PDA

View Full Version : பாவொத்த பாவை



ஆதவா
25-01-2007, 05:44 PM
தூக்கி முன்னிருத்தும் மாரொத்து எழுத்து
ஆக்கித் தருங் கையொத்து சீராம்
நோக்கிப் பாரின் அணியிருப்பின் அழகிருக்கும்
பாவொத்த பாவை இவள்

Narathar
25-01-2007, 08:49 PM
நாராயணா!!!!!!!

அறிஞர்
25-01-2007, 11:07 PM
என்ன நாரதரே... விளக்கம் வேண்டுமா... ஆதவன் தருவார் பொறுத்திருங்கள்...

ஆதவா
26-01-2007, 01:44 AM
தூக்கி முன்னிருத்தும் மாரொத்து எழுத்து
ஆக்கித் தருங் கையொத்து சீராம்
நோக்கிப் பாரின் அணியிருப்பின் அழகிருக்கும்
பாவொத்த பாவை இவள்

தூக்கி முன்னிருத்தும் மார் - பெண்களுக்கே உரிய அழகு.... அதுவே எழுத்து....

ஆக்கித் தரும் கை - பெண்களின் கை (பாவை என்று தலைப்பிட்டதால்) சீர்....

நோக்கிப் பாரின் அணியிருப்பின் அழகிருக்கும் - பெண்ணுக்கு கழுத்தில் ஒரு அணிகலன் இருந்தால் எப்படி அழகாய் இருக்குமோ அதே மாதிரி பா'வுக்கு அணி (அணியிலக்கணம்)

பாவும் பாவையும் ஒத்துப் போகிற இவள்.... வேறுயாரு என் தமிழன்னை தான்.........

இளசு
26-01-2007, 09:36 PM
ஆதவா..சீரும் அணியும் நல்ல உவமைகள்..பாராட்டுகள்..

--------------------------------------------

படிக்கப் படிக்க புதுப்புது அர்த்தம்..

விளங்கியதா என விளங்காத இருண்மை..

இதழும் விழியும் இருவேறு பொருள் தரும் சிலேடை..

மரபு, புது, நவீனம், பின்நவீனம் என மாறும் தலைமுறை..

----------------------------------------

நதியே நதியே .. நீயும் பெண்தானே என பாடியதுபோல்...
கவியே கவியே நீயும் பெண்தானே என பாட எத்தனை ஒற்றுமைகள்..

அதுசரி..
கவிதை வேறு.. பெண் வேறா என்ன????!!

ஓவியா
26-01-2007, 09:49 PM
பாவும் பாவையும் ஒத்துப் போகிற இவள்.... வேறுயாரு என் தமிழன்னை தான்......... :)

ஆதவா,
மிகவும் அபாரம் உங்கள் சிந்தனை...பாராட்டுறேன் சார்

பெண்களைப் பற்றி நீங்கள் எழுதும் கவிதைகள், கருத்துக்கள், விமர்சனங்கள் அனைத்தையும் படித்து வியந்து வியந்து போகிறேன்.
(கற்புற்ற காமக் கவிதைகள்) இதுக்கும் செர்த்துதான் சொல்லுறேன்)


இளசுவும் பாராட்டு மழை பொழிஞ்சாச்சு, உங்க காட்டுலே மழைதான்

மதுரகன்
27-01-2007, 02:45 PM
என்ன ஆதவா செய்யுள் நடையிலெல்லாம் அசத்துறீங்க..
கவிதை சிறப்பாக உள்ளது..