PDA

View Full Version : எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!



lenram80
27-01-2007, 01:58 AM
பூட்டிய பிறகு ஒரு தடவை பூட்டை நீ
இழுத்துப் பார்க்காமல் வரமாட்டாய்!

காற்றில் முடி கலையும் என்பதற்காக
பேருந்தில் ஜன்னல் பக்கம் நீ அமரமாட்டாய்!

மலேசியாவில் முதல் நாள் மழை என்றால்
மறுநாள் நீ மறக்காமல் குடை எடுத்துச் செல்வாய்!

ஆனந்த விகடனில் 40 மார்க்கு மேலே இருந்தால் தான்
சினிமாவே நீ பார்க்கப் போவாய்!

ரோட்டோர கடைகளின் வடைகளையும், பஜ்ஜிகளையும்
கொலஸ்ட்ராலின் கூட்டுக் குடும்பம் என்பாய்!

அலைகளின் பாதிப்பு இருக்கும் என்பதால்
செல்ஃபோனில் கூட அதிக நேரம் பேசமாட்டாய்!

துப்பாட்டாவில் முடிச்சு, ஹெல்மெட், ஹாண்ட் க்ளவுஸ்
போடாமல் நீ ஸ்கூட்டி ஓட்டமாட்டாய்!

பட்டனை அழுத்தாமல், 'Eject' option-ஐ select செய்து தான்
CDயை computer-ல் இருந்து வெளியில் எடுப்பாய்!

மோதிரத்தைக் கழட்டி விட்டுத்தான் முகம் கழுவுவாய்!
வாரம் ஒருமுறை கொலுசை திருகி வைப்பாய்!

இப்படி இவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கும் நீ,

ஒழுங்கின்மையின் உறவுக்காரனான
எச்சரிக்கை என்ற வார்த்தையையே இதுவரை உச்சரிக்காத
என்னை எப்படிடி நீ காதலித்தாய்?
எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகணும்!

தமிழ்பித்தன்
27-01-2007, 03:24 AM
ஏன் இப்படி வயத்தெரிச்சலைக் கிழப்பிறியல் அவன் அவன் லவ் பண்ண மாட்டாளா என அலையுறாங்கள் இபபடியெல்லாம் சந்தேகப்பட்டுட்டு

ஓவியா
27-01-2007, 12:04 PM
ஏன் இப்படி வயத்தெரிச்சலைக் கிழப்பிறியல் அவன் அவன் லவ் பண்ண மாட்டாளா என அலையுறாங்கள் இபபடியெல்லாம் சந்தேகப்பட்டுட்டு

அதானே!! :eek:

இதென்னா கதையா இருக்கு?? ;)

வருத்தப்படாதீங்க நண்பா,
எங்க சின்ன தலைவர் பிரதீப்புகிட்ட சொல்லி லேனினுக்கு நம்ப பேச்சலர் சங்கதிலே இருந்து ஒரு மேமொ அனுப்புறோம்

கண்ண தொடச்சிக்குங்க :D

ஓவியா
27-01-2007, 12:14 PM
லேனின்,
சில ஆண்கள் நினைப்பது போல் அணைத்து பெண்களும் ஆண்களிடம் அழகையும், பணத்தையும், பதவியையும், மட்டும் பார்த்து காதலிக்கின்றனர் என்பது தவறு.

இப்படியும் சில காதல்கள் அவ்வப்போது உதிக்கின்றன,
இப்படியும் சில காதலர்கள் புலம்புவதை நான் கேட்டதுண்டு

கவிதையை ரசித்தேன், பாராட்டுக்கள்.

முதல் வரியை மிகவும் ரசித்தேன்,
நல்ல ரசனை :)

மதுரகன்
27-01-2007, 03:37 PM
சின்னச்சின்ன விடயங்களையும் ஈடுபாட்டுடன் எழுதுவதில்
நீங்கள் வல்லவர் லெனின்..
மிகவும் யதார்த்தமாக உங்கள் வரிகள் விழுகின்றன....
உங்கள் கவிதையில் சொற்பிரயோகமும் அற்புதம்..
கவிதையின் கருத்துப்பற்றி கருத்துக்கூற தற்சமயம் விரும்பவில்லை..

வாசகர்கள் விமர்சித்திருப்பது கவிதையின் பொருளைமட்டும்தான்...
கவிதை உண்மையில் அழகாய் உள்ளது..
தொடர்ந்து எழுதுங்கள்...

ஓவியா
27-01-2007, 03:42 PM
வாசகர்கள் விமர்சித்திருப்பது கவிதையின் பொருளைமட்டும்தான்...

கவிதை உண்மையில் அழகாய் உள்ளது..
தொடர்ந்து எழுதுங்கள்...

இதர்க்கு என்ன அர்த்தம் நண்பரே?

மதுரகன்
27-01-2007, 03:57 PM
ஓவியா நான் கூறியிருப்பது..
நீங்களும் தமிழப்பித்தனும் விமர்சித்தது கவிதையின் பொருளை மட்டுமே என்று

ஏன் இப்படி வயத்தெரிச்சலைக் கிழப்பிறியல் அவன் அவன் லவ் பண்ண மாட்டாளா என அலையுறாங்கள் இபபடியெல்லாம் சந்தேகப்பட்டுட்டு


அதானே!!

இதென்னா கதையா இருக்கு??


இதனைக்கண்டு வருத்தப்படவேண்டாம் கவிதை அருமையாக உள்ளது என்றேன்...
அதாவது நீங்கள் கூறியபடி..

கவிதையை ரசித்தேன், பாராட்டுக்கள்.
நல்ல ரசனை
என்பதை வழிமொழிந்தேன்...
சரியா..?

tamil81
27-01-2007, 04:00 PM
அருமையான கவிதை நண்பரே
வாழ்த்துக்கள்

ஓவியா
27-01-2007, 04:57 PM
ஓவியா நான் கூறியிருப்பது..
நீங்களும் தமிழப்பித்தனும் விமர்சித்தது கவிதையின் பொருளை மட்டுமே என்று

இதனைக்கண்டு வருத்தப்படவேண்டாம் கவிதை அருமையாக உள்ளது என்றேன்...
அதாவது நீங்கள் கூறியபடி..

என்பதை வழிமொழிந்தேன்...
சரியா..?

நண்பா,
வருத்தப்படும் வகையில் விமர்சனமில்லையே :confused: :confused:

பென்ஸ்
27-01-2007, 06:16 PM
இப்படி இவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கும் நீ,

ஒழுங்கின்மையின் உறவுக்காரனான
எச்சரிக்கை என்ற வார்த்தையையே இதுவரை உச்சரிக்காத
என்னை எப்படிடி நீ காதலித்தாய்?
எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகணும்!
தெரியலையா???? அட இன்னுமா தெரியலை....
எனக்கும் தெரியாது....
யாருக்கும் தெரியவும் செய்யாது...
நிறைய விளக்கம் கொடுக்கலாம்...
ஆனால் ஜோசியம் பாப்பது போல் பொதுவான பத்து சதவிகிதம் மட்டுமே பொருந்தும்...

காதல் கிறுக்குதனமானது...
அதில் இருக்கும் போது கிறக்கும்
தெளியும் போது பிளக்கும்...
காதல் தெளியவே கூடாது...

மனோஜ்
27-01-2007, 06:21 PM
பாவங்க அந்த பெண்னு உங்கள்ட தேரியாம மாட்டிகிச்சு மன்னிச்சுடுங்க

கவிதை அருமை மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தியுள்ளது

lenram80
27-01-2007, 06:24 PM
இந்த எதார்த்தக் கவிதையை ரசித்த யதார்த்தவாதிகளுக்கு நன்றி

ஷீ-நிசி
28-01-2007, 10:33 AM
Originally Posted by lenram80
இப்படி இவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கும் நீ,

ஒழுங்கின்மையின் உறவுக்காரனான
எச்சரிக்கை என்ற வார்த்தையையே இதுவரை உச்சரிக்காத
என்னை எப்படிடி நீ காதலித்தாய்?
எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகணும்!

ஒருவேளை அவங்கள பார்க்கபோகும்போது மட்டும் குளிச்சிட்டு ஃபிரஷ்ஷா போவீங்களோ??

பிச்சி
28-01-2007, 01:40 PM
அருமையா இருந்தது... வாழ்த்துகள் லெனின்

மதுரகன்
28-01-2007, 04:17 PM
ஒருவேளை அவங்கள பார்க்கபோகும்போது மட்டும் குளிச்சிட்டு ஃபிரஷ்ஷா போவீங்களோ??

என்ன நீங்க அவர் கொள்கைகளை பற்றி பேசுகிறார் . நீங்கள் தோற்றத்தைப்பற்றி பேசுகிறீர்கள்....

இளசு
28-01-2007, 06:23 PM
உங்கள் இயல்பான நடை அருமை..

எதிர் துருவங்கள் இழுப்பது இயற்கையின் சூட்சுமம் லெனின்..

என்ன கேட்டாலும் விடை கிடைக்காது...