாலைய்ற் எல்லோர் மேலேயும் மதிப்பும் அதிகம்...

இன்று நீங்கள்...

அருமையாக துவங்கியுள்ளீர்கள்... அற்புதமாக தொடருங்கள்...

மயூ
28-01-2007, 03:22 AM
சிறுவயதை மீட்டுவோர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள ஆதவனுக்கு நன்றிகள்...
ஆரம்பமே தூள் பா!
உங்கள் தந்தையாரின் தாய் மொழி என்ன?

பாரதி.... உங்களுக்குள்ளும் அவனா! பல தமிழ் உள்ளங்களை கிளறிய தமிழ் வீரன் அல்லது காவலன் என்றே சொல்லலாம்...

aren
28-01-2007, 04:03 AM
ஆதவா அவர்களே,

அருமையாக ஆரம்புத்திருக்கிறீர்கள். கவிஞர்கள் இப்படித்தான் தோன்றியிருப்பார்களா என்று தோன்ற வைத்திருக்கிறது உங்கள் தொடக்கம். தொடருங்கள். இன்னும் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆதவா
28-01-2007, 04:59 AM
ஆதவா...

மன்றத்தில் பாரதியின் குறிப்புகள் நான் வாசிக்க ஆரம்பித்த போது எனக்கு வாழ்க்கையின் நிகள்வுகளை இத்தனை அருமையாக, பண்பாக கொடுக்க வேண்டியவற்றை மட்டும் அழகாக கொடுக்க முடியுமா என்று வியப்பேன்...
இன்று நீங்கள்...

அருமையாக துவங்கியுள்ளீர்கள்... அற்புதமாக தொடருங்கள்...

உங்கள் பாராட்டில் நனைந்துகொண்டே (ஜலதோஷம் பிடிக்காமல்) இன்னும் எழுதுகிறேன்.....

ஆதவா
28-01-2007, 05:00 AM
சிறுவயதை மீட்டுவோர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள ஆதவனுக்கு நன்றிகள்...
ஆரம்பமே தூள் பா!
உங்கள் தந்தையாரின் தாய் மொழி என்ன?

பாரதி.... உங்களுக்குள்ளும் அவனா! பல தமிழ் உள்ளங்களை கிளறிய தமிழ் வீரன் அல்லது காவலன் என்றே சொல்லலாம்...

மிக்க நன்றி மயூரேசன். எமது தாய்மொழி தெலுகு... ஒவ்வொரு கவிஞன் மனதிலும் அமர்ந்திருக்கும் ஒருவன்.....பாரதி.............

ஆதவா
28-01-2007, 05:00 AM
ஆதவா அவர்களே,

அருமையாக ஆரம்புத்திருக்கிறீர்கள். கவிஞர்கள் இப்படித்தான் தோன்றியிருப்பார்களா என்று தோன்ற வைத்திருக்கிறது உங்கள் தொடக்கம். தொடருங்கள். இன்னும் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

மிக்க நன்றி ஆரென்....

மதி
29-01-2007, 02:16 AM
ஆரம்பமே அசத்தல் ஆதவன்..
இன்னும் தொடருங்கள்..
படிக்க ஆவலாய் உள்ளோம்..

ஷீ-நிசி
29-01-2007, 03:03 AM
ஆதவா, டைரி படித்தேன்... ஆரம்பம் நல்லா இருக்கு..
அந்த வெண்பா ஒவ்வொன்றும் தேன்பா....

தொடர்ந்து எழுதிடுங்கள்..... வாழ்த்துக்கள்

guna
29-01-2007, 03:23 AM
தொடருங்கள் ஆதவா..

மயூ
29-01-2007, 01:19 PM
மிக்க நன்றி மயூரேசன். எமது தாய்மொழி தெலுகு... ஒவ்வொரு கவிஞன் மனதிலும் அமர்ந்திருக்கும் ஒருவன்.....பாரதி.............
நீங்கள் தெலுங்கா? நம்ப முடியவேயில்ல...
தமிழர்களே தமிழை மறக்கும் போது உங்கள் தமிழ் ஆற்றல் கண்டு வியக்கின்றேன் தலைசாய்கின்றேன்...
உங்கள் தமிழுக்கு நான் அடிமை. :)

ஆதவா
29-01-2007, 04:56 PM
ஆரம்பமே அசத்தல் ஆதவன்..
இன்னும் தொடருங்கள்..
படிக்க ஆவலாய் உள்ளோம்..

உங்கள் அவதார் குழந்தைகள் நினைவு வந்துட்டுது.. நன்றி

ஆதவா
29-01-2007, 04:56 PM
ஆதவா, டைரி படித்தேன்... ஆரம்பம் நல்லா இருக்கு..
அந்த வெண்பா ஒவ்வொன்றும் தேன்பா....

தொடர்ந்து எழுதிடுங்கள்..... வாழ்த்துக்கள்


தொடருங்கள் ஆதவா..

மிக்க நன்றி........ தொடர்ந்து படித்திடுங்கள்

ஆதவா
29-01-2007, 04:58 PM
நீங்கள் தெலுங்கா? நம்ப முடியவேயில்ல...
தமிழர்களே தமிழை மறக்கும் போது உங்கள் தமிழ் ஆற்றல் கண்டு வியக்கின்றேன் தலைசாய்கின்றேன்...
உங்கள் தமிழுக்கு நான் அடிமை. :)

நண்பரே! ஆரம்பத்தில் தமிழ் பேச சிரமமிருந்தது.. காரணம் நான் வளர்ந்தது எல்லாமே ஒரு தெலுகு சூழ்நிலையில்.... இருப்பினும் வாழ்ந்தது வாழ்வது தமிழ்நாடு எனும் போது தமிழ் எளிமையா போட்டுது.

ஆதவா
29-01-2007, 05:27 PM
மீண்டும் தொடர்கிறேன்..
மேலே நான் சொன்னதுகள் எல்லாம் ஒரு முன்னுரை போல... அதை மீண்டும் நோண்டுகிறேன்..
முதலில் அப்பா குடும்பத்திலிருந்து வருகிறேன்.

அப்பாவின் அப்பா ஒரு பொற்கொல்லர். ஈரோட்டில் அவருக்கு நிகர் யாருமில்லை என்ற அளவிற்கு மிக உயர்ந்த இடத்தில் இருந்தவர். அவருக்கு ஐந்து பெண்கள் மூன்று மகன்கள்... மூன்றாவதாகவும் கடைசி பெண்ணுக்கு முந்தினவாகவும் பிறந்தவர்தான் எனது அப்பா.. இத்தனை பெண் இருந்தால் எந்த தகப்பனால்தான் நிம்மதியாக சம்பாதிக்க முடியும்? அவர் சம்பாத்தியத்தை பெண்களின் கலியாணச் செலவிலும், மேற்படி குழந்தை பிறப்பு, வரவேற்பு ஆகிய வைபவத்திலுமே செலவிட்டார்.. ஆக என் அப்பாவால் அவ்வளவாக படிக்க இயலாமல் போய்விட்டது.. இருப்பினும் அவர் ஓவியத்தில் மிகுந்த திறமை மிக்கவராக விளங்கினார். ஈரோட்டில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் மாவட்டத்திலேயே மூன்றாவது இடமாக வ்ந்து திறமையை நிரூபித்தார். வறுமைக்கும் திறமைக்கும் தூரம் அதிகம். அதனால் படிப்பை நிறுத்திவிட்டு பெங்களூர் சென்று பிழைக்கலாமெனக் கருதி அங்கே விண்ணப்பித்து சென்றார்,, அங்கே ஓவிய வேலைதான். வாரம் 1000 ரூபாய் சம்பளமாம். அதுவே பற்றாதாம்... (மொத்தமாக ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதே இல்லையாம் அதுவரை/.. ) ஈரோட்டை விட பெங்களூரில் அதிக செலவுகள் துலைத்தெடுத்தது..
அதுசரி,, என் டைரி குறிப்புகளை விட்டுவிட்டு நான் எங்கோ செல்வதாகத் தெரிகிறது...
இனி அம்மா:
அம்மா குடும்பத்தில் நான்கு மகன்கள். மூன்று பெண்கள்.. ஒன்று இறந்துவிட்டது. (குழந்தையாக இருக்கும்போதே) வறுமையும் இங்கே ஆட்டி படைத்திருக்கிறது. நான்கு மாமாக்களும் சுத்தமான தங்கம்... அவர்களின் வேலையும் தங்க வேலையே!! நால்வர் இணைந்தால் என்ன நடக்கும் என்பதை நான் சொல்லத்தான் வேண்டுமா? பெண்களில் இளையவர் என் அம்மா! மூத்த பெண்ணான எனது பெரியம்மாவுக்கு நான்கு பெண்கள் ஒரு பையன்.. என் வீட்டில் இரண்டு மகன் ஒரு பெண்..
அப்பா வீட்டில் அவ்வளவாக டச் இல்லை. உறவுகளுடன் பிரிவினை வந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் முகத்தையே பார்க்காமல் வாழ்ந்துவிட்டார்கள்.. எல்லாம் தேவையில்லாத பிரச்சனைதான்... அம்மா வீட்டில் ஏகப்பட்ட தொடர்பு. எங்கள் வீட்டு உறவினர்களின் வரவேற்பைக் கண்டீர்களேயானால் மலைத்துப் போய்விடுவீர்கள். ஆனால்

இவர்கள் எல்லாரும் சாதி பார்க்கிறவர்கள். மற்ற சாதி மக்கள் வந்தால் ஒதுங்கிக் கொள்வார்கள். சிலபேர் அப்படி; சில பேர் இப்படி.. மற்றபடி மிக நல்லவர்கள் என்றே சொல்லவேண்டும்.. எனக்குத் தெரிந்து யாரும் ஒரு சிகரெட் பிடிப்பதுகூட நான் பார்த்ததில்லை...

இளமையில் படித்தது ஈரோட்டில் 2ம் வகுப்புவரை... தமிழ் மீடியம். நான் வகுப்பில் சேரும்போது எனக்கு ஆனாவும் கனாவும் அத்துப்படி.. மிக எளிதில் தமிழில் பூந்து விளையாடினேன். எனது உறவினர்கள் அக்கப் பக்கத்தினர் யாவரும் தெலுகாகவே இருந்ததினால் எனக்கு ஆரம்பத்தில் தமிழ் கொஞ்சம் சிரமமாகவே இருந்ததாம்...
நான் வாழ்ந்த வீடு இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஒரே காம்பெளண்டில் இருந்தோம்.. முதல் வீட்டில் மாவு அரைப்பார்கள்... இரண்டாவது வீடு எங்களோடது... மூன்றாவது வீட்டில் பூங்கொடி என்ற ஒரு அக்கா இருந்தார்கள்.. நான்காவது வீட்டில் செந்தில் அல்லது ராமு அண்ணன் இருந்ததாக ஞாபகம். ரஞ்சனி என்ற ஒரு அக்காவும் இருந்தார்கள்.. நாங்கள் எல்லாரும் ஒரே செட்.. அதனாலதான் என்னவோ எனக்கு இன்னும் பெயர் ஞாபகம் இருக்கிறது. மேலே மாடி. கழிவறைகள் தாண்டி செல்லவேண்டும். மாடியில்தான் நிறையபேர் தூங்குவார்கள். நானும் என் அப்பாவும் நிறைய முறை உறங்கியிருக்கிறோம். அந்த வீட்டில் இருந்தபோதுதான் எனது தாத்தாவைப் பார்க்க முடிந்தது.. அப்பா பெங்களூரில் இருந்து வந்தபிந்தான் கலியாணம் நடந்தது. பின் சொந்தமாகவே தொழில் தொடங்கினார்,, அப்போது எனக்கு 6 வயதிருக்கலாம். எங்கள் வீட்டுக்குப் பின் ஒரு மாடியில் தனியாக வைத்து நடத்தினார்.. மாடிக்கு நேர் கீழே தண்ணீர்த் தொட்டி இருந்ததாக ஞாபகம்... என் தம்பி அதில் விழுந்துவிட்டதாகவும் ஞாபகமிருக்கீறது.
சிலநாட்களில்,,, ஈரோட்டை விட திருப்பூரில் ஓவியத் தொழிலுக்கு மதிப்பும் பணமும் அதிகமிருந்ததால் அப்பா அங்கே வேலைக்குச் சென்றுவிட்டார்... அங்கேயே சொந்தமாக தொழில் தொடங்கி, வாரம் ஞாயிறு மட்டும் ஈரோடு வருவார்.. அதுவும் சில மாதங்களாக இருந்தது... பின் ஒரு நாள் மூட்டை முடிச்சுகளோடு திருப்பூரே வந்துவிட்டோம்.................

pradeepkt
30-01-2007, 04:38 AM
ம்ம்ம்... அருமையான கவிதை நினைவுகள். ஒவ்வொருவருக்கும் தத்தமது இளமைப் பருவம் ஒரு வரம்.
வரத்தை எப்படி நாம் உபயோகிக்கிறோம் என்பதே முக்கியம்.
நீங்கள் இப்படி எழுதி வைப்பதை நாளை உங்கள் வருங்காலம் காணும்! எழுதுங்கள்.

ஆதவா
30-01-2007, 03:38 PM
ம்ம்ம்... அருமையான கவிதை நினைவுகள். ஒவ்வொருவருக்கும் தத்தமது இளமைப் பருவம் ஒரு வரம்.
வரத்தை எப்படி நாம் உபயோகிக்கிறோம் என்பதே முக்கியம்.
நீங்கள் இப்படி எழுதி வைப்பதை நாளை உங்கள் வருங்காலம் காணும்! எழுதுங்கள்.
நன்றிங்க...:)

இளசு
02-02-2007, 07:08 PM
ஆதவா


பாரதி, பரஞ்சோதி வகையில் இன்னொரு இலக்கியத் தொடர்..

ஆமாம்.. இவ்வகைப் பதிவுகள்..
காலப்பதிவுகள்.. பொக்கிஷங்கள்..


சுந்தரத் தெலுங்கு முறைப்பெண்ணை மீறி
தமிழ்நங்கை உங்களை ஆட்கொண்டமைக்காக
உங்கள் அற்புதப் பதிவுகளால் மகிழும் நம்
தமிழ்மன்றம் நன்றி சொல்கிறது..

தமிழுக்கும்.. உங்களுக்கும்.. இருவருக்கும்..

ஆதவா
03-02-2007, 08:20 AM
நன்றி இளசு அவர்களே!

மதுரகன்
04-02-2007, 04:45 PM
அற்புதமாய்த்தொடருங்கள் ஆதவா எங்கள் ஆதரவு என்றும் உண்டு..

அறிஞர்
10-02-2007, 03:08 AM
ஈரோட்டை விட்டு, தன்னை நம்பி வந்தவர்களை... வாழ வைத்து... கவிஞரை உருவாக்கி கொண்டிருக்கிறது திருப்பூர்.

எழுத்தாளரே... இன்னும் எழுதுங்கள்.. வேலைப்பளு தடை செய்கிறதா...

ஆதவா
10-02-2007, 03:21 AM
ஈரோட்டை விட்டு, தன்னை நம்பி வந்தவர்களை... வாழ வைத்து... கவிஞரை உருவாக்கி கொண்டிருக்கிறது திருப்பூர்.

எழுத்தாளரே... இன்னும் எழுதுங்கள்.. வேலைப்பளு தடை செய்கிறதா...
ஆம் அறிஞரே!! இந்த மாதிரி எழுதவதற்கு கொஞ்சம் நேரம் நிம்மதியாக வேண்டும்... அதற்கு இரவுதான் பொருத்தம்.... இன்று மீண்டும் இதையும் ஒரு சிறுகதை எழுதினேனல்லவா அதையும் தொடங்குவேன்... இன்று வேலைப் பளு அவ்வளவாக இல்லை.

அறிஞர்
10-02-2007, 03:23 AM
நல்லது ஆதவா.. வேலையை பாருங்கள்.. சாதியுங்கள்.. ஓய்வு நேரங்களில் எழுதுங்கள்.. திருமணத்திற்கு முன் நிறைய எழுதி சேர்த்துவையுங்கள்...

leomohan
10-02-2007, 03:38 AM
பாக உந்தி நைனா, இன்னும் எழுது

ஆதவா
10-02-2007, 03:43 AM
பாக உந்தி நைனா, இன்னும் எழுது

ஏமப்பா! தெலுகா? பாக உன்னேரா? இக்கட உச்ஸேஸ்தானிகி தேங்க்ஸ்லு............

இப்படியே போனா தெலுங்குமன்றம் ஆயிடும்......... தெலுங்குல எழுதறதற்கே ரொம்ப சிரமம்பா!!

leomohan
10-02-2007, 03:49 AM
ஏமப்பா! தெலுகா? பாக உன்னேரா? இக்கட உச்ஸேஸ்தானிகி தேங்க்ஸ்லு............

இப்படியே போனா தெலுங்குமன்றம் ஆயிடும்......... தெலுங்குல எழுதறதற்கே ரொம்ப சிரமம்பா!!

நேனு தெலுகு லேதன்டி. அன்டே நாக்கு 6 லாங்வேஜஸ் தெல்லிசு

ஆதவா
10-02-2007, 03:54 AM
நேனு தெலுகு லேதன்டி. அன்டே நாக்கு 6 லாங்வேஜஸ் தெல்லிசு

ஏமேமிண்ட?

(என்னென்னங்க?)

leomohan
10-02-2007, 04:00 AM
ஏமேமிண்ட?

(என்னென்னங்க?)

தென்னிந்திய பாஷைகள் அனைத்தும் + ஹிந்தி, ஆங்கிலம்.

5 மொழிகளில் படிப்பேன், தட்டச்சும் செய்வேன்.

அரபிய மொழி முதல் தட்டு முடித்துள்ளேன். இன்னும் கற்க ஆசை தான்.

ஆதவா
10-02-2007, 04:05 AM
தென்னிந்திய பாஷைகள் அனைத்தும் + ஹிந்தி, ஆங்கிலம்.

5 மொழிகளில் படிப்பேன், தட்டச்சும் செய்வேன்.

அரபிய மொழி முதல் தட்டு முடித்துள்ளேன். இன்னும் கற்க ஆசை தான்.

நல்ல படிச்ச புள்ளதாங்க நீங்க...........

leomohan
10-02-2007, 10:25 AM
நல்ல படிச்ச புள்ளதாங்க நீங்க...........

படிக்கிற புள்ளையெல்லாம் இல்லையப்பா. அடிபட்டு உதைபட்டு ரோட்ல கத்துகிட்டது தான்.

ஆதவா
10-02-2007, 10:34 AM
படிக்கிற புள்ளையெல்லாம் இல்லையப்பா. அடிபட்டு உதைபட்டு ரோட்ல கத்துகிட்டது தான்.

அப்படியா?:confused: :confused: :D :eek:

பென்ஸ்
10-02-2007, 10:42 AM
நேனு தெலுகு லேதன்டி. அன்டே நாக்கு 6 லாங்வேஜஸ் தெல்லிசு
என்னடாப்பா... :rolleyes: :rolleyes:
நாக்கு மூக்குன்னு ENT ஸ்பெசியலிஸ்ட் மாதிரி பேசுறிங்க...:p :p :D :D

thoorigai
10-02-2007, 10:49 AM
மிக்க நன்றி மயூரேசன். எமது தாய்மொழி தெலுகு... ஒவ்வொரு கவிஞன் மனதிலும் அமர்ந்திருக்கும் ஒருவன்.....பாரதி.............


என்னது!!! தெலுகுவா!!
நம்ப முடியவில்லை நண்பனே...
வெறும் வார்த்தைகளை விரயம் செய்ய விருப்பமில்லை. வாழ்த்துக்கள்

பென்ஸ்
10-02-2007, 10:54 AM
என்னது!!! தெலுகுவா!!
நம்ப முடியவில்லை நண்பனே...
வெறும் வார்த்தைகளை விரயம் செய்ய விருப்பமில்லை. வாழ்த்துக்கள்
ப்ரியன் தாய் மொழி -- கன்னடம்
தாமரை செல்வன் தாய் மொழி -- கன்னடம்
மீரா தாய் மொழி -- தெலுங்கு
ஆதவன் தாய் மொழி -- தெலுங்கு
ஓவியா -- அவளுக்கே தெரியாது என்ன மொழி பேசுவான்னு

thoorigai
10-02-2007, 10:55 AM
தென்னிந்திய பாஷைகள் அனைத்தும் + ஹிந்தி, ஆங்கிலம்.

5 மொழிகளில் படிப்பேன், தட்டச்சும் செய்வேன்.

அரபிய மொழி முதல் தட்டு முடித்துள்ளேன். இன்னும் கற்க ஆசை தான்.


மன்னிக்க ஆதவா, உங்கள் திரியில் மோகனை quote பண்ணுவதற்கு..
இன்னொமொரு வியத்தகு மனிதர் மோகன்.. எத்தனை எத்தனை வித்தைகள் இந்த மனிதருக்குள்..

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும், உங்கள் போன்றோருக்கும் நீண்ட ஆயுளைத் தர வேண்டுகிறேன்

ஆதவா
10-02-2007, 11:13 AM
என்னது!!! தெலுகுவா!!
நம்ப முடியவில்லை நண்பனே...
வெறும் வார்த்தைகளை விரயம் செய்ய விருப்பமில்லை. வாழ்த்துக்கள்

ஆமாம் நண்பனே! எமக்குத் தாய் மொழி தெலுகுதான்... மிகச் சுத்தமில்லை என்றாலும் எமது பாட்டிமார்கள் வரை சுத்தமான தெலுகுதான் பேசுகிறார்கள்.. தமிழ்நாட்டில் வாழ்ந்ததால்தான் என்னவோ தமிழ் நிறைய கலந்து பேசுகிறேன்..... இருப்பினும் சென்ற வருடம் திருப்பதி சென்று நன்றாக எல்லாரிடமும் உரையாடினேன்

ஆதவா
10-02-2007, 11:14 AM
ப்ரியன் தாய் மொழி -- கன்னடம்
தாமரை செல்வன் தாய் மொழி -- கன்னடம்
மீரா தாய் மொழி -- தெலுங்கு
ஆதவன் தாய் மொழி -- தெலுங்கு
ஓவியா -- அவளுக்கே தெரியாது என்ன மொழி பேசுவான்னு

அது நல்ல புள்ள..... அனேகமா அவங்க பேசற மொழி java, c++ ன்னு நினைக்கிறேன்:D

ஆதவா
10-02-2007, 11:15 AM
மன்னிக்க ஆதவா, உங்கள் திரியில் மோகனை quote பண்ணுவதற்கு..
இன்னொமொரு வியத்தகு மனிதர் மோகன்.. எத்தனை எத்தனை வித்தைகள் இந்த மனிதருக்குள்..

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும், உங்கள் போன்றோருக்கும் நீண்ட ஆயுளைத் தர வேண்டுகிறேன்

இங்கே எதுவும் அவர்களது சொந்த திரியல்ல......... எதுவும் பேசலாம்...

leomohan
10-02-2007, 12:03 PM
மன்னிக்க ஆதவா, உங்கள் திரியில் மோகனை quote பண்ணுவதற்கு..
இன்னொமொரு வியத்தகு மனிதர் மோகன்.. எத்தனை எத்தனை வித்தைகள் இந்த மனிதருக்குள்..

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும், உங்கள் போன்றோருக்கும் நீண்ட ஆயுளைத் தர வேண்டுகிறேன்

நன்றி தூரிகை. ஆனால் எதுவும் நம் கையில் இல்லை. வாழ்கை எனும் ஓடம் எங்கு கொண்டு செல்கிறதோ அங்கு சற்று இளைப்பாறி கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியது. முடியாவிட்டால் விட்டுவிட வேண்டியது தான்.

ஓவியா
10-02-2007, 12:14 PM
தென்னிந்திய பாஷைகள் அனைத்தும் + ஹிந்தி, ஆங்கிலம்.

5 மொழிகளில் படிப்பேன், தட்டச்சும் செய்வேன்.

அரபிய மொழி முதல் தட்டு முடித்துள்ளேன். இன்னும் கற்க ஆசை தான்.

அடடே,
மொழி வளம் வாழ வாழ்த்துக்கள்.

படிச்ச புள்ளைக்கு பாராட்டுக்கள்.

ஓவியா
10-02-2007, 12:17 PM
ப்ரியன் தாய் மொழி -- கன்னடம்
தாமரை செல்வன் தாய் மொழி -- கன்னடம்
மீரா தாய் மொழி -- தெலுங்கு
ஆதவன் தாய் மொழி -- தெலுங்கு
ஓவியா -- அவளுக்கே தெரியாது என்ன மொழி பேசுவான்னு

:eek: :angry: :cool: :rolleyes: ;) :confused: :) :p :D

அட ஆமாங்க பெஞ்சு, எனக்கே தெரியாத விசயம்தான். :D


ஆதவா,

டைரியை தொடரவும்

மயூ
11-02-2007, 01:21 PM
ப்ரியன் தாய் மொழி -- கன்னடம்
தாமரை செல்வன் தாய் மொழி -- கன்னடம்
மீரா தாய் மொழி -- தெலுங்கு
ஆதவன் தாய் மொழி -- தெலுங்கு
ஓவியா -- அவளுக்கே தெரியாது என்ன மொழி பேசுவான்னு

செல்வன் அண்ணா கன்னடமா?????நம்பவே முடியவில்லையே!!!

ஆதவா
11-02-2007, 02:57 PM
திருப்பூர் நாங்கள் வந்த போது எனக்கு வருடம் ஞாபகம் இல்லை... எனக்கு தம்பியும் தங்கையும் பிறந்து இருந்தார்கள்... அப்போதே என் அம்மா அப்பாவை விட்டு பிரிந்து சில மாதங்கள் நாங்கள் குடியிருந்த வீட்டில் தனியே தங்கியிருந்தேன்... அரைவருட பரீட்சை முடியும் வரை (இரண்டாம் வகுப்பு) பக்கத்து வீட்டிலேயே தான் இருந்தேன்.. எனக்கு அப்போதும் வீட்டை விட்டு பிரிந்து இருக்கிறோமே என்ற கவலை இருந்தாகத் தெரியவில்லை...
ஈரோட்டில் படித்தவரை ,,, எனது பள்ளியின் பெயர் அருள்நெறி திருப்பள்ளி,.. வாத்தியாரம்மா பெயர் ஞாபகம் இல்லை என்றாலும் என்னிடம் போட்டோ உள்ளது... அந்த ஞாபகம் வைத்துள்ளேன்.... காரணமிருக்கிறது. நான் படிக்க சேரும்முன்னேவரை தமிழ் சுத்தமாய் தெரியாது. தெலுகில் சொன்னால்தான் புரிந்து கொள்வேன் அல்லது பேசுவேன். அப்படியிருக்க, எனக்கு தமிழ் வார்த்தைகள் சொல்லி கொடுத்தது என் அம்மா.. படிக்கச் செல்லும் முன் நான் அழுதது கிடையாதாம்.. ரெம்ப ஜாலியாகவே செல்வேனாம்.. எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த டீச்சரம்மா தெலுகு என்பதால் சீக்கிரமே தமிழும் கற்றுக் கொண்டதாகத் தெரிகிறேன். அவர்களுக்கு என்மேல் அளவுகடந்த பாசம் வேறு.. மற்ற பையன்களை விட முன்னமே தமிழ் வார்த்தைகள் தெரிந்து வைத்திருந்தது என்னை வேறுபடுத்தியது.. எங்கள் பள்ளிக்கு பக்கத்தில் மேனிலைப் பள்ளி. இரண்டுக்கும் நடுவே அழகான தோட்டம். நாங்கள் அங்கேதான் உலாவுவோம். அங்கே நான் கண்டவைகள் (வெட்டுக்கிளி, பலவிதமான பூச்சிகள்; இலைகள், கையில் இலையை வைத்தால் குறுகுறுக்கச் செய்யும் ஒருவகையான செடிகள் இன்னும் பல./ ) எனக்கு அந்த சூழல் நிரம்ப பிடித்துப்போக.... ஒரு நாள் அங்கேயே இருந்துகொண்டு வகுப்பறைக்குச் செல்லாமல் அடம் பிடித்தது கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது..
அரையாண்டு விடுமுறையில் திருப்பூர் சென்றுவிட்டேன். அந்த காலத்து திருப்பூர் ரெம்ப கேவலம். எனக்கு பிடிக்கவே இல்லை.. சுத்தமான ரோடு கிடையாது; பக்கத்தில் விளையாட குழந்தைகள் (குறிப்பாக பெண் குழந்தைகள்) கிடையாது. என்ன செய்ய? விதி. அங்கே இருக்க வேணுமென்பது தலையெழுத்து.. என்னை ரெண்டாம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள் அது திருநீலகண்டபுரத்து அரசு ஆரம்பப் பள்ளி.. (அந்த பள்ளிக்கு மிக அருகில்தான் எனது அலுவலகம்..) முதலில் சேர்ந்த வகுப்பு இரண்டு என்பதால் சில காலத்திற்கு துணைக்குக்கூட ஆட்கள் இல்லாமல் தனியே சென்று வந்துகொண்டு இருந்தேன். அப்போது பைத்தியம் மாதிரி ஏதாவது உளறிக்கொண்டே இருப்பேனாம். அதனாலேயே இரண்டு மூன்று நண்பர்/நண்பிகள் ஒதுங்கியிருந்து என்னை அவர்களுடன் சேர்த்துக்கொண்டனர். என் வகுப்பு டீச்சரம்மா ரெம்ப நல்லவங்க.. எனக்குத்தெரிந்து அவர்களிடம் அடிவாங்கினதே கிடையாது. நான் யாரிடமும் அவ்வளவாக பேசவும் மாட்டேன். அதுவும் ஒரு காரணம். கொஞ்ச நாட்கள் கழித்து எனக்கு ஒரு குழு சேர்ந்தது... ஐந்துபேர் கொண்ட குழு அது... நான், நதீஸ், செந்தில், சுரேஸ், அப்பாஸ்.. இதில் அப்பாஸ் தவிர நாங்கள் இன்றும் தொடர்புடன் இருக்கிறோம். நாங்கள் வரிசையாக ரேங்க் வாங்குவோம். ஒன்னாம் ரேங்க் எப்பவுமே அய்யாதான்... ரெண்டவது நதீஸ்.. இப்படித்தான் சென்று கொண்டிருந்தது. அப்போது அது பெண்களும் சேர்ந்துபடிக்கும்படியான பள்ளி என்றாலும் நான் பெண்களுடன் அவ்வளவாக பேசமாட்டேன்.. அதற்கு பெரும்காரணம் என் அம்மாதான். அந்த வயதிலேயே பெண்களுடன் பேசினால் திட்டக்கூட மாட்டார்கள்... விலாசல் தான்.......... இருந்தாலும் நான்காவது அல்லது ஐந்தாவது படிக்கும்போது ஷகீலா மற்றும் அமலா, ராதா போன்றவர்கள் என்னுடன் உரையாடினர். அப்போதும் எனக்கு கூச்சமாகவே இருக்கும்...
ஐந்தாம் வகுப்பு முடிவதற்குள் நாங்கள் வீட்டை மாற்றிவிட்டு ஒரு பெரிய தோட்டத்தில் குடிபெயர்ந்தோம்... என் வாழ்க்கையில் சிறகுகள் பறந்த காலம் அது... கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் இடம். ஒரே வீடு.. அந்த ஏக்கரைச் சுற்றியும் சவுக்கு மரங்கள்... மற்றது எதுவும் கிடையாது.. வெறும் மண்தான். என் அப்பா அதை எப்படி பயன்படுத்தினார் தெரியுமா? அந்த ஏக்கரை அழகான காய்கறித் தோட்டமாக மாற்றினார். அந்த வீட்டில் இருந்தவரை காய்கறிகள் தட்டுப்பாடு இன்றி இருந்தது. (சுற்றி இருந்த குறுங்கடைகள் எங்களிடம் காய்கறிகள் வாங்கிப்போவதைக் கண்டிருக்கிறேன்.). அங்கே இருந்தபோதுதான் நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். வியாசபாரதம், வில்லிப்புத்தூராரின் இலக்கியத்தோடு வில்லிபாரதம்.. இராமாயணம். சில பெரியார் சம்பந்தப்பட்ட புத்தகங்கள். சத்திய சோதனை, பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசன் காதல் கவிதைகள் இன்னும்.....
இன்னுமொரு தகவல்.. அங்கே இருந்தவரை பாம்புகள் நடமாட்டம் அதிகம்.. என்வீட்டு வாசல் வழியே ஊர்ந்து சென்றதையெல்லாம் கண்டிருக்கீறேன்.. கொஞ்ச நாட்களில் அந்த பயம் போய் என்வீட்டுக்கு வந்த நண்பர்களிடம் காண்பித்து அவர்கள் பயந்து போய் ஓடக்கண்டிருக்கிறேன்... பாம்புகள் நம்மை ஒன்றும் செய்வதில்லை என்பதற்கு இதுவே சாட்சி...
ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பு சேருவதற்குத்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்.. நான் கேட்ட அதே பள்ளியில் சேர்த்துவதற்கு நடையாய் நடந்து ஒரு இடம் வாங்கிவிட்டார் தந்தை.. அங்கே எனது குழுமத்திலிருந்து வந்தவர்கள் நான் நதீஸ், செந்தில், சுரேஸ்.... அப்பாஸ் அதனால்தான் தெரியாமல் போனான்...
எனது வகுப்புக்கு வந்தவன் சுரேஸ் மட்டுமே.. இன்றளவிலும் என்னுடன் இருக்கும் உயிர் நண்பன் அவன் ஒருவன் மட்டுமே... ஆறாம் வகுப்பில் என்னைவிட புத்திசாலிகள் பலர் இருந்தனர்... குறிப்பாக வினோத் ( எனது ஆருயிர் நண்பன். பெங்களூரில் விப்ரோவில் இருக்கிறான் ) கதிரவன், கவின் ( மோட்டாரோலா, ஐதராபாத் ) இன்னும் பலர்... இந்த குழுவிலும் நான் இருந்தேன்... நான் எப்போதுமே மூன்றாவது ரேங்க் தான். முதல் ரேங்க் எப்போதுமே வினோத் தான் ( மலையாளத்து நண்பன் பா! அவன் மூலம் மலையாள சிறிது கற்றுக்கொண்டது மட்டுமில்லாமல் இன்றும் என்னால் மலையாளம் எழுத முடியும்.. ) அவன் பத்தாம் வகுப்பு வரை முதல் ரேங்கே தான்.......... பத்தாம் வகுப்பில் நான் எவ்வளவு தெரியுமா???? 18 வது ரேங்க்... எப்படியென்று பிறகு சொல்லுகிறேன்.
இப்படியாக சென்று கொண்டிருந்த வேளையில் நான் திடீரென சிறப்பு பெற்றது ஒரு ஓவியத்தின் மூலமாக ( அப்போதெல்லாம் ஓவியம் மிக அருமையாக வரைவேன். சரியான ஊக்கமில்லாததாலும் அக்கரையில்லாத தாலும் ஓவியம் என்னோடு வளரவில்லை ) பள்ளிச் சின்னத்தை ஓவியமாக வரைந்து ஃபாதர் முன்னிலையில் பாராட்டும் பெற்றேன்... அதன்பின் அவர்கொடுத்த ஊக்கத்தில் மயில் போன்ற ஓவியம் வரைந்து கொடுத்தேன். பின் ஒரு பெண்ணின் முகமும், காந்தி ராட்டினம் சுற்றுவது போலவும், நேதாஜி மற்றும் பகத்சிங் ஓவியமும் வரைந்து கொடுத்து மிக அதிக அளவில் பாராட்டும் பெற்றேன்.. எனது கையெழுத்துக்கு கூட பரிசு வாங்கினேன்.. அப்போதே சில கவிதைகள் எழுதி புலவர்களிடம் பாராட்டும் பெற்றேன்.. அந்த சமயங்களில் என் தமிழார்வம் கண்டு புலவர் கோவிந்தராஜன் என்பவர் எனக்கு மட்டும் சில இலக்கணங்களைச் சொல்லி கொடுத்தார்... தமிழில் அதிலும் செய்யுள் பகுதியில் யாராலும் செய்யமுடியாத இலக்கணங்கள் அதாவது அன்றைய காலத்தில் நான் படித்த பாடங்களைவிட மேலும் அதிகமாக இலக்கணம் படித்து தமிழ் கற்றுக்கொண்டேன். தமிழ் என்றாலே " டேய் கூப்பிடுடா அவன" என்று என்னை கூப்பிடுவார்கள்... செய்யுள்களுக்கு என்னிடம் விளக்கம் கேட்பார். நானும் அதை கிட்டத்தட்ட சரியாகவே சொல்லுவேன்.. (சரி சரி ரெம்ப ஓவரா என்னைபத்தி பேசவும் கூடாது... அடுத்து பார்ப்போம்)
புலவர் கோவிந்த ராஜன் பற்றி... எனக்குத் தெரிந்து அவர் போல தமிழ் விளையாட்டை யாரும் விளையாடியதில்லை. அப்படி பேசுவார்,. நாம் பேசும் தமிழில் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து எது தமிழ் எது சமச்கிருதம் என்று அருமையாக சொல்லுவார்,,,, அதைவிட எனக்கு பிரமிப்பக இருந்தது அலகிட்டு வாய்ப்பாடு கூறலில்தான்... அடேயப்பா எந்த செய்யுள் எடுத்துக்கொண்டாலும் அதை அப்படியே பிரித்து
இன்ன அசை
இன்ன சீர்,
சீரோடு சேர்ந்த இவை இன்னை பா
இது இன்ன அணி என்று நொடிப்பொழுதில் கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்.... சத்தியமாய் சொல்லுகிறேன்.. தொல்காப்பியரே இப்படி சொல்வாரா என்பது சந்தேகம்தான்... அப்படி ஒரு வேகம்...... என் தமிழ் வளர்ச்சிக்கு அவர் பெரும் காரணமாக இருந்தார்... இன்னும் கொஞ்ச நாட்கள் அவரிடம் இருந்திருந்தால் பா வகைகள் அறிந்திருப்பேன்.. முடியாமல் போனது..
ஏழாம் வகுப்பிலிருந்து எனக்கு ஏழரைச்சனி ஆரம்பித்துவிட்டது.. என்னுடைய இன்னொரு குழு அதற்குக் காரணம். வகுப்பில் எனது நண்பனே (வினோத்) லீடர்.. நானோ பேசியவர்கள் பட்டியலில் அவன் எழுதும் முதல் பெயராக இருந்தேன். அதற்கு காரணம் நான் உயரமாக இருக்கிறேன் என்று என்னை கடைசி பெஞ்சில் போட்டு வேண்டாத குழுவோடு சேர்த்திவிட்டார்கள்... (அந்த வயசிலேயும் புகைபிடித்தவர்கள் அவர்கள்; கொசுறு தகவல்: இன்று வரை என் தந்தை என்னை ஒரு பீடி கூட தொட அனுமதித்தது கிடையாது; நானும் தொட்டது கிடையாது ) நான் அவர்களின் தலைவனாகவே மாறிவிட்டேன்.. இந்த லட்சணத்தில் அவர்களுக்கு ட்யூசன் லீடர் நாந்தான்.. விளங்குமா? யவரும் படிக்கவேயில்லை.. ஆனால் நான் மட்டும் மூன்றாவது ரேங்க் வாங்கிவிடுவேன். பக்கத்தில் இருப்பவர்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கும். நான் எப்போதுமே சொல்லிக்கொடுக்கும்போது படிப்பதோடு சரி. வீட்டில் கூட படிக்கமாட்டேன். அட எழுதக்கூட மாட்டேங்க... இது இப்படி இருக்க, என் பத்தாவது வகுப்பு மெல்ல மெல்ல வந்தே விட்டது...... அங்கே இருக்குங்க என் வாழ்க்கையின் திருப்பம்...........
இத்தனை சொன்னேனே ஒரு கவிதை சொல்லலியே?

இது என் மூன்றாவது கவிதை:

படிநெல் லாவது போதுமென் பாரே
பிடித்த வயிறு உழவர் மக்கள்
பிடித்த கழப்பை, கிழவர் நிலை
படித்த தமிழா அறிவாயோ?தொடரும்..

pradeepkt
12-02-2007, 04:43 AM
படிநெல் லாவது போதுமென் பாரே
பிடித்த வயிறு உழவர் மக்கள்
பிடித்த கழ -ல ப்பை, கிழவர் நிலை
படித்த தமிழா அறிவாயோ?

படித்த தமிழன் இதையெல்லாம் அறிந்தால் ஏன் இப்படி இருக்கிறான்???

ஆதவா
12-02-2007, 03:45 PM
படிநெல் லாவது போதுமென் பாரே
பிடித்த வயிறு உழவர் மக்கள்
பிடித்த கழ -ல ப்பை, கிழவர் நிலை
படித்த தமிழா அறிவாயோ?

படித்த தமிழன் இதையெல்லாம் அறிந்தால் ஏன் இப்படி இருக்கிறான்???
நன்றி பிரதீப் அவர்களே கவணிக்கவில்லை என்பதைவிட நான் முன்பு எழுதியதும் அப்படித்தான் எழுதியிருந்தேன்

pradeepkt
13-02-2007, 03:33 AM
செல்வன் அண்ணா கன்னடமா?????நம்பவே முடியவில்லையே!!!
சரி, அப்ப என்ன செய்யலாங்கிற??? :D :D

ஆதவா
08-03-2007, 04:12 PM
பத்தாம் வகுப்பில் சுமாராக படிக்கும் பையந்தான் என்றாலும் முதல் மூன்று அல்லது ஐந்து ராங்கிற்குள் வந்துவிடுவேன்.. ஆனால் இதெல்லாம் முதல் இடைத்தேர்வு மற்றும் காலாண்டோடு போய்விட்டது.

அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன், எங்கள் வீடு வாடகை வீடு என்பதால் அப்போது வீடு மாற்றினோம்.. அது மூன்று வீடுகள் அடங்கிய காம்பெளண்ட். முதல் வீட்டில் ஒரு இந்திக்கார குடும்பமும் இரண்டாவது வீட்டில் நாங்களும் மூன்றாவது வீட்டில் வீட்டு உரிமையாளரும் இருந்தார்கள்..
முதல் வீட்டில் இருந்த இந்திக்காரக் குடும்பம் சில நாட்களில் காலி செய்து விட்டு போய்விட்டார்கள். அந்த சிலநாட்களிலும் அவர்களுடன் நல்ல நட்பு இருந்தது.. அவர்களுக்கு ஒரே ஒரு பெண். அவள் பெயர் சுனில் ரோஜா பட்.. (உண்மையான பெயர் வேறு ஆனால் மறந்துவிட்டது. அவர்கள் வீட்டில் ரோஜி என்றுதான் கூப்பிடுவார்கள். சுனில் அவள் அப்பாவின் பெயர்.) அவளும் பத்தாம் வகுப்பு படித்திருந்தாள் நானும் அப்படியே! அவளுக்கு தமிழ் அவ்வளவாக வராது.. பத்தாம் வகுப்புவரை எப்படி பாஸ் செய்தாள் என்பதே ஆச்சரியம். நான் அப்போது கவிதைகள் எழுதுவதும் அவளுக்குத் தெரியும். அதுவே நான் மிகப்பெரிய கவிஞன் என்று நினைத்துக்கொண்டாள்.. ஆனால் ஒரு கெட்ட பழக்கம் அவளுக்கு.. கவிதை என்று பேச்சு எடுத்தாலே ஓடிவிடுவாள்..
அவர்கள் வீட்டைவிட்டு மாற்றிவிட்டாலும் எனக்கு மட்டும் அவளுடன் பேசவேண்டும் பழகவேண்டும் என்ற துடிப்பு இருந்தது.. அவளுக்கு தினமும் கோவில் போகும் பழக்கமுண்டு. எங்கள் ஊரில் ஓம்சக்தி என்ற கோவில் உண்டு. அங்கே தினமும் சந்திப்போம். அவள் உறவினர் பெண் ஒருத்தி சைலஜா. அவளும் கூட வருவாள்..
அட ரோஜாவைப் பத்தி நான் சொல்லலியே! ரொம்ப அழகு.. நடிகை மீனா மாதிரி இருப்பாள்.. நான் அவளை பேர் வைத்தே கூப்பிடுவேன். அவளும் அப்படியே! நல்ல துணிச்சலான பொண்ணு. பிரில்லியண்ட் மனசு.
அவளுக்காகவே நன் ஹிந்தி படிச்சேன். ஹிந்தியில் எல்லா வார்த்தைகளும் எழுதக் கற்றுக்கொண்டேன். உச்சரிப்புகள் அவளிடம் அறிந்துகொண்டேன். எழுதப் படிக்க மிக சரளமாகிவிட்டது. பேசுவதற்கு மட்டும் முடியவில்லை.. அது ஒரு பக்கம் போக.... நான் அவளுக்கு தெலுகு சொல்லிக்கொடுத்தேன்.. நிறைய நினைவுகள் இருக்கிறது.. எல்லாம் இன்னும் அழியாமல் இருக்கிறது.. சொல்லத்தான் நேரமில்லை.
அன்றைய சமயம்தான் காதலர்தினம் என்ற படம் வந்தது... அதில் ரோஜா ரோஜா என்ற பாடல் பிரசித்தி. எனக்கு உயிர்கொடுத்த பாடல் அது. அவளுக்காகவே ஏங்கி பாடிய பாடல் அது.. (ஆமாங்க காதலில் விழுந்துவிட்டேன்) என் நண்பர்களைத் துணைக்கு அழைத்து காதலை வெளிப்படுத்த முயன்றேன்.. கதிரவன் என்ற ஒரு நண்பன் அப்போது ஒருத்தியைக் காதலித்துக்கொண்டிருந்தான்.. அவனிடம் ஐடியா கேட்க, அவன் பல ஐடியா கொடுத்தான்.. சிரமப்பட்டு ஹிந்தி கடிதம் எழுதி அதை கிட்கேட் (Kitkat) உள்புறம் வைத்து கொடுக்குமாறு சொன்னான்.. இன்னொன்று தினமும் கோவிலுக்குப் போவதால் அங்கே வைத்து அவள் மனதை அறிந்து கொண்டு காதல் சொல்லச் சொன்னான்.. இன்னொன்று, ஒரு புத்தகத்தில் ஐலவ்யு என்று பக்கம் முழுவதும் எழுதி கொடுக்குமாறு சொன்னான்... எனக்கு எதுவும் பிடிபடவில்லை..

கிட்டத்தட்ட பிப்ரவரி 14ல் சொல்லிவிட முயன்று தோற்றுப்போய் பிறிதொருநாள் சொன்னேன்..
அவள் பள்ளிக்கு ஆயத்தமாகிக்கொண்டு இருந்தாள். இருவரும் ஒன்றாக சென்றோம்.. அவள் பள்ளி வழி வேறு. இருந்தாலும் கூடவே சென்றேன்.. சைலஜா வருவதற்குள் சொல்லவேண்டும் என்பதால் வீட்டை விட்டு வெளியேறிய 10வது நிமிடத்தில் சொல்லிவிட்டேன்..
உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள ஆசை என்று சொன்னேன். அவள் சிரித்தாள்.. ஏளனமாய்.. நிஜமாகச் சொல்வதாகச் சொன்னேன். அவள் அப்போது கோபப் படவில்லை... அதேசமயம் காதலை ஏற்கவுமில்லை.. அவள் சொன்ன பதிலால்தான் நான் இன்றுவரையும் நல்லவனாகவும் :) பெண்களை மதிப்பவனாகவும், பெற்றவர்கள் பார்த்து நிச்சயம் செய்தால் போதும், காதல் வேண்டாம் என்று கொள்கை உடையவனாகவும் மாற்றி இருக்கிறது..

என்ன சொன்னாள்? அது அடுத்து.......

guna
09-03-2007, 02:09 AM
ரோஜா அப்படி என்ன தான் சொன்னாங்க ஆதவா?

pradeepkt
09-03-2007, 05:15 AM
அதானே... அடுத்து எத்தனையோ பிப்ரவரி 14 வந்தாலும் உங்களை மாற்றிய அந்தப் பெண் சொன்னது என்னவோ?

ஆதவா
03-04-2007, 04:44 PM
என்னங்க நண்பர்களே! அடுத்தடுத்த நான் எழுதிய குறிப்புகளை யாரும் கவனிக்கவில்லையா? ஏதாவது சொல்லுங்கப்பா!

அதுபோகட்டும்.. ரோஜா என்னிடம் என்ன சொன்னால்? என் வாழ்நாளில் மறக்க முடியா வார்த்தைகள் அவை... மிகச் சாதாரணமான வார்த்தைகள். அதிபுத்திசாலி எப்படி பேசுவாளோ அதே போன்றதொரு பேச்சு. அந்த சின்ன வயதில் அவளிடம் இருந்து வந்த வார்த்தைகள் இன்று நினைத்தால் எனக்கு வியப்பு மலைப்பாய் இருக்கிறது.

முதல்காதலை என்றுமே மறக்கமுடியாது. அவள் முகம் இன்று எனக்கு ஞாபகமில்லை என்றாலும் நாங்கள் அமர்ந்து பேசிய தருணங்கள் இறைவனை வழிபட்டபோது ஒருமுறை எனக்கு இட்ட திருநீறு, அதே சன்னதியில் அவளுடன் அமர்ந்து திக்கி திக்கி பேசிய நிமிடங்கள், அவளிடம்ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக படிப்பை மறந்து ஹிந்தி புத்தகத்தை அவளிடம் நீட்டி வார்த்தை உச்சரிப்பு கற்றுக்கொண்ட நாள்கள், அவள் செய்த எண்ணை பதார்த்தங்களை அவள் வீட்டில் சென்று தின்று என் மனைவியின் சமையல் என்று நான் சிலாகித்த அந்த வினாடிகள், எதை நான் மறப்பது? ஆயினும் நாங்கள் விரல்கள் கூட தீண்டாமல் இருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. எனக்குள் அச்சம் இருந்தது. காதலும் அச்சமும் இணைந்தால் தோல்வி உறுதி என்பது சிறிது நாட்களில் தெரியவே மனதை தைரியப்படுத்திக்கொண்டேன் அவள் மூலமாகவே!. அவள் என்னிடம் கொண்டிருந்தது உண்மையான நட்பு, நான் அதை தவறாகக் கொண்டது மிகப்பெரும் தவறு,. இன்று அவள் எங்கள் ஊரில் இருந்திருந்தால் என் வாழ்க்கைப் பயணம் இன்னும் கூராகி இருக்கக்கூடும்.. அவளுக்கு இந்நேரம் மணம் முடித்திருப்பார்கள். அவளின் கூரிய புத்தியில் பைத்தியம் பெற்றவன் கூட புத்தி தெளிவான்... அவள் கணவனுக்கு எனது வாழ்த்துக்கள்...

நான் காதலை சாதாரணமாக தெருவில் வைத்து சொன்னேன். அவளுக்கு வியப்பு மேலிட்டது. என்னுள் இருந்து இந்த வார்த்தை வந்திருக்க அவள் வியப்புற்றது ஆச்சரியம்தானே! அவள் சிரித்தால் அந்த சிரிப்பில் ஏளனம் இருந்தது. நான் உண்மையைத் தான் சொல்லுகிறேன் என்றேன்,. அவளுக்கு நம்பமுடியாத சிரிப்புதான் மேலோங்கி இருந்தது.அவள் சொன்னது இதுதான்

" சரி நான் உன்னை காதலிக்கிறேன். எனக்கு எக்ஸாம் முடிஞ்சுரும், உனக்கும்தான். எங்கவீட்லயும் சரி உங்க வீட்லயும் சரி ஒத்துக்கமாட்டாங்க,. அதனால் நாம் ஓடிப்போயிதான் கலியாணம் பண்ணிக்கனும், அப்படீன்னா என்ன எப்படி வெச்சு காப்பாத்துவ? நான் ஓடிவர ரெடியா இருக்கேன்" என்றாள்.

நான் மறுமொழி சொல்லத் தெரியாமல் முழித்தேன்.. அன்றைய காலத்தில் அலைபாயுதே வரவில்லை. ஆனால் நான் அவளிடம் சொன்னது இது " யாருக்கும் தெரியாம காதலிக்கலாம். அப்பறம் எனக்கு வேலை கிடச்சதும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்'" என்றேன்

" டேய் முட்டாள்! புரிஞ்சிக்க, என்னை வெச்சு காப்பாத்த இன்னிக்கு உன்னால முடியுமா? உனக்கு அந்த தகுதி இருக்கா ? நீ சொன்னமாதிரியே வெச்சுக்கிட்டாலும் நாளைக்கே வீட்ல தெரிஞ்சா என்ன பண்ணுவ? நமக்கு இப்போ மைனர் வயசு. நீ நல்லா படிப்பே னு எனக்குத் தெரியும். நல்ல வேலைக்கு வருவ. உன்னால எப்போ என்னை வெச்சு காப்பாத்த முடியும்னு ஒரு நம்பிக்கை வருதோ அப்போ வந்து சொல்லு நான் உன்கூட வரதுக்கு தயாரா இருக்கேன். அதுவரைக்கும் நான் உனக்காக வெயிட் பண்றேன். பார்க்கலாம் நீ எனக்காக காத்திட்டு இருக்கியான்னு.... " என்றவள் கூடவே ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.

அது என்ன குண்டு? பொறுங்கள்......:nature-smiley-002:

ஆதவா
07-04-2007, 04:37 AM
இங்க கொஞ்சம் கவனிங்க மக்களே!

மதி
07-04-2007, 05:00 AM
கவனிச்சாச்சு ஆதவா..
அநேகமாக எல்லோர் வாழ்விலும் இம்மாதிரி ரசிக்கத்தக்க..சிற்சில நினைவுகள் இருக்கும். ஆனால் அவற்றை கோர்வையாய் தருவதில் தேர்ந்தவராகி விட்டீர்.

காதல் ரொம்ப இனிமையான அனுபவம்னு சொல்லுவாங்க. ஆனால் எப்போ யாரிடம் அது வரவேண்டுமென்ற இலக்கணம் ஏதுமில்லை. காதலையும் மீறி வாழ்வியல் எதார்த்தங்கள் உண்டு. அந்த எதார்த்தங்களை சிறு வயதிலேயே அந்த பெண் கொண்டிருக்கிறாள். உங்களை போலவே நானும் அப்பெண்ணை வாழ்த்துகிறேன்.

ஹ்ம்ம்..(எனக்கு நானே) "இப்படி உணர்ச்சிவசப்படறதை நிறுத்தறியா?".
சரி..ஆதவா நீங்க அந்த "குண்டு" என்னாங்கறதை சொல்லுங்க..!

ஆதவா
07-04-2007, 04:08 PM
ரொம்ப நன்றிங்க மதி..... குண்டு என்னன்னு அடுத்து விவரமா சொல்றேன்....

ஓவியா
07-04-2007, 04:15 PM
ரொம்ப நன்றிங்க மதி..... குண்டு என்னன்னு அடுத்து விவரமா சொல்றேன்....

குண்டா :ohmy:

கி கி கி

சரி சரி

பரிட்சை முடிந்து படிக்கிறேன்.

மனோஜ்
07-04-2007, 04:58 PM
முதல் காதலே முற்றிய காதலை ஆயிற்றோ ஆதவா

மயூ
07-04-2007, 05:22 PM
சரி, அப்ப என்ன செய்யலாங்கிற??? :D :D
ஹி...ஹி... :icon_03: :icon_03:

ஆதவா
07-04-2007, 05:27 PM
முதல் காதலே முற்றிய காதலை ஆயிற்றோ ஆதவா


அதுதான் எனக்கே அறிவுத் தெளிவும் கூட... இல்லையென்றால் பருவம் வந்த அந்த வயதில் ஏதாவது பொண்ணைக் காதலித்து பல கண்றாவிகள் செய்திருக்கக்கூடும்.

மயூ
07-04-2007, 05:29 PM
ஆதவா குண்டு என்ன?????

மற்றயது உன் காதலின் நினைவுகளை கோர்வைப் படுத்திய விதம் அருமையாக உள்ளது!!!

பேச மனம் துடிக்கும்...
கடைக் கண் பார்வைக்கு ஏங்கும்!
ஏளனச் சிரிப்பைக் கூட
எனக்காக உதிர்த்தாளோ என
எண்ணத் தோன்றும்!!
நண்பியுடன் பேசத் திரும்பினால்
என்னைப் பார்க்கத்
திரும்பியதாகத் தோன்றும்
என்னவளின் வேல் விழிகளில்
கோடி மின்னல் காண்பேன்
அவள் நடந்து வரும் பாணியில்
அன்னத்தைக் காண்பேன்,
பேசும் போது புரியாது
ஆனால் சரி சரி என்று தலையாட்டுவேன்
ஆனால் அனைத்தும்
நிசத்தில் நிழல் என்றதும்
கரும் புகையாய்
காற்று வெளியில்
மீண்டும் கலந்துவிடுவேன்!

நீ சொல்வது நன்றாக உறைக்கிறது நண்பா!!! நிசம் நிசம் அத்தனையும் நிசம்!!!

ஆதவா
07-04-2007, 05:35 PM
அய்யோ அய்யோஒ!!! என்னமா கவி எழுதறப்பா!.... நன்றி கூடவே!!! கவிதை எழுதி அனுப்புசாமி....

அந்த ஆட்டம் பாம் என்ன என்பதை அடுத்து சொல்கிறேன் நண்பரே! அதுவரைக்கும் தலை வெடிக்க கவிதை , சிறுகதை எழுதுங்கள்....

மயூ
07-04-2007, 05:37 PM
சும்மா இருந்த என்னை இப்படி எழுதி உசுப்பினது நீங்கதானே ஆதவா!!!!
அப்புறம் அந்த கவிதை எழுதுவது எப்படி என்ன திரியின் தாக்கமும் இங்கே இருக்கு!!! நன்றிகள்!! கெதியாய் குண்டைப் போடுங்கோ!!!

ஆதவா
07-04-2007, 05:46 PM
சும்மா இருந்த என்னை இப்படி எழுதி உசுப்பினது நீங்கதானே ஆதவா!!!!
அப்புறம் அந்த கவிதை எழுதுவது எப்படி என்ன திரியின் தாக்கமும் இங்கே இருக்கு!!! நன்றிகள்!! கெதியாய் குண்டைப் போடுங்கோ!!!

நன்றிப்பா!! இன்னும் நிறைய எழுது... சிறுகதை சிகாமணியே!!! இனி கவி மாமணியாக மாற வாழ்த்துக்கள்....

விகடன்
07-04-2007, 06:10 PM
ஆதவா,
உமது முதலாவது பதிப்பை பார்த்துவிட்டு மட்டுமே எழுதுகிறேன்.
மிகவும் கனமான அநுபவத்தை பகிர்ந்திருக்கிறீர்கள். இதைப்படிக்கும் போது கவலைதான் எனக்கு மிஞ்சியது. சத்தியமாக உங்களை பார்த்து என்னை நினைத்ததால்த்தான் கவலைப்பட்டேன்.

உங்களைப்போல எழுதிக்கொள்ள எனக்கு ஒன்றுமே இல்லை(டயறியை சொல்லவில்லை... ). டையறி எல்லாம் பணம் வத்திருக்க சின்ன வயதில் பாவித்தேன். இப்போது அதில் நாட்டமே இல்லை.

இவ்வளவுதான் எனது டையறியும் நானும்.

ஆதவா
07-04-2007, 06:31 PM
அன்பு வர்ஷா!!

எங்கிருந்து இந்த பதிவை எடுத்துப்போடுகிறீர்கள்? இதற்கும் இந்த திரிக்கும் என்ன சம்பந்தம்?. சம்பந்தமில்லாமல் பதிவு இட்டீர்கள் என்றறல் அது நிர்வாகிகள் கவனிக்கப்பட்டு நீக்கப்படும். கவனமாக பதிக்கவும்..

அடுத்தவர் பதிவைப் போடும்போது அவர் பெயர், எடுத்த இடம் ஆகியவை கண்டிப்பாக குறிப்பிடவும்... மேலே உள்ள பதிவை இருமுறை பதித்துள்ளீர்கள்... கவனித்து நீக்கவும்...

varsha
07-04-2007, 06:38 PM
பதிவு மரு பதிவு செய்தாயிற்று

ஆதவா
07-04-2007, 06:45 PM
உணர்வுகள் மாறலாம், நினைவுகள் மாறுவதில்லை - ஜோயல் அலெக்சாண்டர்


பதிவு மரு(று) பதிவு செய்தாயிற்று


நன்றி அலெக்ஸாண்டர் மற்றும் வர்ஷா!

மறுபதிவு செய்தமைக்கு மிகவும் நன்றி. நீங்களாகவே சொந்தமாக எழுதுவது ஏதாவது இருக்கிறதா? அதைக் கொடுங்கள் நாங்கள் படித்து கருத்து சொல்லுகிறோம்... உங்கள் சொந்த பதிவு என்றால் நிறைய முக்கியத்துவம் கொடுத்து பார்ப்போம்.. ப்ளாக்ஸ்பாட்டில் இருந்து எடுத்து பதிப்பது அவர்களின் அனுமதியின் பேரிலா?

நன்றி தோழி

இளசு
07-04-2007, 08:58 PM
மகிழ்ச்சி, பயம், பச்சாத்தாபம், படபடப்பு, கரிசனம்.
ஆழ்ந்த ஏமாற்றப் பெருமுச்சு, அப்பாடி என்ற நிம்மதி

எல்லாமே வந்துபோயின ஆதவா..

இத்தனை உணர்வுகளும் கலந்துதான் நிஜவாழ்க்கை!
நீ வடிக்கும் விதத்தால் படிக்கும் மனதிலும்...


திரியை கவனிக்காமைக்கு மன்னிக்க..ஆதவா..

எழுத்து வேள்வி இன்னும் வளரட்டும்.. வாழ்த்துகள்!

------------------------------------------------

மயூரேசா, க.எ.எ. திரிபக்கம் வந்து இந்தக்கவிதையையும்
இன்னும் எழுதிய/எழுதப்போகும் கவிதைகளையும்
கட்டாயம் பதிக்கவும். என் அன்புக்கட்டளை!

ஆதவா
08-04-2007, 06:31 AM
மிகவும் நன்றிங்க இளசு அண்ணா!... ஆரம்பத்தில் ஆரம்பித்ததைவிட இன்று சற்று முன்னேறி இருப்பதாக எனக்குத் தெரிகிறது... அனுபவங்களை அதிகம் சொல்லும் அளவிற்கு வயது ஆகவில்லை என்பதால் திரி அடுத்த பகுதியோடு முடிந்துவிடும்.

நன்றிங்க ஜாவா!!! உங்கள் பதிலைக் கண்டதும் நான் சிரித்தே விட்டேன்.... அருமை அருமை...

மயூ
08-04-2007, 08:00 AM
மயூரேசா, க.எ.எ. திரிபக்கம் வந்து இந்தக்கவிதையையும்
இன்னும் எழுதிய/எழுதப்போகும் கவிதைகளையும்
கட்டாயம் பதிக்கவும். என் அன்புக்கட்டளை!
நான் எழுதிய முதல் கவிதை இதுதான் என்று நினைக்கின்றேன்...
தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன்... கட்டளைக்கு அடி பணிகின்றேன்!!!!

ஆதவா
08-04-2007, 09:12 AM
அது!!!

விகடன்
08-04-2007, 09:25 AM
நன்றிங்க ஜாவா!!! உங்கள் பதிலைக் கண்டதும் நான் சிரித்தே விட்டேன்.... அருமை அருமை...

நான் என்னடா என்றால் என் சோகக்கதையை புலம்பிக்கொண்டிருக்கிறேன். அது உங்களுக்கு சிரிப்பை ஊட்டுகிறதா?

இப்போது முடிவெடுத்துவிட்டேன். இந்த முடிவு கட்டாயம் உங்கள் முகங்களில் கரி பூசுவதாகக்கூட அமையலாம். ஆனால் விடமாட்டேன்.

இன்றே ஒரு டையரி வாங்கி அதை எழுதியே முடிக்கப்போகிறேன்.... நாளிதல்களில் இருந்து ஏதாவதை....

பின்னர் வருகிறேன் ....அநுபவங்களுடன்.

ஆதவா
08-04-2007, 04:58 PM
நான் என்னடா என்றால் என் சோகக்கதையை புலம்பிக்கொண்டிருக்கிறேன். அது உங்களுக்கு சிரிப்பை ஊட்டுகிறதா?

இப்போது முடிவெடுத்துவிட்டேன். இந்த முடிவு கட்டாயம் உங்கள் முகங்களில் கரி பூசுவதாகக்கூட அமையலாம். ஆனால் விடமாட்டேன்.

இன்றே ஒரு டையரி வாங்கி அதை எழுதியே முடிக்கப்போகிறேன்.... நாளிதல்களில் இருந்து ஏதாவதை....

பின்னர் வருகிறேன் ....அநுபவங்களுடன்.

ஹ ஹாஹா!!

அய்யா! நான் சிரித்தால் கூட பரவாயில்லையப்பா!! இன்னும் என் சகோதரி ஒருவர் உங்கள் பதிலைக் கண்டதும் விழுந்து விழுந்து சிரித்தார்.... அய்யோ அய்யோஒ!!! ஒரே தமாசுதான் போங்க...

டயரி வாங்கி எழுதப்பா!! ஏதாவது...:natur008:

விகடன்
08-04-2007, 05:03 PM
டயரி வாங்கி எழுதப்பா!! ஏதாவது...:natur008:

எதப்பா நல்ல டயறி.

ஓவியன்
10-04-2007, 04:36 AM
மன்னிக்கவும் ஆதவா!

உங்கள் நாட் குறிப்புப் பதிவினை முழுவதுமாக படித்து விட்டு கருத்துப் பதிக்கவேண்டுமென்பதற்காகவே இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டேன். அலுவலகத்தில் இருந்து கொண்டு தமிழ் மன்றத்தினைக் கணினியின் ஒரு விண்டோவில் வைத்துக் கொண்டு வேலை பார்க்கும் எனக்கு இவ்வாறான பெரிய பதிவுகளை முழுமையாக அலுவலக நேரங்களில் அலசிப் பார்க்க இயலாது என்பது முக்கிய காரணம்.

இந்த மன்றத்திலே நான் கால் பதித்து சொற்ப நாட்களே, இந்தக் குறுகிய காலப் பகுதியில் என்னுள்ளே ஆழப்பதிந்தவர்கள் பலர் அவர்களில் உமக்கு முக்கிய இடமுண்டு. உமது சொல் வளத்திற்கும், அதனைக் கையாளும் தனிப் பாங்கிற்கும் என்றும் நான் அடிமை.

இப்போது உமது சுய வரலாற்றுப் பதிவிற்கு வருகின்றேன், நாளாந்த நினைவுகளை பதித்து வைப்பது என்பது நம் வாழ்விலே முக்கியமானது.
இதில் பற் பல அனுகூலங்கள் உண்டு

01 - நேரமின்றி மள மளவென்று மேய்ந்து விட்டு பின்னர் ஒரு இடம் தேடி ஆற அமர்ந்து அதனை மீளவும் அசை போடுவதிலுள்ள சுகம் அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும்.

02 - நம் அனுபவ்ங்கள் நமக்கு வழிகாட்டியாக அமைவதன்றி மற்றவருக்கும் பயன்பட வேண்டுமெனின் அதற்கு இது ஒரு நல்ல வழி.

03 - வேறு ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாத சில விடயங்களை நாம் தினக் குறிப்பேட்டிலே பதிவதன் மூலம் நம் மனதினை இளகச் செய்யலாம். ஆமாம் நாட் குறிப்பேடு நல்ல ஒரு நம்பகமான நண்பன் நம் அனுமதியின்றி வேறு ஒருவரிடமும் எங்களைப் பற்றிப் போட்டுக் கொடுக்க மாட்டான். அவனிடம் தாராளமாக நம் விருப்பு வெறுப்புக்கள்ளக் கொட்டித் தீர்க்கலாம் ( நான் 2004 ஆம் ஆண்டு வைத்திருந்த ஒரு நாட் குறிப்பேட்டை ஒருத்தி படித்திருந்தாளானால் இன்று ஓவியனின் கையெழுத்து இருக்கும் இடத்திலே இப்போது இருக்கும் அந்த வர்ணக் கவிதை இருந்திருக்காது, ஹி!,ஹி!,ஹி!!!)

இவ்வளவு அனுகூலம் இருக்கிறதென்று தெரிந்தும் நான் இப்போது தினக் குறிப்பேட்டை ஒழுங்காக எழுதுவதில்லை, இதற்கு எனக்கு நானே கூறும் காரணம் - வேலைப் பழு (ஆனால் பாருங்கள் இந்த வேலைப் பழுவிற்குள் நாட் குறிப்பெழுதுவதை தவிர மற்றைய எல்லா வேலைகளும் செய்ய முடிகிறது).:spudnikbackflip:

ஆனால் ஆதவன் இந்த நல்ல பழக்கம் உமக்கு பதினொராவது வயதிலே அறிமுகமாகியுள்ளது, அதில் இருந்து உம்மாலியன்ற வரை பின் பற்றி வந்துள்ளீர். அங்கே தான் நீர் சாதாரண வயதுப் பிள்ளைகளிலிருந்து வேறு பட்டு நிற்கின்றீர். நான் நினைக்கின்றேன் ஆதவா!, பாலையும் நீரையும் பகுத்தாய்வு செய்து பாலை மட்டும் குடிக்கும் உமது இந்த திறமை தான் இன்று உம்மை ஒரு காவியனாக மாற்றி இந்த மன்றத்து நல்லிதயங்களைக் கொள்ளை கொண்டுள்ளது.

சுந்தரத் தெலுங்கிலே பிறந்தாலும் தமிழிலே ஆழப் பற்றுக் கொண்ட ஆதவா, உம்மை வாழ்த்த வார்த்தைகளில்லை, தமிழைப் பேசுவதே தம் தரத்தினைத் தாழ்த்தும் என்று எண்ணும் சிலர் இருக்கும் இந்த பூவுலகில் நீர் தமிழன்னைக்கு ஒரு கர்னன். ஆமாம் நீர் பிறந்தது தெலுங்கன்னைக்கு என்றாலும் நீர் வாழ்வது தமிழன்னைக்காகவல்லவா?
அந்த வகையில் நாம் பாக்கியசாலிகளே.:icon_good:

ஆதவா இந்தக் காதல் இருக்கிறதே இது உண்மையில் பலரை கலைஞனாக மாற்றி மகிழ்ந்து கொண்டிருக்கின்றது, அதில் நீரும் விதிவிலக்கல்ல என்று நினைக்கின்றேன். ரோஜி உம் வாழ்வின் கலைப் பயணத்தை வலுவாக்கினாள் என்று நம்புகின்றேன்.
ரோஜா,ரோஜா! - உமக்கும் இந்தப் பாடல் பிடிக்குமா? (எனக்கும் இந்த பாடலைப் பிடிக்கும், அதற்கும் ஒரு காரணமுண்டு,ஆனால் சொல்லவே மாட்டேன். ஹி!,ஹி!,ஹி!!!):spudnikbackflip:

உமது வாழ்வின் முதற் காதலில் விழுந்த குண்டினை நானும் அறிய ஆவலுடனிருக்கின்றேன். அதன் பின்னர் எனது பின்னூட்டலையும் தொடர்வேன்.

அதற்கு முன்னர் அழகுத் தமிழிலே சுய வரலாறு படைக்கும் என்னருமை காவியனுக்கு இந்த ஓவியனின் அன்பிலும் நம்பிக்கையிலும் இழைத்த வாழ்த்துக்கள் என்றும் சமர்ப்பணம்.

ஆதவா
10-04-2007, 02:07 PM
நன்றிங்க ஓவியன்..

முதலில் மன்னிப்பெல்லாம் எதற்கு... நாட்கடந்த வாசிப்பு என்றுமே பெருமைதான்..இவ்வளவு நாள் கழித்து வாசிக்கிறார்கள் என்ற பெருமிதம்...

ஒரு படைப்பாளியின் படைப்பு வெற்றி காண்வதைவிட அதை ரசித்து ருசித்து மென்று தின்னும் பார்வையாளனின் ஒரு வரி விமர்சனம்தான் மிகப்பெரிய வெற்றி..
எனக்கு நேர்ந்த அனுபவங்களை நான் பகிர்ந்துகொண்டது என்பது மன்றத்தின் மேலுள்ள பாசம்.. எம்மேல் நீங்கள் கொண்டது அந்த பாசத்தில் விளைந்த பயிர்கள்.

பதினோராவது (கிட்டத்தட்ட) வயதில் எழுதப்பட்ட தாள்கள் இன்று இல்லை.. நான் எழுத ஆரம்பித்த சிலேட்டுகள் இன்று இருந்திருந்தால் ஒருவேளை இன்னும் நல்ல படைப்பாளி ஆகியிருப்பேன்.. இதுவரை இன்பம் மட்டுமே இங்கே பகிர்ந்துகொண்டிருந்தேன். துன்பம் எப்போழ்தும் மறக்கடிக்கப்படும்..

ரோஜியுடன் உண்டான அந்த காலங்களில் உண்மையில் நான் கவிதை எழுதவே கிடையாது. அவளுக்கு கவிதை என்றாலே பிடிக்காது,.

முதல் காரணம் : தமிழ்
இரண்டாம் காரணம் : சற்றே கடினமான வார்த்தைகள்.
அடுத்து : அன்றைய காலத்தில் அவ்வளவு சிறப்பாக கவிதை எழுதபவன் அல்லன்..

ரோஜா ரோஜா! இந்த பாடலினால் எனக்கு ஆக்ஸிடெண்ட் உண்டான சம்பவமே உண்டு.. அதை இன்னொரு திரியில் சொல்லுகிறேன். ஆனாலும் உமக்கு எதுக்கு பிடிக்கும் என்பதை சொல்லிவிடுங்கள்.. இல்லையென்றால் டுமீல்...:waffen093:

உம் வாழ்த்துக்களால் எம் வார்த்தைகள் பெருமை கொள்கின்றன...

நன்றி ஓவியன்...

ஓவியன்
10-04-2007, 02:16 PM
ரோஜா ரோஜா! இந்த பாடலினால் எனக்கு ஆக்ஸிடெண்ட் உண்டான சம்பவமே உண்டு.. அதை இன்னொரு திரியில் சொல்லுகிறேன். ஆனாலும் உமக்கு எதுக்கு பிடிக்கும் என்பதை சொல்லிவிடுங்கள்.. இல்லையென்றால் டுமீல்...:waffen093:.

என்னை எப்படிப் பயமுறுத்தினாலும் அதை மட்டும் சொல்ல மாட்டேன்!:icon_nono:

அதுவும் கிட்டத் தட்ட உமக்கு பிடித்த மாதிரித் தான் எனக்கும் பிடிச்சுது என்று வையுமேன்!:angel-smiley-010:

அன்புரசிகன்
10-04-2007, 02:27 PM
( நான் 2004 ஆம் ஆண்டு வைத்திருந்த ஒரு நாட் குறிப்பேட்டை ஒருத்தி படித்திருந்தாளானால் இன்று ஓவியனின் கையெழுத்து இருக்கும் இடத்திலே இப்போது இருக்கும் அந்த வர்ணக் கவிதை இருந்திருக்காது, ஹி!,ஹி!,ஹி!!!)


அந்த ஒருத்தி படிக்கவேண்டுமாயின் அது அவள் கண்பட இருத்தல் வேண்டும். தவிர நீர் இவ்வாறு எண்ணுவதே தவறு. மற்றவருடைய நாள் குறிப்பேட்டை அவரின் அனுமதி இன்றி பார்த்தல் தவறு என அவள் மன்னிக்க, அந்த ஒருத்தி நினைத்திருக்கலாம். நீர் தான் அதை வாசிக்க ஏதுவாக சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாமே...

இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை.

மனோஜ்
10-04-2007, 02:33 PM
ஓவியன் ஒளிவு மறைவு வேன்டாம் மனதில் உள்ளது மறைமுகமாக வெளிபடுத்தலமே ஓவியன்:ernaehrung004:

அன்புரசிகன்
10-04-2007, 02:36 PM
ஓவியன் ஒளிவு மறைவு வேன்டாம் மனதில் உள்ளது மறைமுகமாக வெளிபடுத்தலமே ஓவியன்:ernaehrung004:
அதே அதே..

விகடன்
10-04-2007, 02:37 PM
[COLOR="DarkRed"]ரோஜா,ரோஜா! - உமக்கும் இந்தப் பாடல் பிடிக்குமா? (எனக்கும் இந்த பாடலைப் பிடிக்கும், அதற்கும் ஒரு காரணமுண்டு,ஆனால் சொல்லவே மாட்டேன். ஹி!,ஹி!,ஹி!!!):spudnikbackflip:அந்த ரோஜாப்பாடல் ஏன் பிடிக்கும் என்று எனக்கும் சொல்ல மாட்டீரா?

ஆகட்டும் ஆகட்டும்.

மலிந்தால் சந்தைக்கு வரத்தானே வேண்டும்!

சாராகுமார்
10-04-2007, 03:12 PM
நண்பர்ஆதவா,சூரியன் போல உங்கள் எழத்து உள்ளது.தொடருங்கள்.

ஓவியன்
14-04-2007, 11:24 AM
ஆதவா மீதி எப்போது?

மயூ
16-04-2007, 12:58 PM
அதுதானே எழுதாமல் கலாய்த்துக்கொண்டே திரிகின்றார்!!!

ஓவியன்
17-04-2007, 07:22 AM
மீண்டும் கேட்போம் மயூரேசா!

ஆதவா மீதி எப்போது?????????????

ஆதவா
17-04-2007, 07:48 AM
மீதி......... மீதி......

தலைவெடிக்கக் காத்திருங்கள்....

அன்புரசிகன்
17-04-2007, 08:18 AM
மீதி......... மீதி......

தலைவெடிக்கக் காத்திருங்கள்....
ஓவியருக்கு வெடித்துவிட்டால் தலைக்குள் இருக்கிற கொஞ்ச நஞ்சமும் போய்விடும். அந்தப்பழி உங்களுக்குத்தேவையா?

ஓவியன்
17-04-2007, 08:22 AM
ஓவியருக்கு வெடித்துவிட்டால் தலைக்குள் இருக்கிற கொஞ்ச நஞ்சமும் போய்விடும். அந்தப்பழி உங்களுக்குத்தேவையா? நம்ம தோஸ்தோட திரியிலேயே என்னைப் பற்றி அவதூறா??

என்ன துணிச்சல் உமக்கு???????

சுட்டுப் பொசுக்கிடுவேன் கவனம் :violent-smiley-027:

அன்புரசிகன்
17-04-2007, 08:39 AM
நம்ம தோஸ்தோட திரியிலேயே என்னைப் பற்றி அவதூறா??

என்ன துணிச்சல் உமக்கு???????

சுட்டுப் பொசுக்கிடுவேன் கவனம் :violent-smiley-027:

கனவு காணும் வாழ்க்கையாவும் ..... இந்தப்பாடல்தான் ஞாபகத்துக்கு வருகிறது.

ஓழுங்காக ஒரு உழுந்து வடையில ஒரு ஓட்டை போட்டு சுட்டுப்பாரும்.

ஓவியன்
17-04-2007, 08:41 AM
கனவு காணும் வாழ்க்கையாவும் ..... இந்தப்பாடல்தான் ஞாபகத்துக்கு வருகிறது.

ஓழுங்காக ஒரு உழுந்து வடையில ஒரு ஓட்டை போட்டு சுட்டுப்பாரும்.

அடடா எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதே - அது மதுரைக்குத் தான் வெளிச்சம்.

அன்புரசிகன்
17-04-2007, 08:52 AM
அடடா எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதே - அது மதுரைக்குத் தான் வெளிச்சம்.

மதுரையில் என்னத்த ???? அது மதுர...